வயல்வெளி ஆய்வுகளின் வடிவமைப்பு
ஒவ்வொரு வயல்வெளி ஆய்வுகளிடமிருந்தும் புள்ளியியல் விவரங்கள் சேகரிக்கப்பட்டு பின்பு அறிவியல்பூர்வமாக சில விதிமுறைகளையும், புள்ளியியல் முறைகளையும் பின்பற்றி வடிவமைப்பு பற்றிய விளக்கங்கள் அளிக்கப்படுகின்றன. அவற்றில் கீழ்க்கண்ட வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

ஆய்வுக்கான அலகைத் தேர்ந்தெடுத்தல்
எ.கா வயல்வெளியிலுள்ள செடிகள், பாத்திகள் மற்றும் பல.
2. ஒப்பிடுபொருட்களை அமைத்தல்
எ.கா இரகங்கள், பயிர் இடைவெளி மற்றும் பல.
3. ஒப்பிடு பொருட்களை அந்தந்த வயல்வெளி ஆய்விற்கேற்ப ஏற்பாடு செய்தல்.

இதில் மூன்று அடிப்படை விதிமுறைகள் உள்ளன.

  1. திரும்பச் செலுத்துதல்
  2. தொடர்பில்லா அமைப்பு
  3. லோக்கல் கன்ட்ரோல் / தவறுகளை நீக்குதல்

செய்முறைத் திட்டத்தின் வகைகள்

  1. முற்றிலும் தொடர்பில்லாப் பகுதி முழுமைத்திட்டம்
  2. தொடர்பில்லாப்பகுதி
  3. லத்தீன் சதுரத்திட்டம்

அளவைப் பொருத்து, ஒவ்வொரு சந்ததியும் மூன்று அல்லது நான்கு வரிசைகளாக விதைக்கப்படுகின்றன. ஒத்தக் காரணிகள் கொண்டப் பயிர்கள் மொத்தமாக அறுவடை செய்யப்படுகிறது. தனித்துப் பிரியும் தன்மைக் கொண்ட தாவரங்கள் தனித்தனியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் பண்புகள் அறியப்படுகிறது. பயிர்பெருக்க வல்லுநர்கள் அதிக மகசூல் தரும் பயிர்களைக் கண்டறிந்து இதர, தரம் குன்றிய பயிர்களை நீக்கிவிடவேண்டும். மேலும் ஆய்வகத்தில் மகசூல் பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தும்படியான சோதனைகளையும் செய்யவேண்டும்.

ஆரம்பநிலை / முதல் நிலை மகசூலை மதிப்பிடுதல்
இந்த ஆய்வு ஐந்தாம் சந்ததியிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட திருப்பச் செய்தல் முறை (ரெப்ளிகேசன்)  உருவாக்கப்பட்டு வளர்ப்பு இனங்களின் ஆராயப்பட்டு, மிகச்சிறந்த குணநலன்கள் / பண்புகள் கொண்ட பயிர்கள் தேர்வு செய்யப்படுகிறது. மேலும் பயிர்களின் தரம் பற்றிய ஆய்வுகளும் கருத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வில வணிகரீதியான இரகங்களும் உட்படுத்தப்பட்டு மற்றவைகளோடு ஒப்பிடப்படுகிறது. இதிலிருந்து தலைச்சிறந்த 10 முதல் 15 வரையிலான வளர்ப்பு இனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அடுத்த ஆய்வுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

நவீன மகசூல் ஆய்வு
இந்த ஆய்வு எட்டாம் சந்ததியிலிருந்து ஆரம்பிக்கப்படுகிறது. இந்த ஆய்வில் இரகங்களின் மகசூல், பூச்சி மற்றும் நோய் தாங்கும் திறன், தரம், வாழ்நாள் மற்றும் இவற்றுள் தொடர்பில்லாப்பகுதி முழுமைத்திட்டம் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.

தொடர்பில்லாப் பகுதி முழுமைத்திட்டத்தின் வடிவமைப்பு

  • சோதனை செய்யப்படும் இடம் / வயல்வெளி சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. பின்பு ஒவ்வொரு பகுதியும், அந்தந்த ஒப்பீடு பொருட்களுக்கு ஏற்றவாறு பிரிக்கப்படுகிறது.
  • தொடர்பில்லா அமைப்பு ஒவ்வொரு பகுதியிலும் எடுத்துக் கொள்ளப்பட்டு பின்பு ஒப்பிடு பொருட்கள் தொடர்பில்லா எண் அட்டவணை பின்பற்றி அமைக்கப்படுகிறது.
  • புள்ளியியல் விவரங்களைச் சேகரித்து ஆய்வு செய்தல்
  • கெடுபிடியான வித்தியாசத்தைக் கணக்கிடுதல்.

வரிசைவாரியான ஆய்வு
இந்த ஆய்வு பொதுவாக மூன்று மற்றும் நான்காம் தலைமுறையில் மேற்கொள்ளப்படுகிறது. (ஏனெனில் போதுமான அளவு விதைகள் இல்லாததினால்) ஒவ்வொரு வரிசையிலும் 20 அல்லது அதற்கு மேற்பட்ட தேவையான பண்புகளைக் கொண்ட பயிர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பூச்சி மற்றும் நோய்கள் தாங்கும் திறனற்ற செடிகள் நீக்கப்படுகின்றன.

திரும்பச் செய்யும் வரிசை வாரியான ஆய்வு
இவ்வகையான ஆய்வு மூன்றாம் தலைமுறையிலிருந்தே மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இருக்கக்கூடிய விதைகளின் பண்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.

பல்முனை / பல ஆராய்ச்சித் திடல்
இந்த ஆய்வு 13ஆம் சந்ததியிலிருந்து 3 ஆண்டுகள், ஆராய்ச்சி நிலையங்களில், அறிவியல் விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்படுகிறது. இதில் குறிப்பிட்ட வளர்ப்பு இனங்கள் எல்லா இடங்களிலும் நன்கு வளர்கிறதா ? இல்லையா ? எனவும் மேலும் அவற்றின் மகசூல் மற்றவைகளைவிட அதிகம் இருக்கிறதா? போன்ற பண்புகள் உறுதி செய்யப்படுகிறது.

அனுசரணை ஆராய்ச்சித் திடல்
இந்த ஆய்வு வேளர்ணமைத் துறை வல்லுநர்களால், பல்முறை ஆராய்ச்சித் திடலுக்குப் பிறகு மூன்று ஆண்டுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதில் சிறந்த மூன்று அல்லது நான்கு வளர்ப்பு இனங்கள், விவசாயிகளின் நிலங்களில் வளர்க்கப்பட்டு, சிறந்த வளர்ப்பு இனம் பற்றிய தகவல்களை மாநிலப் பயிர் இரகங்கள் வெளியிடும் கமிட்டிக்கு அனுப்பப்படுகிறது. இந்தக் கமிட்டி, குறிப்பிடப்பட்ட வளர்ப்பு இனம் எந்தப் பகுதிக்கு உகந்ததாக அமைகிறது என அறிந்து, அவற்றை இரகமாக வெளியிடுகிறது.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015