வங்கி மற்றும் கடன் ::தேசிய வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு வங்கி (NABARD) :: நபார்டு வங்கியைப் பற்றி

1. நபார்டு வங்கி
நபார்டு வங்கி தலைமை வங்கியாகத் தொடங்கப்பட்டு வேளாண்மை, சிறு தொழில்கள், கிராமப்புற மற்றும் குடிசைத் தொழில்கள், கைவினைப் பொருட்கள் மற்றும் இதர கிராமப்புற வேலைகள் போன்றவற்றின் ஊக்குவிப்பு வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையான கடன் தேவைகளை வழங்குவதை முதல் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதோடு இதன் முக்கிய தலையங்கமாக கிராமப்புற பகுதிகளில் உள்ள இதர அனைத்துப் பொருளாதார வேலைகளுக்கு கடனுதவி, தொடர்ச்சியாக கிராமப்புற மேம்பாடு மற்றும் கிராமப்புற பகுதிகள் செழுமையாக இருப்பதற்கான பாதுகாப்பு மற்றும் உறுதியையும் வழங்குகிறது. நபார்டு வங்கி கிராமப்புற செழுமைக்காக ஏற்படுத்திக் கொடுக்கும் நபராக செயல்படுவதால் அதன் மூலம்

  1. கடன் வழங்கும் நிறுவனங்களுக்கு கிராமப்புற பகுதிகளில் நிதியளித்தல்
  2. நிறுவனங்கள் மேம்பாட்டை ஊக்கிவித்தல்
  3. வாடிக்கை வங்கிகள் மதிப்பிடுதல், கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல்.
மேலும் நபார்டு வங்கி பல முக்கிய பங்காற்றி இருக்கின்றது.
  1. கிராம கடன் நிறுவனங்களில் உள்ள §வலைகளுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்படுதல்.
  2. கிராம மேம்பாட்டிற்காக அரசு, பாரத ரிசர்வ் வங்கி மற்றும் இதர நிறுவனங்களுக்கு உதவி அளித்தல்.
  3. தகுதியுள்ள வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டு நிறுவனங்கள் மாநில அரசுகளுக்கு அவர்களின் இலக்குகளை அடைய உதவி செய்தல்.
  4. கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகளுக்கு அமைப்பாளராக செயல்படுகிறது.

2. அத்தியாயம் மற்றும் வரலாற்றுப் பிண்ணனி
வேளாண்மை மற்றும் கிராம மேம்பாட்டிற்காக கடன் வழங்கும் நிறுவனங்கள் திறனாய்வுக் குழு (CRAFICARD) ‚ பி.சிவராமன் தலைமையின் கீழ் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை பாரத ரிசர்வ் வங்கியின் ஆளுநரிம் 1979 ஆம் ஆண்டு நவம்பர் 28 -ம் §ததி கொடுக்கப்பட்டதில், நபார்டு வங்கி ¦தாடங்க பரிந்துரைக்கப்பட்டது. இதை பாராளுமன்றத்தில் 61 / 81 விதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்டது.

            இந்தக்குழு திறனாய்வு செய்த பின் புதிய ஏற்பாடுகள் தேவை என்பதையும் இதன் நோக்கங்களை அடைய தேசிய அளவில் ஒரு ¦தாலைநோக்குப் பார்வையும் அதன் கடன் தேவைகளை ஒருங்கிணைத்த மேம்பாட்டு திட்டம் மூலம் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. கிராம மேம்பாட்டிற்கும் கிராமப்புறங்களில் உள்ள ஏழை மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்தவும் குறிப்பிட்ட நேரத்திற்குள் அடையவும் பெரிய அளவிலான கடன் தேவைகளும், தனிப்பட்ட நிறுவன அமைப்பும்  தேவைப்பட்டது. அது சமயம்  பாரத ரிசர்வ் வங்கிக்கு நிறைய பொறுப்புகளும் அதன் அடிப்படை செயற்கூறுகளான மத்திய வங்கியின் பணம் மற்றும் கடன் விதிமுறைகள் மற்றும் அதே போல் அனைத்து புதிதான கடன் பிரச்சனைகளையும் பார்க்கும் அளவிற்கு  இல்லாததால் நபார்டு வங்கி உதயமானது.

 

ஆதாரம் : http://www.nabard.org
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016