|| | | |||
 
உயிரித் தொழில் நுட்பம் - ஒர் அறிமுகம்
tamil english

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்
வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

கிரோமோர் பயோடெக்

திசு வளர்ப்பு வாழை - சாகுபடிக் குறிப்புகள்

இடைவெளி

இரகங்கள் பயிர் இடைவெளி ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் கன்றுகள் எண்ணிக்கை
பச்சை மோரிஸ் கிராண்ட் - 9 5.5’ x 5.5’ 1440
ரொபஸ்டா, நேந்திரன் 6’ x 6’ 1210
பச்சை நாடன் / மோரில் செவ்வாழை 8’ x 8’ 680

Bio Technology

நிலத்தை பயிர் செய்ய தயார் படுத்தல்

நிலத்தை ஆழ உழுது பின் மண் கட்டிகளை உடைத்து மண்ணை பயிர் செய்ய தயார்படுத்தவேண்டும்.
2 அடி x 2 அடி அளவில் குழி தோண்ட வேண்டும். தொழு உரம் அல்லது மட்கும் குப்பை / கால்நடை எரு : மணல் மண்ணை 1:1:1 என்ற விகிதத்தில் அந்த குழியில் நிரப்பவேண்டும். ஒரு குழியில் 20 கி.கி அங்கக எரு (தொழு உரம் / மட்கும் குப்பை / கால்நடை எரு) இருக்கவேண்டும். மண் கலவையில் உள்ள மணலின் அளவ அந்த மண்ணின் வடிகால் தன்மையைப்  பொறுத்து அமையவேண்டும்.

வயலில் நடுதல்

நடுவதற்கு முன் பாலித்தீன் பையைக் கிழித்து எடுக்கவேண்டும். வேரை தொடாமல் அங்கக எருவால் மூடப்பட்ட குழியின் நடுவில் நடவேண்டும். மண்ணின் அளவு பாலித்தீன் பையில் இருந்தவாறே இருக்க வேண்டும்.

Bio Technology
நீர்ப்பாசனம்

சொட்டு நீர் பாசனமுறையைப் பயன்படுத்தலாம். ஒரு நாளைக்கு வாழைச்செடிக்கு 20 லிட்டர் தண்ணீர் சொட்டு நீர் பாசன முறையில் தரவேண்டும்.
கடும் வெயில் காலத்தில் ஒரு மாதத்தில் ஒர வெள்ளப் பாசனம் கொடுக்கலாம்.

உர அளவு

உரத்தை எட்டு முறை பிரித்து கொடுக்கலாம். உரத்தை முதல் மற்றும் இரண்டாம் தடவை கொடுக்கும் போது வளைய முறையில் 15 - 20 செ.மீ செடியிலிருந்து தள்ளி இடவேண்டும்.
உரத்தை மூன்றாம் மற்றும் நான்காம் தடவை கொடுக்கும் போது அதே முறையில் 40-50 செ.மீ தள்ளி இடவேண்டும்.
ஐந்தாவதிலிருந்து எட்டாவது தடவை வரை 60லிருந்து 70 செ.மீ தள்ளி இடவேண்டும்.
Tissue Culture
உர அட்டவணை

மண்வளத்திற்கு ஏற்றவாறு உரங்களை பயன்படுத்தவேண்டும். மண் ஆய்வு குறிப்பின் படி உரத்தை பயன்படுததவேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. பொதுவாக ஒரு செடிக்கு 180:180:270 கிராம் விகிதம் தழை / மணி /சாம்பல் சத்தைப் பிரித்து பின்வரும் முறைப்படி கொடுக்கவேண்டும்.

வ.எண் உரமிடும் காலம் (நடவு செய்த மறுநாள்)
உரமிடும் காலம் தொழு உரம் நிலக்கடலை புண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு மண்புழு புண்ணாக்கு பஞ்ச காவ்யா
1. முதல் நாள் 6 கிலோ கிராம் 30 கிராம் 30 கிராம் 30 கிராம் 100 கி 500 மில்லி லிட்டர்
2. 30வது நாள் 6 கிகி 30 கி 30 கி 30 கி 100 கி 500 மில்லி லிட்டர்
3. 60வது நாள் 6 கிகி 30 கி 30 கி 30 கி 100 கி 500 மில்லி லிட்டர்
4. 90வது நாள் 6 கிகி 30 கி 30 கி 30 கி 100 கி 500 மில்லி லிட்டர்
5. 120வது நாள் 2 கிகி 90 கி 90 கி 90 கி 100 கி 500 மிலி
6. 150வது நாள் 2 கிகி 90 கி 90 கி 90 கி 100 கி 500 மிலி
7. 180வது நாள் 2 கிகி 100 கி 100 கி 100 கி 200 கி 500 மிலி
8. 210வது நாள் 2 கிகி 100 கி 100 கி 100 கி 200 கி 500 மிலி
  மொத்தம் 32 கிகி 500 கி 500 கி 500 கி 1000 கி 4000 மிலி

பச்சை உரம் மற்றும் சணப்பு அல்லது தக்கைப் பூண்டை ஊடுபயிராக பயன்படுத்தும் போது களைகளைத் தவிர்க்கலாம்.

பயிர்ப் பாதுகாப்பு

திசு வளர்ப்பு வாழையை விநியோகிக்கப்படும் நேரத்தில் நோயற்றதாக இருக்கும். நல்ல மேற்பார்வையில் அதை நோயற்றதாகவே வளர்க்கலாம்.
400 கிராம் வேப்பம் புண்ணாக்கை கிழிக்கலவையில் செடியை நடும் முன் சேர்க்கவேண்டும் (அ) வேப்பம் எண்ணெய் பயிரின் 2வது மற்றும் 3வது மாதத்தில் தெளித்தால் நோய் மற்றும் பூச்சித் தாக்குதலைத் தவிர்க்கலாம்.

Tissue Culture
பொதுவான பாதுகாப்பு முறைகள்

வயலில் உள்ள களைகளை நீக்கி சுத்தமாக வைக்கவேண்டும். வாழைப்பயிா வளரும் போது இடைக்கன்றுகளை அகற்றவேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, இலைப்பேன் மற்றும் இலைத் தின்னும் புழு வாழைக் கன்றில் காணப்பட்டால், 2 மிலி / லிட்டர்  தண்ணீரில் வேப்பம் எண்ணெய்யை தெளிக்கவேண்டும்.
செடி நட்டபின் 90லிருந்து 110 நாட்களுக்குள் தொழு உரம் (அ) வேப்பம் புண்ணாக்கு இட்டபின் மண் அணைத்தல் வேண்டும். வாழை தார் முழுவதும் உருவான ஒரு வாரத்திற்கு பின் நுனியிலுள்ள ஆண் மலரை (மொட்டு) வெட்டிவிடவேண்டும். வாழைத் தாரில் வெயில் படாதவாறு கடைசி இலையை மடக்கிவிடவேண்டும்.
பலத்த காற்று மற்றும் வாழைத் தாரின் எடையைத் தாங்க மரக்கட்டை சாட்டை மரக்கட்டை (அ) தைல மரக்கட்டையை அணைக்குடுக்கவேண்டும்.

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

TN உழவர் சந்தை
சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்