|| | | |||
 
தாவர திசு வளர்ப்பு : விதைக்கரணை வனவியல்
tamil english

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்
வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

மூங்கில் சாகுபடி முறைகள்

அறிமுகம்

மூங்கில், புல் குடும்பத்தைச் சேர்ந்தது, மேலும் இப்பூமியியல் அதி விரைவில் வளரக்கூடிய கட்டைத் தாவரம் ஆகும். மூங்கில் பல்வேறு பயன்களையும், உறுதி, புதுப்பிக்கக்கூடிய சுற்றுப்புறச்சூழலுக்கு நன்மை விளைவிக்கக் கூடியதாகும். மூங்கிலை “ ஏழைகளின் கட்டை” என இந்தியாவிலும், “மக்களின் நண்பன்” என சீனாவிலும், “சகோதரன்” என வியட்நாமிலும் அழைக்கிறார்கள். மூங்கில் ஆப்பிரிக்கா ஆசியா, கரீபியன் மற்றும் லத்தீன், அமெரிக்கா முதலிய நாடுகளில் வளர்கின்றது. இலட்சக்கணக்கான மக்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு மூங்கிலை நம்பி உள்ளனர். மேலும் பழங்காலம் முதலே உணவுக்காகவும், சமையலுக்காவும் மூங்கில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதைத் தவிர மரத்தேவையின் வெற்றிடத்தை மூங்கில் நிரப்புகிறது மேலும் விலையுயர்ந்த மரத்தின் மாற்றாகவும் உள்ளது.

மூங்கில் கட்டையானது பொருளாதார ரீதியாக இன்று வரை நிலைப்புத் தன்மையுடன் உள்ளது. பழங்காலத்தில் மூங்கிலைப் பல்வேறு உபயோகங்களுக்காக பயன்படுத்தினர். ஆனால் தற்போது காகித உற்பத்தி மற்றும் மரத் தொழிற்சாலைகளில் பயன்படுத்துகிறார்கள். அதன் தேவையும் பங்கு வகிக்கிறது. சுற்றுச்சூழலிலும் மூங்கில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அவையாவன : எதிர்கால வனவியல் மற்றும் விவசாயத் தேவைப்பாடு, நீர்  தக்கவைத்தல், மண்ணின் தன்மையை சீராக்குதல், கார்பனின் அளவைக் கட்டுப்படுத்தி பசுமை இல்லா விளைவால் முக்கியப் பங்கு வகிக்கிறது. எப்படி பார்த்தாலும் பொருளாதார ரீதியாக மிகுந்த இலாபத்தைக் கொடுக்கிறது.

நுண் பயிர்ப் பெருக்கம்

மூங்கில் பல்வேறு முறைகளில் வளர்க்கப்படுகின்றன. அவையாவன : விதைகள், கிழங்குகள், புதர்ச்செடிக்கொத்து ஆகும். இருப்பினும் மூங்கில் பெருக்கத்திற்கு சற்றுக் கடினமாகவே உள்ளது. மிக அதிகமாக மூங்கில் பெருக்கத்திற்கும், நல்ல தரமான செடிகளுக்கும் புதிய முறைகளைக் கையாள வேண்டி உள்ளது. அவ்வாறு அத்தேவைகளை நிறைவேற்றுவதற்கு “குரோமோர் பயோடெக் லிமிடெட்” உள்ளது. அதிக அளவில் நுண் பயிர்ப் பெருக்கத்தன் வாயிலாக உற்பத்தி செய்வதால் அங்கக உயிர்ப் பொருளுக்காவும் பயன்படுத்த முடியும். நுண்பயிர்ப் பெருக்கம் மூலம் அதிக அளவு  செடிகளை உற்பத்தி செய்வதுடன் நன்கு தரமிக்க செடிகளாகவும் அவைகள் உருவாக்கப்பட்டு, விவசாயிகள் செடிகளை பயிரிடும் இடங்களிலேயே கொண்டு சேர்க்கப்படுகிறது. தற்போது “பால்கோவா” மூங்கில் என்ற புதிய  இரகம் ஒரு செடியில் இருந்து பல்வேறு எண்ணிக்கையில் உற்பத்தி செய்யப்படுகிறது. பழங்காலமாகப் பின்பற்றி வந்தவற்றை குறிப்பிட்ட சில காலங்களில் மாற்றிவிட முடியாது.

Bio technology Bio Technology

மண் மூங்கில் பெரும்பாலும் நல்ல ஆழமான, வடிகால் வசதியுள்ள, வண்டல் மண் சுழியில் வளரக் கூடியது. மண்ணில் அமிலக் காரச் சமநிலை சமமாகவும், சற்று அதிக அமிலத்தன்மை கொண்டதாக இருக்கலாம்.
செடி எண்ணிக்கை / ஏக்கர் 200 செடிகள் / ஏக்கர்
இடைவெளி 5 x 4 மீட்டர்
காலநிலை மற்றும் நடும் காலம் சரியான காலநிலை என்பது பருவமழை தொடங்கிய பின் ஆகும். அவை செடி நன்கு வளரவும், வேரின் வளர்ச்சிக்கும் அவை கோடையில் வறட்சியைத் தாங்கவும் உதவும்.
காலநிலை மூங்கில் அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வளரக்கூடியது, அதிக மழைப்பொழிவற்ற இடங்களில் நீர்ப்பாசனம் மூலமாகவும் வளர்க்கப்படுகிறது. இவை கடினமாகவும், எங்கும் வளரும் விதமாக அதன் அமைப்பு உள்ளது. ஆனால் நீர்த் தேங்கும் இடங்களில் வளர்வதில்லை.

நிலத்தை தயார் செய்தல்

                    நிலத்தை மிக ஆழமாகவும், உழுவது நல்லது. இவை செடி நடுவதற்கு 3 மாதங்களுக்கு முன்பே செய்துவிடவேண்டும். இதனுடன் அங்ககப் பொருட்கள், பசுந்தாள் உரங்கள், மற்றும் மரத்தூள் இவைகள் ஈரத்தை தக்கவைப்பதுடன், செடிக்கும் ஊட்டச்சத்தாக அமைகிறது. நல்ல வடிகால் வசதியை அமைக்கவேண்டும். மூங்கில் ஓர் நீர் விரும்பித் தாவரம் ஆனால் அதிகப்படியான நீரை விரும்பவதில்லை.

குழி
                    குழியெடுப்பதற்கு முன்பு அவ்விடங்களைக் குறித்துக் கொள்ளவேண்டும். பிறகு (3x3x2) அடிகளில் குழி எடுக்கவேண்டும. இவை மழைக்காலத்திற்கு முன்னரே செய்து முடிக்கவேண்டும், ஏனெனில் மண் அக்குழியில் விழுவது தடுக்கப்படும்.

நடுதல்
                    குழியில் மண்ணுடன் பண்ணை எரு, (அ) தொழு உரம் (அ) மண் புழு உரம், 200 கிராம் வேப்பம்புண்ணாக்கு, 50 கிராம் யூரியா, 50 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 50 கிராம் பியூரோட் ஆஃப் பொட்டாஷ் சேர்த்துக்கொள்ளவேண்டும். கவனமாக பாலித்தீன் பையைக் கத்தியால் கிழித்து சேர்த்தொகுதிக்கு எவ்வித பாதிப்பும் இன்றி வெளியே எடுக்கவேண்டும். பின்பு தோண்டப்பட்ட குழியில் வேர்த் தொகுதி மடங்கிவிடாமல் சரியாக வைத்து, மண் உடன் மேற்கூறியவற்றைச் சேர்த்து மண் காற்று இடைவெளி இருக்குமாறு செய்யவேண்டும். மூடாக்கு செய்வதால் மண்ணைச் சுற்றி அமைந்துள்ள களைகள் வளராமலும், மற்றும் மண்ணின் ஈரப்பதம் அப்படியே தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.

Bamboo

நீர்ப்பாசனம்

சொட்டு நீர்ப்பாசனம் என்பது ஓர் நல்ல நீர்ப்பாசனமாகவும், அதிக மகசூல் எடுக்கவும் உதவுகிறது. செடி நட்டபின்பு 12-20 லிட்டர் நீர் விடவேண்டும். இந்த அளவு காலநிலையையும், மண்ணின் தன்மையையும் பொறுத்து மாறுபடுகிறது. இதே அளவை மறுநாளும் பின்பற்றவேண்டும். அடுத்த 10 வாரங்களுக்கு (ஆரம்ப கட்டத்தில் தினமும், பிறகு கடைசியில் 3 நாட்களுக்கு ஒரு முறையும் விடவேண்டும்).

உரமிடுதல்

மூங்கிலானது அதிக அளவு உரத் தேவையுள்ள தாவரம். எவ்வளவு அதிகம் உரம் இடுகிறோமோ,அவ்வளவு மகசூல் ஈட்ட முடியும். மூங்கிலுக்கு அனைத்து வகையான உர நீர்ப்பசானத் தேவைப்பாடு உள்ளது. அவையாவன : தழை, மணி, சாம்பல் சத்து அடிக்கடி அதிகமாக தழைச்சத்துத் தேவை உள்ளது. ஆகவே சரியான அளவுகளைப் பின்பற்றி கொடுக்கவேண்டும். பொதுவான அளவு முறைகளாவன:
யூரியா        - 15.5 கி.கி / 1 செடி / 1 ஆண்டு
சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்   5.5 கிகி / 1 செடி / 1 ஆண்டு
பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 13.45 கிகி/ 1 செடி / 1 ஆண்டு
முதல் வருடம் 50 சதவிகிதமும், இரண்டாம் வருடம் 75 சதவிகிதமும், மூன்றாம் வருடம் 100ம் அளிக்கவேண்டும். இவை 10 முறை பிரித்து அளிக்கப்படவேண்டும். உரத்தேவைப்பாடு என்பது செடி வைக்கும் போதும், குழியில் வைக்கப்படும்போதும் அக்குழியிலும், ஒவ்வொரு மாதமும் அளிக்கப்படவேண்டும். இராசயன உரங்களை நேரடியாக செடிக்கு அளித்து விடாதபடி கவனத்தில் கொள்ளவேண்டும்.
மூங்கில் புதர் செடிக்கொத்து மேலாண்மை

மண் நெகிழச் செய்தல்

10-15 செ.மீ ஆழம் வரை மண்ணைக் கிளறி நெகிழ்வுறச் செய்யவேண்டும். மேலும் 30-45 செ.மீ தொலைவில் மண்ணை அணைத்து கட்டியிருக்கவேண்டும். ஏனெனில் மூங்கில்ப் புதர் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதன் தண்டு மற்றும் வேர் தொகுதி நன்கு வளர்ச்சி பெற்று காணப்படும்.

களையெடுத்தல்

தவறாமல் களையெடுப்பது, இளம் மூங்யில் புதருக்கு உள்ளான போட்டியினைக் குறைக்கின்றது. குறைந்தது இரு வருடங்களாவது களையெடுத்தலை மேற்கொள்ளவேண்டும். அதற்கும் மேல் மூங்கிலிருந்து விழும் இலைகள் களை வளர்ச்சியினைத் தடுக்கிறது.

மூடாக்கு

மூடதக்கம் செய்வதால் மண்ணில் உள்ள ஈரப்பதமானது ஆவியாதலைத் தடுக்கின்றது. மேலும் களை உருவாதலையும் கட்டுப்படுத்துகிறது. கீழே விழும் மூங்கில் இலை, தழைகளை ஓர் சிறந்த மூடாக்காக செயல்படுகிறது. இது மூங்கிலின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

மேடு அமைத்தல்

மூங்கில் கிழங்குகளாவது பக்கவாட்டில் கிடைமட்டமாக வளர்ந்து பின்பு நேராக தண்டு வளர்ச்சி பெறுகிறது. எனவே இக்காலங்களில் சூரிய ஒளியானது நேரடியாகப் படும்போமு அதன் வளர்ச்சியானது பாதிப்படைகிறது. புதரைச் சுற்றி மணலை நன்கு மேடு அமைப்பது நல்ல வளர்ச்சியினைத் தருகிறது.

கவாத்து செய்தல்

சில இரகங்களில் கணுவிற்குக் கீழே கிளைகள் தோன்றுகின்றன. (உ.தா) டென்ரோகலாமஸ் ஹேமிடோனி மற்றும் பால்கோவா மூங்கில் கவாத்து செய்வதால் மூங்கில் கட்டையானது நன்கு வளர்ச்சியுறும், மேலும் நல்ல காற்றோட்டமான சூழலையும் ஏற்படுத்தும். மிதமான கவாத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டுகளிலும், நெருக்கமான கவாத்து நான்காம் வருடத்திலும் மேற்கொள்ளப்படுகிறது. பெரும்பாலும் கவாத்து நிலைக்கு முன்பும், நல்ல  தண்டு வளர்ச்சிக்கு முன்பு செய்து முடிக்கவேண்டும். டிசம்பர் - ஜனவரி மாதங்களில் கவாத்துப் பணியினை மேற்கொள்ளவேண்டும்.

Bamboo

சுத்தம் செய்தல்

மூங்கில் கணு (அ) கட்டையானது மூன்றாம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து உருவாகும். கணுவானது மைய விலக்கிலிருந்து சுழல் முறையில் புதிய கணுக்கள் தோன்றுகிறது. இவ்வாறு பல்வேறு கிளைகளைத் தோற்றுவிக்கிறது. அவ்வாறு தோன்றும் புதிய கிளைகள் செங்குத்து வளர்ச்சியினைப் பெறுகிறது. அவ்வாறு தோன்றும் புதிய கிளைகள் மற்றவற்றின் வளர்ச்சியினைப் பாதிக்கிறது. அதே போல் உருமாற்றம் அடைந்த கணுக்களால் நல்ல தரமிக்க கட்டைகளைப்  பெற இயலாது. எனவே நோயுற்ற, உருமாற்றம் பெற்ற கணுக்களை நீக்கிவிடவேண்டும். அவ்வாறு நோயுற்ற கட்டைகள் நோய் பரப்பும் காரணிகளுக்கு காரணமாக மட்டுமன்றி, அவைகள்  தீப்பற்கும் தன்மையும் கொண்டது.
பிப்ரவரி - மார்ச் மாதங்களே சுத்தம் செய்ய ஏதுவான காலம். இக்காலத்தில் உறக்க நிலை முடிவுற்று பின்பு வளர்ச்சி தொடங்கும் முன்பு செய்யவேண்டும்.

கணுவைக் குறைத்தல்

மூன்றாம் ஆண்டின் துவக்கதிலிருந்து நெருக்கத்ததைக் குறைக்கவும், சீரான வளர்ச்சிக்கும், கட்டையினை எளிதில் பெறவும் கணு நீக்கமானது செய்யப்படுகின்றது. சீரற்ற மற்றும் உருமாற்றம் பெற்ற கணுக்களை வெட்டிவிடவேண்டும். ஒரு சீரான உருவத்தைக் கொடுப்பதற்காகவும் கணுக்குறைத்தலானது செய்யப்படுகிறது. மேலும் இவ்வாறு செய்வதால் புதிய தண்டு வளர்ச்சிக்கும் வழி வகுக்கிறது.

அறுவடை

ஒவ்வொரு ஆண்டும் நன்கு வளர்ச்சியுற்ற, ஒழுங்கான முறையில் அமைந்த, நோயில்லா கணு மற்றும் மூங்கில் கட்டைகளை அறுவடை செய்யவேண்டும். பொருளாதார ரீதியான அறுவடையானது பயிர் செய்த மூன்றாம் ஆண்டுக்குப் பிறகே தொடங்கும். எப்படிப் பார்த்தாலும் நான்காம் ஆண்டுக்குப் பின்பு தான் முழு வளர்ச்சியடைந்த கட்டைகளைப் பெற முடியும்.
எப்பயன்பாட்டிற்காக மூங்கில் அறுவடை செய்கிறோம் என்பதை அதன் வயதைக் கொண்டு செய்யவேண்டும்.

  • தேவைப்பாடு அதிகம் இல்லாதபோது 2-3 ஆண்டுகளில் அறுவடை செய்யலாம்.
  • அதிக தேவைப்பாடு இருக்கும் போது 4ம் ஆண்டில் இருந்து பெறலாம்.
  • 5ம் ஆண்டிற்குப்பின் அறுவடை செய்யும் போது, நோயற்றதாக தோன்ற வாய்ப்புள்ளது.

சரியான அறுவடை காலமானது, பருவமழைக்குப்பின்பில் இருந்து குளிர்காலம் வரை ஆகும். இந்த காலத்தில் மூங்கிலில் உறக்க நிலையும் மற்றும் மாவுத்தன்மை குறைந்தும் காணப்படும். ஆகவே, வண்டுகள், கரையான்கள் மற்றும் பூச்சித் தாக்கும் வாய்ப்புக் குறைவு. வளரும் போது ஒரு போதும் அறுவடை செய்தல் கூடாது. அவ்வாறு அறுவடை செய்தால், அது எதிர்காலத்தில் வளரும் புதிய தண்டு வளர்ச்சியினைப் பாதிக்கும்.

அறுவடைக்கு ஆலோசனைகள்

  • அறுவடை செய்யும் போது அதிக அளவு இளம் கணுக்களை வெட்டுவதைத் தவிர்க்கவேண்டும்.
  • நோயுற்ற, வளர்ச்சி குறைபாடு உள்ள கணுக்கள இனம் கண்டறியவேண்டும்.
  • முதிர்ச்சி அடையாள முறைகளை பின்பற்றும்போது நல்ல கணுக்களைத் தேர்ந்தெடுக்க முடியும்.
  • கணுக்களை கண்களால் ஆய்வு செய்து முடித்த பின்பே, அறுவடையைத் தொடங்கவேண்டும்.
  • அறுவடை செய்து முடிக்கும் போது தரையின் மேற்பகுதியில் இரு கணுக்கள், ஒரு மையத் தண்டுடன் இருக்குமாறு செய்வது, புதர் கிழங்கின் பாதிப்படையச்  செய்யாது.
  • அறுவடை செய்யும் போது சீராக வெட்டவேண்டும். இல்லையெனில் கணுவில் மழை நீர் சேர்ந்து அவை ஒட்டுண்ணி, பூஞ்சை மற்றும் நோய்ப் பரவலுக்கு வழி வகுக்கும்.
  • அறுவடை செய்யப்பட்ட மூங்கிலை நன்கு பராமரிக்கப்பட்ட இடத்தில் வைக்கவேண்டும். இல்லையெனில், வெடிப்பு ஏற்பட்டு, அதன் மதிப்பு குறைகிறது.

ஆதாரம்: GROWMORE BIOTECH LTD.,

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

TN உழவர் சந்தை
சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்