முதல் பக்கம் தொடர்புக்கு  

திட்டங்கள்


மத்திய திட்டங்கள்  
தமிழ்நாடு:

I. நிறுவனங்களின் கடன் வசதிகள்:

தரமான விதை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவி செய்தல்

நலத் திட்டக் கூறுகள் மற்றும் அதன் நன்மைகள்

நன்மையை பயன்படுத்திக் கொள்வதற்கான தகுதி மற்றும் வரையறைகள்

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்

விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவும், தங்களால் எடுக்கப்பட்ட சிறந்த முயற்சிகளை நிலை நிறுத்துவதற்காகவும், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து விதைகளுக்கும் செயல் ஊக்கம் அளிக்கப்படுகின்றன.

ஒப்பந்த முறையில், விதைகளை உற்பத்தி செய்து, வேளாண்மைத் துறைக்கு வழங்கும் அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தின் கீழ் தங்களின் விதைப் பண்ணைகளை பதிவு செய்து கொள்ள தகுதியானவர்கள்.

கிராம நிலை- உதவி வேளாண்மை அலுவலர்

நெல்: சான்று விதைகளை உற்பத்தி செய்வதற்கு, ஒரு கிலோ விதைக்கு ரூ.2/- மதிப்பு அளிக்கப்படுகிறது.

பண்ணை மகளிர்குழுக்கள், மற்றும் ஆர்வமான விவசாயிகள் பிரிவுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.

உதவிவிதை அலுவலர்/துணை வேளாண் அலுவலர்/ வட்டார நிலை வேளாண் அலுவலர்.

 

வேளாண்மை விரிவாக்க மையங்கள், மூலமாக குறிப்பிட்ட தேவையான விதைப் பொருட்களை பணம் செலுத்திப் பெறுவதற்கு வேளாண்மை துறை வழங்குகின்றது.

வட்டநிலை வேளாண்மைஉதவிஇயக்குநர்.

 

வயல்நிலை செயலிகள்/விதைச் சான்று அலுவலர்களால் வழங்கப்பட்ட தரம் பாதுகாத்தல் பற்றிய வழிகாட்டுச் செய்திகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.

மாவட்டநிலை வேளாண்மை இணை இயக்குநர்.

 


மேலே செல்க

II. பண்ணை இயந்திரமயமாக்குதல் திட்டம்:
1. வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம்:

திட்டத்தின் பெயர்:

வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்

திட்டம் செயல்படும் இடம்:

அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)

வேலைகளின் விவரம்:

வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர்கள், தானியங்கி நெல் நடும் இயந்திரங்கள், தானியங்கி நெல் அறுவடை இயந்திரங்கள், சுழல் கலப்பை, கொத்துக்கலப்பை உளிக்கலப்பை, சட்டிக்கலப்பை ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.

அளிக்கும் நன்மைகள்:
(மானியம்)

இயந்திரம்/கருவிகளின் மொத்த விலையில்  25 சதவிகிதம்வழங்குதல்/ஒவ்வொரு இயந்திரம்/கருவிகளுக்கான, இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டஉச்சவரம்புவிலையில் 25 சதம் வழங்குதல்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:

வருவாய்ப் பிரிவிலுள்ளஉதவி வேளாண்மை செயற்பொறியாளர், மாவட்டத்திலுள்ள செயற்பொறியாளர், மண்டல நிலை கண்காணிப்புப்பொறியாளர்,தலைமைபொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை -35, போன்:2435-2686, 2435-2622


மேலே செல்க

2. செயல்முறைப் பரப்பின் நில மேம்பாட்டுத் திட்டம்:

திட்டத்தின் பெயர்:

நில மேம்பாட்டுத் திட்டம்- செயல்முறைப் பரப்பு

செயல்முறைப் பரப்பு:

அனைத்து மாவட்டங்கள்

வேலைகளின் விவரம்:

நில வடிவமைத்தல், நில சமப்படுத்துதல், நில சீர்திருத்தம், உழவு, சேற்றுழவு, கூட்டு அறுவடை இயந்திரத்தால் நெல் அறுவடை.

அளிக்கப்படும் நன்மைகள்:
(மானியம்)

அரசால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைக் கட்டணத்தில் வேளாண்மை பொறியியல் துறையானது மேற்கூறிய செயல்முறைகளை மேற்கொள்வதற்காக இயந்திரங்களை வாடகைக்கு விவசாயிகளுக்கு அளிக்கின்றன.
(வாடகை விலை பின்வருமாறு)

தகுதி:

அனைத்து வகை விவசாயிகளும்.

செயல்படுத்துவதற்கான கால அளவு:

முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் ஒதுக்கப்படும்.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:

உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு.  செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622


மேலே செல்க

நில மேம்பாடு-இயந்திரங்களுக்கான வாடகை மதிப்பு விவரங்கள்:

வ.
எண்

இயந்திரத்தின் பெயர்

வாடகை மதிப்புகள் (ரூ/ஒரு மணி நேரத்திற்கு, டீசலுடன் சேர்த்து)

1.

டிராக்டர்

265

2.

அதிவிசை மண் தள்ளும் இயந்திரம்

670

3.

டிராக்டரில் இணைக்கப்பட்ட கூட்டு அறுவடை இயந்திரம்

780

4.

ரப்பர் டிராக் வகையான கூட்டு இயந்திரங்கள்

1130

3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்

திட்டத்தின் பெயர்:   தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)
திட்டசெயலாக்க இடம்:    அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரம்: பின்வருமாறு:

வ.எண்

கூறுகள்

வேலைகளின் வகை

1.

வேளாண்மை எந்திரமயமாக்குதல்

(அ) புதிதாக உருவாக்கியுள்ள வேளாண்மை இயந்திரங்கள்/கருவிகளைப் புதுப்பித்தல்
(ஆ)வழக்கத்திலுள்ள இயந்திரம்/கருவிகளை பிரபலப்படுத்துதல்.

2.

மானாவாரி நில மேம்பாடு

(அ)எடுத்துச் செல்லக் கூடிய தெளிப்பான் தொகுதியுடைய பிளாஸ்டிக்கால் கோடிடப்பட்ட பண்ணைக் குட்டை
(ஆ)கோடிடப்படாத பண்ணை குட்டை அமைத்தல்.
(இ)கட்டுப்பாத்தி அமைத்தல்.

3.

நில வளங்கள் ஆராய்ச்சி மற்றும் GIS செய்திக் குறிப்புகளை நிறுவுதல்

  நன்கு பயிர் விளையும் கிராமங்களின் வரைபடங்களை  மின்படமாகஅமைத்தல்.

 

அளிக்கப்படும் நன்மைகள் (மானியம்):

புதிதாக உருவாக்கியுள்ள வேளாண்மைக் கருவிகள் சிறு கூட்டு அறுவடை இயந்திரம், பல்வகை பயிர் கதிர் அடிக்குங்கருவி, நெல் நடவு இயந்திரம், ஆகியவற்றைப் பெறுவதற்கு 50 சதவிகிதம் மானிய உதவி அளிக்கப்படுகிறது.  மேலும் வழக்கத்திலுள்ள கருவிகளான பவர் டில்லர், கொத்துக் கலப்பை, சுழல் கலப்பை, சட்டிப்பலுகு, சட்டிக்கலப்பை ஆகியவற்றைப் பெறுவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவிகிதம் மானிய உதவி அளிக்கப்படுகிறது.


 


மேலே செல்க

மழைநீர் அறுவடை மற்றும் நீர்வெளியோடல் மேலாண்மைத் திட்டம் மற்றும் நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டம்:

மழைநீர் அறுவடை மற்றும் நீர் வெளியோடல் மேலாண்மைத் திட்டம்:

திட்டம் செயல்படும் இடம்: அனைத்து மாவட்டங்களும் (சென்னை மற்றும் நீலகிரி தவிர)

நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டங்கள்:

திட்டம் செயல்படும் இடம்: காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம். கடலுார், வேலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவங்கை, துாத்துக்குடி, கோயமுத்துார் மற்றும் நீலகிரி.

வேலைகளின் விவரம்

கசிவுநீர்க் குட்டைகள், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தடுப்பணைகள். பண்ணை குட்டைகள்
பயன்படுத்தப்படாத கிணறுகளை புத்துயிர்ப்பு பெறச் செய்தல். கிராம தொட்டிகள்/ஊறணிகள்

வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்)

Êசமுதாய நிலங்களில் செய்யப்படும் அனைத்து வேலைகளுக்கும் 100 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது.  இருப்பினும், நன்மையடையும் விவசாயிகள் வேலையின் மொத்த மதிப்பில் 10 சதவிகிதம் (தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 5 சதவிகிதம்) தொகையை கிராம வளர்ச்சிக் குழுமம் (அ) நீர் பங்கீட்டு குழுமத்திற்கு அளிக்க வேண்டும்.  இதனால் உருவாக்கப்பட்ட இருப்புகளை வருங்காலத்தில் பாதுகாக்க இத்தொகை உதவுகிறது.  பட்டா நிலங்களில் வேலைக்காக 90 சதவிகிதம் மானியத் தொகை வழங்கப்படுவதுடன் மீதமுள்ள 10 சதவிகிதம் நலன் அடைவோரின் பங்காகப் பெறப்படுகிறது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:

உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு.  செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622 .


மேலே செல்க

5. புதியமோட்டார்பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்:

திட்டத்தின் பெயர்    :   புதிய மோட்டார்பம்ப்செட்களைக்கொண்டு பழைய மோட்டார்பம்ப்செட்களை மாற்றி அமைத்தல்.
செயல்படும் இடம் :       அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரம்:    பழைய, தரமற்ற மோட்டார்பம்ப்செட்களை புதிய BIS மோட்டார்பம்ப்செட்கள்கொண்டு மாற்றி அமைத்தல் மற்றும் மின் துணைக்கருவிகளை புதுப்பித்தல்.
வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்)

விபரம்

தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியின விவசாயிகளுக்கு

 மற்ற விவசாயிகளுக்கு

5 குதிரைத் திறனுக்குக் குறைவான மோட்டார்பம்ப்செட்கள்.

பம்ப்செட்மதிப்பில்50 சதவிகிதம் (அ) ரூ.3500/- மானியத் தொகை-இதில் எது குறைவோ அது.

பம்ப்செட்மதிப்பில் 25 சதவிகிதம் (அ) ரூ.2500/- மானியத் தொகை- இதில் எது குறைவோ அது.

5 குதிரைத் திறன் மற்றும் அதற்கு அதிகதிறன் கொண்ட மோட்டார்பம்ப்செட்கள் .

மோட்டார்பம்ப்செட்கள்மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூபாய்.6000/-மானியத் தொகையாக வழங்குதல். இதில் எது குறைவோ அது.

மோட்டார்பம்ப்செட் மதிப்பில்25சதவிகிதம் அல்லது ரூ.5000/- மானியத் தொகையாக வழங்குதல்- இதில் எது குறைவோ அது.

மேல்மூடி மற்றும் அதன் மற்ற துணைப் பாகங்களை மாற்றி அமைக்கும் செலவு

மேல்பாகம் மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது  ரூ.1500/- மானியமாகவழங்குதல். இதில் எது குறைவோ அது.

 மேல்பாகம் மதிப்பில்50 சதவிகிதம் அல்லது  ரூ.1500/- மானியமாகவழங்குதல். இதில் எது குறைவோ அது.

தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:

உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு.  செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622



மேலே செல்க

செயல் முறை விளக்கங்கள் மூலமாக 40000 எக்டர் பரப்புகளில் திருந்திய நெல் சாகுபடியை செயல்படுத்துதல்:
a.  விதைகள் மற்றும் இதர இடுபொருள்களை எக்டருக்கு  ரூ.800/- என்ற அளவில் வழங்குதல்.

b.  உருளைக் களையெடுக்கும் கருவி மற்றும் குறியிடும் கருவியை @ ரூ.2200/- எக்டர் வழங்குதல்.

    • சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களின், திருந்திய நெல் சாகுபடி முறையை செயல்படுத்துகின்ற விவசாயிகள் பயனடையலாம்.

    3000 சுய உதவிக்குழு பெண்களுக்கு உருளைக்களைப்பான் (நெல் களையெடுக்குங்கருவி) மற்றும் குறியிடும் கருவியை வழங்குதல்.

      • இயந்திரங்களை/கருவிகளை எளிதாக பெறுவதை உறுதி செய்வதற்கு, ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.7400/- மதிப்புள்ள 5 உருளைக் களைப்பான்கள் மற்றும் /குறியிடும் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.
      • சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலுள்ள 3000 சுய உதவிக்குழு/பண்ணை மகளிர் குழு பெண்களுக்கு வழங்கப்படுகிறது.

 

கேரளா:
1. பயிர் காப்பீட்டுத் திட்டம்: கேரளா:

பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் விவரங்கள்:

விவரங்கள்

விளக்கங்கள்

திட்டத்தின் பெயர்

பயிர் காப்பீட்டுத் திட்டம்

வழங்குபவர்

மாநில அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் மாநில அரசு

அமைச்சகம்/துறை

வேளாண்மைத் துறை
மாநிலத்திலுள்ள விவசாயிகள், வறட்சி, வெள்ளபெருக்கு போன்ற பல உற்பத்திப் பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.  கலந்து கொள்ளும் விவசாயிகளின் பங்களிப்புடன் பயிர் காப்புறுதித் திட்டம் 1995 ஆம் ஆண்டிலிருந்து மாநிலத்திலுள்ள 25 முக்கிய பயிர்களுக்கு செயல்பட்டு வருகிறது.  தற்போதைய திட்டமானது பயிர் காப்புறுதித் திட்டத்தினை மேம்படுத்தி சிறு மற்றும் குறு விவசாயிகளின் இடர்பாடுகளை சரிசெய்யவும் உதவுகின்றது.  இத்திட்டத்தின் முதலீடு ரூ.1,00,000 இலட்சமாகும்.

பயன் பெறுபவர்கள்:

குடும்பம், சமுதாயம், மற்றும் பலர்

மற்ற நன்மையாளர்கள்:

காப்புறுதித் திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகள்

நன்மைகள்

 

நன்மை வகை

இடுபொருள், கடன், மானியம்

தகுதி

அனைத்து விவசாயிகளும்

எவ்வாறு பெறுவது?

வேளாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களை தொடர்பு கொள்ள வேண்டும்.

தொடர்பு இணையதளம்

http://www.keralaagriculture.gov.in

 


மேலே செல்க

2. தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் (NAIS): கேரளா

தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டத்தின் (NAIS) விவரங்கள்:

விவரங்கள்

விளக்கம்

திட்டத்தின் பெயர்

தேசிய வேளாண்மை காப்பீட்டுத் திட்டம் (NAIS)

வழங்குவது

மத்திய மற்றும் மாநில அரசுகள்

நிதி அமைப்பு:

50சதவீதம் மத்தியஅரசு மற்றும் 50சதவீதம் மாநில அரசு பங்கு

அமைச்சம்/துறை

வேளாண்மைத் துறை
வேளாண்மைத் துறையால் சந்திக்கப்படும் உற்பத்திப் பிரச்சினையை சரிசெய்வதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.  பயிர்களான நெல், வாழை மரவள்ளிக்கிழங்கு, இஞ்சி, மஞ்சள் மற்றும் அன்னாசிப்பழம் போன்றவற்றிற்கான தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டத்தினை வேளாண்மை காப்புறுதி திட்டஅமைப்பு துவக்கியுள்ளது.  இத்திட்டத்திற்காக ரூ.1.50 கோடிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இதில் 50 சதவிகிதம் மாநில அரசின் (சம்பளக் கூறு தவிர) பங்காக இத்திட்டத்தில் பயன்படுத்தப்படுகிறது.  கேரளாவிலுள்ள தென்னை பயிர் காப்பீட்டுதிட்டத்தில், தேசிய வேளாண்மை காப்புறுதி நிறுவனமானது மாதிரித் திட்டத்தினை துவங்கியுள்ளதால், இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்டத்தில் 0.25 கோடி தொகை தென்னை காப்புறுதித் திட்டத்தின் துவக்கத்திற்கு, 25 சதவிகிதம் பங்கிற்காக அளிக்கப்படுகிறது.  தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டம் 2009-10 ஆண்டிற்கான மொத்த ஒதுக்கீடு ரூ.200 லட்சமாகும்.

பயன் பெறுபவர்கள்:

தனி நபர், சமுதாயம், மற்றும் பலர்

நன்மைகள்

 

நலன் வகை

மானியம்

தகுதி

நெல், வாழை. மரவள்ளி, இஞ்சி, மஞ்சள் மற்றும் அன்னாசிப்பழம் போன்றவற்றை பயிர் செய்வதில் அனுபவமுள்ள விவசாயிகள்.

எவ்வாறு பயனைப் பெறுவது?

வேளாண்மைத் துறை, உள்ளாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடர்பு கொள்ள வேண்டும்.

தொடர்பு இணையதளம்:

http://www.agriculture-industry-india.com/agro-programme-schemes/credit3.htm


மேலே செல்க

3. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான திட்டங்கள்: கேரளா

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டங்களின் விவரங்கள்

விவரங்கள்

விளக்கங்கள்

திட்டத்தின் பெயர்

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைக்கான திட்டங்கள்

வழங்குவது

மாநில அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் மாநில அரசு

அமைச்சகம்/துறை

வேளாண்மைத் துறை

விளக்கம்

அதிக மகசூல் ஈட்டும் விதை இரகங்கள்,உணவுப் பொருட்கள் விளைச்சலுக்காக மாநிலத்தில் உபயோகிக்கும் மொத்த தரமான விதைகளில் ளின் பங்கில், பெருமளவாக அதிகரித்துள்ளது.   இந்த அதிக மகசூல் ஈட்டும் இரகங்கள் பல்வேறு பூச்சிகள் தாக்குதலுக்கு இலக்காகும் தன்மையுடையது.  கேரளா அரசின் வேளாண்மைத் துறையானது நிலையான முறையில் பூச்சி கண்காணிப்பு திட்டத்தினை முழு மூச்சுடன் துவக்கியுள்ளது. இதன் மூலம் மாநிலங்களிலுள்ள முக்கிய பயிர்களையும் கண்காணித்து பாதுகாக்க முடிகிறது.  நீண்ட கால அடிப்படையில்உயிரியல்கட்டுப்பாட்டு முறைகளை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் பின்வருமாறு:
1) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகளின் மூலம் பயிர்களைத் தாக்கும் பூச்சி மற்றும் நோய்களை பொருளாதார சேதநிலை அளவிற்கு கீழ் வைத்தல்
2) பூச்சிகளின் எண்ணிக்கை தொகையை அறிவதற்கு நிலையான பூச்சி கண்காணிப்பு மற்றும் மேற்பார்வையிடுதல்
3) பயிர்களில் தீவிர சேதத்தை ஏற்படுத்தும் நிலையான பூச்சிகள் மற்றும் நோய்களைப் பற்றி விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அதனை தடுப்பதற்கான வழிமுறைகளையும் அறிவுறுத்துகிறது. இத்திட்டத்தின் மொத்த முதலீடு ரூ.50.00 லட்சமாகும்.

நன்மையடைபவர்கள்

மற்றவர்கள்

மற்ற பயன் பெறும் நபர்கள்

விவசாயிகள்

நன்மைகள்

 

நன்மை வகை

பொருள் வழங்கல்

தகுதி

அனைத்து விவசாயிகளும்

எவ்வாறு பயனை பெறுவது?

வேளாண்மைத் துறை மற்றும் பஞ்சாயத்துகளை தொடர்புகொள்ளுதல்

தொடர்பு இணையதளம்

http://www.keralaagriculture.gov.in


மேலே செல்க

4. நெல் பயிர் சார்ந்த பண்ணைத்திட்டத்தின் நீடித்த வளர்ச்சி திட்டம்: கேரளா

நெல் சார்ந்த பண்ணைத்திட்டத்தின் நீடித்த வளர்ச்சி விவரங்கள்

விவரங்கள்

விளக்கம்

திட்டத்தின் பெயர்

நெல்சார்ந்தபண்ணைத்திட்டத்தின் நீடித்த வளர்ச்சி திட்டம்

வழங்குவது

மாநில அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் மாநில அரசு

அமைச்சகம்/துறை

வேளாண்மைத் துறை
மாநிலத்தின் மூன்று முக்கிய நெல் விளையும் பகுதிகளில் அதன் உற்பத்தித்திறனைப் பெருக்குவதற்காக இத்திட்டம் செயல்படுகிறது.
ஒரு எக்டருக்கு 3 டன்கள் அளவு சராசரி நெல் உற்பத்தித் திறனைக் கொண்டு வருவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத்திட்டமானது “குடும்பஸ்ரீ” என்னும் கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழுக்கள் , ஆராய்ச்சி நிறுவனங்கள்,நிதிநிறுவனங்கள் மற்றும் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றின் வழியாக திட்டம் செயல்படுகிறது. விவசாயிகள்குழுக்கள்/பாடசேகராசமித்தீஸ் ஆகியவைதான் இத்திட்டத்தின் கருவாக செயல்படுகின்றன.  இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2300.00 லட்சங்கள் ஆகும்.

 

நன்மையடைபவர்கள்

தனிநபர்,குடும்பம், சமுதாயம், பெண்கள், மற்றும் சிறுவர்கள்

நன்மைகள்

 

நன்மை வகை

இடுபொருள், மானியம்

தகுதி

நெல் சாகுபடியில் தொடர்புடைய அனைத்து விவசாயிகளும் தகுதியானவர்கள்.

எவ்வாறு பயனடைவது?

வேளாண்மைதுறை,மற்றும் உள்ளாட்சிநிறுவனங்கள் மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும்.

தொடர்பு இணையதளம்

http://www.keralaagriculture.gov.in



5. இராஷ்த்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY
)தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்)- கேரளா

இராஷ்த்ரிய கிருஷி விகாஸ் யோஜனா பற்றிய விளக்கங்கள்

விவரங்கள்

விளக்கங்கள்

திட்டத்தின் பெயர்

இராஷ்த்ரிய கிருஷி விகாஸ் யோஜனா (RKVY)

வழங்குவது

மத்திய அரசு

நிதி அமைப்பு

100 சதவிகிதம் பங்களிப்பாக மாநிலத்திற்கு வழங்கப்படுகிறது.

அமைச்சகம்/துறை

வேளாண்மைத் துறை
இந்திய அரசால் உருவாக்கப்பட்ட சிறப்பு மத்திய உதவித் திட்டமாகும்.  இது கேரளா அரசால் செயல்படுத்தப்படுகிறது. மாநிலத்தின் வேளாண்மைத் துறையை புத்துயிர்ப்பு  பெறச் செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். பொதுவாக வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் பொது முதலீட்டை அதிகரிப்பதற்காக மாநிலங்களுக்கு செயல் ஊக்கிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  குறிப்பாக
1) வேளாண் வானிலை நிலைகள், தொழில்நுட்பம் மற்றும் இயற்கை வளங்களின் இருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களுக்கான வேளாண்மை  திட்டங்கள்உருவாகியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
2) மாநிலத்தின் வேளாண்மைத் திட்டத்தில் பொதுத் தேவைகள்/ பயிர்கள்/ முன்னுரிமைகள் ஆகியவை சிறப்பாக பிரிக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்தல்
3) முறையான குறுக்கீடுகள் மூலமாக முக்கியப் பயிர்களில் ஏற்படும் மகசூல் இடைவெளியைக் குறைத்தல்
4) வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளில் விவசாயிகளுக்கு இலாபத்தினை அதிகரிப்பது
5) வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் பல்வேறு கூறுகளின் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அதிகரித்தல்
இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட மொத்த மதிப்பீடு ரூ.6011.10 லட்சங்கள் ஆகும்.

பயனடை பவர்கள்

தனி நபர், குடும்பம், சமுதாயம், பெண்கள்

நன்மைகள்

 

நன்மை வகை

பொருள், கடன், மானியம்

தகுதி

மாநில திட்ட கழகம் மூலமாக, திட்ட குழுக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில், வேளாண்மைத் துறையானது, வேளாண்மைத் திட்டங்கள் மற்றும் மாநில வேளாண்மைத் திட்டங்களை தயாரிக்க வேண்டும்.

எவ்வாறு பயனைப் பெறுவது?

வேளாண்மைத் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக தொடர்புகொள்ளவும்.

தொடர்புஇணையதளம்

http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal-1.pdf (138 KB)

மேலே செல்க

6. நெல் மேம்பாட்டிற்க்கான பேரளவு மேலாண்மைதிட்டத்தின் கீழ் வரும் திட்டங்கள்:
நெற்பயிருக்கு உள்ள திட்டங்கள் பின்வருமாறு
1. விதை உற்பத்தித் திட்டங்கள்
2) நிலம் மற்றும் இதர உள்கட்டமைப்புத் திட்டங்கள்
3) அதிக மகசூல் ஈட்டும் விதை இரகங்களைப் பெறுவதற்கு உதவுதல்
4) மண் சீர்திருத்தங்களுக்கான உதவிகள்
5) நெல் பயிர் பாதுகாப்பு
6) நெல்லில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
7) களைக் கொல்லிகளுக்கான உதவி வழங்குதல்

மேலே செல்க
கர்நாடகா:

வ.
எண்

திட்டத்தின் பெயர்

திட்டத்தின் விவரங்கள்

எவ்வாறு விண்ணப்பிப்பது?

1.

இராஷ்த்ரிய க்ருஷி விகாஸ் யோஜனா (RKVY)

 XI திட்டக் காலத்தில், வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளின் வளர்ச்சியை மேம்படுத்தி, வேளாண்மைத் துறையில் 4 சதவிகிதம் வருட வளர்ச்சியை அடைவதே முக்கிய குறிக்கோள்.

வேளாண்மை அமைச்சம்/ தொடர்புடைய மாநில வேளாண்மை துறைகள்
ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம்.  http://agricoop.nic.in/Rkvy/Rkvyfinal-1.pdf

2.

தேசிய வேளாண்மை காப்புறுதித் திட்டம் (NAIS)

சில இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய்கள், ஆகியவற்றின் தாக்குதலால் ஏற்படும் பயிர் தோல்வி, மகசூல் இழப்பு தருணங்களில் விவசாயிகளுக்கு நிதியுதவி மற்றும் காப்புறுதிகளை வழங்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். முன்னேற்றமுள்ள பயிர் வளர்ச்சி முறைகள், அதிக மதிப்புள்ள இடுபொருட்கள், மற்றும் வேளாண்மையில் சிறந்த தொழில்நுட்பங்கள் ஆகியவற்றை செயல்படுத்துவதற்கு விவசாயிகளை ஊக்குவிப்பதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.  இது பண்ணை வருமானத்தை, குறிப்பாக பேரழிவுக் காலங்களில் நிலையாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

வேளாண்மைத் துறை மற்றும் கூட்டுறவு அமைப்புகள் (அ) உள்ளாட்சி அரசு நிறுவனங்கள் ஆகியவற்றைத் தொடர்பு கொண்டு இத்திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ளலாம்.       http://des.kar.nic.in/cis/Guidelines.pdf

3.

நெற்பயிருக்கான சிறிய இடுபொருள் பைகள் வழங்கும் திட்டம்

புதிதாக வெளியிடப்பட்ட கலப்பினம்/அதிக மகசூல் ஈட்டும் இரகங்களைப் பயன்படுத்தி அதனை பிரபலப்படுத்தி, உற்பத்தித்திறனை அதிகப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோளாகும்.  மேலும் குறிப்பிட்ட இடத்தில் அதிக மகசூல் ஈட்டும் இரகங்கள்/கலப்பினப் பயிர்களின் சாகுபடி பரப்பு எல்லையை அதிகப்படுத்துதல்

மாநில வேளாண்மைத் துறைகளின்
மூலமாக இத்திட்டத்தின் நன்மைகள் விவசாயிகளைச் சென்றடைகிறது.     http://agricoop.nic.in/dacdivision/crop1.htm

4.

ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறையை ஊக்கப்படுத்துதல்

பயிற்சியாளர்கள், விரிவாக்க பணியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு, உயிரியல் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தி ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மைத் திட்டத்தினைசெயல்படுத்துவதுபற்றிய பயிற்சிகள் கொடுத்து, விவசாய சமுதாயத்திடம் பிரபலமாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.  26 மையங்களுடன் இந்த திட்டம் 21 மாநிலங்களிலும் 1 யூனியன் பிரதேசத்திலும் செயல்படுத்தப்பட்டுள்ளது.

பயிர் பாதுகாப்பு அறிவுரையாளர், பயிர் பாதுகாப்பு,தொற்றுநோய்,மற்றும் சேமிப்பு இயக்குநரகம், இந்தியஅரசு,  தேசிய நெடுஞ்சாலை-6, ஃபாரிடாபாத்- 121 001( ஹரியானா)
தொலைநகல் எண்:0129-5412125
தொலைபேசி எண்:
01295413985
01295413985
http://agricoop.nic.in/dacdivisi n/pp1.htm

5.

கிராமின் பன்தரன் யோஜ்னா

விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருளை சேமிப்பதற்கான வசதி, மேலும் பதப்படுத்திய பண்ணைப் பொருட்கள் மற்றும் வேளாண்மை இடுபொருட்கள் ஆகியவற்றை சேமித்து வைப்பதற்கான வசதிகளை கிராமப்புறங்களில் அறிவியல்முறை சேமிப்புக் கிடங்குகளுடன் மற்ற துணை வசதிகளையும் உருவாக்குவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.  மேலும் தரம்பிரித்தல், தர நிர்ணயித்தல் மற்றும் வேளாண்மை உற்பத்திப் பொருளின் விற்பனைத் திறனை உயர்த்துதற்கான தரக் கட்டுப்பாடுகள் ஆகியவற்றை செயல்படுத்துதல்.  மேலும் அறுவடை செய்தபின்பு,உடனடியாக ஏற்படும் விற்பனை இடர்பாட்டினைத் தடுப்பதற்காக, நாட்டின் வேளாண்மை விற்பனை உள்ளமைப்புகளை வலிமைப்படுத்தி, அடகுக்கடன் மற்றும் விற்பனைக்கடன் வசதிகளையும் அளிக்கிறது.

இத்திட்டத்தின் கீழ் வரிசைப்
படுத்தப்பட்டுள்ள வங்கிகள் / நிதி நிறுவனக் குழுக்கள் http://agmarknet.nic.in/amrscheme/rural head.htm

6.

அடகுக் கடன் திட்டம்

மாநிலத்தின் 132 சந்தைகளில் 1994-95ஆம் ஆண்டிலிருந்து இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.   ரூ.50,000/- வரை கடன் (அ) வேளாண்மை உற்பத்திப் பொருளின் மதிப்பில் 60 சதவிகிதம் விவசாயிகளின் உற்பத்திப் பொருளின் அடகுக்காக வழங்கப்படுகிறது.  முதல் 30 நாட்களுக்கு எவ்வித வட்டியும் செலுத்தத் தேவையில்லை. அடுத்தடுத்த இரு மாதங்களுக்கு 8 சதவிகிதம் மற்றும் 12.5 சதவிகிதம் வீதம் வட்டி நிர்ணயிக்கப்படுகிறது.  இத்திட்டமானது 90 நாட்களுக்கான குறுகிய காலத் திட்டம் ஆகும்.

http://maratavahini.kar.nic.in/apmc_

eng/e_schemes.htm


மேலே செல்க

  மத்திய திட்டங்கள்

1. நிறுவனங்களின் கடன் வசதிகள்:

  • வேளாண்மை வளர்ச்சியில் நிறுவனங்களின் கடன் வசதி என்பது ஒரு முக்கிய கூறாகும்.
  • தேசிய வேளாண் கொள்கை 10 வது திட்ட காலத்தில் 4 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதம் இலக்காக கொண்டிருந்தது.
  • விவசாய கடன் சிறப்பு பணிப்பிரிவு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை பின்பற்ற போதுமான மற்றும் சரியான நேரத்தில் கடன் உதவிகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
  • நிறுவனக் கடன் என்பது, கூட்டுறவு, வணிக வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றின் மூலமாக கடனை வழங்குவது ஆகும்.
  • வேளாண்மைக்கான நிறுவனக்கடன் வசதிகள், குறுகிய காலம், மத்திய காலம் மற்றும் நீண்ட கால கடன் வசதிகள் என மூன்று வடிவங்களில் வழங்கப்படுகின்றன.

குறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்:

வ.
எண்

திட்டத்தின் பெயர்

தகுதி

நோக்கங்கள்/வசதிகள்

1.

பயிர் கடன்

அனைத்து வகை விவசாயிகளுக்கும்

குறுகிய கால கடனாக பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி செலவிற்காக வழங்குதல்.
விவசாயிகளுக்கு கடனை நேரடி நிதியாக வழங்கப்பட்டு, அதன் திருப்பி செலுத்தும் காலத்தை 18 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

2.

உற்பத்திபொருள் விற்பனைக் கடன்

அனைத்து வகை விவசாயிகளுக்கும்

விற்பனை இடர் பாட்டினைத் தவிர்த்து விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை தாமே சேமித்து வைப்பதற்காக கடன் வழங்குகிறது.
அடுத்த பயிருக்கானப் பயிர்க்கடனை உடனே புதுப்பித்தலுக்கான வசதிகளையும் இந்த கடன் வழங்குகிறது.
கடனை 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.

3.

கிசான் கடன் அட்டைத் திட்டம் (KCCS)

கடைசி இரு ஆண்டுகளில் அனைத்து விவசாய வாடிக்கையாளர்களும் கடன் திருப்பிசெலுத்துதலை  முறையாக கொண்டிருக்க வேண்டும்.

இந்த அட்டை விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்திக் கடன் மற்றும் சில்லறைத் தேவைகளை சந்திப்பதற்காக தொடர்ச்சியான வரவு செலவு கணக்குகளை அளிக்கிறது.
நிலம் இருப்பு, பயிர் முறைப்பாங்கு மற்றும் கடன் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்த பட்ச கடன் அளவு ரூ 3000/- அளிக்கப்படும்.
வருட மறு ஆய்வு கொண்டு, இந்த கிசான் கடன் அட்டை 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
இறப்பு அல்லது இயலாமைக்கான தனிநபர் நிலையான காப்புறுதி அதிகபட்ச தொகையாக ரூ.50,000/- மற்றும் ரூ.25,000/- முறையே, அளிக்கிறது.

நீண்ட கால கடன் :  

திட்டத்தின் பெயர்

தகுதி

நோக்கங்கள்/வசதிகள்

வேளாண்மை பருவக் கடன்

அனைத்து வகை இன விவசாயிகளும் தகுதியானவர்கள் (சிறிய/நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண்மை வேலையாட்கள்) அவர்களுக்கு தேவையான இடத்தில் செயல்களில் போதுமான அனுபவம் இருக்க வேண்டும்.

பயிர் உற்பத்தி/வருமான உற்பத்திக்கான இருப்புகளை விவசாயிகள் உருவாக்குவதற்காக இந்த கடன் வழங்கப்படுகின்றது.
நிலம் வளர்ச்சி, சிறு பாசன வசதிகள், பண்ணை இயந்திரவியல், தோட்டப்பயிர் மற்றும் தோட்டவியல், பால் பண்ணை கோழி இன வளர்ப்பு, பட்டுப்பூச்சியியல் புன்செய் நிலம்/பயன்படா நில மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய அனைத்து செயல்களும் இந்த திட்டத்தின் கீழ் வரும்.
விவசாயிகளுக்கு இந்தக் கடன் நேரடி நிதியாக வழங்கப்படுகிறது.  இதன் திருப்பி செலுத்தும் காலம் 3 வருடங்களுக்குக் குறையாமலும், 15 வருடங்களுக்கு மிகாமலும் இருக்கிறது.


மேலே செல்க

2.ஒருங்கிணைந்த தானியப் பயிர் வளர்ச்சித் திட்டம் (ICDP) - நெல்


         நிதி அமைப்பு: 100 சதவிகிதம் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
விரிவாக்கம்:
         ICDP க்கு கீழ் நடத்தப்படும் முக்கிய நிகழ்ச்சிக் கூறுகள் பின்வருமாறு: (i) வயல்வெளி செயல் முறை விளக்கம் (ii) விவசாயிகளுக்கான வயல்வெளி வகுப்பு (iii) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் முறை விளக்கம் (iv) விதை வழங்குதல் (v) விவசாயிகளுக்கான பயிற்சி (vi) தெளிப்பான் பி.பி.கருவி (vii) கைக்கருவி (viii) பண்ணை இயந்திரங்கள்/கருவிகள் (ix) பவர் டில்லர்
தகுதி வரம்பு: அனைத்து வகை இன விவசாயிகள்.
நன்மை பெறுபவர்கள்: தனிநபர், குடும்பம், சமுதாயம், பெண்கள் மற்றும் பலர்.
விரிவாக்கம்:
வேளாண்மை கருவிகளான பயிர்ப்பாதுகாப்பு கருவிகள் போன்ற பலவகை பொருட்களுக்கான மானியத்தை இத்திட்டத்தின் கீழ் வழங்குகின்றனர்.  சான்று பெற்ற தரமான விதைகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்முறைகளுக்கான மானியமும் வழங்கப்படுகிறது.  ஒரு விவசாயிக்கு, ஒரு செயலுக்கான மானியம் 25 சதவிகிதத்திற்கு மேலும் அல்லது திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய மானிய அளவை விடவும் மிகாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?
மாவட்ட வேளாண்மை அலுவலர்யின் பரிந்துரையின் மூலமாக நன்மையடைபவர்கள் தேர்ந்தெடுக்கபடுகின்றார்கள்.

மேலே செல்க
3. நெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்

நிதி அமைப்பு: இந்த திட்டம் 100 சதவிகிதம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.

   அமைச்சகம்/துறை: வேளாண்மை மற்றும் துறை, கூட்டுறவுத்துறை.

   விரிவுரை: புதிதாக வெளியிடப்பட்ட கலப்பினம்/அதிக மகசூல் அளிக்கும் இரகங்களைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குறிப்பிட்ட இடத்தில் அதிக மகசூல் அளிக்கும் இரகங்கள்/கலப்பின வகைகளுக்கான பரப்பளவை பரப்புவதும் இதன் செயலாகும்.
தகுதி: அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியானவர்கள்.
எவ்வாறு பயன்படுத்துவது?
மாநில வேளாண்மைத் துறை மூலமாக இத்திட்டத்தின் நன்மைகள் விவசாயிகளுக்குச் சென்றடைகின்றன.

4.குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டம்:

  • குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டம்:

வணிகச் சரக்கு

இரகம்

குறைந்த ஆதரவு விலை (2010-11)

நெல்

பொது இரகம்

1000

 

தரநிலை, ‘'A'

1030

மேலே செல்க

5. தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் (NAIS)
நன்மையடைபவர்கள்:

    • விவசாயிகளின்  நில இருப்பு அளவை கணக்கில் கருதாமல், கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் உதவுகின்றது.

    நோக்கங்கள்/வசதிகள்:

      • இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் ஏதேனும் குறிப்பிட்ட பயிர் தோல்வி ஏற்படும் தருணத்தில், விவசாயிகளுக்கு காப்புறுதி மற்றும் நிதியுதவியை இத்திட்டம் வழங்குகின்றது.
      • முன்னேற்றமுள்ள விவசாய செயல்முறைகளைப் புதுப்பிக்கவும், அதிக மதிப்புள்ள இடுபொருள்கள், மற்றும் வேளாண்மையில் அதிக தொழிற்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் விவசாயிகளை உற்சாகப்படுத்துகின்றன.
      • குறிப்பாக அழிவு (ஆபத்து) வருடங்களில் பண்ணை வருமானத்தை நிலையாகப் பெறுவதற்கு உதவுகின்றன. 
      • இந்திய அரசு பொதுக்காப்பீட்டுக் கழகம் (GIC) இதை செயல்படுத்துகிறது.
      • காப்புறுதி செய்யப்பட்ட தொகை அந்தந்த பகுதியின் மகசூலை பொருத்து அமைகிறது.
      • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையில் 50 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.

மேலே செல்க