||| | | | | |
தோட்டக்கலை :: நறுமணப் பயிர்கள் :: பச்சோலி
gg gg

இரகங்கள்
தொழில்நுட்பங்கள்
விற்பனை விலை

தேசிய தோட்டக்கலை இயக்கம்
நபார்டு
தேசிய தோட்டக்கலை வாரியம்
தேசிய மூலிகைப்பயிர்கள்
வாரியம்

சொட்டுநீர் பாசனம்
ஒருங்கிணைந்த தோட்டக்கலை
மேம்பாட்டுத்திட்டம்

வணிக வாரியங்கள்

சந்தை நிலவரம்

இரகங்கள்

ஜோகோர், சிங்கப்பூர்  மற்றும் இந்தோனேசிய இரகங்கள் முதல் இரகமானது தரமான எண்ணையும், மற்ற இரண்டு இரகங்களும் அதிக அளவிலான எண்ணை கிடைக்கின்றது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுடைய இரு பொறை மண் சாகுபடிக்கு  சிறந்ததாகும். வெப்ப மண்டலங்களிலும், ரப்பர், தென்னை மற்றும் காப்பி  தோட்டங்களிலும் சாகுபடி செய்யலாம்.

விதைப்பு மற்றும் நடவு

15-20 செ.மீ நீளமுடைய வேர்விட்ட தண்டுக்குச்சிகள் மூலம் இனப்பெருக்கம் செய்யலாம்.

பருவம் : ஏப்ரல் - மே

நிலம் தயாரித்தல்

நிலத்தை நன்கு உழுது பண்படுத்தவேண்டும். கடைசி உழவின் போது ஒரு எக்டருக்கு 15 டன் தொழு உரம் இட்டு 60 செ.மீ இடைவெளியில் பார்சால் அமைக்கவேண்டும். பின் வேர்விட்ட குச்சிகளை 30 செ.மீ இடைவெளியில் நடவு செய்யவேண்டும்.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

அடியுரம் : ஒரு எக்டருக்கு 30 கிலோ தழை, மணி மற்றும் சாம்பல் சத்து இடவேண்டும்.

மேலுரம் : நடவு செய்த மூன்று மாதங்கள் கழித்து 30 கிலோ தழைச்சத்து இடவேண்டும்.

நீர் நிர்வாகம் : மலைப்பகுதிகளில் பச்சோலி மானாவாரியாகப் பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றது, சமவெளிப்பகுதிகளில் 7-10 நாட்களில் நீர்ப்பாசனம் செய்யவேண்டும்.

பின்நேர்த்தி

இளம் வளர்ச்சிப் பருவத்தில் ஓரிரு முறை களையெடுத்தல் வேண்டும்.

ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு

நூற்புழுக்களை கட்டுப்படுத்த ஒரு எக்டருக்கு 2 கிலோ கார்போபியூரான் மூலக்கூறு மருந்தினை நாற்றாங்காலில் இடவேண்டும்.

அறுவடை

முதல் அறுவடை 6-8 மாதங்களிலும், அதன் பின்னர் 3-5 மாதங்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த இலைகளை நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.

மகசூல் : ஒரு வருடத்திற்கு ஒரு எக்டரிலிருந்து 30-40 கிலோ எண்ணை.

 

 

மேலோட்டம்
வழிமுறைகள்
தொழில்நுட்பங்கள்
வழங்கல்கனை மேலாண்மை
பசுமைக்குடில் தொழில்நுட்பம்
பழப்பண்ணை மேலாண்மை
உற்பத்தி செலவு

aa

தேசிய இணையதளங்கள்
சர்வதேச இணையதளங்கள்

அரசு தோட்டக்கலைத் துறை
அரசு தோட்டக்கலைப்
பண்ணைகள்

வணிக வாரியங்கள்

புத்தகங்கள் மற்றும்
வெளியீடுகள்

 

aa
 

||| | | | | |

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2008