|| | | |||
 
உயிரித் தொழில் நுட்பம் :: விதைக்கரணைப் பெருக்கம் : கரும்பு
tamil english

பயிர் சாகுபடி
பயிர் பாதுகாப்பு
பயிர் பெருக்கம்
வளம்குன்றா வேளாண்மை
அங்கக வேளாண்மை
பாரம்பரிய வேளாண்மை

       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

ஆய்வகத்தில் விதைக்கரணைப் பெருக்கம் : கரும்பு

டி. நீலாமதி

கரும்பு இனப்பெருக்க நிறுவனம்

கரும்பு உலக அளவில் உற்பத்தி செய்யப்படும் சர்க்கரைக்கு முக்கிய மூலப்பொருள் ஆகும். இருப்பினும் உலகின் மொத்தச் சர்க்கரை உற்பத்தியில் 65 சதவிகிதத்தை ஆறு நாடுகளே உற்பத்தி செய்கின்றன. பிரேசில்  அவற்றில் முதலிடம் வகிக்கிறது. தற்போது, கரும்பின் பகுதிகள் “திசு வளர்ப்பைக் கொண்டு உருவாக்கப்படுகிறது” திசு வளர்ப்பின் மூலம் பயிரின் உற்பத்தித் திறனை அதிகரிப்பதுடன். அதிக விளைச்சலைத் தருகின்ற இரகத்தினைத் தேர்வு செய்து , அதைனை திசு வளர்ப்பின் மூலம் பெருக்கமடையச் செய்யலாம்.

தாவரத் திசு வளர்ப்பு என்பது, ஆய்வகத்தில் நுண் தொற்று நோய் அல்லாத சுரிலில் வளர்க்கும் முறை ஆகும். இவை கிளை மொட்டுக்களை, கரிய மூலம், தாதுக்கள், வளர்ச்சிக் காரணிகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் (உ.தா) ஹார்மோன்கள் இவற்றை வளர்க்கும் போது மற்ற மரபு வழிமுறைகளையும் மற்றும் பயிர்ப் பெருக்க முறைகளைக் காட்டிலும் விரைவாக பயிர் பெருக்கமடையச் செய்ய முடியும்.

நுண் பெருக்கத்தில் உண்மை வழியில் சரியான மரபு வழி அமைப்பு (அ) இரகத்தைத் தேர்ந்தெடுத்து ஆய்வகத்தில் வளர்க்ககம் முறையாகும். இவை கிளை மொட்டுக்களைத் தோற்றுவித்தலின் மூலம் (உ.தா தாய்த் தாவரத்தில் உள்ள நுனி மொட்டுக்களைத் தேர்ந்தெடுத்து, பெருக்கமடையச் செய்தல்) இம்முறையின் மூலம் வளர்ச்சி வீதம் மற்றும் குறைந்த செலவில் அதிக எண்ணிக்கையிலான ஒரே மரபு வழிப் பயிரை உருவாக்கவும் மற்றம் நோய்க் காரணி இல்லாத தாவரத்தை உருவாக்க முடிகிறது.

1960 ஆம் ஆண்டு பாரீஸைச் சேர்ந்த பேராசிரியர். ஜார்ஜ் என்பவர் காய்கறிகளில் “வளர்த்திசு சாகுபட” (அ) “வளர்த்திசு விதைக்கரணை” முறையைப் பின்பற்றினார். இம்முறைகளில் பெறப்பட்ட தாவரம் “வளர்த்திசுத் தாவரம்” என்று அழைக்கப்பட்டன.

வளர்ப்புத்திசு சாகுபடியில் இடப்படும் செடிப்பாகமானது, அந்த வளர்ப்புத் திச ஆதிக்கமாகவோ (அ) பக்க இலைகளின் ஆதிக்கமாகவோ காணப்பட்டது. இந்த வளர்ப்புத் திசுவானது, வைரஸ் தாக்குதலின்றி காணப்பட்டது. தாவரத் திசுவானது விரைவாகவும், பெருக்கமடைந்துவிடுகிறது.

நுண் பயிர்ப் பெருக்க முறையில் விரைவாகப் பொருக்கமடையச் செய்வதுடன் விதையின் உற்பத்தித் திறன் தரம், எவ்வித நோய் மற்றம் பூச்சித் தாக்காதவண்ணம் மற்றும் அதிக உற்பத்தி, நிலைப்புத் தன்மை ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கிறது. கரும்பில் விதைக் கரணைப் பெருக்கத்தில் பல்வேறு நிலைகள் அளிக்கப்பட்டுள்ளன. படம் (1) ஒரே ஒரு தாவரத்தண்டினைக் கொண்டு 1,80,000 தாவரத்தினை உற்பத்தி செய்து, ஓராண்டில் 14 எக்டர் நர்சரி அளவை ஈடுகட்டியுள்ளன. தாவர உற்பத்தியானது பின்வரும் 4 நிலைகளைக் கொண்டது.

நிலை : 1 தண்டுப்பகுதி வளர்ச்சியை ஏற்படுத்துதல்

அ. கிருமி நீக்கம் செய்தல்

நல்ல நிலையில் வளர்ச்சியுள்ள 3-4 மாத் வயதுள்ள தாய்த் தாவரத்தில் இருந்து பகுதிகளை எடுத்துக் கொள்ளவேண்டும். மேல் பகுதிகளைக் கிருமி நீக்கம் செய்யப்பட்ட கத்தி கொண்டு நீக்கிவிடவேண்டும். தண்டினை 7-8 செ.மீ அளவ வெட்டிக் கொள்ளவேண்டும். பின்பு தண்டுப்பகுதிகளை சோப்பு கரைசலில் 5 நிமிடம் கழுவி பின்பு மாற்றங்களை காணலாம். பின் 70 சதவிகிதம் ஆல்கஹால் கொண்டு கழுவிடவேண்டும். பின்பு 10 சதவிகிதம் சோடியம் ஹைப்போகுளோரைடு கொண்ட திரவத்தில் காட்டி பின்பு அலுமினியம் தாளினால் அறுக மூடி பின்பு குடுவையை 20 நிமிடம் நன்கு குலுக்கவேண்டும்.

Sugarcane


உட்செலுத்துதல்

உயிரியற்ற காற்று வீசு அறையில் குடுவையைக் கொண்டு செல்ல  வேண்டும். பின்பு தாவரப் பகுதிகளை 3-4 முறை நன்கு கழுவவேண்டும். ஆவி வடிநீர் கொண்டு, குளோரின் மணம் போகும் வரை இவ்வாறு செய்யவேண்டும். பின்பு, இரு இலைகள் கொண்ட நிலையில் தாவரத் தண்டுப்பகுதியை கிருமி நீக்கம் செய்த கத்தியினைக் கொண்டு வெட்டி பின்பு தண்டு வளர்ச்சியிலும் ஊடகத்தில் வைத்து, வடிதாள் கொண்டு மூடிவிடவேண்டும். இந்த அமைப்பை 26 டிகிரி என்ற வெப்பநிலையில் 16 மணி நேர வெளிச்சத்தல் வைக்கவேண்டும். நன்கு தண்டுத் தொகுதியானது வளர்ந்த பின்னர் வேறு ஒரு ஊடகத்திற்கு மாற்றிவிடவேண்டும். அதன் பின்னர் 15 நாள் கழித்து வளர்ச்சியடைந்து தண்டுத் தொகுதிகளை பெரிய குடுவைக்கு அதன் எதிர்கால வளர்ச்சிக்கு மாற்றிவிடவேண்டும்.

Sugarcane

Sugarcane

நிலை : 2

தண்டின் வளர்ச்சிப் பெருக்கம்

45-60 நாள் கழித்து தண்டின் வளர்ச்சியைப் பொறுத்து, பயிர்ப்பெருக்க ஊடகத்திற்கு மாற்றவேண்டும் (அட்டவணை 1). அடுத்த 45 நாள் கழித்து புதிய தண்டானது, கிளை மொட்டுக்களிலிருந்து வருகின்றன. அவைகளை தனித் தனித் குழுக்களாகப் பிரித்து புதிய ஊடகத்திற்கு மாற்றவேண்டும்.

Sugarcane

நிலை - 3

வேர் உருவாக்கம் மற்றும் கடினமாக்குதல்

ஆய்வகத்தில் வேர் உருவாக்கம் என்பது, நன்கு வளர்ந்த தாவரத்தினை சேர் ஊடகத்திற்கு  மாற்றுவது (அட்டவணை 1). 4-5 செடிகளை ஓர் சோதனைக் குழாயிலிட்டு ஊடகத்தைச் சேர்க்கவேண்டும். 15-30 நாட்களுக்குள் சேர் உருவாக்கம் அடைகிறது. அவ்வாறு நன்கு வளர்ந்த செடியானது பாலித்தீன் பைகளுக்கு மாற்றப்படுகிறது. அவ்வாறு மாற்றப்பட்டதில் 1:1:1 என்ற விகிதத்தில், சலிக்கப்பட்ட மணல், வண்டல் மண் கொண்டு அமைக்கவேண்டும்.
Sugarcane

நிலை - 4

நடுதல்

45-60 நாள் பாலித்தீன் பைகளில் வளர்ந்த செடியானது, நன்கு வளரும் விதமாகவும், சாதாரணமான சூழலிலும் 85-90 சதவிகிதம் அளவு வளர்ச்சியுறும். செடிக்கு இடைவெளி 45 செ.மீ எனவும், இடைப்பட்ட வரப்பிற்கு 90 செ.மீ எனவும் அறிவுறுத்தப்படுகிறது. 8-10 மாதம் கழித்து விதைக்காக அறுவடை செய்யலாம்.

அட்டவணை -1
ஊடக கலவை


மூலப் பொருட்கள்
தண்டுப்பகுதி ஊடகம் மி.கிராம் / (வுயிட் பேசில்) பெருக்க முறை ஊடகம் மி.கிராம் / லி (மாற்றியமைக்கப்பட்ட எம்.எஸ்) வேர் ஊடகம் மி.கிராம் / லிட்டர் (வுயிட் ஊடகம்)
அம்மோனியம் நைட்ரேட் - 1640 -
பொட்டாசியம் நைட்ரேட் - 1900 -
கால்சியம் குளோரைடு - 440 -
மக்னீசியம் சல்பேட் 720 - 720
சோடியம் சல்பேட் 200 - 200
பொட்டாசியம் குளோரைடு 65 - 65
பொட்டாசியம் நைட்ரேட்டு 80 - 80
கால்சியம் நைட்ரேட்டு 300 - 300
சோடியம் - ஹைட்ரஜன் ஆர்க்கோபாஸ்பேட் 16.5 - 16.5
பொட்டாசியம் டை - ஹைட்ரஜன் ஆர்த்தோ பாஸ்பேட் - 170 -
போரிக் அமிலம் 1.5 6.2 1.5
கோபால்ட் குளோரைடு - 0.025 -
சோடியம் மாலிடேட் - 0.025 -
குப்ரிக் சல்பேட் - 0.25 -
பொட்டாசியம் அயோடைடு 0.75 - 0.75
ஜிங்க் சல்பேட் 3 - 3
மாங்கனீஷ் சல்பேட் 7 22.5 7
பெரிக் EDTA 36.7 36.7 36.7
மீசோ அயனோஸிட்டில் 100 100 -
கைனட்டின் 1.07 1.07 -
ஜிப்ரஸிக் அமிலம் 0.5 0.5 -
இன்டோல் பியூட்ரிக் அமிலம் 1 - -
கிளைசின் 2 2 3
நிக்கோடினிக் அமிலம் - 0.5 0.5
ஃபரிடாக்ஸின் 0 0.5 0.5
தயாமின் 0 0.1 0.1
நாப்தாலின் அசிடிக் அமிலம் - 0.5 1
6 பென்ஸைல் அமினோப்பூரின் - 0.25 -
கால்சியம் பான்டிக்னேட் - - 1
ரைபோஃப்ரோவின் - - 1
தேங்காய் நீர் 100 மிலி 100 மிலி -
சுக்ரோஸ் 20 கிராம் 20 கிராம் 20 கிராம்
PH (அலைக்காரச் சமநிலை) 5.8 5.8 7.0

நுண்பெருக்கத்தின் நன்மைகள்

ஆய்வக நுண் பயிர் பெருக்கமானது தற்போது அதிகம் விரும்பப்படும் தொழில்நுட்பமாகும். ஏனெனில் கீழ்க்கண்ட நன்கைள் பொருளாதார ரீதியாக பெருக்கத்தில் நுண் பெருக்கம் மூலம் சாத்தியமாகிறது.

  • புதிய விரைவில் வளரும் தன்மைக் கொண்ட இரகத்தினை உருவாக்க முடியும்.
  • நோய் மற்றும் பூச்சித் தாக்குதலில் விதைக் கன்றானது, பாதிப்படைவது தடுக்கப்படுகிறது.
  • நோய் மற்றம் பூச்சத் தாக்குதல் பரவுதலும் தடுக்கப்படுகிறது.
  • புதிய இரகங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டு புதிய இரகத்தின் விளைச்சல் மற்றும் தரம் மேம்படுத்தபடுகிறது.
  • விதை உற்பத்தியில் முழுக்கட்டுப்பாட்டுடன் செயல்படமுடிகிறது.
  • மறுதாம்புப் பயிரில் தரமான விதை உற்பத்தி செய்ய முடிகிறது.

பழைய இரகங்களை விடப் புதிய இரகங்கள் உற்பத்தித் திறனை மேம்படுத்திப் பெறப்ப்படுகின்றன.

தண்டு நுனி
எண்
தண்டின்
எண்ணிக்கை
விகிதம் நாட்களின் எண்ணிக்கை ஓர் சுற்றுக்கு எடுத்துக் கொண்ட மொத்த நாட்கள்
1 1 - 15 15
1 1 - 21 36
1 1 - 21 57
1 6 1:6 45 102
6 36 1:6 45 147
36 216 1:6 45 147
216 2160 1:10 45 237
2160 21600 1:10 45 282
21600 216000 1:10 45 327
வேர் உருவாக்கம் 200000 - 45 372
நர்சரி 180000 - 45 -

இந்த முறை பயிர்ப் பெருக்க விதைகளை உருவாக்கத் தொழிற்சாலைகளில் மேற்கொள்ளப்படுகின்றன. ஆதார விதை மற்றும் சான்றளிக்கப்பட்ட விதை, கிளை மொட்டுக்களினதல் உடல்ப் பெருக்கம் மூலம் செய்யப்படுகின்றன. இதன் மூலம் குறைந்த விலையில் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. இதை முறையாக அமுல்படுத்தி, அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்வதுடன், மேலும் பல புதிய இரகங்களையும் வெளியிடுகிறார்கள்.

கடந்த பத்தாண்டுகளாகவே இந்தியா முழுவதும் தாவரத்தின் வளர்ப்பின் மூலம் உற்பத்தித் திறனைப் பெருக்கவும் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் செடிகள் (அ) விதைகள் தேவையான தரத்துடன் உள்ளது. இருக்கக்கூடிய திசு வளர்ப்பு ஆய்வுக் கூடங்கள் தாவரத்தின் தரத்திற்கும், உண்மையான தாய்க்கன்றிலிருந்து பெறப்பட்ட மரபு வழிக் குணங்கள் மற்றும் அதிகப்படியாக உற்பத்தித் திறன் இவற்றில் அதிக ஆர்வம் காட்டியும் தரக்கட்டுப்பாடு முறைகளையும் பின்பற்றி வருகின்றன.

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 

TN உழவர் சந்தை
சந்தை நிலவரம்
TNAU-சந்தை தகவல் மையம்
மனிதவள மேம்பாடு
தொலைகாட்சி நிகழ்ச்சிகள்
வானொலி நிகழ்ச்சிகள்
நாளிதழ் செய்திகள்
வேளாண் செய்தி இதழ்கள்
அணை நீர்மட்டம்
TNAU சமுதாய வானொலி

   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்
முக்கிய வலைதளங்கள்