|| | | |||
 
உயிரித் தொழில் நுட்பம் - சவுக்கு சாகுபடி முறைகள்
tamil english

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்
வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 


நிலத்தைத் தயார்  செய்தல்

  • சவுக்கு பயிரிடும் முன்பு தேர்ந்தெடுக்கப்படும் நிலம் நன்கு வடிகால்  வசதியுள்ள, நீர் தேங்காத இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இடத்தைச் சுற்றி களைகள் இன்றி பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • குழியின் அளவு (2x2x2) அடிகளில் தயார் செய்து, பின்பு மக்கிய எரு உரம், வேப்பம் புண்ணாக்கு  மற்றும் மேற்பரப்பு மண் உடன் 250 கிராம் அளவு (எண்ணெய் அற்றது) வேப்பம் புண்ணாக்கு சேர்த்து தயார் செய்யவேண்டும்.

bio Technology

குழியை நிரப்புதல் மற்றும் இடைவெளி

  • குழிகளை மேற்கூறியவற்றுடன் நிரப்பவேண்டும். மேற்பரப்பு மண் (அ) ஆற்று மண் சேர்த்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதால் மண்ணின் புரமை காக்கவும், அதிகரிக்கவும் செய்கிறது.
  • குழியின் நடுவில் கன்றினை நடுமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.
  • 2-3 வாரங்களுக்கு முன்பே குழியில் நிரப்ப வேண்டியப்பொருட்களை இட்டு, அவைகளை முழுமைப்படுத்திவிடவேண்டும்.
  • (1x1) மீட்டர் இடைவெளியில் கன்றினை நடவேண்டும்.
  • கன்றுடன் உயிர் உரமான “பிரான்கியா” சேர்க்கும் போது அதனுள்ள ஆக்டினோமைசீட்கள் இணைவாழ் தன்மையுடன் காற்றில் உள்ள நைட்ரஜனை நிலைப்படுத்தும். சவுக்குக் கன்றின் வேர் முடிச்சுகளில் காணப்படும்.

நீர்ப்பாசனம்

  • உரங்களை 10 இடைவெளி அளவுகளில் அளிக்கவேண்டும்.
  • 200:200:300 கிராம் : தழை:மணி:சாம்பல் / கன்று / ஆண்டு இதுவே பரிந்துரைக்கபட்ட உரத்தின் அளவாகும்.
  • உரத்தினை கோடைக்காலம் தவிர (ஏப்ரல் - மே) மற்ற காலங்களில் தவறாது அளிக்கவேண்டும்.
  • இரண்டாம் ஆண்டில் இருந்த அளவிதைக் குறைத்து அதே இடைவெளிகளைப் பின்பற்றவேண்டும்.
  • அடுத்தடுத்த முறைகளில் ஓராண்டு ஒரு முறை மட்டுமே உரநீர்ப்பாசனம் அளிக்கவேண்டும்.

Bio Technology

பயிர்ப் பாதுகாப்பு

  • பெரும்பாலும் முக்கியமாக பூச்சித் தாக்குதலுக்கு ஆட்படுவதில்லை. அதே போன்று நோய் அறிகுறிகளும் இருப்பதில்லை. ஏதேனும் தோன்றினால் பெவிஸ்டின் (அ) பரிந்துரைக்கப்பட்ட ஏதாவது பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம்.
  • பயிரின் சீரான, அதி வேக வளர்ச்சிக்கு பயிர் வளர்ச்சி ஊக்கிகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.

கவாத்து  செய்தல்

  • சவுக்கு மரங்களில் உள்ள பக்கக் கிளைகளை கவாத்து செய்து நேராக மரம் வளரச் செய்யவேண்டும். அனைத்துப் பக்கக் கிளைகள் 4.5 மீட்டருக்கு கீழேயும், மையத் தண்டின் 5 செ.மீ அளவுக்கு இருக்குமாறு கவாத்து செய்யவேண்டும். அவ்வாறு செய்யப்படம் போது இளமட தண்டில் பாதிப்பு ஏற்படா வண்ணம் செய்தல்வேண்டும்.
  • முதல் வளர்ச்சிப் பருவத்தில் சரியான வளர்ச்சி மற்றும் உயரம் தென்படாவிட்டால் மீண்டும் மற துளிரச் செய்யவேண்டும்.
  • அவ்வாறு மறு துளிரச் செய்தலில் 4 செ.மீக்கு மேலே அமையுமாறும், உறக்க நிலையிலும் செய்யவேண்ம். மறு துளிரச் செய்யப்பட்ட பின்பு இரு வாரங்களில் புதிய தண்டு வளர்ச்சித் தோன்றும். அவ்வாறு தோன்றுவதைக் கண்டு நன்க வளர்ச்சியுற்றதைத் தவிர மற்றவற்றைக் கிள்ளி எறிந்துவிடவேண்டும். பின் பனிக்காலமே மறு துளிர்தலுக்கு சரியான நேரமாகும்.

பராமரிப்பு
நிலத்தைச் சுற்றி களைகளும், மண்ணின் காற்று இடைவெளி இருக்குமாறும் பராமரிக்கவேண்டும்.

Bio Technology

தகவல்  : குரோமோர் பயோடெக் லிமிடெட்.

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

TN உழவர் சந்தை
சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்