பூச்சி தாங்கும் திறனுக்கான தேர்வு நுட்பங்களை ஆய்வு செய்தல்

1. வயல்வெளியில் தேர்வு செய்தல்
பூச்சிகளின் பாதிப்பை அறிய வேண்டிய இரகங்களை, இயற்கையாகவே திறந்த வயல்வெளியில் பயிர் செய்தோ அல்லது எந்தெந்த இடங்களில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகமாக உள்ளதோ, அவ்விடங்களில் இச்சோதனையைச் செய்து, இரகங்களை தேர்வு செய்யலாம். பயிர்களின் வளர்ச்சிப் பருவத்தை தூண்டும் பொருட்டு, பயிர்களின் இடைவெளியைக் குறைத்து, அதிகப்படியான தழைச்சத்து மற்றும் நீர்ப்பாசன வசதிகளைச் செய்து பூச்சி மற்றும் நோய் தாக்குவதற்கான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். பூச்சிகளை கவரும் சில உத்திகளைக் கையாண்டு, அதன் மூலம் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதலை அதிகப்படுத்தலாம். 
(எ.கா) சோளத்தில் தண்டு துளைப்பான் பூச்சியைக் கருவாடு வைத்து கவர்தல்.

2. பசுமைக்கூடாரத்தில் ஆய்வு செய்தல்
பூச்சிகளின் தாக்குதலை அதிகப்படுத்தும்படியான சூழ்நிலையை உருவாக்கவேண்டும். பூச்சிகளை அதற்குரிய பெட்டிகளில் வளர்த்துப் பின்பு அவற்றை பசுமைக்கூடத்தில் வெளியிட்டு தாக்குதலை அதிகப்படுத்தவேண்டும். பயிர்களின் எந்தெந்த பருவத்தில் எந்த மாதிரியான பூச்சிகள் (மற்றும் அதன் வளர்ச்சி நிலைகள்) தாக்குகின்றன எனவும் மேலும் பயிர்களின் எதிர்ப்புத் திறன் அல்லது தாங்கும் திறனின் அளவு போன்றவை கணக்கிடப்படுகிறது.

3. சோதனைக்கூடத்தில் ஆய்வு செய்தல்
சோதனைக் கூடத்திலும் பயிர்களின் தாங்கும் திறன் ஆய்வு செய்யப்படுகிறது. இதற்காக பயிரின் தேவையான பாகங்கள் மட்டுமே சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

4. உயிர் அளவீட்டு முறை
இந்த முறையும் பூச்சி தாக்கும் திறனைக் கண்டறிய உதவுகிறது. உதாரணமாக பருத்தியில் காய்ப்புழுக்களின் பாதிப்பைத் தாங்கும் திறனை அறியப் பயன்படுகிறது.

ஆ. நோய் தாங்கும் திறனை அறிய உதவும் நுட்பங்கள்
1. செயற்கை முறையில் உட்புகுத்துதல்
சோதனை செய்யப்படவேண்டிய பயிர் இரகங்களில் செயற்கை முறையில் நோய்க்காரணிகள் உட்செலுத்தப்படுகின்றன. இவற்றின் செய்முறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  1. பயிர்களின் மீது நோய்க்காரணியான ஸ்போர் தெளிக்கப்படுதல்
  2. தாவரங்களின் மேற்பரப்பிலோ அல்லது இலையின் காற்றிடை செல்களிலோ ஸ்போர் தெளிக்கப்படுகிறது.
  3. பயிர்களின் நாற்றுக்கள் ஸ்போரில் நனைக்கப்பட்டு பின்பு நடவு செய்யப்படுகிறது.

செயறகை முறை எபிபைடாடிக்ஸ்
நோய் தாக்கப்பட்ட நாற்றாங்கால் அல்லது பாத்திகள் உருவான பின்பு செயற்கை முறையில் நோய்க் காரணிகள் உட்புகுத்துவதை நிறுத்திவிடவேண்டும். ஏனெனில் இயற்கையாகவே நடக்கும் நோய் தாக்குதலுக்கு வழிவகை செய்யவேண்டும். இதற்குத் தகுந்தாற்போன்று மண்ணில் நோய்க்காரணிகளின் ஸ்போர்களைக் கொண்ட இரகங்களை இடையிடையே நடவேண்டும். நோய் தாக்கும் தட்பவெப்பநிலையும் இன்றியமையாததாகும்.

3. நோயின் தீவிரத்தை அளவிடுதல்
பயிர்களைத் தாக்கிய நோயின் தீவரத்தை அளவிட இருவகையான முறைகள் உள்ளன.

  1. செடிகளில் அளவிடக்கூடிய தன்மைப் பண்புகள்
  2. செடிகளில் அளவிட முடியாத தன்மைப் பண்புகள்

மேற்கண்ட இந்த இரண்டு முறைகளிலும் வெவ்வேறு விதமான அளவீடுகள் உள்ளன.

இ. வறட்சி தாங்குத் திறன்
அதிக மகசூல் திறன் கொண்ட நீர்ப்பாசன வசதியுடன் கூடிய நெல் இரகங்களை, மேட்டுப் பாங்கான நிலத்தில் வளரும் தகவமைப்பைப் பெறுகிறதா எனவும் ஆய்வு மேற்கொண்ட பொழுது, மேற்குறிப்பிட்ட பண்புகள் கொண்ட இரகங்கள், வறட்சியைத் தாங்கி வளர வேண்டிய அவசியம் இல்லை என வேளாண் வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

வறட்சித் தாங்கும் திறனை தேர்வு செய்ய கீழ்க்கண்ட பண்புகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
1.பயிர்களின் வளர்ச்சி
2.நாற்றுக்களின் திறன்
3.பயிர்களின் உயரம்
4.வேர்களின் பண்புகள்

  • வேரின் புறத்தோற்றம்
  • வேரின் நீளம் / ஆழம்
  • வேரின் அளவு
  • மற்றும் சில

5.இலைகளின் சுருள் திறன்
6.சவ்வூடு அழுத்த அளவு
7.ஒளிச்சேர்க்கை பொருட்களின் கடத்தும் திறன்
8.அமினோ அமிலங்களின் நிலைப்பாடு
9.இலைத்துளைகளின் பண்பியல்புகள்
10.கியூட்டிகளின் பண்புகள்
11.சைலத்தின் பண்புகள் / தன்மைகள்
12.உலர்நிலை தாங்கும் தன்மை

 

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2015