நன்னெறி மேலாண்மை முறைகள் :: நிலப்பண்படுத்துதல் மற்றும் பயிர் அறுவடையில் நன்னெறி மேலாண்மை முறைகள்

உழவு மற்றும் அறுவடையில் கடைபிடிக்க வேண்டிய நன்னெறி மேலாண்மை முறைகள்

  1. நீர்வழி பாசன மூலம் இராசயனமிடுதல்
  2. இழுவை இயந்திரத்துடன் பிற வேலைகளையும் சேர்ந்து செய்தல்
  3. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
  4. செயற்கை காற்றுத் தடுப்புச் சுவர்
  5. பல்லாண்டுப் பயிர் சாகுபடி
  6. மண் ஈரப்பததிற்கேற்ப பயிர் சாகுபடி
  7. துல்லியப் பண்ணையம்
  8. அறுவடை வேலை குறைப்பு
  9. நிலப்பண்படுத்துதலில் வேலை குறைப்பு
  10. மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப உழவு செய்தல்

1. நீர்வழிப் பாசன மூலம் ஈடுபொருள் இடுதல்
உரம், பூச்சிக்கொல்லி மற்றம் இதர ஈடு பொருட்களை நீர்வழி பாசன மூலம் அளித்தால், வேலை சுலபமாக முடிவதோடு, மண்ணில் இழுவை இயந்திரம் பயன்படுத்துவதால் வரும் மண் இறுக்கத்தை தவிர்க்கலாம். நீர்வழி ஈடுபொருள் இடும்போது சரியான அளவினை பயன்படுத்தவேண்டும்.

மேலே

GMP Tractor

2. இழுவை இயந்திரத்துடன் பிற வேலைகளையும் சேர்ந்து செய்தல்
டிராக்டர் உழவு செய்யும் பொது, கரும்பு நடவு செய்தல் போன்றவற்றையும் இணைத்து செய்யும் போது நிலத்தல் டிராக்டர் அதிகம் உபயோகிப்பதை தவிர்க்கலாம்.
சில ஆலோசனைகள்

  • உரம் மற்றும் கலைக்கொல்லியினை ஒரு சேர இடுதல்
  • இடைச்சாகுபடியினை செய்யும் போது உரமிடுவதையும் ஒன்றாகச் செய்தல்.

மேலே

3. ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை
ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை என்பது பாரம்பரிய, அங்கக மற்றும் உயிரி முறையில் பயிர்ப் பாதுகாப்பு செய்தலாகும். இம்முறையில் நன்மை தரும் பூச்சியினை அதிகரித்து, பூச்சிக்கொல்லி தெளிப்பதைத் தவிர்க்கலாம். அதோடு மண் இறுக்கத்தையும் தவிர்க்கலாம்.

மேலே

4. செயற்கை காற்றுத் தடுப்புச் சுவர்
அதிவேக காற்றினை தடுத்து பயிர் பாதிக்காமல் காப்பதாகும்.
உதாரணம்
தடுப்பு சுவர்களை, கம்பிகள் அல்லது சிமெண்ட் தூண்கள் ஆகியவற்றை நிலத்தின் ஓரத்தைச் சுற்றிலும் நட்டு வைத்தல் அல்லது மரங்களை வளர்த்தல், அதிவேக காற்றினை தடுப்பதோடு பயிர் சேதமடையாமல் காக்கிறது.

Wind Barrier

மேலே

5. பல்லாண்டுப் பயிர்
தானியப்பயிர், தீவனப்பயிர் மற்றும் பழப்பயிர்களை, பல்லாண்டுகள் சாகுபடி செய்வதாகும். அவ்வாறு செய்யும் போது மண் அரிப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம்.

மேலே

6. மண் ஈரப்பரததிற்கேற்ப பயிர் சாகுபடி
மண்ணின் ஈரப்பதத்திற்கேற்பப் பயிர் சாகுபடி செய்வது ஓர் மிகச்சிறந்த தொழில்நுட்பமாகும். இம்முறையில் நடவு செய்யும் நேரம் குறைவதோடு பயிர் நன்கு ஊன்றி வளரவும் வழிவகுக்கும். பயிர் நடுவதற்கும், நட்டப் பயிர் விரைவில் முளைப்பதற்கும் இடையே உள்ள கால இடைவெளியை குறைக்கவும் உதவுகிறது. மண்ணின் ஈரப்பதத்தால் மேல் பரப்பில் கடினமாகாமல், நட்ட நாற்றுக்கள் காற்றினால் குலைந்துப் போகாமலிருக்க உதவுகிறது.

மேலே

நடைமுறைப்படுத்த சில ஆலோசனைகள்
மண் அழுத்தம் அதிகமாகாமல் காக்கவேண்டும். இதனால் அதிக உழவு செய்வதைத் தடுக்கலாம். நடவு செய்ய நிலம் தயார் செய்தவுடன் பாசனம் செய்யவேண்டும். நீர்ப் பாசனத்திற்கு பின், மெல்லிய கடினமான புரணி மண்ணின் மேற்பரப்பில் உருவாகும். நாற்று மேடை, நீர்ப்பாசனம் மற்றம் நடவு ஆகியவற்றிற்கிடையே உள்ள நேரத்தை குறைக்கவேண்டும்.

7. துல்லியப் பண்ணையம்
துல்லியப் பண்ணை என்பது ஜி.பி.எஸ் கருவியைக் கொண்டு பண்ணையின் கருவிகள், செயல்பாடுகளைத் துல்லியமாக செய்து அதிக இலாபம் பெறுவதாகும். துல்லியப் பண்ணையில் பயிர் சாகுபடி முறையில் முரண்பாடு வராமல் நிகழும் தட்பவெப்பத்திறனுக்கு ஏற்ப செயல்படுவதாகும்.

மேலே

8. அறுவடை வேலை குறைப்பு
அறுவடை கருவிகளை நிலத்தில் பயிரை அறுவடை செய்ததை அகற்ற பயன்படுத்தப்படுகிறது. அவ்வியந்திரத்தின் உபயோகத்தை குறைக்க போது மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்கப்படுகிறது.

மேலே

9. குறைந்த உழவு முறை
குறைந்த உழவு முறை என்பது, பயிர் சாகுபடிக்கு செய்யப்படும் உழவு எண்ணிக்கையை குறைத்தலாகும். அதிக முறை உழவு செய்தல் மண்ணின் தன்மையை மாற்றிவிடும். ஆகையால், மண்ணின் தன்மை மாறாமல் பாதுகாக்க உழவு முறையில் மாற்றம் தேவை.

ஆலோசனைகள்
குறைந்த உழவு முறை, நிலப்போர்வை உழவு முறை.

மேலே

10.மண்ணின் ஈரப்பத்திற்கேற்ப உழவு செய்தல்
மண்ணின் ஈரப்பதத்திற்கேற்ப உழவு செய்தல் என்பது உழவு செய்வதற்கு முன்பு அல்லது செய்யும் போது அல்லது மழை வரும் போது உழவு செய்தலாகும். நீர், மண்ணின் துகள்களை ஒன்றாக இணையச் செய்து, மண்ணின் ஆக்சிஜன் குறைந்து காற்று சென்றடையாமல் தடுக்கிறது. நன்கு காய்ந்த மணல், மேற்பரப்பிலிருந்து காற்றினான் அரித்துச் சென்றுவிடும். தேவையான அளவு ஈரப்பதத்தை காக்க உழவு செய்வதற்கு முன் நீர்ப் பாசனம் செய்தல் அல்லது மழைக்குப் பின் உழவு செய்தல்வேண்டும். உழவுக்குப் பின் பெரிய மணல் கட்டி உருவாகும், இவை மண் அரிப்பை தடுக்கிறது.
சில ஆலோசனைகள்
தேவையான ஆழம் வரை நீர்ப்பாசனம் செய்யவேண்டும். மழைப்பொழிவும், உழவும் ஒன்றே நேரத்தில் நடைபெற  திட்டமிடவேண்டும்.

மேலே

11. உழவு முறை செய்யும் காலம்
மண் அரிப்பு ஏற்படும் நேரத்திற்கு முன் உழவு செய்தலே சிறந்த உழவு செய்யும் நேரமாகும். உழவு செய்யும் நேரத்தை சரி செய்யும் போது மண் அரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

மேலே

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013