|| | | |||
 
உயிரித் தொழில் நுட்பம்:: படியாக்கப் பெருக்கம் : வாழை
tamil english

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்
வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

ஜெயின் கிரிகேஷன் லிமிடெட்

திசு வளர்ப்பு வாழைகள்

திசு வளர்ப்பு என்பது படியாக்கப் பெருக்கம் மற்றும் நுண் பெருக்க முறையில் திசுக்களைத் தேர்வு செய்து புதிய மற்றும் பக்கக் கன்றுகளை உருவாக்கும் விதம் ஆகும். இது நான்கு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டுள்ளது.

  1. தொடக்க நிலை
  2. பல்கூட்டு நிலை
  3. தண்டு மற்றும்
  4. வேர் உருவாக்க நிலை பின்பு
banana

முதல் நிலை பக்குவப்படுத்துதல் பசுமைக்குடிலிலும், இரண்டாம் நிலைப் பக்குவப்படுத்துதல் என்பது நிறழ்குடியிலும் செய்யப்படுகிறது. பக்குவப்படுத்துதல்ல் நல்ல சூழலும், அழுகலில்லாத இடமும், செய்யப்படுகிறது. பக்குவப்படுத்தலில் நல்ல சூழலும், அழுகலில்லாத இடமும், சரியான தாவர காலநிலையிலும் மட்டுமே முழு வெற்றியைத் தரும்.

Banana

இந்நிறுவனத்தார் 1994-95 முதல் “கிராண்ட் - 9" திசு வளர்ப்பு வாழையில் மதன்மையாளர்களாக உள்ளனர். ஜெயின் திசு வளர்ப்பு ஆய்வகமானது நுண் பெருக்க முறையிலும், இருபது இலட்சம் “கிராண்டு9” இரக திசு வளர்ப்பு வாழைக் கன்றுகளை விற்றுச் சாதனை படைத்துள்ளனர். இது நம் பாரத நாட்டின் பெரிய நுண்பெருக்க ஆய்வகம் ஆகும்.

விவசாயப் பெருமக்கள் சராசரியாக 12 கி.கிலிருந்து 26 கி.கியாக ஒரு குலை வீதம் ஒரு வருடமும், தொடர்ச்சியாக 30 மாதங்கள் மறுதாம்பு பயிராகவும் சாகுபடி செய்கின்றனர். திசு வளர்ப்பு என்பது தாவரத்தின் ஒரு செல் அல்லது பல செல்லின் மூலம் மழுவதும் கட்டுப்பாட்டுனும், சுகாதாரமான சூழலிலும் வளர்ப்பது ஆகும். வளர்ப்பீர் ஜெயின் திசு வளர்ப்பு வாழை !! எடுப்பீர் அதிக மகசூல் !!

திசு வளர்ப்பு என்றால் என்ன ?
தாவரத்தின் ஒரு பகுதி அல்லது தாவரத்தின் ஒரு செல் அல்லது பல செல்லை சோதனைக் குழாயில் மிகுந்த கட்டுப்பட்டுடனும் மற்றும் சுகாதாரமான சூழலிலும் வளர்ப்பது திசு வளர்ப்பு முறை ஆகும்.

இந்தியாவின் நிலை:

வாழைப்பயிரானது உலகம் முழுவதும் 97.5 மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்படும் ஓர் முக்கியப் பயிராகும். இந்தியாவில் வாழைப்பயிரை நம்பி பலர் வாழ்கிறார்கள். மொத்த நாட்டின் உற்பத்தி 16.91 மில்லியன் டன்கள், சாகுபடிப் பரப்பு 490.70 ஆயிரம் எக்டர், நாட்டின் சராசரி உற்பத்தி 33.5 டன்கள் / எக்டர், உற்பத்தியில் மகாராஷ்டிரா மாநிலம் முதல் இடம் 60 டன்கள் / எக்டர், வாழைப் பயிரானது நாட்டின் மொத்த பழ உற்பத்தியில் 37 சதவிகிதம் ஆகும்.
வாழையானது மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிரிடப்படும் முக்கியப் பணப் பயிர் ஆகும். இந்தியாவின் பயிர் சாகுபடியில் 20 சதவிகிதம் வாழை அமையப் பெறுகிறது. மகாராஷ்டிரா சாகுபடிப் பரப்பில் இரண்டாம் இடமும், உற்பத்தியில் முதல் இடமும் பெறுகிறது. ஜால்கான் வாழைப் பயிரிடும் முக்கியமான மாவட்டம் ஆகும்.  இது மகாராஷ்டிராவில் உள்ளது. இங்கு சுமார் 50,000 எக்டர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. இருப்பினும் வாழைப்பயிரானது பக்கக் கன்றுகளாகப் பயிரிடப்படுகிறது. தற்போது வேளாண்மைத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் திசு வளர்ப்பு முறை கடைப்பிடிக்கப்படுகிறது.

வேளாண்மைக் காலநிலை

வாழைப்பயிர் பொதுவாக வெப்பநிலையில் வளரக்கூடிய தாவரம். வெப்பநிலையின் அளவு 13 டிகிரியிலிருந்து 38 டிகிரி வரை. ஒப்பு ஈரப்பதன அளவு 75-85 % இந்தியாவில் வாழைப்பயிரானது பரவலாக வெப்ப ஈரப்பதன மண்டலத்திலிருந்து மிதவெப்பமண்டலம் வரை பயிரிடப்படுகிறது. பரவலாக அனைத்துப் பகுதிக்கும் ஏற்ற இரகமாக “கிராண்ட்-9” உள்ளது. வெப்பநிலை 12 டிகிரி க்கும் குறையும்போது “உறைதல் நோய்” தோன்றக்கூடும். சாதாரண வளர்ச்சி 18 டிகிரியிலும், 27 டிகிரியிலும் ஓரளவும், 38 டிகிரியிலும் முழு வளர்ச்சியை அடையும் அதிக வெப்பநிலையில் வாடல் நோய்த் தோன்றக் கூடும். அதிக அளவு காற்றின் வேகம் 80 கி.மீ / மணி வேகத்தில் வீசும்போது பயிரைப் பாதிக்கும்.

மண்

வாழைப்பயிருக்கு நல்ல வளமும், வடிகால் வசதியும், ஆழமான வண்டல் மண்ணுடன் மண்ணின் காரத்தன்மை 6-7.5 வரை இருப்பது மிகவும் ஏற்றது. மாறாக வறண்ட, சரளை மண், மண்ணின் இடைவெளிகள் அதிகம் உள்ள நிலம் வாழைப்பயிருக்கு ஏற்றது அல்ல. அதிக மணல் மற்றும்  அதிகமான பருத்தி பயிரிடப்பட்ட நிலத்தைத் தவிர்க்கவேண்டும். வடிகால் வசதி நிலத்தையும் தவிர்த்துவிடவேண்டும்.
மண் அதிக காரத்தன்மையோ அல்லது, அமிலத்தன்மையோ கொண்டிருத்தல் கூடாது. அதிக அங்ககப் பொருட்கள் தழைச்சத்தும், அதனும் மணிச்சத்தும் இருப்பது மிக அவசியம் ஆகும்.

இரகங்கள்

இந்தியாவில் பல்வேறு விதமான இரகங்கள் பல்வேறு விதமான இடங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. அவை தேவைக்கேற்பவும், இடத்தில் சூழ்நிலைகளைப் பொறுத்து மாறுபடுகின்றது. சுமார் 20 இரகங்கள் பயிரிடப்படுகிறது.
பச்சை வாழை, ரொபஸ்டா, மொந்தன், பூவன், நேந்திரன், செவ்வாழை, நைலி, சவேத் வேல்சி, பனாரசி, அர்காபூரி, ரஸ்தாளி, கற்பூரவள்ளி, கர்தாலி மற்றுமத் கிராண்ட் - 9.
கிராண்ட் - 9 புகழ் மிக்க இரகமாக உள்ளது, ஏனென்றால் அதிக வறட்சியிலும் தாங்கும்  தன்மை, அதிக நயம் மிக்க வாழைக்குலைகளும் ஒவ்வொரு பழத்தின் இடைவெளி, நீளம், எடை முதலிய காரணங்களால் ஆகும். பழ உற்பத்தியாளர்கள் சீரான மஞ்சள் நிறமும், அதிக நாள் தாங்கும் திறனும் இந்த இரகம் கொண்டுள்ளதால் மற்ற இரகங்களைவிட “கிராண்ட் - 9" அவர்களை அதிகம் கவர்ந்துள்ளது.

நிலம் தயார் செய்தல்

வாழையைப் பயிரிடுவதற்கு முன்பு பசுந்தாள் உரங்களான தக்கைப்பூண்டு, தட்டைப்பயிறு முதலியவற்றை மண்ணில் உரமாக்க வேண்டும். நிலத்தை 2-4 முறை உழவேண்டும். சுழல் கலப்பை அல்லது பலுகு கொண்டு மண்ணைப் பண்படுத்தவேண்டும். மேலும் அடியுரமாக ஒரு அல்லது தொழு உரம் இடவேண்டும். 45 செ.மீ x 45 செ.மீ x 45 செ.மீ பொதுவாக தேவைப்படும் குழியின் அளவு ஆகும். குழியில் மேற்புறமும் 10 கி.கி அளவு தொழு உரம் சேர்க்கவேண்டும். இதனுடன் 250 கிராம் அளவு வேப்பம் புண்ணாக்கு மற்றும் 20 கிராம் அளவு கார்போப்யூரான் பூஞ்கைக்கொல்லியையும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.

தயார்படுத்தப்பட்ட குழியினை சூரியக்கதிரியத்தால் விடவேண்டும். இவ்வாறு செய்வதால் மண்ணில் களர் மற்றும் உவர் நிலமான இருப்பின் கார அமிலநிலை அளவு 8க்கு அதிகமாக இருப்பின் கரிமப் பொருளை மண்ணில் இடவேண்டும். மேலும் கரிமப்பொருளை இடும்போது நிலத்தின் உவர்தன்மையானது குறைகிறது. மறுசால் (அ) மாற்றுசால் மூலம் வாழைப்பயிரிடப்படுவது எவ்வளவு எண்ணிக்கையில் பயிரிடப்படுகிறது என்பதைக் காட்டுகிறது.

நடவிற்கேற்ற கன்று

500-1000 கிராம் அளவுள்ள பக்கக் கன்றுகள் நடவிற்குப் பயன்படுத்தப்படுகின்றது. பொதுவாக நோய்த்தாக்குதல் மற்றும் நூற்புழுக்களால் பக்கக் கன்றுகள் பாதிப்படைகின்றன. அதேபோல் மாறபாடுடைய பக்கக் கன்றுகளால், சீரற்ற வளர்ச்சி மற்றும் அறுவடை காலம் முதலியனவும் மாறுபடுகின்றது.
ஆகவே தான் ஆய்வகத்தில் படியாககப் பெருக்கம் திசுவளர்ப்புச் செடிகள் நடவிற்குப் பயன்படுத்தப்படுகிறது. அவைகள் நோய் தாக்குதலின்றி, சீராகவும், நன்கு வளர்ச்சியுடன் காணப்படுகிறது. முறையாக பக்குவப்படுத்தப்பட்ட இரண்டாம் நிலைக் கன்றுகளே நடவிற்குப் பயன்படுத்தப்படுகிறது.

தாய்க்கன்று
arrow
தாய்க்கன்று கிழங்கு
arrow
தொடக்கநிலை
arrow
பல்கூட்டு நிலை
arrow
தண்டு மற்றும் வேர் உருவாக்கம்
arrow
முதல் நிலை பக்குவப்படுத்துதல்
arrow
இரண்டாம் நிலைப் பக்குவப்படுத்துதல்

திசு வளர்ப்புக் கன்றுகளின் நன்மைகள்

  • ஒத்த தன்மைக் கொண்ட கன்றுகளால் சீரான மேலாண்மை
  • தரமான நோயில்லாத கன்றுகள்
  • சீரான வளர்ச்சி, அதிக மகசூல்
  • விரைவாக முதிர்ச்சி அடைவதால் குறைந்த பரப்பில் பல்வேறு சாகுபடிக்கு ஏற்றது.
  • வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கின்றன.
  • குறைந்த செலவில், சிறிது காலத்தில் இருதாம்புப் பயிர் செய்யலாம்.
  • சீரான ஒரே நேரத்தில் அறுவடை செய்யலாம்.
  • 95 % - 98 % முழுமையாக வளர்ச்சியுடைய பழங்கள்
  • புதிய இரகங்கள் அறிமுகப்படுத்தப்படுகிறது, மிகக் குறுகிய காலங்களில்.

பயிரிடும் காலம் :

            திசு வளர்ப்பு வாழையானது ஆண்டு முழுவதும் பயிரிடப்படுகிறது. ஆனால், அதிக குளிர் மற்றும் கோடைக் காலங்கள் தவிர, சொட்டு நீர்ப் பாசனம் இருப்பது இன்னும் முக்கியத்துவம் வாய்ந்தது. இரு பருவங்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிரிடப்படுகிறது.

இந்தியா         :           காரீப் - ஜீன்  - ஜீலை
ரபி  - அக்டோபர் – நவம்பர்

பயிர் நிலக்கணக்கியல்

பொதுவாக வாழைச் சாகுபடியாளர்கள், அடர் நடவு முறையில் 1.5 மீ x 1.5 மீ x 1.5 மீ அளவில் பயிரிடுகின்றனர், இருப்பினும் விளைச்சல் மற்றும் பயிரின் வளர்ச்சி குறைகிறது. ஏனெனில் சூரியக் கதிர்களின் தாக்கும் முதலியவற்றால் தோன்றுகிறது. பல்வேறு விதமான சோதனை முயற்சிகளையும் “ஜெயின் கிரிகேஷன்” ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிப் பண்ணையில் “கிராண்ட் - 9 ” இரகத்தில் செய்யப்படுகிறது. இதன் நடவு அளவு 1.8 மீ x 1.52 மீ பரிந்துரைக்கப்படுகிறது. அது 1 ஏக்கருக்கு 1452 கன்றுகளும், 3630 கன்றுகள் 1 எக்டரில் பயிர் செய்யலாம். நடவு செய்யும் திசை வடக்கு - தெற்காகவும், வரிசையின் நடவு இடைவெளி 1.82 மீட்டர் ஆகும். வடஇந்தியா, கடற்கரையோரப்பகுதி, மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள பகுதியிலும், வெப்பநிலை 5-7 டிகிரி குறைவாக உள்ள பகுதியில் 2.1 மீட்டர்  x 1.5 மீட்டர் பின்பற்றப்படுகிறது.

நடவு செய்யும் முறை

பாலீத்தீன் பையில் இருந்து கன்றை எவ்வித பாதிப்பின்றி எடுக்கவேண்டும். நடவு செய்யும் குழியில் கன்றானது அதன் தண்டு பகுதியானது 2 செ.மீக்கும் கீழே அமைந்திருக்க வேண்டும். மெதுவாக கன்றை மேற்கண்டவாறு செய்து நடவு செய்யவேண்டும், அதிக ஆழத்தில் நடவு செய்வதைத் தவிர்க்கவேண்டம்.

நீர் மேலாண்மை

வாழைப் பயிருக்கு அதிக நீர் வசதியும், பரப்பும் தேவைப்படுகிறது. ஆனால் வாழைப்பயிரின் வேரானது குநை்த அளவு நீரை மட்டுமே எடுக்கின்றது. ஆகவே, நம் பாதரசத்தில் நீர் மேலாண்மையை வாழைச் சாகுபடியில் வலியுறுத்தவேண்டும். தற்போது சொட்டு நீர்ப்பாசனம் முதலியன போன்று வலியுறுத்தப்படுகின்றன.
ஓர் ஆண்டுக்கு வாழைக்குத் தேவைப்படும் அளவு 2000 மிமீ ஆகும். நீர்ப்பாசனம் மற்றும் மூடாக்கிடல் மூலம் தண்ணீரை சேமிக்கலாம். இதன் மூலம் 56 சதவிகிதம் நீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், 23-32 சதவிகிதம் விளைச்சலும் அதிகரிக்கிறது.

நீர்ப்பாசனம் நடவு செய்த பிறகு தொடங்கப்படவேண்டும். மண்ணில் நீர் கொன்திறனுக்கேற்றபடி நீர்ப்பாசனம் செய்யப்படவேண்டும். அதிக அளவு நீர்ப்பாசனம் செய்யப்படுவது கன்றின் வேர்ப்பகுதியில் உள்ள மண்ணின் காற்றிடைவெளி நீக்கப்படுவதால் கன்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
ஆகவே தான் வாழைப்பயிருக்கு சொட்டு நீர்ப்பாசனம் ஏற்றது.

மாதம் அளவு லி / நாள் ஒன்றுக்கு மாதம் அளவு லி / நாள் ஒன்றுக்கு
ஜீன் 06 அக்டோபர் 04-06
ஜீலை 05 நவம்பர் 04
ஆகஸ்ட் 06 டிசம்பர் 04
செப்டம்பர் 08 ஜனவரி 06
அக்டோபர் 10-12 பிப்ரவரி 08-10
நவம்பர் 10 மார்ச் 10-12
டிசம்பர் 10 ஏப்ரல் 16-12
ஜனவரி 10 மே 18-20
பிப்ரவரி 12 ஜீன் 12
மார்ச் 16-18 ஜீலை 12
ஏப்ரல் 20-22 ஆகஸ்ட் 14

 நீர் வழி உரமிடல்

வாழைப்பயிருக்கு அதிக அளவு சத்துக்கள் தேவைப்படுகின்றன. அவை பெரும்பாலும்  மண்ணின் மூலம் அளிக்கப்படுகிறது. இந்தியாவின் அனைத்துப் பகுதிகளிலும் பார்க்கும்போது தொழு உரம் - 20 கிகி தழைச்சத்து 200 கிராம், மணிச்சத்து 60-70 கிராம் மற்றும் சாம்பல்சத்து 17-20 கிராம் மேற்கண்டவை ஒரு கன்றுக்கு ஆகும். சுமார் 1 மெட்ரிக் டன் வாழை உற்பத்திக்கு 7-8 கிலோகிராம் தழைச்சத்து 0.7-1.5 கி.கி மணிச்சத்து 17-20 கி.கி சாம்பல் சத்தும் தேவைப்படுகின்றது. பெரும்பாலும் விவசாயிகள் அதிக அளவு யூரியா மற்றும் குறைந்த அளவு தழை, சாம்பல் சத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

மரபு முறையிலான உரமிடல் மூலம் அதிக அளவு இழப்புகள் ஏற்படுகின்றன. அவைகளாவன : தழைச்சத்தின் இழப்புகள் நீர்க்கரையோட்டம், ஆவியாதல் மூலமாகவும், தழை மற்றும் சாம்பல் சத்துக்கள் இழப்புகள் மண்ணில் சேர்ந்து கொள்ளுதல் முதலிய காரணங்களால் ஆகும். நீரில் கரையும் உரங்களையும், திரவ உரங்களையும் சொட்டு நீர்ப்பாசனம் மூலம் அளிப்பது வரவேற்கத்தக்கது. 25-30 சதவிகிதம் விளைச்சல் நீர் வழி உரமிடல் மூலம் ஆக அதிகரிக்கிறது. அதற்கு மேலான ஓர் பயன் பணியாட்கள் மற்றும் நேரமர், ஊட்டச்சத்துக்கள் முறையாக சுராக வினியோகிக்கப்படுகிறது.

அளிக்கப்படும் அட்டவணை

கீழ்க்கண்ட உர அட்டவணை திசு வளர்ப்பு “கிராண்ட் - 9” இரக வாழைக்கு, திட மற்றும் கரையும் உரங்களின் அளவுகள் ஆகும்.

திடஉரம்
கிராண்ட் - 9 வாழை

மொத்தம் ஊட்டச்சத்து தேவைப்பாடு
தழைச்சத்து 200 கிராம் கன்று
மணிச்சத்து 60-70 கிராம் கன்று
சாம்பல் சத்து 300 கிராம் கன்று

மொத்தத் தேவைப்பாடு

மொத்தம் தேவைப்பாடு 1 ஏக்கர்
இடைவெளி (1.8 x 1.5 மீட்டர்) (1452 கன்றுகள்)
யூரியா (என்) சிங்கிள் பாஸ்பேட் (எஸ்எஸ்பி) பியூரேட் ஆஃப் பொட்டாஷ் (MOP)
431 கி / கன்று 375 கி / கன்று 500 கி / கன்று
625 கி / கன்று ஏக்கர் 545 கி / ஏக்கர் 726 கி.கி / ஏக்கர்

அளிக்கப்படும் பருவம் மூலம் அளவு கிராம்கள்
கன்று நடவு செய்யும் போது சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 100
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 50
நடவு செய்த 10ம் நாள் யூரியா 25
நடவு செய்த 30ம் நாள் யூரியா 25
  சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 100
  நுண் ஊட்டச்சத்துக்கள் 25
  மெக்னீசியம் சல்பேட் 25
  சல்பர் 10
நடவு செய்த 60ம் நாள் யூரியா 50
  சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 100
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 50
நடவு செய்த 90ம் நாள் யூரியா 65
  சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 100
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 50
  நுண் ஊட்டச்சத்துக்கள் 25
  மெக்னீசியம் சல்பேட் 30
  சல்பர் 25
நடவு செய்த 120ம் நாள் யூரியா 65
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 100
நடவு செய்த 150ம் நாள் யூரியா 65
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 100
நடவு செய்த 180ம் நாள் யூரியா 30
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 60
நடவு செய்த 210ம் நாள் யூரியா 30
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 60
நடவு செய்த 240ம் நாள் யூரியா 30
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 60
நடவு செய்த 270ம் நாள் யூரியா 30
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 60
நடவு செய்த 300ம் நாள் யூரியா 30
  பியூரேட் ஆஃப் பொட்டாஷ் 60

அட்டவணை மண்ணின் தன்மை, நடவு செய்யும் பருவம் முதலியவற்றுக்கு மாறுபடுகிறது.
நீரில் கரையும் உரங்கள்

பருவம் நிலை 1000 கன்றுகளுக்கு ஒவ்வொரு 4ம் நாள் முறையில் மொத்த அளவு கி.கி
  யூரியா 4.13 82.60
நடவு செய்த பிறகு 65ம் நாள் வரை 12:61:00 4.13 60.00
  00:00:50 3.00 100.00
  யூரியா 5.00 120.00
65-135ம் நாள் வரை 12:61:00 2.00 40.00
  00:00:50 5.00 100.00
  யூரியா 6.50 65.00
135-165ம் நாள் வரை 00:00:50 6.00 60.00
  யூரியா 3.00 150.00
165-315ம் நாள் வரை 0:00:50 6.00 300.00

அட்டவணை மண்ணின் தன்மை, நடவு செய்யும் பருவம் முதலியவற்றிற்கு மாறுபடுகின்றது.

இடை உழவுப்பணிகள்

வாழைப்பயிரின் வேர்த் தொகுப்பானது எளிதில் பாதிப்புக்கு உள்ளாகும்  வகையில் அமைந்துள்ளதால் ஊடுபயிரானது பெரும்பாலும் தவிர்க்கப்படுகிறது. இருப்பினும் குறுகிய காலப் பயிரிகளான (45-60 நாட்கள்) உளுந்து, தட்டைப்பயிறு, தக்கைப்பூண்டு முதலியன பசுந்தாள் உரங்களான பாதிப்புக்கு உள்ளாவதால் அவைகள் ஊடுபயிராகப் பயிரிடுவது தவிர்க்கப்படவேண்டும்.

களையெடுத்தல்

கிளைஃபாஸ்பேட் 2 லி / எக்டர் நடவு செய்யும் முன் களையின்றி பாதுகாக்கலாம். அதே போன்று ஒன்று அல்லது இரண்டு முறை மூலம் பணியாட்கள் களையெடுப்பது அவசியமாகும்.

நுண் ஊட்டச்சத்து வழி தெளித்தல்

இலைவழியில் ஜிங்க் (0.5 சதவிகிதம்), பெரஸ் சல்பேட் (0.2 சதவிகிதம்) காப்பர் சல்பேட் (0.2 சதவிகிதம்) மற்றும் டோரிக் அமிலம் (0.1 சதவிகிதம்) இவைகளில் தெளிக்கலாம். இவைகள் வாழைப்பயிரின் புற அமைப்பு மற்றும் வினை அமைப்பில் நல்ல மாற்றத்தையும், அதிக மகசூலையும் தரும். நுண் ஊட்டச்சத்து தயாரிக்க கீழ்க்கண்ட அளவுகளைப் பயன்படுத்தவேண்டும். இவை 100லி நீரில் கரைபடும் வண்ணம் அமையவேண்டும்.

ஜிங்க் சல்பேட் - 500ஜிங்க் சல்பேட்

ஒவ்வொரு 10லி கரைசலுடன் 5-10 மில்லி “ டீபோல் “ திரவம் சேர்த்து கொள்ளவேண்டும்.

பெரஸ் சல்பேட் - 200 கிராம்

காப்பர் சல்பேட்        -           200 கிராம்
போரிக் அமிலம்        -           100 கிராம்

சிறப்புப் பணிகள்

                    கீழ்க்கண்ட சில சிறப்புப் பணிகள் வாழைப்பயிரின் உற்பத்தி மற்றும் அதன்  தரம் ஆகியவற்றில் முக்கியத்துவம் பெறுகிறது.

பக்கக் கன்றை நீக்குதல்

                    வாழையில் பக்கக் கன்றை நீக்குதல் என்பது சற்று கடினமான ஒன்றாகும். இது வாழையில் தாய்க்கன்றுடன் உள்ள போட்டியைக் குறைக்கும். பக்கக் கன்றை நீக்குதல், ஒவ்வொரு பக்கக் கன்றுகளில் தண்டு வளர்ச்சி தோன்ற விடாமல் நீக்கவிடவேண்டும். மறுதாம்புப் பயிருக்கு கன்றை விடும் முன்பு, இரு தாய்க் கன்றுகளுக்கு இடைப்பட்ட தொலைவினை சரி செய்து கொள்ளவேண்டும். மறுதாம்புப் பயிர் பூவிற்கு எதிர்த்திசையில் அமையுமாறும், சற்று தொலைவில் அமையுமாறும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

பூக்களைக் குறைத்தல்

                    சூல்தண்டு, சிவப்பு பூவிதழ்களைக் குறைத்தலே பூக்களைக் குறைக்கும் பணி ஆகும். பெரும்பாலும் இவை கடைபிடிக்கப்படுவதில்லை. ஆகவே வாழைத்தாருடன் விடப்பட்டு, பின்பு அறுவடை செய்யும் போது பழங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே பூக்களும் அமைந்தவுடன் அவைகளை (சூல்தண்டு, பூவிதழ்) நீக்கவேண்டும் என கேட்டக் கொள்ளப்படுகிறது.

இலைகளை கவாத்து செய்தல்

                    காய்ந்த இலைகள் பழங்களைத் தேய்படும் போது அவைகள் பாதிப்படையும். எனவே, வயதான, மற்றும் நோய்த் தாக்குதல் உடைய இலைகளை அகற்றிவிடவேண்டும். கண்டிப்பாக பச்சை இலைகளை நீக்கக்கூடாது.

மண் அணைத்தல்

                    பலுகுகள் மூலம் அடிக்கடி மண்ணின் கடினத்தன்மையைப் போக்கவேண்டும். மண் அணைத்தல் கண்டிப்பாக 3-4 மாத் ஒரு முறை கன்றை நட்ட பின்னர் செய்யவேண்டும். கன்றின் 10-12 அடியில் இருந்து அளவு மண்ணின் அளவை உயர்த்தவேண்டும், அதே போல் மேட்டுப் பாத்தி அமைத்து 2-3” அளவு சொட்டு நீர் பாசனக் குழாய் கன்றைவிட்டு இருக்குமாறு அமைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால், காற்றினால் ஏற்படும் சேதம், மற்றும் உறபத்திச் சேதம் இவற்றில் இருந்து காக்க முடியும்.

ஆண் மொட்டு நீக்கம்

                    ஆண்  மொட்டு நீக்கப்படுவதால், காய் காய்ப்பிற்கும், தார் எடையும் அதிகரிக்கின்றது. அவை கடைசி 1-2 சீப்பில் இருந்து சுத்தமாக நீக்கப்படுகின்றது.

குழை தெளித்தல்

                    மோனோகுரோட்டோபாஸ் (0.2 சதவிகிதம்) இதனை அனைத்து வாழைச் சீப்பும் வளர்ந்த பின்னர் தெளிப்பதால் இலைப்பேன் பாதிப்பில் இருந்து காக்கலாம். இலைப்பேன் தாக்குதலால் பழத்தின் வண்ணம், தோலின் மாறுபாடு அடைகிறது.

தார் மேலுறை

                    தாருக்கு மேலுறை இடுவது சூரிய ஒளியின் பாதிப்பிலிருந்து தாரைக் காக்க உதவுகிறது. மேலும் காய்ந்த இலைகளை மேலுறையாகப் பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும் உதவும். ஆனால் மழைக்காலங்களில் மேலுறை இடுவது தவிர்க்கப்படவேண்டும். மேலுறை இடுவது தூசி, பூச்சிக்கொல்லி தாக்கம், பூச்சி மற்றும் பறவைகளினால் ஏற்படும் பாதிப்பிலிருந்து தாரைக் காக்கின்றது. மேலும், இது தாரின் வெப்பநிலையை அதிகரித்து விரைவில் முதிர்ச்சி அடைய உதவுகிறது.

தவறான காய்களை குலையிலிருந்து நீக்குதல்

குலையில் சிற்சில தரமற்ற சீப்புகள் முழுமையற்றதாகக் காணப்படும். அவைகளை வளர்ந்தவுடன் கண்டறிந்து நீக்கிவிடவேண்டும். இவ்வாறு செய்வதால் சீப்பின் உடை அதிகரிக்கிறது. சில நல்ல சீப்புகளின் அருகில் தரமற்ற சீப்புகள் இருந்தால் அவையும் நீக்கிவிடவேண்டும்.

முட்டு கொடுத்தல்

அதிக அளவு குலையின் எடை காரணமாக மரம் விழுந்து விடுகிறது. மேலும் அவை வளரும் மற்றவற்றையும் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது. ஆகவே இரண்டு மூங்கில் கொண்டு நடுவில் உள்ள மரத்தைச் சுற்றி முக்கோண வடிவில் அமைக்கவேண்டும். இவ்வாறு செய்வதால் சீரான வளர்ச்சியை குலைகளில் காணலாம்.

பூச்சி மற்றும் நோய் மேலாண்மை
அதிக அளவு பூஞ்சை, வைரஸ் மற்றும் பாக்டீரியா நோய்களாலும், பூச்சிகள் தீங்குயிர்கள் மற்றும் நூற்புழுக்கள் முதலியவற்றின் பாதிப்புகளால் வாழைப்பயிரின் உற்பத்தி, உற்பத்தித்திறன் தரம் குறைகிறது.
வாழைப் பயிரைத் தாக்கும் முக்கியப் பூச்சிகள் மற்றும் நோய்கள் அதனை தடுக்கும் முறைகள்

எண் பெயர் அறிகுறிகள் கட்டுப்படுத்தும் முறை
1.
கிழங்கு தண்வண்டு (காஸ்மோபாலிமஸ் சோர்டிடஸ்) கன்றின் கிழங்குப் பகுதியில் தொகுதியாக உருவாகி, பலவீனமாகத் தோன்றும்.
  1. நோயற்ற கன்றினைப் பயன்படுத்துதல்.
  2. தோட்டங்களைத் தூய்மையாக வைத்தல்.
  3. பொறிகளைக் கொண்டு வண்டுகளை கன்றின் கிழங்கில் வைத்துப் பிடிக்கலாம்.
  4. கார்போஃப்யூரான் 2 கிராம் / கன்று வீதம் மண்ணின் வழியாகப் பயன்படுத்தவேண்டும்.
2.
தண்டு தன்வண்டு (ஒடைஃபோரஸ் லான்ஜிகாலிஸ்) 1.சிறு துளைகளுடன், கோந்து போன்ற திரவமானது தண்டில் காணப்படும்.
2. இலைத்தாளின் மீது துளைகளும், தண்டின் உட்புறம் துளைகளும் காணப்படும்.
3. சீப்புகளில் தோன்றும் கருச்சிதைவு
  1. தண்டுத்தன்வண்டைக் கண்டறிந்து அதற்கேற்றபடி மேலாண்மையைக் கையாளவேண்டும்.
  2. ஊசியின் மூலமாக மோனோ குரோட்டோபாஸ் 150 மில்லியை நீருடன் கலந்துஈ தரைப் பகுதியிலிருந்து 4 அடி உயரத்தில் 30 டிகிரி சாய்வாக செலுத்தவேண்டும்.
  3. பக்கவாட்டில் (அல்லது) sவட்ட வடிவமான பொறிகளைக் கொண்டு (1 அடி) 100 எண்ணிக்கை  /  1 எக்டர் வண்டுகளைக் கண்டறிந்து அழித்துவிடவேண்டும்.
3.
இலைப்பேன் (சாத்தினாஃபோட்ரிப்ஸ் சைனிஃபினிஸ் மற்றம்  ஹெலியோட்ரிப்ஸ் மற்றும் ஃகோடலிஃபைலஸ்) இவை வாழைப் பயிரின் பழங்களில் நிறங்களை மங்கச் செய்கிறது. மோனோகுரோட்டோஃபாஸ் (0.05 சதவிகிதம்) தெளித்தோ (அ) ஊசியின் மூலம் செலுத்தியோ கட்டுப்படுத்தலாம். இவை பூவிதழ்கள் முழுமையான நிலையை அடைவதற்கு முன்னால் செய்யவேண்டும்.
4.
பழத்தோல் வண்டு
(பேசில்லெப்டா சப்கோஸ்டேட்டம்)
முதிர்ச்சி அடைந்த வண்டானது இலைகளிலும், பழத்தில் காணப்படுகிறது. ஆகவே பழத்தின் தோலில் பாதிப்பு தோன்றுகிறது. சுகாதாரமான முறையில் 0.05 சதவிகிதம் மோனோகுரோட்டோபாஸ், 0.2 சதவிகிதம் கார்பரைல் இவற்றை கன்றிலும், பழம் வரும் பக்கவத்தின்போது தெளிக்கவேண்டும்.
5.
அசுவினிப்பூச்சி
(பென்டலோனியா நைக்ரோவோஸா)
இவைகள் வாழை முடிக்கொத்து நஞ்சு நோயின் ஓம்புயிரி ஆகும். பெரும்பாலும் இலையின் அடிப்புறமும், தண்டின் அருகில் காணப்படும். 0.1 சதவிகிதம் மோனோகுரோட்டோஃபாஸ் பாஸ்போடியான்னி இவற்றை இலையில் தெளிக்கவேண்டும்
6.
நூற்புழு வளர்ச்சி குறைதல்
இலையின் ளெவு குறைதல்
கருநீல நிறத்தில் தண்டின் பகுதியில் அழுகல் மற்றும் வெடிப்பு
கார்போஃயூரான் 40 கிராம் / கன்று வீதம் நடவு செய்த 4 மாதம் கழித்து அளிக்கவும்.
வேப்பம் புண்ணாக்கு அங்கக உரமாக பயன்படுத்தவும்.
சாமந்திப்பூ வளர்ப்பது, பொறிப் பயிராக உதவும்.
பூஞ்சை நோய்கள்    
7.
பனாமா வாடல் நோய்
(ஃப்யூரேசியம் ஆஃஸிஸ்போரியம்)
மஞ்சள் நிறத்தில் இலைகள் தோற்றமளிக்கும். நன்கு தாங்கும் திறனுடைய இரகம் வளர்ப்பது (பச்சை வாழை இரகம்)
  இலைக்காய்கள்  அருகில், இலையானது முழுவதும் அழிந்தும், சுருங்கியும் விடுகிறது. பக்கக் கன்றுகளை சீர் செய்து 0.1 சதவிகிதம் “ஃபெவிஸ்டின்” கொண்டு பின் பயன்படுத்தவேண்டும்.
  பொய்த் தண்டானது வெடித்தல் உயிரியல் முறைக் கட்டுப்பாட்டுக் காரணிகளான “ட்ரைக்கோடெர்மா விரிடி”யும் மற்றும் அங்கக உரமாக “சூமோமோனாஸ் இன்ஃப்ளோரெசன்ஸ்” பயன்படுத்தலாம்.
  வேர் மற்றும் தண்டின் குறுக்கு வெட்டுத் தோற்றமானது சிவப்பு பழுப்பு நிறத்தில் மங்கலாகத் தெரியும். நல்ல வடிகால் அமைப்பும், தோப்பில் அதிக அளவு அங்கக உரம் கொண்டு பயன்படுத்தவேண்டும்.
8.
தலை அழுகல்
(எர்வீனியா கரோட்டோவோரோ)
கன்றின் கழுத்துப் பகுதியில் அழுகல் மற்றும் இலைகளிலும் காணப்படும். நோயற்ற கன்றுகளை பயன்படுத்தவேண்டும்.
    நோயற்ற கன்றினை எடுத்தும்ஈ வெட்டியும் விடவேண்டும்.
  கன்றின் கழுத்துப் பகுதியில் பாதிப்புக்கு உள்ளானால் அவை மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் காட்சி அளிக்கும். கன்றினை நடுமுன் 0.1 சதவிகிதம் “எமிஸன்” இவற்றில் மூழ்கி எடுத்து பின் நடவேண்டும்.
  இளநிலையில் இப்பாதிப்புக்கு ஆளானால் கருமை நிறமாகவும், திசுக்கள் மென்மையாகவும் தோற்றமளிக்கும். வளமற்ற பகுதியில் பயிரிடுவதைத் தவிர்க்கவேண்டும்.
சிகடோகா இலைப்புள்ளி நோய் இலையின் இருபுறமும் தழும்புகள் போன்று தோன்றி பின்பு வெளிரிய மஞ்சள் நிறத்தில் இருந்து பசுமை மஞ்சளாக தோற்றமளிக்கும். பாதிப்பு ஆளான இலைகளை கண்டறிந்து பின்பு அழித்துவிடவேண்டும்.
  மேலும் பழுப்பு நிறத்திலான கோடுகள் தென்படும்.  
  பழுப்பு நிறத்திலான கோடுகள் பின்பு காய்ந்து இலைப்புள்ளிகளாகத் தோன்றும். சரியான வடிகால் அமைப்பும் நீரைத் தேங்கவிடாமல் செய்யவேண்டும்.
  விரைவில் பழுத்துவிடும் தோற்றம் ஏற்படும். டைதேன் எம்-45 (120 கிராம் / எக்டர்) (அ) பெவிஸ்டின் (500 கிராம் / எக்டர்) தெளிக்கலாம்.
நஞ்சு நோய்கள்
வாழை முடிக்கொத்து நஞ்சுநோய் இலையின் அடிப்பகுதியில் இரண்டாம் நிலை நரம்புகளில் கரும்பச்சை கோடுகளும், ஒழுங்கற்று காணப்படும். வைரஸ் தாக்காத கன்றுகளை பயன்படுத்தலாம்இ உதாரணமாக திசு வளர்ப்பு
    பாதிப்புக்கு ஆளான கன்றுகளை இனம் கண்டறிந்து அழித்துவிடவேண்டும்.
  இலையின் அளவு குறைந்து பின்பு சுருங்கியும், சிறுத்து விடுகிறது. பூச்சி ஓம்புயிரிகளான அசுவினி மற்றும் மாவுப்பூச்சிகளை அழித்துவிடவேண்டும்.
    அதிகமாக உற்பத்தி ஆகாதவாறு இனம் கண்டறியவேண்டும்.
  இலையானது இரு புறமும் சுருங்கி பின்பு கொத்தாக உச்சியில் காணப்படும். கன்றின் நோயானது பரவாமல் தடுக்கவேண்டும்.
  ஆண் மலர்களின் மொட்டுக்கள் ஓரங்களில் பச்சைநிறமாக காட்சி அளிக்கும். நோய் தாங்கும் திறன் கொண்ட இரகத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
  வைரஸானது, அசுவினிப் பூச்சி மூலம் பரவப்படுகிறது. அருகில் கலப்புப் பயிர் செய்து தவிர்க்கப்படவேண்டும்.
9.
பிஎம்வி இலையின்நரம்புப் பகுதிகளில் பசுமையாக வெளிரி, பின்பு பழுப்பு நறிமாகத் தோன்றுவது இந்நோயின் தாக்குதலிருந்து தவிர்க்க, நோயற்றக் கன்றுகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.
10.
பிபிஎம்வி தண்டுப்பகுதி இலைப்பரப்பு, இலைக்காம்பு மற்றும் இடைப்பகுதிகளில் சுருற் வடிவில் கோடுகள் இளஞ்சிவப்பிலிருந்து சிவப்பாக மாறும். நோயற்ற கன்றைத் தேர்ந்தெடுக்கவம் (உதா) திசு வளர்ப்புக் கன்றுகள்
 
11.
பிஎஸ்பி தண்டு வெடித்தல், இடைப்பட்ட பகுதயில் பாதிப்பு, அவை மஞ்சள், பழுப்பு மற்றும் கருமை நிறத்தில் பச்சையம் இல்லாமை, ஒழுங்கற்ற வடிவில் சீப்புகள் உருவாக்கும். நோய்த் தாக்காத கன்றுகளைப் பயன்படுத்தவேண்டும். (உதா) திசு வளர்ப்பு வாழைக்கன்றுகள்

அறுவடை

முழுமையாக வளர்ச்சி அடைந்து, அறுவடைக்குப்பின் நேர்த்தி செய்யத் தக்க, அளவை எட்டியவுடன் அறுவடையைத் தொடங்க வேண்டும். வாழையானது அறுவடைக்குப்பின் பழுக்கும் தன்மை கொண்டது. ஆகவே அறுவடை செய்தபின் பழுக்கு வைக்கும் நேர்த்திகளை செய்யவேண்டும்.

முதிர்ந்த நிலையைக் கண்டறிதல்

பழத்தின் உருவம், தரப்பிரிவு,(அ) நீளம், இரண்டாம் சீப்பில் உள்ள இடைப்பட்ட உருவத்தன்மை, மாவுத்தன்மை அளவு, பூப்பூத்தது முதல் காய் காய்த்தது வரையிலான நாட்கள், மேலும் சந்தைத் தேவைப்பாடு ஆகியன அறுவடை செய்வதை முடிவு செய்வது ஆகும்.

குலை வெட்டுதல்

வாழையின் முதல் சீப்பின் மேற்பகுதியில் 30 செ.மீ மேலே நல்ல கூரான கத்திக் கொண்டு வெட்டவேண்டும். முதல் சீப்பு தோன்றி 100-110 நாட்கள் தாமதமாக வெட்டலாம். அறுவடை செய்யப்பட்ட குலைகளை வைக்கோல் மூலமாகவும், கூடைகளிலும் வைக்கலாம். அறுவடை செய்தபின்பு வெளிச்சம்படுவது தவிர்க்கப்படவேண்டும். ஏனெனில் விரைவில் பழுத்தும், சுருங்கியும் விடுகிறது.
உள்ளூர் பயன்பாட்டுக்கு குலைகளை தனியே வெட்டி, சில்லறை வியாபாரிகளிடம் விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்றுமரி செய்ய 4 முதல் 16 வரையிலான பழங்கள் கொண்ட சீப்புகள், தேர்ந்தெடுத்து அவை நீளம் முதலியன இனம் கண்டு தரம் பிரிக்கப்பட்டு பிறகு பாலித்தீன் பைகளில் வெவ்வேறு எடைகளில் தேவைக்கேற்ப விற்பனை செய்யப்படுகின்றது.

அறுவடைக்குப் பின் நேர்த்தி செய்தல்

அறுவடைக்குப் பிறகு நோய்த்தாக்குதல் மற்றும் முதிர்ச்சி அடைந்த குலைகள் இனம் கண்டறியப்பட்டு லாரிகளிலும், வண்டிகளிலும் உள்ளூர் சந்தைக்கு அனுப்பப்படுகிறது. ஆனால் ஏற்றுமதிச் சந்தைக்கு அனுப்பும் போது சற்று அதிகப்படியான நேர்த்தியை செய்யவேண்டி உள்ளது. அவைகள் : குலைகளிலிருந்து சீப்பாகவும், பின்பு ஓடும் நீரில் சோடியம் ஹைப்போகுளோரைடு திரவம் சேர்த்து கழுவவேண்டும்.

இவ்வாறு செய்வதால் மெழுகுப் பூச்சு நீக்கப்படுகிறது. மேரும் அதனுடன் “தயோ பென்டஸோல்” கொண்டு நேர்த்தி செய்யவேண்டும். காற்றில் காய வைத்துப் பின்பு தரம் பிரிக்கும் நிலை தற்போது உள்ளது. காற்று புகும் அட்டைப் பெட்டிகளில் 14 கி.கி அளவாகவும் (அ) தேவைப்பாட்டிற்கேற்ப பாலித்தீன் பைகளிலும் வைத்து அனுப்பப்படுகிறது. முன்பு  குளிர்வித்தலின் வெப்பநிலை 13-15 டிகிரி ஆகவும், ஒப்பு ஈரப்பதம் 80-90 சதவிகிதம் ஆகவும் செய்யலாம். சில சமயம் குளிர்ப்பதனச்சங்கிலி வணிகத்தில் 13 டிகிரி ஆக உள்ளது.

மகசூல்

11-12 மாதங்களில் பயிர் விளைச்சலை அடைகிறது. முதல் தாம்புப் பயிர் அறுவடைசெய்த 8-10 மாதமும் கழித்தும், இரண்டாம் தாம்புப் பயிர் 8-9 மாம் கழித்தும் அறுவடைக்கு வரும்.
மொத்தம் 28-30 மாதங்களில் மூன்று அறுவடை செய்யலாம்.
(உதா)        ஒன்று      -          முதன்மை பயிர்
இரண்டு  -          இரு தாம்புப் பயிர்
சொட்டுநீர்ப்பாசனம், நீர் வழி உரப்பாசனம் மற்றும் திசு வளர்ப்பு வாழையின் மூலம் 100 டன்  / எக்டர் எடுக்கலாம், இதே  அளவு மறுதாம்புப் பயிரை நன்கு பரிமாறிப்பதன் மூலமும் எடுக்கலாம்.

முகவரிகள்

சென்னை
கதவு எண் 35, ப்ளாட் A, இரண்டாவது குறுக்குத் தெரு,
சி.ஐ.டி நகர் மேற்கு,
சென்னை - 600035 (தமிழ்நாடு)
தொலைபேசி :           +91 44 24339794 42867501
தொலைப்பிரிதி :      +91 44 24328710
கைப்பேசி      :           +91 94440 49794

2. சித்தூர் அலுவலகம்
18-1044, முதல்  தளம்
பிரகாசம்    ஹெரோடு,
சித்தூர் - 517 001 (ஆந்திரப்பிரதேசம்)
தொலைப்பேசி : +91 8572550027
கைப்பேசி      : +91 94407 97827

3. கோயம்புத்தூர்
126, மேற்கு பொன்னுரங்கம் ரோடு,
ஆர்.எஸ்.புரம், கோயம்புத்தூர் - 641 002 (தமிழ்நாடு)
தொலைப்பேசி : 0422- 2540362
அலைபேசி : +91 9443315952, 9443316061

கோயம்புத்தூர் துறை
147, முதல் தெரு திருநகர், உக்கடம் - பேரூர் பேருந்து நிலையம்
செல்வபுரம்
கோயம்புத்தூர் - 600 026 (தமிழ்நாடு)
தொலைப்பேசி : +91 422 2349318
கைப்பேசி      : +91 9443315944

சிவகங்கை துறை
சக்தி சுகர்ஸ் வளாகம், (வனத்துறை அலுவலகம் எதிரில்)
வள்ளலார், மதுரை மெயின் ரோடு,
சிவகங்கை - 630 561 (தமிழ்நாடு)
தொலைப்பேசி : +91 4575 243289
கைப்பேசி  : +91 94431 45112

உடுமலைப்பேட்டை அலுவலகம் (பைப், சொட்டு நீர்ப்பாசனக் கருவிகள்)
சைட் எண் 258-90,
இளைய முத்தூர்,
உடுமலைப்பேட்டை - 642 154
கோவை மாவட்டம் (தமிழ்நாடு)
தொலைப்பேசி  :  +91 4252 27 840112
கைப்பேசி  :  +91 4252 278403

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

TN உழவர் சந்தை
சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்