|| | | |||
 
உயிரித் தொழில் நுட்பம் :: விதைக்கரணைப் பெருக்கம்: கரும்பு
tamil english

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்
வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 


விதை உற்பத்திக்காக திசுவளர்ப்புக் கரும்பின் செயல்முறைத் தொகுப்பு

ஆரம்பப் பராமரிப்பு

பாலீத்தீன் பையில் உள்ள திசுவளர்ப்புக் கன்றானது குறிப்பிட்ட இடத்தை அடைந்தவுடன் நிழல் பகுதியில் வைக்க வேண்டும். பிறகு நீர் தெளிக்க வேண்டும். பின்பு முதன்மை இடத்தில் ஓரிரு நாட்களுக்குள் நட்டு விட வேண்டும்.

இடம் அமைத்தல்: 5-6 முறை ஆழமாக உழுது, நிலத்தைப் பண்படுத்த வேண்டும்.

அடியுரம் இடுதல்: கடைசியாக உழும் போது எரு (அ) பண்ணைக்கழிவு 10 டன் / ஏக்கர் இட வேண்டும்.

வரப்பும் வாய்க்காலும் அமைத்தல்: (5x2) அடியில் இடை வெளிவிட்டு வரப்பும் வாய்க்காலும் அமைக்க வேண்டும்.

விதைத் தேவைப்பாடு: 5000 திசுவளர்ப்புக் கன்றுகள் சுமார் 1 ஏக்கருக்குத் தேவை.

நடுதல்:

2 பைகள் டைஅம்மோனியம் பாஸ்பேட் மற்றும் சிவிடால் 5 கி.கி / ஏக்கர் அளவு வரப்பில் இட வேண்டும். பின்பு பாலீத்தீன் பையைக் கவனமாகக் கிழித்து, வேர்த் தொகுப்பிற்கு எவ்வித பாதிப்பும் இன்றி கன்றை வெளியில் எடுத்து பின் நட வேண்டும்.

களைக் கொல்லி:

முதல் நாள் நடும் போது, அட்ரசீன் 1 கி.கி / 1 ஏக்கர் அளவு தெளிக்க வேண்டும். அவ்வாறு தெளிக்கும்போது பின்னோக்கி அமைவதில் கவனம் கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைந்த உர மேலாண்மை:

உரம் அளித்தல் என்பது, மண் பரிசோதனை செய்தபின் அளிக்க வேண்டும். இருந்தாலும், நாங்கள் பரிந்துரைக்கும் திசு வளர்ப்புக் கரும்புக்கு 165:40:70 கி.கி / ஏக்கர் தளை:மணி:சாம்பல் சத்துகள்.

நாள் யூரியா (கி.கி) டைஅம்மோனியம் பாஸ்பேட் (கி.கி) பொட்டாஷ் (கி.கி)
0 - 100 -
30 98 - 37
60 81 - 37
90 81 - -
120 65 - 50
மொத்தம் 325 100 124

உயிர் உரம்:

அசோஸ்பைரில்லம் - 5கி.கி
பாஸ்போபேக்டீரியா - 5கி.கி
கன்று நட்ட இவற்றை 45ம் மற்றும் 75ம் நாள் அளிக்க வேண்டும்.

களை மேலாண்மை: முதல் 90 நாட்கள், பயிரை களைகள் இன்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மண் அணைத்தல்: லேசாக மண் அணைத்தல் என்பது முதல் உரமிடல் அன்றும், அதிகமாக மண் அணைத்தல் என்பது நடவு செய்த 90ம் நாள் கழித்தும் செய்ய வேண்டும்.

நீர்ப் பாசனம்: மொத்தமாக 38 முறை நீர்ப்பாசனம் கரும்புச் சாகுபடிக்குத் தேவைப்படுகிறது.

    பாசனத்திற்கான இடைவெளி நாட்கள் பாசனம் எண்ணிக்கை
1. 1 முதல் 10 நாட்கள் 2 5
2. 10 முதல் 80 நாட்கள் 5 14
3. 81 முதல் 210 நாட்கள் 7 19

நன்செய் நிலத்தில் பயிரிடும்போது தகுந்த வடிகால் முறையை, மழைக் காலங்களில் செய்து நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

வளர்ச்சி ஊக்கிகள்: சைட்டோசைம் / பயோசைம் இவற்றை 180 மி.லி அளவுக்கு நடவு செய்த 45 மற்றும் 90ம் நாள் தெளிக்க வேண்டும்.

நுண் ஊட்டச் சத்துகள்: 2கி.கி ஜிங்க்சல்பேட் + 2கி.கி பெரஸ் சல்பேட் + 2கி.கி டை அம்மோனியம் பாஸ்பேட் + 1கி.கி யூரியா + 100லி நீர் இவற்றை நடவு செய்த 45 மற்றும் 60ம் நாள் தெளிக்க வேண்டும்.

அறுவடை: திசு வளர்ப்பு கரும்பானது 7ம் மாதத்தில் முதல் அறுவடையும், பின்பு 13ம் மாதத்தில் 2ம் அறுவடையும் செய்து இவைகளை விதைகளாகப் பயன்படுத்தலாம். மூன்றாம் அறுவடை 10ம் மாதம் கழித்துப் பெறப்பட்டு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பலாம். இவற்றில் சர்க்கரையின் அளவு அதிகம் காணப்படும்.

விளைச்சல்: மரபு வழியில் பயிர் செய்வதைக் காட்டிலும், திசுவளர்ப்பில் பயிர் செய்வதால் 40 % அதிக விளைச்சல் கிடைக்கின்றது.

ஆதாரம்: குரோமோர் பயோடெக் விமிடெட்

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

TN உழவர் சந்தை
சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்

வல்லுனரை கேளுங்கள்