|| | ||||
 

இயக்ககங்களும் மற்றும் துறைகளும் :: திட்டமிடுதல் மற்றும் மேற்பார்வையிடல் இயக்கம்

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

விதை மையம்


மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) இந்திய வேளாண்மை 2.7% வளர்ச்சியுடன் 28 சதவீதம் வருடத்திற்கு கணக்கிள் கொள்கிறது. இது வருடாந்திர மக்கள் தொகை வளர்ச்சி விகிதத்தை விட அதிகமாகும். அன்மை காலங்களாக வேளாண் உற்பத்திக்கு தேக்கத்தால் பண வீக்கம் ஏற்பட்டுள்ளது. அது அதிக பண வீக்கத்துடன் இணைந்தால் உழவர் சமுதாயத்திற்கு உண்மை வருமானம் குறைந்துள்ளது. வேளாண் உற்பத்தியை பெருக்கவும், தேசிய உணவு காவற்பணி பாதுகாப்பு மற்றும் உழவர்களின் பொருளாதாரச் செழிப்பிற்கும் காலம் தேவைப்படுகின்றது. உறுதியான வேளாண்மை உற்பத்தி வளர்ச்சிக்கு விதையே அடிப்படை நெருக்கடி மற்றும் விளைச்சல் மேம்பாடு தேவையாகும். போதுமான அளவு விதை தரம் மற்றும் ரகப் பன்மயம் ஆகியவையை உறுதிப்படுத்தும் பொறுப்பு விதை பிரிவுக்குள்ளது.

தமிழ்நாட்டின் மொத்த விதை தேவை 2,56,500 டன்கள் ஆகும். ஆனால் மொத்த விதை தேவைகளின் 24 சதவீதமே தரமான விதைகள் கிடைக்கின்றன. மற்றவை வயலில் சேமிக்கும் விதைகளாகும். தமிழ்நாட்டில், மொத்த பயிர் செய்யும் பகுதி 45.6 லட்சம் ஏக்கர் மற்றும் மொத்த விதை தேவைகள் 2.56 லட்சம் ட்கள். இதில் வெறும் 0.6 லட்ச டன்கள் விதையே வழங்கப்படுகின்றது. இந்திய விதை திட்டம் இன்றும் புதிதாக வந்த நிலையிலேயே உள்ளது. US$ 920 மில்லியன் விற்பனையில் US$ 900 மில்லியன் விற்பனை உள்நாட்டு கணக்கில் உள்ளது. மீதமுள்ள US$ 20 மில்லியன் விற்பனை உலக சந்தை கணக்கில் உள்ளது. விதை உற்பத்தி மற்றும் விநியோகம் இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச விதை சந்தையில் மட்டுமின்றி தனியார் மற்றும் பன்னாட்டு விதை நிறுவனங்களால் இந்திய விதை நிறுவனங்களின் ஆதிக்கத்திலும் பொது பிரிவு பங்கேற்பை முயலுவது முக்கியமாக கருதப்படுகின்றது. இத்தகைய தனியார் பிரிவுகளின் ஆதிக்கத்தை தேவையின்றி வலியுறுத்துவது இந்திய உழவர்களின் விதை விநியோகச் சங்கிலிக்கும் மற்றும் நாட்டின் உணவு பாதுகாப்பிற்கும் ஊறு விளைவிக்கும்.

விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை தோற்றம்

விதை தொழில்நுட்ப துறை இந்தியாவில் முதல் முறையாக 1972ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிருவப்பட்டது. அடிப்படை மற்றும் சார்பு விதை ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இத்துறை 1998 ல் விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை என்று பெயர் மாற்றப்பட்டது. தமிழ்நாடு முழுவதிலும் 48 விதை வல்லுநர்கள் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க பணிகளின் ஈடுபட்டுள்ளனர்.

விதை மைய அமைப்பு

வல்லுநர்களின் சிறந்த முயற்சிகள் இருந்த போதிலும் பல மேம்பட்ட ரகங்கள் / கலப்பினங்கள் இன்னும் இறுதிகட்டமாக உழவர்களின் வயலுக்கு சென்றடையாமல் ஆய்வு கூடங்களிலேயே உள்ளது. இத்தகைய ரகங்கள் / கலப்பினங்கள் பரப்ப முக்கிய முட்டுக்கட்டை தரமான விதைகள் கிடைக்கப் பெறாமையே காரணம். மாநில உழவர்களை விதை நடவடிக்கைகள் சென்றடைய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அதிவேகத்துடன் முயற்சிகளை முனைந்தது. மேலும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சி மன்றத்தின் வேளாண் பயிர்களின் விதை உற்பத்தி மற்றும் மீன் வளர்ப்புக்கான பெரும் திட்டம் முதலில் புதுடெல்லியில் 27-28 ஜுன், 2006ல் விதை திட்டம் ஒரு நோக்குச் செயல் திட்டமாக செயல்படுத்தப்பட்டது. துணை வேந்தர் கட்டுப்பாட்டின் கீழ் மூத்த அறிஞர் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்(விதை). இந்த வழிமுறைகளின் அடிப்படையில் விதை மையம் 27.10.2006 ல் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நிருவப்பட்டது. சிறப்பு அதிகாரி (விதை) நியமிக்கப்பட்டுள்ளார். ஆராய்ச்சி, கல்வி, விரிவாக்கம் தரமான விதை உற்பத்தி, விநியோக மற்றும் வழங்கள் பிரிவுகளிள் ஆண்டுகளாக இத்துறை வளர்ந்து வருகின்றது. இத்துறையின் பெரும் சிறப்பு வாய்ந்த சாதனைகள் வருமாறு.

  • விதை உற்பத்தி
  • விதை தரம் காப்புறுதி
  • சாத்தியமான தொழில்நுட்பங்கள் வளர்ச்சி

எதிர்கால தேவைகள்

விதை உற்பத்தி

  • உற்பத்தியாளர் மற்றும் நிறுவன விதை உற்பத்தி உயர்வு மற்றும் விதை உற்பத்தியாளர்களுக்கு தரமான விதை உற்பத்தி விநியோகம் மேம்படுத்த விதை வழங்குதல்
  • விதை வழங்குதலை அதிகமாக்குதல் மூலம் விதை மாற்றீடு விகிதத்தை அதிகமாக்குதல்
  • கிராம விதை திட்டத்தை அமல்படுத்துதல் மூலம் உழவர் சேமித்த விதைகளை மேம்படுத்தல்

ஆராய்ச்சி

  • விதை மேம்பாட்டு உத்தி பொறி மயமாக்க அதாவது விதை பல்லுறுப்பி பூச்சு, சிற்றுருண்டையாக்கல் மற்றும் முன் நிரப்பல் தொழில்நுட்ப மேம்பாடு
  • பரப்பளவு ஏற்பு புன்செய் நிலப் பயிர்களுக்கான வடிவமைப்பாளர் விதை மேம்பாடு
  • கலப்பின நெல் மற்றும் மக்காச்சோளம் தரமான விதை விளைச்சல் மேம்பாட்டிற்கான விதை உற்பத்தி தொழில்நுட்பத்தை நிலைப்படுத்தல்
  • CO2 புகை யூட்டம் வழியாக சூழலுக்குற்ற விதை சேமிப்பு உத்தி மேம்பாடு
  • பயிர் மற்றும் உழவர்களின் உரிமை உற்பத்தி சட்டத்தின் கீழ் பதிவு செய்ய பொது மற்றும் தனியார் பிரிவின் புதிய ரகங்கள் வெளியீட்டை வகைப்படுத்தல்
  • கிராம விதை திட்டத்தின் கீழ் உரவர்களின் ‘சேமிப்பு விதை தரம்’ மேம்பாட்டிற்கு உழவர்களுக்கு பயிற்சி புகட்டல்

உள்கட்டமைப்பு

  • இந்திய அரசு நிதியின் வழியாக விதை தரம் சோதனையை வலுவூட்டல்
  • இந்திய வேளாண் ஆராய்ச்சி திட்டததின் வழியாக முக்கிய விதை உற்பத்தி மையங்களின் உள்கட்டமைப்பு வளர்ச்சிகளை வலுவூட்டல்
  • விதை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் தொடர் முயற்சியில் தமிழ்நாட்டின் அனைத்து ஏழு விதை சோதனை கூடங்களிள் விதை நலச் சோதனை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது

தொடர்பு கொள்ள

சிறப்பு அதிகாரி (விதைகள்),
விதை மையம்,
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்,
கோயமுத்தூர் – 641 003.

 
   

திருந்திய நெல் சாகுபடி 
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-10