| 
        
          
            
              | பயிர் பாதுகாப்பு  :: நெல் பயிரைத் தாக்கும் பூச்சிகள் | ஆதாரம்: டாக்டர்.ஆர்.பி.சௌந்தரராஜன்மின்னஞ்சல்: sound_insect73@hotmail.com |  
          
            | 
                
                  |  |     பயிர் :நெல்  நாற்றங்கால் பூச்சிகள் நடவு வயல் பூச்சிகள்   |  
 நாற்றங்கால் பூச்சிகள்: 
                
                  | 1.  இலைப்பேன்: ஸ்டென்கீட்டோதிரிப்ஸ்  பைபார்மிஸ் |  
                  | அறிகுறிகள்: 
                      இளம் இலைகளை சுரண்டி, சாற்றை உறிஞ்சுகிறது.தாக்கப்பட்ட இளம் நாற்றுக்களில் மஞ்சள்  அல்லது வெள்ளை நிற வரிகள் காணப்படும்.தாக்கப்பட்ட இலைகளின் நுனி சுருண்டு  இறுதியில் வாடிவிடும்.நாற்றங்கால் மற்றும் நடவு வயலில் பாதிப்புக்களை  ஏற்படுத்தும்.      | 
                    
                      |  |  |  
                      | இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருட்டப்படும் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை : முட்டைகள் நிறமில்லாமலும், பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள் திசுக்களின் பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும்.இளம் பூச்சிகள் : புதிதாக பொரிக்கப்பட்ட இளம்பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை உருவாக்குகிறது. திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள் உட்கொள்ளும்.கூட்டுப்புழு : சுருண்ட இலைகளின் உள்ளே கூண்டுப்புழு ஏற்படும். மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி தெளிவாகக் காணப்படும்.முதிர்ப்பூச்சிகள் : முதிர்ச்சியடைந்த பூச்சிகள் 1 மி.மீ நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்துடன் மயிரிழைகளாலான இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும்,    மெலிந்தும் காணப்படும். பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாக காணப்படுவதால், கன்னி இனப்பெருக்கமுறையைக் கொண்டுள்ளது. (பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கம்) |   
                      
                        |  |  |  
                        | இளம் பூச்சி | முதிர் பூச்சி |  |  
                  | கட்டுப்பாடு: 
                      பூச்சி தாக்கப்பட்ட பயிர்களை 1-2 நாட்கள் இடைவெளி விட்டு நீரில் மூழ்கச் செய்ய வேண்டும்.நாற்றுக்களின் மேல் ஈரத்துணியை போட்டு இழுக்க வேண்டும்.பொருளாதார சேத நிலை அளவு : உள்ளங்கையை நீரால் நனைத்து, பின் நாற்றங்காலில் 12 இடங்களில் பயிர்ச் செடிகளின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில், செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் 
                        கடந்துவிட்டால் (அ) 10 சதவிகித நாற்றுக்களில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதிப்பரப்பு சுருண்டு காணப்படும்.கொன்றுண்ணி செடிப்பேன்கள் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உட்கொண்டு அதனை அழிக்கின்றன.பொறி வண்டுகள், பூ நாவாய்ப்பூச்சி, செம்பலினிடு வண்டுகள் ஆகியவை இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உண்ணும்.                     | நாற்றங்காலில் பின்வரும் ஏதேனும் ஒன்றை  தெளிக்க வேண்டும். 
                      
                      | பாஸ்போமிடான் | 40 எஸ்.எல் | 50 மி.லி |  
                      | மோனோகுரோட்டோபாஸ் | 36 எஸ்.எல் | 40 மி.லி |  
                    
                      |  |  |  |  
                      | நாற்றங்காலில் நீரை தேக்கி நிறுத்தவும் | பூச்சிக்கொல்லி தெளிக்கவும் | இரை விழுங்கி இலைபேன்கள் |  |  
                
                  |  |  
                  | 2. பச்சை  தத்துப்பூச்சி: நெப்போடெட்டிக்ஸ் வைரஸ்ஸன்ஸ் |  
                  | அறிகுறிகள்: 
                      இலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.பயிரின் வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.பயிர் வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல்.இலையுறைகள் அல்லது நடுநரம்புகளுக்குள் வெள்ளையான அல்லது வெளிறிய மஞ்சள் நிறமான முட்டைகள் இருக்கும்.பயிரின் மேல்பகுதியில் வெளுத்த பச்சை நிற முதிர்ப்பூச்சிகள் இருக்கும்.இப்பூச்சிகள் துங்ரோ, நெல் மஞ்சள் குட்டை  போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன. | 
                    
                      
                        |   மஞ்சளாதல் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை :பச்சையான ஒளிகசியும் தன்மையுடைய முட்டைகள், இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை அல்லது பச்சைப்புல் ஆகியவற்றில் இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.இளம்பூச்சி :இளம் பூச்சிகள் மென்மையான உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக இந்நிறம், பச்சையாக மாறி 5 இளம் பூச்சி வளர்ச்சி நிலைகளுடனும் காணப்படும். பின்பு 18-20 நாட்களில் முதிர் பூச்சிகள் உருவாகிறது.முதிர்ப்பூச்சி:இவை 3-5 மி.மீ நீளம் கொண்டு, பிரகாசமான பச்சை நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிற அடையாளங்களுடன், கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்டக்கோடு இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின் முன் இறக்கையின் நடுப்பகுதியில் கருப்புநிற புள்ளி காணப்படும். ஆனால் பெண் இனப் பூச்சியில் அவை கிடையாது. ஜூலை-செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன் விளங்கும்.பெண் இனப்பூச்சிகள் 50-55 நாட்கள் வரை வாழக் கூடியது. |  
                  |  |  
                  | கட்டுப்பாடு:  
                      பூச்சி எதிர்ப்பு இரகங்களான ஐ.ஆர்.50,  சி.ஆர்.1009, கோ 46 பயிரிட வேண்டும்.அடிஉரமாக வேப்பம் பிண்ணாக்கு 12.5 கிலோவை  நாற்றங்காலில் அளித்தால் பச்சை தத்துப் பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.பொருளாதார சேத நிலை அளவு : 60/25 வலை வீச்சுகள் (அ) 5/குத்து தழைப்பருவத்தில் (அ) பூத்தல் பருவத்தில் 10/குத்து (அ) துங்ரோ உட்பரவல் இடங்களில் 2/குத்து. வயலில் துங்ரோ மற்றும் பச்சைத் தத்துப்பூச்சிகள் இருப்பைக் கண்காணிக்க வேண்டும்.  நடவு செய்யப்பட்ட வயலின் குறுக்கில் பக்கவாட்டில் நடக்கும்போது 20 குத்துக்களைச் சரிபார்க்க வேண்டும்.பென்தியான் 500 மி.லி (அ) மோனோகுரோட்டாபாஸ்  1000 மி.லி (அ) பாஸ்போமிடான் 1000 மி.லி மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து  தத்துப்பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.ஸ்ட்ரெப் ஸிப்டீரன்ஸ், சிறு குளவிகள், மற்றும் நுாற் புழுக்கள் ஆகியவை தத்துப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகளில் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனைக் கொன்றுவிடும்.மேலும் நீர்வாழ் நாவாய்ப்பூச்சிகள்,  ஊசித்தட்டான், தட்டான் பூச்சிகள், மற்றும் சிலந்திகள் ஆகிய பூச்சிகளாலும் பச்சைத் தத்துப்பூச்சி தாக்கப்படுகிறது.  பூசண நோய்க் காரணிகள் பச்சைத் தத்துப்பூச்சியின் இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகளைத் தாக்குகிறது.விளக்குப் பொறிகளை பயன்படுத்துவது பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான மிக சிக்கன முறையாகும்.அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியை சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். |  
                  | 
                      
                        |  |  |  |  
                        | பூச்சி் எதிர்ப்பு இரகம் சி.ஆர்.1009 | நாற்றங்காலில் வேப்பம் பிண்ணாக்கு இடவும் | விளக்குப் பொறி வைக்கவும் |  |  
 
                
                  |  |  
                  | 4. தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா  இன்ஸெர்டுலஸ் |  
                  | அறிகுறிகள்: 
                      இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக்  கூட்டம் காணப்படும்.தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்துவிடுகிறது. இதுவே "குருத்து காய்தல்" எனப்படுகிறது.நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே "வெண்கதிர்" எனப்படுகிறது.குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும்.பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும். | 
                    
                      |  |  |  
                      | காய்ந்த நடுக்குருத்து | வெண்கதிர் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை : முட்டைகள் பாலேடு போன்ற வெள்ளை நிறமாகவும் தட்டையாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கும்.  இவை கூட்டமான திரளாக இடப்பட்டு வெளிர் மஞ்சள் நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் இலைகளின் நுனிப் பகுதிக்கருகே வைக்கப் பட்டிருக்கும். முட்டை கால அளவு 5-8 நாட்கள்.புழு: வெளிரிய மஞ்சள் நிறத்தில் கரும்பழுப்பு நிற தலை கொண்டு அதில் முன் மார்புக் கவசத்துடன் காணப்படும். புழுக்கள் கால அளவு 28-30 நாட்கள்.கூட்டுப்புழு : வெள்ளை நிற கூண்டுப்புழுவாதலால் நெற்பயிர் தண்டுகளுக்குள்ளே ஏற்படும், அல்லது வைக்கோல் மற்றும் பயிர்த் துார்களின் உள்ளேயும் ஏற்படும். கூட்டுப்புழு காலம் 8-10 நாட்கள் மட்டுமே.முதிர் பூச்சி : பெண் அந்துப்பூச்சி : முன் இறக்கைகளின் நடுப்பகுதி நன்கு பிரகாசமான மஞ்சளான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அதன் மலப்புழைப் பகுதியில் மஞ்சள் நிற மயிர்கற்றை இருக்கும்.
 ஆண் அந்துப்பூச்சி :சிறிய மற்றும் வெளிரிய மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் கருப்புப் புள்ளிகள் இருக்காது.
 |  
                  |  |  
                  | கட்டுப்பாடு: 
                      தண்டு துளைப்பான் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ரத்னா, டிகேஎம் 6, ஐஆர் 20, ஐஆர் 40, ஐஆர் 56, ஏடிடீ 47, ஏடிடீ 48, ஏஎஸ்டி 20, ஐஆர் 36, ஏடிடீ 44, பிஒய் 4, ஏடிடீ 46, மது, காஞ்சனா, சுவர்ணபிரபா, கார்த்திகா, தீப்தி, மற்றும் டெல்லஹம்ஸா ஆகிய இரகங்களை  பயிரிட வேண்டும்.நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க  வேண்டும்.தொடர்ச்சியாக வயலில் நீர் தேங்குவதைத்  தவிர்க்க வேண்டும்.பாதிக்கப்பட்ட கதிர்களை பிடுங்கி அகற்றிட  வேண்டும்.விளக்குப் பொறி அமைத்து அந்துப் பூச்சிகளை  கவர்ந்து அழிக்கலாம்.அறுவடை செய்த உடனே நிலத்தை நன்கு உழுது  விட வேண்டும்.பொருளாதார சேத அளவு : 2 முட்டை திரள்கள்/மீ (அ) தழைப் பருவத்தில் 10 சதவிகிதம் துார் அழுகல் நோய் (அ) பூத்தல் பருவத்தில் 2 சதவிகிதம் வெண்கதிர் நோய்.முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா  ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.பேசில்லஸ் துருன்ஜெனிஸிஸ் வகை குர்ஸ்டாக்கி  மற்றும் வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்க வேண்டும். | பின்வரும்  பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்: 
                      
                        | மோனோகுரோட்டாபாஸ் | 36 எஸ்.எல் | 1000 மி.லி / ஹெக் |  
                        | குயினல்பாஸ் | 25 இ.சி | 1000 மி.லி / ஹெக் |  
                        | பாஸ்போமிடான் | 40 எஸ்.எல் | 600 மி.லி / ஹெக் |  
                        | ப்ரோபெனோபாஸ் | 50 இ.சி | 1000 மி.லி / ஹெக் |    
                      
                        |  |  |  |  
                        | எதிர்ப்பு இரகம் ஏடிடீ 47 | டிரைக்கோகிராமா முட்டை அட்டை | டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் |    |  
                
                  | நடவு வயல் பூச்சிகள்: |  
                  | 1. தண்டுத் துளைப்பான்: சிர்போபேகா  இன்ஸெர்டுலஸ் |  
                  | அறிகுறிகள்: 
                      இலையின் நுனியில் பழுப்பு நிற முட்டைக்  கூட்டம் காணப்படும்.தழைப்பருவத்தில் புழுக்கள் தண்டுகளில் நுழைந்து வளரும் தண்டுகளை உட்கொள்வதால் அதன் நடுப்பகுதி காய்ந்துவிடுகிறது. இதுவே "குருத்து காய்தல்" எனப்படுகிறது.நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் முழு தானியக் கதிர்களும் காய்ந்துவிடும். மிஞ்சியிருக்கும் தட்டையான தானியங்களே "வெண்கதிர்" எனப்படுகிறது.குருத்தைப் பிடித்து இழுக்கும் போது அவை எளிதாக கையோடு வந்துவிடும்.பழுப்பு நிற அந்துப்பூச்சிகள் வயலில் இருக்கும். | 
                    
                      |  |  |  
                      | காய்ந்த நடுக்குருத்து | வெண்கதிர் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை : முட்டைகள் பாலேடு போன்ற வெள்ளை நிறமாகவும் தட்டையாகவும், முட்டை வடிவத்திலும் இருக்கும்.  இவை கூட்டமான திரளாக இடப்பட்டு வெளிர் மஞ்சள் நிற இழைகளால் மூடப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் இலைகளின் நுனிப் பகுதிக்கருகே வைக்கப் பட்டிருக்கும். முட்டை கால அளவு 5-8 நாட்கள்.புழு: வெளிரிய மஞ்சள் நிறத்தில் கரும்பழுப்பு நிற தலை கொண்டு அதில் முன் மார்புக் கவசத்துடன் காணப்படும். புழுக்கள் கால அளவு 28-30 நாட்கள்.கூட்டுப்புழு : வெள்ளை நிற கூண்டுப்புழுவாதலால் நெற்பயிர் தண்டுகளுக்குள்ளே ஏற்படும், அல்லது வைக்கோல் மற்றும் பயிர்த் துார்களின் உள்ளேயும் ஏற்படும். கூட்டுப்புழு காலம் 8-10 நாட்கள் மட்டுமே.முதிர் பூச்சி : பெண் அந்துப்பூச்சி : முன் இறக்கைகளின் நடுப்பகுதி நன்கு பிரகாசமான மஞ்சளான பழுப்பு நிறத்தில் கருப்பு நிறப் புள்ளிகளுடன் காணப்படும். மேலும் அதன் மலப்புழைப் பகுதியில் மஞ்சள் நிற மயிர்கற்றை இருக்கும்.
 ஆண் அந்துப்பூச்சி :சிறிய மற்றும் வெளிரிய மஞ்சள் நிற முன் இறக்கைகளைக் கொண்டிருக்கும். இதில் கருப்புப் புள்ளிகள் இருக்காது.
 |  
                  |  |  
                  | கட்டுப்பாடு: 
                      தண்டு துளைப்பான் எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ரத்னா, டிகேஎம் 6, ஐஆர் 20, ஐஆர் 40, ஐஆர் 56, ஏடிடீ 47, ஏடிடீ 48, ஏஎஸ்டி 20, ஐஆர் 36, ஏடிடீ 44, பிஒய் 4, ஏடிடீ 46, மது, காஞ்சனா, சுவர்ணபிரபா, கார்த்திகா, தீப்தி, மற்றும் டெல்லஹம்ஸா ஆகிய இரகங்களை  பயிரிட வேண்டும்.நாற்றுக்களை நெருக்கமாக நடுதலைத் தவிர்க்க  வேண்டும்.தொடர்ச்சியாக வயலில் நீர் தேங்குவதைத்  தவிர்க்க வேண்டும்.பாதிக்கப்பட்ட கதிர்களை பிடுங்கி அகற்றிட  வேண்டும்.விளக்குப் பொறி அமைத்து அந்துப் பூச்சிகளை  கவர்ந்து அழிக்கலாம்.அறுவடை செய்த உடனே நிலத்தை நன்கு உழுது  விட வேண்டும்.பொருளாதார சேத அளவு : 2 முட்டை திரள்கள்/மீ (அ) தழைப் பருவத்தில் 10 சதவிகிதம் துார் அழுகல் நோய் (அ) பூத்தல் பருவத்தில் 2 சதவிகிதம் வெண்கதிர் நோய்.முட்டை ஒட்டுண்ணிகளான டிரைக்கோடெர்மா  ஜப்பானிக்கம் எக்டருக்கு 5 மி.லி வீதம் இரண்டு முறை நாற்றங்காலில் தெளிக்க வேண்டும்.பேசில்லஸ் துருன்ஜெனிஸிஸ் வகை குர்ஸ்டாக்கி  மற்றும் வேப்பங்கொட்டை சாற்றை தெளிக்க வேண்டும். | பின்வரும்  பூச்சிக் கொல்லிகளில் ஏதேனும் ஒன்றைத் தெளிக்கலாம்: 
                      
                        | மோனோகுரோட்டாபாஸ் | 36 எஸ்.எல் | 1000 மி.லி / ஹெக் |  
                        | குயினல்பாஸ் | 25 இ.சி | 1000 மி.லி / ஹெக் |  
                        | பாஸ்போமிடான் | 40 எஸ்.எல் | 600 மி.லி / ஹெக் |  
                        | ப்ரோபெனோபாஸ் | 50 இ.சி | 1000 மி.லி / ஹெக் |    
                      
                        |  |  |  |  
                        | எதிர்ப்பு இரகம் ஏடிடீ 47 | டிரைக்கோகிராமா முட்டை அட்டை | டிரைக்கோகிராமா ஜப்பானிக்கம் |    |  
                
                  |  |  
                  | 2. ஆனைக் கொம்பன் ஈ: ஆர்சியோலியா ஒரைசா |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்: 
                      புழுக்கள்  வளரும் தூர்களை தாக்குகிறது.புழுக்கள்  தூர்களை துளைத்து உட்சென்று வளரும் பகுதியை உண்கிறது.தாக்கப்பட்ட  தூர்களில் நெற்கதிர் வராது, மேலும் வளர்ச்சிக்குன்றி காணப்படும்.தாக்கப்பட்டத்  தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளிதண்டு போல் காட்சியளிக்கும். | 
                    
                      |  |  
                      | தூர்கள் வெங்காய இலை போல் அல்லது வெள்ளிதண்டு போல் காணப்படும் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை : இந்த ஈயானது நீளமான, உருளை வடிவத்தில், பளப்பளப்பான வெள்ளை அல்லது சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு நிற முட்டைகளை இலைகளின் அடிப்பகுதியில் தனியாகவோ அல்லது கூட்டமாகவோ (26) இடும்.புழு : புழு 1 மி.மீ நீளமுடன் முன் பகுதியில் கூர்மையாக இருக்கும். இவை இலையுறையின் கீழே ஊர்ந்து சென்று, வளரும் மொட்டுக்குள் நுழைகிறது. அவை உண்ட இடத்தைச் சுற்றி ஒரு முட்டைவடிவ உள்ளிடம் உருவாகும்.கூட்டுப்புழு : கூட்டுப்புழு வெளிவரும் போது அதன் உணர்கொம்புகள் மூலமாக குழலினைச் சுற்றி, வெள்ளித் தண்டின் நுனிப்பகுதிக்கு சென்று, அதனுடைய பின் பகுதி மட்டும் வெளியே தள்ளிக்கொண்டு நிற்கும்.முதிர் பூச்சி : மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்தில், கொசு போன்று சிறியதாக காணப்படும். ஆண் ஈக்கள் சாம்பல் நிறமாக இருக்கும். இலையிலுள்ள பனித்துளிகளை உட்கொள்ளும். | 
                    
                      |  |  |  
                      | புழு | முதிர் பூச்சி |  |  
                  | கட்டுப்படுத்தும்  முறை:  
                      பூச்சியின்  தாக்குதலுக்கு எதிர்த்து வளரக்கூடிய கிரகங்களான எம்.டி.யு 3, சக்தி, விக்ரம் மற்றும்  சுரேக ஆகியவற்றை பயிரிடலாம்.அறுவடை  செய்த பின் நிலத்தை உடனடியாக உழ வேண்டும்.பூச்சி  உண்ணக்கூடிய மாற்றுவகைப் பயிர்களை அகற்ற வேண்டும்.தழைச்சத்து  உரங்களை பரிந்துரை செய்யப்பட்ட அளவு மட்டும் பயன்படுத்த வேண்டும்.புற ஊதா விளக்குப்  பொறி வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.புழு  ஒட்டுண்ணியான பிளாட்டிகேஸ்டர் ஒரைசேவை பயன்படுத்தி ஆணைக்கொம்பன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.பென்தியான்  500 மி.லி. அல்லது பெனிட்ரோதையான் 1000 மி.லி. மருந்து  இவற்றில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தி ஆணைக்கொம்பன் தாக்குதலைத் தவிர்க்கலாம்.நாற்றுக்களின் வேர்களை 0.02% குளோர்பைரிபாஸ் கரைசலில் 12 மணி நேரம் நனைய வைத்து பின் நடவு செய்ய வேண்டும்.பொருளாதார சேதநிலை : 10 சதவிகித வெள்ளித்தண்டுகள் (அ) வெங்காய இலைகள். விதைப்பதற்கு முன் முளைவிட்ட விதைகளை 0.2% குளோர்பைரிபாஸ் கரைசலில் 3 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் 30 நாட்கள் வரை பயிர்களுக்கு தாக்குதல் ஏற்படாமல் தடுக்கலாம்.பூச்சி தாக்குதல் இருக்கும் வயல்களில், விதைத்த பத்து நாட்களுக்குள் போரேட் 10ஜி (1.5 கிலோ/எக்டர்), கார்போப்யுரான் 3 ஜி (0.5 கிலோ/எக்டர்), குயினைல்பாஸ் (1.5 கிலோ/எக்டர்) அல்லது குளோர்பைரிபாஸ் 10ஜி (0.5 கிலோ/எக்டர்) ஆகியவற்றின் குறுணைகளை இடவேண்டும். |  
                  |   
                      
                        |  |  |  |  
                        | புற ஊதா விளக்குப்  பொறி | குளோர்பைரிபாஸ் கரைசலில் நாற்றுகளின் வேர்களை நனைத்து நடவும் | உயிர் எதிரி - புழு ஒட்டுண்ணி - பிளாட்டிகேஸ்டர் ஒரைசே |  |  
                
                  |  |  
                  | 4. நெல் ஸ்கிப்பர்: பெலோப்பிடாஸ் மேத்தியாஸ் |  
                  | அறிகுறிகள்: 
                      இலையின் நுனியை கீழ்நோக்கி சுருட்டும் அல்லது அதே இலையை இரு பக்கமும் சுருட்டும் அல்லது அடுத்தடுத்த இரு இலைகள் பட்டுப்போன்ற நுால்களால் ஒன்று சேர்க்கப்பட்டு, ஒரு  கூடு போன்று உருவாக்கப்பட்டிருக்கும்.பின்புறத்திலிருந்து இலைகள் சுருண்டுவிடும்புழுக்கள் உள்ளிருந்து, திசுக்களை சுரண்டி உண்ண ஆரம்பிக்கும். | 
                    
                      |  |  |  
                      | இலைகளை கீழ் நோக்கி சுருட்டி, திசுக்களை சுரண்டும் | இரு இலை ஓரங்களை சேர்த்து மடித்து, உள்ளிருந்து திசக்களை சுரண்டும் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      புழு – மங்கிய பச்சை நிறத்துடன் தெளிவான  தலை பகுதியுடன் காணப்படும்.முதிர்ப்பூச்சி – பழுப்பு நிற இறக்கைகளுடன்  வளைந்த உணர் கொம்புடன் இருக்கும்.   | 
                    
                      |  |  |  
                      | புழு | முதிர் பூச்சி |  |  
                  | கட்டுப்பாடு: 
                      சிறு குளவிகள் ஸ்கிப்பர் பூச்சிகளின் முட்டைகளின் மீது ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு உண்டுவிடும். அதன் புழுக்களை பெருங்குளவிகள் மற்றும் குதிரை ஈ(டேக்னிட் ஈ) வகைகள் உட்கொள்ளும்.  பின் இதனை கொலை நாவாய்ப்பூச்சிகள் மற்றும் காதிடுக்கிப் பூச்சிகள் இரையாக்கிக் கொள்ளும்.  முதிர் பூச்சிகள் பறக்கும்போது வலைச் சிலந்திகள் உட்கொள்ளும். டிரைக்கோகிராம்மா ஜபோனிகம் என்ற முட்டை ஒட்டுண்ணியை பயிர் நடவு செய்த 30 மற்றும் 37 வது நாட்களில் இருமுறையும், டிரைக்கோகிராம்மா கிலோனிஸ் ஒட்டுண்ணியை 37,44 மற்றும் 51 வது நாட்களில் மூன்று முறையும் விடுவிக்க வேண்டும்.  அதனைத் தொடர்ந்து மோனோகுரோட்டோபாஸ் (1000 மிலி/எக்டர்) என்ற அளவில் நடவு செய்த 58, 65 மற்றும் 72 வது நாட்களில் மூன்று முறை தெளிப்பதால் பூச்சிகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும். அபன்டீல்ஸ் ரூஃபிரகஸ், மீடியோரஸ் சிற்றினம், சூடோபெரிசேட்டா ஒரியன்டேலிஸ் போன்ற புழு ஒட்டுண்ணிகளை வயலில் வெளிவிட வேண்டும். ஒட்டுண்ணி குளவிகள் கூட்டுப்புழுக்களின் மீது ஒட்டுண்ணியாக வாழ்வதால், இதன் தாக்குதலை கட்டுபடுத்தலாம். காகங்கள், நாரைகள் போன்ற இரை விழுங்கிகள் புழுக்களை உண்கின்றன. நச்சுயிரிகளும் ஸ்கிப்பர் புழுக்களை தாக்குகின்றன. எனவே,என்.பி.வி உயிர் நச்சுக்கொல்லி தெளிக்கவும்.வயலில் நீரை வடிய செய்துவிட்டு, பின் மாலை வேலைகளில் குளோர்பைரிபாஸ் 20 இ.சி. ஒரு எக்டருக்கு 80 மிலி என்ற அளவில் தெளிக்க வேண்டும்.மோனோகுரோட்டாபாஸ் 36 டபுள்யூ.எஸ்.சி 500 மி.லி / ஹெக் தெளிக்க வேண்டும். |  
                  | 
                      
                        |  |  |  |  
                        | என்.பி.வி உயிர் நச்சுக்கொல்லி தெளிக்கவும் | டிரைக்கோகிராம்மா ஜபோனிகம் முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் விடவும் | ஸ்கிப்பர் புழுவை தாக்கும் டேக்னிட் ஈ
 |  |  
                
                  |  |  
                  | 5. இலை சுருட்டுப்புழு : நேப்ஃபாலோகுரோஸிஸ் மெடினாலிஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்: 
                      இலைகள் நீள் வாக்கில் மடிக்கப்பட்டிருக்கும். புழுக்கள் இலைகளின் பச்சை நிற திசுக்களை சுரண்டுவதால் இலைகள் வெண்மையாக மாறி காய்ந்துவிடும். தீவிர தாக்குதலின்போது முழு நெல் வயலும் வெண்மையான நிறத்தில் காய்ந்தது போல் காட்சியளிக்கும்.இலைகள் நீள்வாட்டில் சுருண்டு, புழுக்கள் அதனுள்ளே இருந்துவிடும்.   | பூச்சியின்  அடையாளம் : 
                      முட்டை :தட்டையாக, முட்டை வடிவத்தில், மஞ்சளான வெள்ளை நிறத்தில் காணப்படும்.புழு : பச்சையான நிறத்தில் ஒளி கசியும் தன்மை கொண்டு விளங்கும்.  முன்மார்புக் கேடயம் நுனி நோக்கி நிமிர்ந்தும், பக்கவாட்டில் உருளையாகவும் காணப்படும்.கூட்டுப்புழு : கூட்டுப்புழுவின் காலம் 7-10 நாட்கள்.முதிர் பூச்சி : அந்துப் பூச்சியானது மஞ்சளான பழுப்பு நிற இறக்கைகளைக் கொண்டது. அதில் நிறைய கருப்பு அலை போன்ற கோடுகள் நடுவிலும், இறக்கைகளின் ஓரத்தில் கருப்புநிற பட்டையான கோடுடனும் காணப்படும். |  
                  | 
                    
                      |  |  |  |  |  
                      | முட்டை | புழு | முதிர் பூச்சி | வெள்ளை மற்றும் காய்ந்த இலைகள் |  |  
                  | கட்டுப்பாடு: 
                      இலைச்சுருட்டுப் புழுவிற்கு எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான காவேரி, அகாலி, டிகேஎம் 6, டிகேஎம் 12, ஏடிடீ 46, டிபிஎஸ் 2, டிபிஎஸ் 3, ஏடிடீ 44, பிஒய் 4, கைராளி, அகல்யா குஞ்சு குஞ்சு வர்ணா, குஞ்சு குஞ்சு பிரியா, ரேஷ்மி (பிபீடி 44), நீரஜா (பிபீடி 47) மற்றும் தீப்தி ஆகிய இரகங்களைப் பயிரிடுதல்.வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் மற்றும் புல் இனக்களைகளை நீக்க வேண்டும்.முள்ளுள்ள கொப்பு கொண்டு இலை மடிப்புகளைத் திறக்க வேண்டும்.பொருளாதார சேத நிலை அளவு : தழைப்பருவத்தில் 10 சதவிகிதம் இலைச்சேதம் மற்றும் பூத்தல் பருவத்தில் 5 சதவிகிதம் கண்ணாடி இலைச் சேதமும் ஏற்படும்.பொருளாதார சேத நிலை அளவைப் பொறுத்து கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக் கொல்லிகளை தெளிக்க வேண்டும் : ஃபெனிட்ரோத்தியான் 50 இசி (திரவமாற்றுதிரட்டு) 1000 மிலி/ எக்டர் (அ) மோனோக்ரோட்டோபாஸ் 36 எஸ் எல் 1000 மிலி/எக்டர் (அ) பாசலோன் 35 இசி (திரவமாற்று திரட்டு) 1500 மிலி/ எக்டர் (அ) குயினல்பாஸ் 25 இசி (திரவமாற்று திரட்டு) 1000 மிலி/ எக்டர் (அ) டைக்லோரோவாஸ் 76 (நீரில் கரையும் செறிவு) 250 மிலி/ எக்டர்.டிரைக்கோகிரேம்மா கிலோனிஸ் (முட்டை ஒட்டுண்ணிகளை) பயிர் நடவு செய்து 37, 44, மற்றும் 51 நாட்களில் மொத்தம் மூன்று முறை @ 5 சிசி (1 லட்சம் முட்டை ஒட்டுண்ணிகள்/எக்டர்/முறை) என்ற அளவில் விட வேண்டும்.முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும்.வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர் (அல்லது) வேப்பெண்ணை 3 சதவிகிதம் ஆகியவற்றை தெளிக்க வேண்டும்.கொன்றுண்ணிகள் : நெற்பயிர் நாவாய்ப் பூச்சியான "சைடோரினஸ் லிவிடி பென்னீஸ்" @ 50-75 முட்டைகள்/மீ என்ற அளவில் விடுதல், ஊசித்தட்டான் - "அக்ரியோக்னிமா பிக்மே", பாச்சை - "அனேக்ஸிபா லாங்கிப் பென்னீஸ்" மற்றும் "மெட்டியோக் விட்டாட்டிகோல்லீஸ்", பொறிவண்டு - "மிக்ராஸ்பிஸ் க்ரோசிரா".விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளைக் கவர்ந்து அதனைக் கொல்ல வேண்டும். 5 எக்டருக்கு குறைந்தது ஒரு விளக்குப் பொறியாவது வைக்க வேண்டும்.நெற்பயிரின் தழைப் பருவத்தில் பூச்சியுண்ணுகின்ற பறவைகள் நிற்பதற்கான பலகைகளை (40-50/எக்டர்) வயலில் பொருத்துதல் வேண்டும்.குறிப்பிட்ட நேரத்திற்கேற்ற கட்டுப்பாட்டு முறைகளுக்கான மயக்கப் பொறிகளின் (10-12/எக்டர்) மூலம் இப்பூச்சிகளைக் கண்காணிக்க வேண்டும்.  15-20 நாட்கள் இடைவெளியில் அதன் இனக் கவர்ச்சிப் பொருளை மாற்ற வேண்டும். |  
                  | 
                    
                      |  |  |  |  
                      | டிரைக்கோகிரேம்மா முட்டை ஒட்டுண்ணி அட்டைகளை காலை நேரத்தில் வயலில் கட்டவும் | வரப்புகளை சீராக்கி அதனை சுத்தமாக வைத்தல் | விளக்குப் பொறிகளை வைத்து அந்து பூச்சிகளைக் கவர்ந்து கொல்ல வேண்டும் |  |  
                
                  |  |  
                  | 6. கொம்புப்புழு – மெலானிடிஸ் இஸ்மேனே |  
                  | அறிகுறிகள்: 
                      புழு கடித்த இலைகள்.நெற்பயிரின் இலை விளிம்புகளை புழுக்கள் கடித்து உண்ணும்.இலைகளை ஒழுங்கற்ற முறையில் ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும்.புழுக்கள் இரவு நேரத்திற்குள் நாற்றங்காலில் உள்ள பயிர்கள் முழுவதையும்  உண்டு விடும். | 
                    
                      |  |  |  
                      | புழுக்கள் ஒழுங்கற்ற முறையில் இலைகளை உண்ணும் | வெட்டுப்புழு இலைகளில் தென்படும் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை – இலைகளில் வெள்ளை நிற முட்டைகள்  தனித் தனியாக இருக்கும்.புழு – தட்டையாக, இரண்டு சிவப்பு நிற  கொம்புகள் தலைப் பகுதியில் இருக்கும். இரண்டு மஞ்சள் நிற கொடுக்கு நுனியில் இருக்கும்.கூட்டுப்புழு – இலையில் மறைந்திருக்கும்.முதிர்ப்பூச்சி – அடர் பழுப்பு நிறத்துடன்  பெரிய இறக்கைகளுடன் கருப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும். ஒவ்வொரு முன்னிறக்கையிலும் மஞ்சள் நிற கண் போன்ற புள்ளி காணப்படும். | 
                    
                      |  |  |  
                      | புழு | முதிர் பூச்சி |  |  
                  | கட்டுப்பாடு: 
                      நாற்றங்காலில் நீர் பாய்ச்சுவதால் மறைந்திருக்கும் புழு மற்றும் முட்டைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வருகின்றன. அவற்றை பறவைகள் கொத்தி உண்ணும்.அறுவடைக்கு பின்னர் நிலத்தில் நீரை தேக்கி வைத்தல், வரப்புகளை சீர் செய்தல், வரப்புகள்/பாத்திகளை சுத்தம் செய்வதால் புழுக்களை இலைபரப்பிலிருந்து அகற்றலாம்.நாற்றங்காலிலிருந்து நீரை வடித்து விட்டு, குளோரபைரிபாஸ் 20 இ.சி. 80 மி.லி. (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 டபல்யு.எஸ்.சி 500மி.லி./எக்டர் என்ற அளவில் மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.பறவைகள் (நாரை), வெளவால், வயல் எலிகள், சுண்டெலி, காட்டுப் பன்றிகள், நாய்கள், மரவட்டை உயிரிகள், மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன மற்றும் குரங்குகள் புழுக்களை இரையாக உட்கொள்கின்றன. | 
                    
                      |  |  |  
                      | நிலத்தில் நீரை தேக்கி வைத்தல் | டிரைக்கோகிராமா முட்டை ஒட்டுண்ணி |  |  
                
                  |  |  
                  | 7. கம்பளிப்புழு: ஸாலிஸ் பென்னாடுலா |  
                  | அறிகுறிகள்: 
                      புழுக்கள் இரவு நேரத்திற்குள் நாற்றங்காலில் உள்ள பயிர்கள் முழுவதையும் உண்டு விடும்.நெற்பயிரின் இலை விளிம்புகளை புழுக்கள் கடித்து உண்ணும்.இலைகளை ஒழுங்கற்ற முறையில் ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும்.நாற்றுக்களை ஒழுங்கற்றவாறு உண்டுவிடும்.இலை நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும்.   | 
                    
                      |  |  |  
                      | புழுக்கள் இலைகளை ஓரத்திலிருந்து நுனி வரை கடித்து உண்ணும் | புழுக்கள் இலை நரம்பை தவிர பயிர்கள் முழுவதையும் கடித்து உண்டுவிடும் |  |  
                  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை : இலைகளின் மீது கொத்தாக மஞ்சள் நிற முடிகளுடன் கூடிய முட்டைகளை இடும்.புழு : புழுக்கள் மஞ்சள் நிறத்தில் சிவப்பு நிற வரிகளுடன், ஆரஞ்சு நிற தலையுடன் காணப்படும். உடல் முழுவதும் உரோமங்கள் இருக்கும். இதில் நுனிப்பகுதியில் இரண்டும், பின்பகுதியில் இரண்டும் தெளிவாக தெரியும்.கூட்டுப்புழு : மஞ்சள் நிற பட்டு போன்ற கூட்டுடன் இலையின் மீதிருக்கும்.முதிர்பூச்சி : அந்துப்பூச்சிகள் இளம் மஞ்சள் நிறத்தில் இரு உணர் கொம்புகளுடன் காணப்படும். | 
                    
                      |  |  |  
                      | கம்பளிப்புழு | முதிர்பூச்சி |  |  
                  | கட்டுப்பாடு: 
                      நாற்றங்காலில் நீர் பாய்ச்சுவதால் மறைந்திருக்கும் புழு மற்றும் முட்டைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வருகின்றன். அவற்றை பறவைகள் கொத்தி உண்ணும்.அறுவடைக்கு பின்னர் நிலத்தில் நீரை தேக்கி வைத்தல், வரப்புகளை சீர் செய்தல், வரப்புகள்/பாத்திகளை சுத்தம் செய்வதால் புழுக்களை இலைபரப்பிலிருந்து அகற்றலாம்.நாற்றங்காலிலிருந்து நீரை வடித்து விட்டு, குளோர்பைரிபாஸ் 20 இ.சி. 80 மி.லி. (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 டபல்யு.எஸ்.சி 500மி.லி./எக்டர் என்ற அளவில் மாலை வேளைகளில் தெளிக்கவேண்டும்.பறவைகள் (நாரை), வெளவால், வயல் எலிகள், சுண்டெலி, காட்டுப் பன்றிகள், நாய்கள், மரவட்டை உயிரிகள், மீன்கள், நீர்-நில வாழ்விகள், ஊர்வன மற்றும் குரங்குகள் புழுக்களை இரையாக உட்கொள்கின்றன. |  |  
                
                  |  |  
                  | 8. வெட்டுக்கிளி: கைரோகிளைப்பஸ் பானியான் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள் : 
                      நாற்றுக்கள் மற்றும் இலைப்பரப்பை ஒழுங்கற்ற முறையில் உண்ணும் கதிர் பருவத்தில் தண்டுகளை வெட்டி உண்ணும். இலை நரம்பை தவிர, இலை முழுவதையும் உண்டுவிடும். இலை பரப்பின் மேல் இளம்பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் காணப்படும்.   
                      
                        |  |  |  
                        | நீள்கொம்புடைய வெட்டுக்கிளி | வெட்டுக்கிளிகள் வயலில் காணப்படும் |  | பூச்சியின்  அடையாளம் : 
                      முட்டை : முட்டைகள் 30-40 எண்ணிக்கையில் கூட்டமாக இடப்பட்டிருக்கும். பருவ மழைப் பொழிவு தொடக்கத்தின் போது இந்த முட்டைகள் வெளிவந்து விடும். முட்டைகள் மஞ்சள் நிறத்தில், நீர்ப்புகாதவாறு பசை போன்ற பொருளால் மூடப்பட்டிருக்கும்.இளங்குஞ்சுகள் : இளங்குஞ்சுகள் புற்கள் மற்றும் நெற்பயிரினை உண்கின்றன.முதிர்பூச்சி : ஆகஸ்ட்-செப்டம்பர் மாதத்தில் இளம் குஞ்சுகள் வளர்ந்து முதிர்ப்பூச்சிகளாகின்றன. கைரோகிலைப்பஸ் பானியன் (பெருவெட்டுக்கிளி) 1½ இன்ச் நீளம் கொண்டது. முன் மார்பு பாகத்தின் மேல் மூன்று கருநிறக் குறுக்கு கோடுகள் காணப்படும். இதனால் பூச்சியை எளிதில் கண்டறியலாம்.ஆக்ஸ்யா நிடிடுலா (சிறு வெட்டுக்கிளி) 1 இன்ச் நீளமுடன் முன் மார்பு பாகத்தின் இரு பக்கங்களிலும் நீளவாட்டில் பழுப்பு நிறக்கோடுகளுடன் காணப்படும். |  
                  | 
                    `
                      |  |  
                      | ஒழுங்கற்றவாறு இலைகளின் விளிம்பு கடிக்கப்பட்டிருக்கும் |  |  
                  | கட்டுப்படுத்தும்  முறை : 
                      கோடைக்காலங்களில்  நிலத்தை ஆழமாக உழுது வெட்டுக்களியின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம்.வயல்  வரப்புகளை வெட்டிவிடுவதன் மூலம், பறவைகள் வெட்டுக்கிளியின் முட்டைக்குவியலை உண்கிறது.பென்சின்  ஹெக்சா குளோரைடு (பி.எச்.சி) குருணை மருந்தினை 5 -10 சதம் வீதம் பயன்படுத்தி வெட்டுக்கிளியின்  தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். |  |  
                
                  |  |  
                  | 10. குருத்து ஈ: ஹைடிரல்லியா ஸஸக்கி |  
                  | அறிகுறிகள்: 
                      உள்ளே உள்ள இளம் திசுக்களை உண்ணும்.மஞ்சள் கலந்த வெள்ளைநிற நீளவாட்டு கொப்புளம்  துளையுடன் காணப்படும்.இலைகள் சுருங்கும் பயிர்கள் குட்டை வளர்ச்சியுடன்,  முதிர்ச்சி அடைவது தாமதமாகும்.இளம் இலைகள் நுனியின் அருகில் கீழ்ப்புறமாக  தொங்கும்.குருத்து ஈக்கள் இலைப்பரப்பைத் தாக்கும். தாக்குதலின் ஆரம்ப நிலையில், இலை ஓரங்களில் வெள்ளைநிற குறுகலான கோடுகளுடன் காணப்படும். இலைகளின் மீது பூச்சிகள் கடித்த புள்ளிகள் வரிசைகளில் காணப்படும்.காற்று வீசும் போது சேதமான இலைகள் எளிதாக உடைந்துவிடும். | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை : வெள்ளை நிறத்தில், சுருள் வடிவமாக, இலைகளின் இருபக்கங்களிலும் தனியாக முட்டைகளை இடும்.புழு : புதிதாக வெளி வந்த புழு கண்ணாடி போன்று, மங்கிய வெள்ளை நிறத்தில் காணப்படும். பின் வளர்ச்சியடையும் போது மஞ்சள் நிறத்திற்கு மாறிவிடும். புழுக்கள் இலையின் கீழ்நோக்கிச் சென்று குருத்துக்குள்ளே சேதத்தை ஏற்படுத்தும். சேதம் ஏற்பட்ட இலைகளின் மேல் சிறு துளைகளும், இலை ஓரத்தில் வெள்ளை மற்றும் மஞ்சள் நிறப் புள்ளிகளுடனும் காணப்படும்.கூட்டுப்புழு : இலையுறைகளுக்கிடையே கூட்டுப்புழு உண்டாகிறது. அங்கு கூட்டுப்புழு தண்டுகளுடன் தளர்வாக ஒட்டிக் கொண்டிருக்கும். கூட்டுப்புழு இளம் பழுப்பு நிறத்திலிருந்து அடர் பழுப்பு நிறமாகவும், பகுதி நீள் உருளை வடிவமாகவும் காணப்படும்.முதிர்பூச்சி : வளர்ச்சிபெற்ற பூச்சிகள் அடர்சாம்பல் நிறத்தில் இருக்கும். இவை 1.8-2.3 மி.மீ அளவுடன் காணப்படும். |  
                  |  |  
                  | கட்டுப்பாடு: 
                      பொருளாதார சேத நிலை : 25% சேதமடைந்த இலைகள்.மாற்று சார்பு செடிகளை அகற்றவேண்டும் மற்றும் பருவத்திற்கு முன்னரே நடவு செய்யவேண்டும்.பரிந்துரைக்கப்பட்ட சாம்பல் சத்து உரத்தை பயன்படுத்தவேண்டும்.ஃபென்தியான் 100 இ.சி 500 மிலி (அ) குயினைல்பாஸ் 25 இ.சி 1000 மிலி/எக்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும் அல்லது திமெட் 5 கிலோ/ஏக்கர் இடவேண்டும்.ஓபியஸ் சிற்றினம், டெட்ராஸ்டிக்கஸ் சிற்றினம் மற்றும் டிரைக்கோகிரேம்மா" சிற்றினம் என்ற முட்டை ஒட்டுண்ணிகளை வயலில் வெளிவிட்டு முட்டைகளை அழிக்கவேண்டும்.லைகோசாசூடோ அன்னுாலேடா என்ற சிலந்தி வகைகள் வளர்ச்சி பெற்ற குருத்து ஈக்களை உண்கின்றன.சிறு குளவிகள் குருத்து ஈயின் முட்டைகள் மற்றும் புழுக்களின் மீது ஒட்டுண்ணியாகச் செயல்படுகின்றன. டோலிகோபோபிட் வகை ஈக்கள் முட்டைகளையும், பைடிரிட் ஈக்கள் மற்றும் சிலந்திகள் குருத்து ஈக்களையும் உண்கின்றன. | 
                    
                      |  | 
 |  
                      | மாற்றுப்பயிர்களை அகற்றவேண்டும் | குருத்து ஈயின் புழுக்களை தாக்கும் சிறு குளவிகள் |  |  
                
                  |  |  
                  | 11. பச்சைத் தத்துப்பூச்சி: நெபோடெட்டிக்ஸ் வைரஸ்ஸென்ஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள் : 
                      இலைகள் நுனி முதல் அடிப்பகுதி வரை முழுவதும் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.பயிரின் வீரியம் குறைந்து வளர்ச்சி குன்றி குட்டையாகக் காணப்படும்.பயிர் வாடுதல் அல்லது முற்றிலுமாக காய்தல். பயிரை முழுவதுமாக தாக்கி அதன் சாற்றை உறிஞ்சுதல்.இலையுறைகள் அல்லது நடுநரம்புகளுக்குள் வெள்ளையான அல்லது வெளிறிய மஞ்சள் நிறமான முட்டைகள் இருக்கும்.பயிரின் மேல்பகுதியில் வெளுத்த பச்சை நிற முதிர்ப்பூச்சிகள் இருக்கும்.இப்பூச்சிகள் துங்ரோ, நெல் மஞ்சள் குட்டை  போன்ற வைரஸ் நோய்களைப் பரப்புகின்றன. 
                         
                        
                          |    மஞ்சள் நிறமான இலைகள் |  | பூச்சியின்  விபரம்: 
                      முட்டை :பச்சையான ஒளிகசியும் தன்மையுடைய முட்டைகள், இலைத்தாளின் நடுநரம்பு அல்லது நெற்பயிர் உறை அல்லது பச்சைப்புல் ஆகியவற்றில் இடப்பட்டிருக்கும். ஒரு வரிசையில் 10-15 குவியல்களாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.இளம்பூச்சி :இளம் பூச்சிகள் மென்மையான உடலுடன் மஞ்சளான வெண்மை நிறத்தில் இருக்கும். படிப்படியாக இந்நிறம், பச்சையாக மாறி 5 இளம் பூச்சி வளர்ச்சி நிலைகளுடனும் காணப்படும். பின்பு 18-20 நாட்களில் முதிர் பூச்சிகள் உருவாகிறது.முதிர்ப்பூச்சி:இவை 3-5 மி.மீ நீளம் கொண்டு, பிரகாசமான பச்சை நிறத்தில் வேறுபட்ட கருப்பு நிற அடையாளங்களுடன், கூம்புப் பலகை வடிவில் சிறப்பான விட்டக்கோடு இயக்கத்துடன் காணப்படும். ஆண் பூச்சியின் முன் இறக்கையின் நடுப்பகுதியில் கருப்புநிற புள்ளி காணப்படும். ஆனால் பெண் இனப் பூச்சியில் அவை கிடையாது. ஜூலை-செப்டம்பர் மாதத்தில் பூச்சிகள் செயல்திறனுடன் விளங்கும்.பெண் இனப்பூச்சிகள் 50-55 நாட்கள் வரை வாழக் கூடியது. |  
                  | கட்டுப்படுத்தும்  முறை 
                      பச்சைத் தத்துப் பூச்சியை சிறப்பான முறையில் கட்டுப்படுத்துவதற்கு, பச்சைத் தத்துப்பூச்சி மற்றும் துங்ரோ நச்சுயிரி ஆகியவற்றை எதிர்க்கும் திறன் கொண்ட இரகங்களான ஐஆர் 50, ஐஆர் 54, ஐஆர் 64, சிஆர் 1009, பிஒய் 3, கோ 46, மற்றும் வெள்ளைப்பொன்னி ஆகிய இரகங்களைப் பயிரிடுதல்.முதிர்ச்சியடைந்த நாற்றுக்களை நடவு செய்வதன் மூலம் இலைத் தத்துப்பூச்சிகளால் பரப்பப்படும் நச்சுயிரிகளின் தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.அடிஉரமாக வேப்பம் பிண்ணாக்கு 12.5 கிலோவை  நாற்றங்காலில் அளித்தால் பச்சை தத்துப் பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.பொருளாதார சேத நிலை அளவு : 60/25 வலை வீச்சுகள் (அ) 5/குத்து தழைப்பருவத்தில் (அ) பூத்தல் பருவத்தில் 10/குத்து (அ) துங்ரோ உட்பரவல் இடங்களில் 2/குத்து. வயலில் துங்ரோ மற்றும் பச்சைத் தத்துப்பூச்சிகள் இருப்பைக் கண்காணிக்க வேண்டும்.  நடவு செய்யப்பட்ட வயலின் குறுக்கில் பக்கவாட்டில் நடக்கும்போது 20 குத்துக்களைச் சரிபார்க்க வேண்டும்.பென்தியான் 500 மி.லி (அ) மோனோகுரோட்டாபாஸ்  1000 மி.லி (அ) பாஸ்போமிடான் 1000 மி.லி மருந்து இவற்றில் ஏதேனும் ஒன்றினைத் தெளித்து  தத்துப்பூச்சியின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தலாம்.ஸ்ட்ரெப்ஸிப்டீரன்ஸ், சிறு குளவிகள், மற்றும் நுாற் புழுக்கள் ஆகியவை தத்துப்பூச்சிகளின் இளம் குஞ்சுகள் மற்றும் முதிர் பூச்சிகளில் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனைக் கொன்றுவிடும்.மேலும் நீர்வாழ் நாவாய்ப்பூச்சிகள்,  ஊசித்தட்டான், தட்டான் பூச்சிகள், மற்றும் சிலந்திகள் ஆகிய பூச்சிகளாலும் பச்சைத் தத்துப்பூச்சி தாக்கப்படுகிறது.  பூசண நோய்க் காரணிகள் பச்சைத் தத்துப்பூச்சியின் இளம் உயிரிகள் மற்றும் முதிர் பூச்சிகளைத் தாக்குகிறது.மிக அதிக அளவில் காணப்படும் கொன்றுண்ணி பச்சை நாவாய்ப்பூச்சி "(சிர்டோரினஸ் லிவிடிப்பென்னிஸ்). இவை முட்டைகள் மற்றும் இளங்குஞ்சுகளை வேட்டையாடிக் கொன்றுவிடும்.பச்சைத் தத்துப்பூச்சிகளின் எண்ணிக்கைகளைக் கண்டறிவதற்கு விளக்குப்பொறிகளை பயன்படுத்தலாம்.விளக்குப் பொறிகளை பயன்படுத்துவது பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான மிக சிக்கன முறையாகும்.அதிகாலை நேரத்தில் விளக்குப் பொறியை சுற்றி பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தோ அல்லது தூவியோ கவரப்பட்ட பச்சைத் தத்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் |  
                  | 
                      
                        |  |  |  |  
                        | சிஆர் 1009 போன்ற எதிர்ப்பு இரகங்களை பயிரிடவும் | நாற்றங்காலில் வேப்பங்கட்டியை இடவும் | விளக்குப் பொறி வைக்கவும் |  |  
                
                  |  |  
                  | 12. புகையான்: நிலபர்வட்டா லூகன்ஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்: 
                      பயிர்கள், தீய்ந்தது போல் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாகவும், முற்றிலும் காய்ந்தும் காணப்படும். முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாகக் காணப்படும். மேலும் பயிர்கள் சாய்ந்து விடும். நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்பூச்சிகள் ஒட்டிக்கொண்டிருக்கும். தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து "தீய்ந்த மாதிரி" காட்சியளிக்கும். பழுப்புத் தத்துப்பூச்சியானது புல்தழைகுட்டை நோய், காய்ந்த குட்டை நோய் மற்றும் வாடிய குட்டை நோய் ஆகியவற்றைப் பரப்பும் உயிரியாகத் திகழ்கிறது. தத்துப்பூச்சிகளால் ஏற்படும் "பயிர் தீய்ந்தது" போன்ற அறிகுறிகளை மற்ற "தீய்ந்த" அறிகுறிகளிலிருந்து அதில் இருக்கும் கரும் புகைப்பூசணத்தின் மூலமாக வேறுபடுத்த முடிகிறது. நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களையும் கண்டறிய முடிகிறது. |    
 
                      
                        |  |  
                        | பயிர் தீய்ந்தது போன்ற தோற்றம் |  |  
                  | பூச்சியின்  அடையாளம் 
                      முட்டை : இலையுறைகளில் 2-12 தொகுதிகளாக முட்டைகள் இடப்பட்டிருக்கும்.  (பயிரின் அடிப்பகுதியின் அருகில் அல்லது இலைத்தாள்களின் அடிப்பக்க நடுநரம்புகளில்), வெள்ளையான, ஒளி ஊடுருவுகின்ற, மெலிந்த நீள் உருளை வடிவிலும், வளைவான முட்டைகள் 2 வரிசைகளில் நேர்கோட்டில் வைக்கப்பட்டிருக்கும்.  (வட்டமான சற்று குவிந்த வடிவத்திலுள்ள பெண் பூச்சியால் உருவான முட்டைதோலால் முட்டைகள் மூடப்பட்டிருக்கும்.  பயிர்ச் செடியின் பரப்பிலிருந்து நுனிகள் மட்டுமே வெளியே துருத்திக் கொண்டிருக்கும்).இளம்பூச்சி : புதிதாக பொரிந்து, வெளிவந்த இளம் உயிரிகள் பருத்தி போன்று வெண்மையான நிறத்தில், 0.6 மி.மீ நீளத்துடன் இருக்கும். பின் 5 வது வளர்ச்சிநிலையில் இவை ஊதா நிறமான பழுப்பு நிறம் போன்றும், 3.0 மிமீ நீளத்துடன் மாறிவிடும். முதிர்ப்பூச்சிகள் : முதிர்ச்சியடைந்த தத்துப்பூச்சி 4.5-5.0 மிமீ நீளத்துடன், மஞ்சளான பழுப்பு முதல் கரும்பழுப்பு நிற உடலைக் கொண்டிருக்கும்.  அதன் இறக்கைகள் நிறமில்லாமல், மங்கிய மஞ்சள் நிறமாகக் காணப்படும்.  இரண்டு தனிச்சிறப்புடைய இறக்கை அமைப்புகளைக் கொண்டது. "நீளிறக்கைகள்" மற்றும் "சிற்றிறக்கைகள்". இறக்கை வெளிப்புற அமைப்பு பல காரணிகளால் துாண்டப்படுகின்றது.  அதாவது, இளம் உயிரிப் பருவத்தில் கூட்டமாகவும், உணவின் அளவு மற்றும் தரம் குறைந்தும், குறுகிய நாள் அளவு, மற்றும் குறைந்த வெப்பநிலை ஆகியவை முதிர்ச்சி நிலையை மேம்படுத்துகின்றன. |   
                      
                        | .jpg) |  |  
                        | முதிர்பூச்சி |  |  
                  | கட்டுப்படுத்தும்  முறை 
                      அருணா,  கர்நாடகா, கார்த்திகா, கிருஷ்ணவேணி, பி.ஒய்.3, கோ 42 போன்ற பூச்சி தாக்குதலுக்கு எதிர்த்து  வளரக்கூடிய ரகங்களை பயிரிடலாம்.நெருக்க  நடவு முறையைத் தவிர்க்க வேண்டும். 30 செ.மீ அளவுக்கு கலவன் பாதை விட வேண்டும்.தேவைக்கு  அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துதலைத் தவிர்த்தல் வேண்டும்.பழுப்பு தத்துப்பூச்சிகளின் வளர்ச்சியைக் குறைப்பதற்கு தழைச்சத்து உரத்தை பிரித்திடுதல் வேண்டும்.விளக்கு  பொறி அமைத்து புகையானை கவர்ந்து அழிக்கலாம்.பகல் நேரங்களில் மஞ்சள் நிற பொறிகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறிகளை 1-2 மீட்டர் உயரத்தில் (@ 4/ஏக்கர்) பொருத்தி பூச்சிகளின் தொகையைக் கண்காணிக்க வேண்டும்.வயலில்  நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு மருந்து தெளிக்க வேண்டும்.நேரிடையாக  மருந்தை தூர்களின் அடிப்பகுதியில் தெளிக்க வேண்டும்.பொருளாதார சேத நிலை அளவு: ஒரு குத்துக்கு 1 சிலந்தி இருக்கும் நிலையில் ஒரு துாருக்கு 2 பழுப்பு தத்துப்பூச்சி இருக்கலாம். சிலந்திகள் இல்லையெனில் துாருக்கு 1 என்ற எண்ணிக்கையில் புகையான்கள் இருக்கலாம். கொன்றுண்ணி சிலந்தி இல்லாத நிலையில் ஒரு துாருக்கு 1 தத்துப்பூச்சி என்றும் சிலந்திகள் 1/குத்து என்ற அளவில் இருக்கும்போது துாருக்கு 2 தத்துப்பூச்சிகள் என்ற எண்ணிக்கையில் இருக்கலாம்.பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்துவதற்கு முன்னர் வயலிலுள்ள நீரை வடிகட்ட வேண்டும்.  பின், பயிர்ச்செடிகளின் அடிப்பகுதியில் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்க வேண்டும்.சின்தடிக்  பைரித்ரையாட், மெதில் பாரத்தியான், பென்தியான், குயினால்பாஸ் போன்ற பூச்சி மருந்துகள்  உபயோகித்தலைத் தவிர்க்க வேண்டும்.பாஸ்போமிடான்  1000 மிலி (அ) மோனோகுரோட்டாபாஸ் 1250 மிலி (அ) பாஸலோன் 1500 மிலி மருந்தைத் தெளித்து  புகையானைக் கட்டுப்படுத்தலாம்.இயற்கை எதிரிகளான "லைகோசா சூடோஅன்னுலேட்டா, "சிர்டார்ஹினஸ் லிவிடிபென்னிஸ்" ஆகிய முதிர்நிலைப் பூச்சிகள் (200-250 நாவாய்ப் பூச்சிகள்/எக்டர்) பழுப்பு இலைத் தத்துப்பூச்சிகளின் அதிகத் தாக்குதலின் போது 10 நாட்கள் இடைவெளியில் அவற்றை விடுவிக்க வேண்டும்.முட்டைகளின் பொதுவான ஒட்டுண்ணிகள் "குளவி-பூச்சிகளின் வரிசைகள்" ஆகும். நாவாய்ப்பூச்சிகள் மற்றும் எண்கால் சிலந்திகள் ஆகியவை முட்டைகளை உட்கொள்ளும். முட்டைகள் மற்றும் இளம்பூச்சிகள் இரண்டையும் நாவாய்ப்பூச்சிகள் உட்கொள்கிறது. பொதுவான ஒட்டுண்ணிகளால் இளம்பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக சிலந்திகள் மற்றும் பொறிவண்டுகள் இதனை உட்கொள்கின்றன.வேப்பெண்ணை 3 சதவிகிதம், 15 லிட்டர்/எக்டர் (அ) இலுப்பை எண்ணை 6 சதவிகிதம் 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் 25 கிலோ/எக்டர்.  |  
                  | 
                      
                        |  |  |  |  |  
                        | கலவன் பாதை விட வேண்டும் | வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறி | மஞ்சள் நிற பொறி | இலுப்பை எண்ணை |  |  
                
                  |  |  
                  | 13. வெள்ளை தத்துப் பூச்சி: சோகடெல்லா ப்ரூசிஃபெரா |  
                  | தாக்குதலின் அறிகுறிகள் 
                      நெற்பயிர்ச் செடியின் சாறை உறிஞ்சி பயிர் வளர்ச்சியைத் தடுக்கிறது. எனவே பயிர்ச்செடி வளர்ச்சிகுன்றி குட்டையாக காட்சியளிக்கும். முன் தாக்குதலின்போது வட்டமான மஞ்சள் நிற திட்டுகள் தோன்றி பின் உடனே பயிர் காய்ந்து பழுப்பு நிறமாக மாறிவிடும். பின் பூச்சி தாக்கப்பட்ட திட்டுகள் பரவுதல் ஏற்பட்டு முழு வயலையும் தாக்கிவிடும். இளம் மற்றும் முதிர்ப்பூச்சிகள் செடியின் சாறை உறிஞ்சும். இதனால் செடியின் வளர்ச்சி குன்றி பின் காய்ந்துவிடும். | 
                    
                      |  |  |  
                      | பயிர்கள் காய்ந்து பழுப்பு நிறமாக மாறிவிடும். | பயிர்கள் வளர்ச்சிகுன்றி குட்டையாக காட்சியளிக்கும் |  
 |  
                  | பூச்சியின்  அடையாளம் 
                      முட்டை : நெற்பயிர் செடி சிறியதாக இருக்கும்போது பூச்சிகள் உருளைவடிவ முட்டைகளை அதன் மேல் கூட்டமாக வைத்திருக்கும். ஆனால் செடிகள் பெரிதாக இருக்கும்போது நெற்பயிரின் மேல் பகுதியில் முட்டைகளை வைத்திருக்கும்.இளம் பூச்சிகள் : வெள்ளை நிறத்திலிருந்து நன்கு பல் வண்ணப்புள்ளியுடைய கருஞ்சாம்பல் நிறம் அல்லது கருப்பு மற்றும் வெள்ளை நிறமாகவும், இளமையாய் இருக்கும்போது 0.6 மி.மீ அளவிலும் காணப்படும்.  ஐந்து வளர்ச்சிநிலை இளம்பூச்சிகள் குறுகலான தலையுடன் வெள்ளை அல்லது பாலேடு நிற உடலுடன் இருக்கும்.  நெஞ்சுக்கூட்டின் மேல்புறம் மற்றும் அதன் வயிற்றுப்பகுதி வேறுபட்ட அளவிலான சாம்பல் மற்றும் வெண்நிற குறிகளைக் கொண்டு குறியிடப்பட்டிருக்கும்.முதிர்ப்பூச்சிகள் : முதிர்ந்த தத்துப்பூச்சிகள் 3.5-4.0 மி.மீ அளவு நீளமுடன் இருக்கும்.  அதன் முன் இறக்கைகள் சீராக நிறமற்றும் அதில் கருநிற நரம்புகளுடனும் காணப்படும்.  அதன் இறக்கைகளின் சந்திப்புக்கிடையே நிலையான வெண்நிற பட்டையைக் கொண்டிருக்கும். பெரு இறக்கைகளையுடைய ஆண் மற்றும் பெண் இனப் பூச்சிகள் மற்றும்  சிற்றிறக்கைகளையுடைய பெண் இனப் பூச்சிகள் ஆகியவை பொதுவாக நெல்வயலில் காணப்படும். | 
                    
                      |  |  |  
                      | முதிர்பூச்சி | இளம்குஞ்சு |  |  
                  | கட்டுப்பாடு: 
                      இந்திய நெல் ஆராய்ச்சிக் கழகம் வெளியிட்டுள்ள  வெண்முதுகுடைய தத்துபூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணுக்களையுடைய இரகங்களான ஐஆர் 26, ஐஆர் 64, ஐஆர் 36, ஐஆர் 56, மற்றும் ஐஆர் 72 ஆகிய இரகங்களை பயிரிடுதல்.நெருக்கமான நடவு செய்தலைத் தவிர்த்து ஒவ்வொரு 2.5-3.0 மீட்டர் அளவிற்கு இடையே 30 செ.மீ கலவன் அகற்றும் பாதை விட்டு நடவு செய்தல் வேண்டும். இதனால் பூச்சித்தாக்கத்தைக் குறைக்க முடிகிறது.அதிகளவு தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதை  தவிர்க்க வேண்டும்.பாசனத்தை விட்டு பயிருக்கு அளிக்க வேண்டும்.பொருளாதார சேதநிலை அளவு : கொன்றுண்ணி சிலந்திகள் இல்லாத நிலையில், 1 துாருக்கு ஒரு தத்துப்பூச்சி என்றஅளவிலும், சிலந்திகள் 1/குத்து என்ற அளவிலிருக்கும்போது துாருக்கு 2 தத்துப்பூச்சிகள் என்ற அளவிலும் இருக்கலாம்.நாற்று பருவத்தில் மோனோக்ரோட்டோபாஸ் 35 EC @ 2மிலி/லி (624மிலி/எக்டர்) தெளிக்கவும்."அனாக்ரஸ் சிற்றின" வகை முட்டை ஒட்டுண்ணிகளையும், "பேச்சிகோனேட்டோபஸ் சிற்றின" வகையின் இளங்குஞ்சுகள் மற்றும் முதிர்ப்பூச்சிகள் ஆகியவற்றை நெற்பயிரில் விடுவதன் மூலம் தத்துப்பூச்சிகளைக் குறைக்கலாம்.வெண்முதுகுடைய தத்துப்பூச்சிகளை இயற்கை உயிரியல் கட்டுப்பாட்டுக் காரணிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.  (எ.கா) சிறு குளவிகள் தத்துப்பூச்சிகளின் முட்டைகளை ஒட்டுண்ணியாக செயல்பட்டு உட்கொள்கின்றன.தாவரச்சாறுகளை பயன்படுத்துதல் : பெரியா நங்கை (ஏன்ட்ரோகிராபிஸ் பேனிகுலேடா) சாறு 3-5 சதவிகிதம் (அ) பூண்டு, இஞ்சி, மிளகாய்ச் சாறு (அ) வேப்பெண்ணெய் 3 சதவிகிதம் @ 15 லிட்டர்/எக்டர் (அ) இலுப்பை எண்ணெய் 6 சதவிகிதம் @ 30 லிட்டர்/எக்டர் (அ) வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர்.இரவு நேரங்களில் விளக்குப் பொறிகளை வைக்க வேண்டும்.வெள்ளொளித் தன்மையுடைய விளக்குப் பொறிகளை 1-2 மீட்டர் உயரத்தில் (@ 4/ஏக்கர்) பொருத்தி பூச்சிகளின் தொகையைக் கண்காணிக்க வேண்டும்.பகல் நேரங்களில் மஞ்சள் நிற பொறிகளைப் பயன்படுத்துதல் வேண்டும்.விதைப் பாத்திகளுக்கு அருகில் விளக்குப் பொறிகளை வைக்கக் கூடாது. பின்வருவனவற்றுள்  ஏதேனும் ஒன்றை தெளிக்க வேண்டும். 
                      
                        | பாஸ்போபிடான் | 40 எஸ்.எல் | 1000 மி.லி / ஹெக் |  
                        | மோனோகுரோட்டோபாஸ் | 36 எஸ்.எல் | 1250 மி.லி / ஹெக் |  
                        | கார்போப்யூரான் | 3 ஜி | 17.5 கிலோ / ஹெக் |  
                        | டைகுளோர்வாஸ் | 76 டபுள்யூ.எஸ்.சி | 350 மி.லி / ஹெக் |  
                        | வேப்பெண்ணெய் | 3% | 15 லி / ஹெக் |  
                        | இலுப்பை எண்ணெய் | 6% | 30 லி / ஹெக் |  
                        | வேப்பங்கொட்டை சாறு | 5% | 25 கிலோ / ஹெக் |  |  
                  | 
                    
                      |  |  |  |  
                      | பூச்சிகளை எதிர்க்கும் திறன் கொண்ட மரபணுக்களையுடைய
 இரகம் ஐஆர் 36
 | வேப்பெண்ணெய் | விளக்குப் பொறிகளை வைக்க வேண்டும் |  |  
                
                  |  |  
                  | 15. கதிர் நாவாய்ப்பூச்சி: லெப்டோகெரரிசா அக்யூட்டா |  
                  | தாக்குதலின் அறிகுறிகள்: 
                      பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படும். நெல் மணிகளில் சாறு உறிஞ்சப்பட்டதால் பழுப்பு நிற திட்டுகளுடன் உமிகள் காணப்படும். நெல்மணிகள் விதையற்று பதராக மாறி நிமிர்ந்த பூங்கொத்துக்களைக் கொண்டிருக்கும். நெல் மணிகளில் பூச்சி உட்கொண்டு துளைகளில் கருப்பு நிறப் புள்ளிகள் காணப்படும். தீவிர பூச்சித் தாக்குதலின் போது முழு தானியக் கதிரும் தாக்கப்பட்டு நெல்மணிகள் முதிர்ச்சியடையாமல் போய்விடும். பால் பருவத்தின் போது நெல்வயலில், நாவாய்ப்பூச்சிகளின் வெறுக்கத்தக்க ஒரு மணம் வீசும். நாவாய்ப் பூச்சிகளை களைப்பதன் மூலம் வெறுக்கத்தக்க ஒரு மணம் வெளிவரும். | 
                    
                      |  |  |  |  
                      |  |  |  
                      | பாதிக்கப்பட்ட நெல் மணிகள் | தானிய மணிகளின் மீது கடித்த காயங்களும் புள்ளிகளும் காணப்படும் |  |  
                  | பூச்சியின்  அடையாளம் : 
                       முட்டை : முட்டைகள் வட்டமாக பழுப்பு நிற விதை போன்று, 2 மி.மீ நீளம் கொண்டு இரு வரிசைகளில் கூட்டமாக வைக்கப்பட்டிருக்கும்.  இலைத்தாளின் மேல்பரப்பில் உள்ள இலை நடுநரம்பு பகுதியில் முட்டைகள் இடப்பட்டிருக்கும்.இளம் பூச்சிகள் : முதல் வளர்நிலை பூச்சிகள் மிகவும் சிறியதாக, 2 மி.மீ நீளம் கொண்டு, வெளிறிய பச்சை நிறமாக இருக்கும்.  பின் அடுத்தடுத்த வளர்ச்சி நிலைகளில் ஆழ் பச்சை (கரும்பச்சை) நிறமாக மாறிவிடும்.முதிர்ப்பூச்சிகள் : முதிர்ச்சி நிலையை அடைந்த பூச்சிகள் பச்சையான மஞ்சள் நிறமாகவும், நீளமாக மெலிந்தும் ½  அங்குலம் நீளமுடன் நாவாய்ப்பூச்சிக்குரிய வெறுக்கத்தக்க ஒரு மணமுடன் இருக்கும்.வாழ்வுகாலம் : 3-4 மாதங்களுக்கு வாழக்கூடியவை. 
 | 
                    
                      |  |  
                      | 
                        பால் பருவத்திலிருக்கும் நெல் மணிகளிலிருந்து சாறு உறிஞ்சப்படகிறது |  |  
                  | கட்டுப்படுத்தும் முறை: 
                      வயல் நிலங்கள் மற்றும் வரப்புகள், பாத்திகள் ஆகியவற்றை களைச்செடிகள் மற்றும் புல்வகைகள் இல்லாதவாறு வைக்க வேண்டும்.வலை மூலமாக அல்லது கைகளால் நாவாய்ப்பூச்சிகள் சேகரிப்பதன் மூலம் அதன் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.கவர்ச்சிப் பொருள்களான அரசன் அல்லது இறந்து போன நத்தைகள் அல்லது எலிகள் போன்று துர்நாற்றம் கொண்ட ஏதாவது ஒன்றைப் பயன்படுத்தி, நெல்வயலிலிருக்கும் நாவாய்ப்பூச்சிகளைப் பிடிக்க வேண்டும்.பொருளாதார சேத நிலை அளவு : பூத்தல் பருவத்தின் போது 5 நாவாய்ப்பூச்சிகள்/ 100 நெற்கதிர்கள் மற்றும் பால்பிடிக்கும் பருவத்திலிருந்து தானியமணி முதிர்ச்சி நிலைப் பருவம் வரை 16 நாவாய்ப்பூச்சிகள்/100 நெற்கதிர்கள்.குறிப்பு : நாவாய்ப்பூச்சியின் தாக்குதல் பூத்தல் பருவத்தில் ஏற்படுவதால், பூச்சிக்கொல்லிகளின் அளிப்பை காலை 9 மணிக்கு முன்னர் அல்லது பகல் 3 மணிக்குப் பின்னர் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பூக்கள் கருவுறுதலில் எவ்வித பாதிப்பும் இன்றி செயல்படும்.கே.கே.எம் – ல் 10% அக்கோரஸ் காலாமஸ்  வேர் கிழங்கு பொடி + 90% சாம்பல் கலந்து தூவ வேண்டும்பென்தியான் 100 இ.சி  500 மி.லி / ஹெக் ல் மாலத்தியான் 50 இ.சி  500 மி.லி / ஹெக்வேப்பங்கொட்டை சாறு 5%  25 கிலோ   / ஹெக் அல்லது நாட்சி (அ) ப்ரோஸிப்ஸ் இலை சாறு 10%பென்தியான்  500 மலி (அ) மோனோகுரோட்டபாஸ் 500 மிலி அல்லது மாலத்தியான் 500 மிலி மருந்தை தண்ணீருடன்  கலந்து தெளிக்கவும்.உயிரியல் கட்டுப்பாட்டுச் செயல்களில் சிறு குளவி வகைகள் முட்டைகளில் மேல் ஒட்டுண்ணியாகச் செயல்பட்டு அதனை உட்கொள்கிறது.மேலும் கதிர்நாவாய்ப்பூச்சிகளின் இளங்குஞ்சுகள், மற்றும் முதிர்ப்பூச்சிகளை சிலந்திகள், தரைவண்டுகள், மற்றும்  தட்டான் பூச்சிகள் இரையாக உட்கொள்கின்றன.தாவரச்சாறுகளை பயன்படுத்துதல் : வேப்பங்கொட்டையின் சாறு 5 சதவிகிதம் @ 25 கிலோ/எக்டர், நொச்சி இலைப்பொடி சாறு 5 சதவிகிதம், ஐப்போமியா இலைப் பொடி சாறு 5 சதவிகிதம், வேல மர இலைப் பொடி சாறு 5 சதவிகிதம். |  
                  | 
                      
                        |  |  |  |  
                        | முதிர்வண்டை தின்னும் கூர்மூக்கு நாவாய்ப்பூச்சி | மீத்தைல் பாரத்தியான் தெளிக்கவும் | வண்டுகளை கைவலைகள் கொண்டு சேகரித்து அழிக்க வேண்டும் |  |  
                  |  |  
                
                  | 16. இலைப்பேன்: ஸ்டெஃங்கீட்டோத்ரிப்ஸ் பைபார்மிஸ் |  
                  | தாக்குதலின் அறிகுறிகள் 
                      மென்மையான இலைகளைக் கடித்து சுரண்டி, செடிகளின் சாறை உறிஞ்சிவிடும். இளம் நாற்றுக்களின் இலைகளில் மஞ்சள் நிற (அல்லது) வெள்ளிநிற கீறல்களுடன் காணப்படும்.
இலை நுனி சுருண்டு மேலிருந்து கீழ்நோக்கி காய்ந்தும் காணப்படும்.
பூச்சி தாக்கப்பட்டு சிதைவடைந்த இலைகள் அதன் ஓரங்கள் வழியே உள்நோக்கி சுருண்டு விடும். பூச்சிகள் தாக்குவதால் இலைகள் காய்ந்து, பயிர் வளர்ச்சியும் குன்றிவிடும்.  நீர் அழுத்த நிலைகளில், சேதம் மிகவும் அதிகமாய்க் காணப்படும்.      | 
                    
                      |  |  |  
                      | இலைகள் விளிம்பிலிருந்து உள்நோக்கி சுருட்டப்படும் |  |  
                  | பூச்சியின்  அடையாளம்
 
                      முட்டை :முட்டைகள் நிறமில்லாமலும், பின் முதிர்ச்சிடையும்போது, வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். இலைத்தாள் திசுக்களின் பிளப்புகளில் முட்டைகள் இடப்பட்டிருக்கும். முட்டையின் மேல்பகுதியின் பாதி வெளிப்படுத்தியிருக்கும்.
இளம் பூச்சிகள் : புதிதாக பொரிக்கப்பட்ட இளம்பூச்சிகள் தெள்ளத் தெளிவாக இருக்கும். ஆனால் முதல் தோல் உரித்தலுக்குப் பிறகு மஞ்சளான வெள்ளை நிறமாக மாறி பின் கருப்பான கால்கள், தலை மற்றும் உணர்கொம்புகளை உருவாக்குகிறது. திறக்கப்படாத இளம் இலைகளின் மென்மையான திசுக்களை இளம் புழுக்கள் உட்கொள்ளும்.கூட்டுப்புழு : சுருண்ட இலைகளின் உள்ளே கூண்டுப்புழுவதால் ஏற்படும். மேலும் அதன் புடைவளர்ச்சி மற்றும் இறக்கைகள் வளர்ச்சி தெளிவாகக் காணப்படும்.முதிர்ப்பூச்சிகள் : முதிர்ச்சியடைந்த பூச்சிகள் 1 மி.மீ நீளம் கொண்டு கரும்பழுப்பு முதல் கருப்பு நிறத்துடன் மயிரிழைகளாலான இறகுகளைக் கொண்டிருக்கும். ஆண் பூச்சிகள் பெண் இனப்பூச்சிகளைவிட சிறியதாகவும்,    மெலிந்தும் காணப்படும். பூச்சித் தொகையில் ஆண் இனப் பூச்சிகள் மிக அரிதாக காணப்படுவதால், கன்னி இனப்பெருக்கமுறையைக் கொண்டுள்ளது. (பாலினச் சேர்க்கையில்லாத இனப்பெருக்கம்) | 
                      
                        |  |  |  
                        | இளம் பூச்சி | முதிர்பூச்சி |  |  
                  | கட்டுப்பாடு:
 
                      பூச்சி தாக்கப்பட்ட வயலை நீரில் 2 நாட்களுக்கு நன்கு மூழ்கச் செய்ய வேண்டும்.  செடிப்பேன் கட்டுபாட்டிற்கு இந்த உழவியல் கட்டுப்பாட்டு முறை மிகவும் சிறந்தது.பூச்சி எதிர்க்கும் திறன்/தாங்கும் திறன் கொண்ட இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும்.கீழ்வரும் ஏதேனும் ஒன்றை நடவு வயல் பருவத்தில் தெளிக்க வேண்டும் : பாஸ்போமிடான் 40 எஸ்எல் 300 மிலி/எக்டர் (அ) மோனோகுரோட்டோபாஸ் 36 எஸ்எல் 500 மிலி/எக்டர்பொருளாதார சேத நிலை அளவு : உள்ளங்கையை நீரால் நனைத்து, பின் நாற்றங்காலில் 12 இடங்களில் பயிர்ச் செடிகளின் மேல் கையைக் கொண்டு செல்ல வேண்டும். 12 முறைகளில், செடிப்பேனின் தொகை 60 எண்ணிக்கையைக் 
                        கடந்துவிட்டால் (அ) 10 சதவிகித நாற்றுக்களில் முதல் மற்றும் இரண்டாம் இலைகளின் பாதிப்பரப்பு சுருண்டு காணப்படும்.கொன்றுண்ணி செடிப்பேன்கள் இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உட்கொண்டு அதனை அழிக்கின்றன.பொறி வண்டுகள், பூ நாவாய்ப்பூச்சி, செம்பலினிடு வண்டுகள் ஆகியவை இளம் பூச்சிகள் மற்றும் முதிர்ப்பூச்சிகளை உண்ணும். |  |  
                  | Updated on 27.03.2014 |  |    |