|| | | ||||
 

பயிர் காப்பீட்டு திட்டம் :: தி நியூ இந்தியா அசூரன்ஸ் கம்பெனி லிட்

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

கோழிப்பண்ணை காப்பீடு திட்டம்

  • முக்கியத்துவம்
  • காப்பீடு காப்புறுதி
  • முக்கியமாக விடுபட்டவைகள்
  • காப்பீட்டை எவ்வாறு செயல்படுத்துவது
  • பணக்கோரல் நெறிமுறைகள்

முக்கியத்துவம்

  • முட்டை இடும் கோழி, இறைச்சி, கோழி மற்றும் அடைகாக்கும் (அடைக்காப்பகம்) போன்ற அயல்நாட்டு மற்றும் கலப்பினப் பறவைகள் கொண்ட கோழிப்பண்ணைகளுக்கு, இத்திட்டம் முழுமையான காப்பீட்டுத் திட்டம்.
  • பண்ணையிலிருக்கும் அனைத்துப் பறவைகள் காப்பீடு கூடுதலாக பண்ணைக்கு கோழிகள் சேர்க்கப்படும் பட்சத்தில், உடனடியாக காப்பீடு நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்,  இல்லையேல், பணக்கோரல் நிராகரிக்கப்படும்.
  • குறிப்பிட்ட அளவு குறைந்தபட்சப் பறவைகள் உள்ள பண்ணைகளில் மட்டுமே இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
  • பறவைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள வயது பிரிவிற்கேற்ப இத்திட்டத்தில் காப்பீடு செய்யப்படும்.

இறைச்சி கோழிகள்

முதல் நாள் முதல் 8 வாரங்கள் வரை

 

முதல் நாள் முதல் 6 வாரங்கள் வரை

முட்டை இடும் கோழிகள்

முதல் நாள் முதல் 20 வாரங்கள் வரை

 

21 வாரங்கள் முதல் 72 வாரங்கள் வரை

 

முதல் நாள் முதல் 72 வாரங்கள் வரை

அடைகாக்கும் கோழிகள்

முதல் நாள் முதல் 72 வாரங்கள் வரை

  1. வெகுமதி விகிதங்கள், சதவிகிதத்தின் அடிப்படையில் இருக்கும் மற்றும் அச்சதவிகிதங்கள் ஒவ்வொரு பிரிவிலும் கோழிகளின் அதிகபட்ச விலையைப் பொறுத்திருக்கும்.
  2. அதிகபட்ச விலையில் காப்பீடு செய்யப்படும் தொகை, இறைச்சி கோழிகளுக்கு ரூ. 45 மற்றும் முட்டை இடும் கோழிகளுக்கு ரூ. 73 ஆகும். உடன்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ள வார மதிப்பீடு அட்டவணையைக் கொண்டு, நஷ்டஈடு கணக்கிடப்படும். அடைகாக்கும் கோழிகளுக்கும் இவ்வாறே கணக்கிடப்படும்.
  3. உடன்பாட்டுத் தொகைக்கு அதிகமாக நஷ்டஈடு வந்தால், இறுதி நஷ்டஈடு 80 சதவிகிதத்திற்குள் கட்டுப்படுத்தப்படும். (கும்போராவின் பிரிவில் 60 சதவிகிதம்)

இத்திட்டம் பணக்கோரல்கள் பெற்றிராதற்கான தள்ளுபடிகள் வழங்கும் அம்சங்கள் உள்ளது.

காப்பீடு காப்புறுதி
விபத்து (தீ, மின்னல்,வெள்ளம்,புயல்காற்று / புயல் / நிலநடுக்கம், கலவரம், வேலை நிறுத்தம், தீவிரவாதச் செயல்கள்) அல்லது நோய் தாக்குதல்களால் கோழி மரணமடைந்தால், விடுபட்டவைகள் அல்லாதிருந்தால் நஷ்டஈடு வழங்கப்படும்.

முக்கியமாக விடுப்பட்டவைகள்
பொதுவாக விடுபட்டவைகள்

  • விசமத்தனமான / தானாக ஏற்பட்ட காலம், ஊதாசீனம்
  • எவ்வகையான போக்குவரத்துக்களின் மூலம் கடத்துவது.
  • முறையற்ற பராமரிப்பு (குறைந்த இடத்தில் அதிகக் கோழிகளை அடைத்தல் உட்பட) அதாவது கொட்டகைப் பராமரித்தல், நீர்,தீவனப் பராமரிப்பு, தடுப்பூசி அளித்தல், குடற்புழு நீக்க மருந்தளித்தல், அலகு நீக்குதல், ஒளி / வெப்பமளித்தல், பயனற்ற கோழிகளை நீக்குதல் போன்ற விஞ்ஞான பண்ணைப் பராமரிப்பு வழிகாட்டுதல்கள் மற்றும் வரைமுறைகளை பின்பற்றாமல் இருக்கும் பண்ணை
  • இழப்பு / இயற்கையாக ஏற்படும் மரணம், குறிப்பிடாத அல்லது தெரியாத வியாதிகள் அல்லது காரணங்கள்.
  • வளர்ச்சிக் குறைவு, நரமாமிச உண்ணி, மற்றொரு உயிரை உணவாகக் கொள்ளும் இறை தேடும் பறவைகள் மற்றும் + உண்ணி விலங்குகள் மற்றும் அதன் செயல்கள்.
  • திருட்டு மற்றும் சட்டவிரோதமாகக் கோழிகளை விற்பது.
  • மனித நேயத்தின் அடிப்படையில், தகுதிப் பெற்ற கால்நடை மருத்துவர்களின் சான்றிதழ் பெற்று அழித்தாலோலிய அல்லது சட்டப்படி அதிகாரமுள்ளவர்களின் ஆணை அல்லது நோக்கத்துடன் மிருகங்களை வதைத்தல்.
  • எவ்வகையான நிரந்தர மற்றும் தற்காலிக செயலிழப்பு.
  • உற்பத்தி இழப்பு, அதாவது முட்டையிடும் கோழிகள் போதிய எண்ணிக்கையின் முட்டை இடாமலிருப்பது அல்லது மிகவும் சிறிய முட்டைகளை இடுவது மற்றும் இறைச்சிக் கோழிகள் குறிப்பிட்ட வயதிற்கேற்ற உடல் இல்லாமல் இருப்பது.
  • கோழி வாத நோய், வெள்ளைக் கழிச்சல் நோய்,  கோழி அம்மை மற்றும் தொற்றும் மூச்சுக்குழல் அழற்சி, கோழிகளுக்கு வெற்றிகரமான இந்நோய்களுக்கு தடுப்பூசி போட்டிருத்தல் வேண்டும் மற்றும் தேவையான கால்நடை சான்றிதழ்களை காப்பீடு நிறுவனத்திற்கு சமர்ப்பித்தால், கோழிகளுக்கு இந்நோய்களுக்கான உடன்பாடு வழங்கப்படும்.
  • இரத்தக்கழிச்சல் நோய் மற்றும் பிற நோய்களுக்கு தடுப்பு மற்றும் குணமாக்கும் நடவடிக்கைகள் குறிப்பிட்ட கால இடைவேளையில் எடுத்திருந்தால் மட்டுமே காப்புறுதி வழங்கப்படும்.
  • ஊட்டச்சத்து குறைவு / நீர் பற்றாக்குறை, கோழிகளுக்கு சரியாக உணவு வழங்காததால் மற்றும் இவ்வகையான பிற காரணங்களால், பட்டினியால் ஏற்படும் கோழி மரணம்.
  • வளர்ச்சிக் குறைவு
  • நர மாமிச உண்ணி
  • குறைந்த இடத்தில் அதிகக் கோழிகளை அடைத்தலாலோ அல்லது கோழிகளை வரிசைப்படுத்தாமல் விடுவதால் ஏற்படும் இழப்பு.
  • கோழி ஈரல் புற்றுநோய்
  • போர், படையெடுப்பு விரோதிகளில் செயல், விரோத செயல்கள் (அறிவிக்கப்பட்ட அல்லது அறிவிக்கப்படாத போர்) உள்நாட்டு போர், கிளர்ச்சி, போராட்டம், புரட்சி, கலக்கம், கடும் எதிர்ப்பு, போராட்டம், புரட்சி, கலக்கம், கடும் எதிர்ப்பு, இராணுவம் அல்லது ஆக்கிரமிப்பு அல்லது அதன் பின்விளைவுகள் அல்லது மிரட்டல் முயற்சி.
  • அணு ஆயுதங்களால் ஏற்படும் எவ்வகையான விபத்து, நஷ்டம், அழிவு, சேதாரம், சட்டப்படி நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஏற்படுதல்.

காப்பீடை எவ்வாறு செயல்படுத்துவது

  • திட்டறிக்கை படிவம்
  • தகுதிப் பெற்ற கால்நடை மருத்துவரிடமிருந்து பெறப்பட்ட கால்நடை உடல் நிலை சான்றிதழ்.
  • பண்ணையிலிருக்கும் அனைத்துக் கோழிகளும் காப்பீடு செய்யப்படவேண்டும்.
  • வரையறுக்கப்பட்ட நெறிமுறைகள் தடுப்பூசி அட்டவணை, குடல்புழு நீக்குதல், அலகு நீக்குதல் போன்றவற்றைச் சரியாக பண்ணையில் பின்பற்றவேண்டும்.
  • காப்பீடு நிறுவனத்தின் வரையறைகளுக்கேற்ப, முக்கியமாக தேவைப்படும் பதிவேடுகள் அனைத்தும் பண்ணையில் பராமரிக்கவேண்டும்.

பணக்கோரல் நெறிமுறைகள்
கோழிகளுக்கு மரணம் ஏற்படும் பட்சத்தில், உடனடியாக காப்பீடு நிறுவனத்திற்கு, கீழ்க்கண்ட தேவையான ஆவணங்களுடன் தெரிவிக்கவேண்டும்.

  • சரியாக பூர்த்தி செய்த பணக்கோரல் படிவம்
  • மாதிரிக் கோழிகளின் கால்நடை பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை.
  • மரணம், உணவளித்தல் போன்றவைகள் பற்றிய தினசரி ஆவணங்கள்.
  • கோழிகள் வாங்கிய ரசீதுகள்.
  • தேவைப்படும் போது, புகைப்படங்கள், மருத்துவ ரசீதுகள் போன்ற இழப்பிற்கு ஆதாரமானவைகளையும் சமர்ப்பித்தல் வேண்டும்.
  • கொள்ளை நோயால் ஏற்படும் எச்சரிக்கை மரணம் / திடீர் நிகழ்வுகள் போன்றவைகள் நடத்த 12 மணி நேரத்திற்குள், உடனடியாக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும் மற்றும் அனைத்துக் கோழிகளையும் பிரித்து வைத்து, காப்பீடு நிறுவனத்தின் பிரதிநிதிகள் அல்லது அதிகாரப்பூர்வ நபர்களின் பரிசோதனைக்கு உட்படுத்தவேண்டும்.
  • தினமும் ஏற்படும் மரணங்கள் பற்றிய தகவல்களை வார அடிப்படையில் காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பவேண்டும். அவ்வாறு அனுப்பாவிடில், அவ்வாரத்தில் மரணம் ஏதும் ஏற்படவில்லை என்று அனுமானிக்கப்படும்.
  • பணக்கோரல் அறிக்கை அனுப்புவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்க்கவேண்டும் மற்றும் மூன்று நாட்களுக்கு மேல் பணக்கோரல் தாமதம் ஏற்பட்டால், அப்பணக்கோரல் வரையறை அற்றதாக கருதப்படும்.
  • சந்தேகமுள்ள பணக்கோரல்கள் / பண்ணைகளில், பணக்கோரல் விகிதம் நேர்மாறாக இருக்கும் பட்சத்தில், நிபுணரிடமிருந்து தொழில்நுட்ப ஆய்வறிக்கை பெறுவது வலியுறுத்தப்பட்டு, அதன் அடிப்படையில் பணக்கோரல் தீர்வு காணப்படும்.

விண்ணப்பப் படிவத்தை இணையதளத்திலிருந்து எடுக்க இங்கே அழுத்தவும்

மற்ற பிற விவரங்களுக்கு இங்கே அழுத்தவும்

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008