|| | | ||||
 

வேளாண் அறிவியல் நிலையம் - கடலூர்

Tamil English

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

வெற்றிக்கதைகள் :

1.விதை உற்பத்தியாளர் : வேளாண் உற்பத்தியில் விதை ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. தரமான விதையைப் பொறுத்த மற்ற வேளாண் இடுபொருட்களான உரங்கள் மற்றும்   வேலையாட்களின் விதையும் அமைகின்றது. ஆகவே சரியாக விதை தேர்வு செய்வது என்பது அவசியமான ஒன்றாகிறது. கடலூர் மாவட்டத்தில் 1, 14, 291 ஹெக்டர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்படுவதால் தோராயமாக 6857 டன் விதை நெல் தேவைப்படுகின்றது.  அதிகளவு விதை நெல் தேவைப்படுவதால், விதை உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அதிக பரப்பளவில் விதை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது. பல்வேறு பயிர்களில் விதை உற்பத்தி மற்றும் விதை விநிநோயகம் விலை என்பது ஒரு பிரச்சனை உள்ளது. ஆகவே விவசாயிகளுக்கு விதை உற்பத்தியில் பயிற்சி கொடுப்பதன் மூலம் தரமான விதையை அதிகளவில் உற்பத்தி செய்யமுடியும்

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலையீடு : விவசாயிகள் விதைகளை தனியார் கம்பெனிகள், அரசாங்க் கிளைகள்  வாங்குவதோடு தங்களுடைய பண்ணையில் சேமித்த விதைகளையும் பயன்படுத்தி வந்தனர். வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளையும் தரமான விதையை உற்பத்தி செய்வது பற்றியும் அவற்றின் நன்மைகளையும் அவ்வப்பொழுது விவரித்து வந்தார்கள். ஆனால் விதை உற்பத்தி செய்வதைப் பற்றிய தொழில்நுட்பம் சரிவர தெரியாததால் தங்களுடைய சொந்த நிலங்களில் விதை உற்பத்தி செய்யவில்லை. பிறகு வேளாண்மை அறிவியல் நிலையம் தலையிட்டு ராஜேந்திரப்பட்டினம் கிராமத்தில் விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி நடத்தி நிலத்தேர்வு, விதை வாய்ப்பு, பயிர் வலகுதூரம், மற்ற இரகங்களை நீக்குதல், இலைவழி நுண்ணூட்ட தெளிப்பு, அறுவடை மற்றும் அறுவடைக்கு பிறகு விதையை கையாளும் முறை போன்ற தலைப்புகளில் மூன்று பிரிவாக விதை கிராம பயிற்சி திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.

வெற்றிக்கதை : நாம் பரிசீலக்கப்பட்ட வெற்றிக்கதை விவசாயி மற்றும் பயிற்சி பெற்ற விவசாயியான திரு.டி.சுப்பிமணியன் த.பெ.திருஞானசம்பந்தம், ராஜேந்திரபட்டினம் கிராமம், விருத்தாச்சலம் தாலூகா, கடலூர் மாவட்டம் என்ற முகவரியில் வசிக்கும் விவசாயி இந்த கிராமத்தில் ஒரு முன்னோடி விவசாயியாக இருப்பதோடு புது திட்டங்களை ஆரம்பத்தில் நடைமுறைப்படுத்துவதுடன் ஒரு தொழில் முனைவராகவும் உள்ளார். மேலும் இவர் விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஒரு குழு தலைவராகவும் (1985 முதல்), அறிவியல் ஆலோசனைக் குழுவில் ஒரு உறுப்பினராகவும் (2002 முதல்) செயல்பட்டு வருகிறார்.

தாக்கம் : இந்த விவசாயிடம் 35 ஏக்கர் நன்செய் நிலமும் அதற்கேற்ப நீர்ப்பாசன வசதியும் இருந்ததது. ஆரம்பத்தில் மரபு றைப்பது நெல் சாகுபடி செய்த இந்த விவசாயி சில வருடங்களுக்குப் பிறகு இந்த மரபு முறைப்படி விவசாயத்தினால் மகசூல் வகையிலும் மண் வளத்திலும் முன்னேற்றம் இல்லை என்பதை விவசாயி புரிந்து கொண்டார். பிறகு விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் ஆலோசனைப்படி விதை நெல் சாகுபடி செய்வது என்று தீர்மானித்தார். இதற்கு முன் இந்த விவசாயி 2003 ஆம் வருடத்தில் நெல விதைப்பான் மூலம் நேரடி நெல் விதைக்கும் தொழில்நுட்பம் மற்றும் செம்மை நெல் சாகுபடி தொழில்நுட்பம் போன்ற பயிற்சிகளை பெற்றிருக்கிறார் இந்த தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்தி குறைந்த அளவு விதை (7முதல் 8 கிலோ ஹெக்டேர்) தழைச்சத்து (இலைவண்ண அட்டை மூலம் தழைச்சத்து மேலாண்மை) நீர் மற்றும் வேலையாட்கள் தேவை என்பதை தெரிந்துகொண்டார். இந்த அனுபவித்தின் மூலம் நெல்லில் விதை உற்பத்தியை 30 ஏக்கர் அளவிற்கு விரிவு படுத்தியுள்ளார். அதிகபட்ச விதை மகசூலாக ஒரு ஹெக்டேருக்கு 6000 கிலோ என்ற அளவில் குறைந்த சாகுபடி செலவில் (ரூ.12,000) மரபு முறை சாகுபடியை காட்டிலும் குறைந்த செலவு மற்றும் அதிக விதை உற்பத்தியை பெற்றுள்ளார். இப்பொழுது இந்த விவசாயி ஒரு தனியார் விதை தொழில் முனைவராகவும், உற்பத்தி செய்த விதைகளை ராஜவிதைகள் என்ற அடைமொழியில் விதைகள் சந்தையில் விற்பனை ஆகிறது.

விவசாயிகளுக்கு கிராம விதை பயிற்சியின் மூலம் ஏற்பட்ட தாக்கம்

வ.எண்.

விபரங்கள் மற்றும் பயிற்சியினால் ஏற்பட்ட தாக்கம்

உற்பத்தி மற்றும் வருமான விபரங்கள்

1.

பரப்பு

12

2.

விதை உற்பத்திக்கு தெரிவு செய்யப்பட்ட பயிர்கள்

நெல், பயறு

3.

உற்பத்தி அளவு

நெல் - 6 / ஹெக்டேர் உளுந்து - 7 குவிண்டால்/ஹெக்டேர்

4.

விதை வழங்கல்

அரசாங்க துறை மற்றும் விவசாயிகளுக்கு

5.

நிகர வருமானம்

நெல் - ரூ.66,000/ஹெக்டேர் உளுந்து - ரூ.20,000/ஹெக்டேர்

6.

கிராம வேலைவாய்ப்பு

5000 பேர் நாள்/வருடம்

7.

செயல்படுத்தப்பட்ட பரப்பு

நெல் - 12 ஹெக்டேர்
உளுந்து - 12 ஹெக்டேர்

2.முந்திரி நாற்றங்கால் : தோட்டக்கலைப் பயிர்களில் முக்கியப் பயிரான முந்திரி கடலூர் மாவட்டத்தில் பெரும்பால பகுதிகளில் சாகுபடி செய்யப்படுகிறது. இந்த பயிரானது தோட்டங்களில் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பயிராக விளங்குகிறது. பெரும்பாலான தோட்டங்கள் 30 முதல் 40 வரும் பழமை வாய்ந்த தோட்டங்களாக உள்ளன. இங்குள்ள தோட்டங்களில் உள்ள மரங்கள் உள்ளூர் இரகங்களில் விதை மூலம் முளைத்த செடிகளை நடவையால் ஒரு ஹெக்டேருக்கு தோராயமாக 250 கிலோ பழமை வாய்ந்த தோட்டத்தில் ஹெக்டேருக்கு ஒரு வருடத்திற்கு ரூ.12,000 வருமானத்தை பெற்று வந்த விசாயிகள் இவற்றில் பூச்சி மருந்து அடிப்பதற்கு ரூ.3000 முதல் ரூ.4,000 வரையிலும், உரங்கள் இடுவதற்கு ரூ.3,000 வரையிலும் செலவு செய்து வந்தனர். இந்த செலவு நீங்களாக நிகர வருமானம் என்று பார்த்தால் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரைதான் கிடைக்கும். ஆகவே விவசாயிகள் பழைய தோட்டங்களில் உள்ள மரங்களை விடுத்து உயரிய இரகங்களான வீஆர்ஐ2 மற்றும் வீஆர்ஐ3 போன்ற ஒட்டுக்கட்டிய செடிகளை நட ஆரம்பித்து விட்டனர். மேலும் தரிசு நில முன்னேற்ற திட்டத்தின்கீழ் சாகுபடி செய்யாத நிலங்களில் எல்லாம் முந்திரி ஒட்டு செடிகளை நடவு செய்து சாகுபடி திட்டத்தில் கொண்டு வருகின்றனர். ஆகவே இவ்வகை மாற்றத்தால் அதிகளவு முந்திரி ஒட்டுச்செடிகள் தேவைப்படுகின்றன. இதை மனதில் கொண்டு வேளாண்மை அறிவியல் நிலையம் 2004 ஆம் ஆண்டு முந்திரியில் ஒட்டுக்கட்டிய செடி உற்பத்தி என்ற பயிற்சியை ஆரம்பித்தது. இந்த பயிற்சியானது கிராமப்புற இளைஞர்களுக்கு ஒன்று முதல் நான்கு வாரங்களுக்கு அளிக்கப்பட்டது. குறைந்தகால ஒரு வார பயிற்சியானது முந்திரி ஒட்டு கட்டுவதற்கு  மட்டும் வழங்கப்பட்டது. இரண்டு வார பயிற்சி அல்லது நான்கு வார பயிற்சியானது தோட்டக்கலை மற்றும் வேளாண் காடுகளில் உள்ள அனைத்து பயிர்களில் பயிர் பெருக்க முறையைப் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. புதுக்கோரைப்பட்டி கிராமத்தைச் சார்ந்த திரு.என்.சிவக்குமார் என்ற கிராம் இளைஞர் முந்திரியில் ஒட்டுகட்டுதல், தோட்டக்கலை பயிர்கள் மற்றும் வேளாண் காடுகளில் பயிர்பெருக்கம் செய்தல் போன்ற பயிற்சிகளில் கலந்து கொண்டார். சில தவிர்க்க முடியாத காரணங்களில் இவரால் பெரிய வெற்றியைப் பெற முடியவில்லை. வேளாண்மை அறிவியல் நிலையம் தலையிட்டு நாற்றங்கால் செடிகள் உற்பத்தி செய்யும் பயிற்சிகளான பனிக்கூடாரம் வடிவமைத்தல், நாற்றங்கள் கலவை தயாரித்தல், வேர்க்குச்சி உற்பத்தி, தண்டுமூலம் சேகரித்தல், ஒட்டுகட்டும் தொழில்நுட்பங்கள், பயிர் வளர்ச்சி ஊக்கிகள் பயன்படுத்தும் முறைகள் போன்றவை.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் தொடர்ந்து தொடர்ந்து இவருடைய நாற்றங்கால் பிரிவிற்கு சென்று பார்வையிட்டு தொழில்நுட்ப அறிவுரைகளை வழங்கினர். இவர் ஒரு பத்தாம் வகுப்பு தேர்ச்சிபெற்ற இளைஞர் ஆரம்பத்தில் 1 ஏக்கர் அளவுள்ள நாற்றங்கால் வைத்திருந்தார். ஆனால் தற்பொழுது 12 ஏக்கர் அளவு நில அளவு வைத்துள்ளார். இவற்றில் 2.5 ஏக்கர் பரப்பளவை நாற்றங்காலுக்கு பயன்படுத்தி வருகிறார். மொத்தம் உள்ள நிலத்தில் 8 ஏக்கர் அளவில் முந்திரியும், 0.5 ஏக்கர் பரப்பளவில்  நெல்லியும், 0.5 ஏக்கர் பரப்பளவில் மாவும் மீதமுள்ள 0.5 ஏக்கர் பரப்பளவில் பலாப்பழமும் நட்டு ஒட்டுக்கட்டுவதற்கு வேண்டிய தாய்ச்செடிகளை எடுப்பதற்கு இவற்றை பராமரித்து வருகிறார். தொடக்கத்தில் ரூ.60,000 முதலீட்டில் தொடங்கப்பட்ட இவரது நாற்றங்கால் பிரிவு தற்பொழுது வருடத்திற்கு 5 இலட்சம் ரூபாய் வருமானம் பெற்ககூடிய அளவு வளர்ந்துள்ளது. மேலும் இவர் நிழல் கூடாரம் (தேசிய தோட்டக்கலை இயக்கம் மூலம் – 2000 சதுர மீட்டர்), நாற்றங்கால் செடிகளுக்கு தெளிப்பு நீர் பாசனம் மற்றும் தாய்மர செடிகளுக்கு சொட்டு நீர் வாசனம் போன்றவற்றையும் நடைமுறைப்படுத்தியுள்ளார். தற்பொழுது வருடத்திற்கு 1 இலட்சம் எண்ணிக்கையிிலான முந்திரி ஒட்டு செடிகளை உற்பத்தி செய்து கடலூர், திண்டுக்கல், புதுக்கோட்டை, தேனி மற்றும் பெரும்பலூர், போன்ற மாவட்டங்களுக்கும் ஆந்திரப்பிரதேசம், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலப் பகுதிகளுக்கும் ஒட்டு செடிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. தற்பொழுது இவர் தன்னடைய நாற்றங்காலை விரிவுபடுத்தி (வருடத்திற்கு 10,000 ஒட்டுக்கன்றுகள்), மா (வருடத்திற்கு 5000 ஒட்டுக்கன்றுகள்) மற்றும் பலா (வருடத்திற்கு 2000 ஒட்டுக் கன்றுகள்) என்ற அளவில் உற்பத்தி செய்து வருகிறார். இவரின் செயல்பாடுகளை பார்த்து மற்றவர்களும் வேளாண்மை அறிவியல் நிலையத்தை தொடர்பு கொண்டு பயிற்சி எடுத்ததன் மூலம் மேலும் ஐந்து பேர் வெற்றிகரமாக நாற்றங்கால் உற்பத்தி செய்ய துவங்கியுள்ளனர்.

புதுகோரைப்பேட்டை கிராமத்தில் வருடத்திற்கு தோரயமாக 8 முதல் 10 இலட்சம் எண்ணிக்கையிலான முந்திரி ஒட்டுக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆகவே 4000 முதல் 5000 ஹெக்டேர் அளவுக்கு ஒட்டுச் செடிகள் அனுப்பப்பட்டு வருடந்தோறும் புது ஒட்டுச்செடிகள் நடப்பட்டு வருகின்றன. ஆகவே நாற்றங்கால் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை பார்க்கும் பொழுது பயிற்சி பெற்ற இளைஞர் ஒரு வருடத்திற்கு ஒரு இலட்சம் ஒட்டுக்கன்றுகளை உற்பத்தி செய்வார், அகவே இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பழைய மரங்களுக்கும் அகற்றப்பட்டு நான்கு முதல் ஐந்து வருடங்களில் புதிய உயரி இரகங்களை நடப்பட்டு விடும். மேலும் இளைஞர்கள் வெளிமாநில சந்தைகளிலும் தொடர்பு வைத்திருப்பதால் நாற்றங்கால் வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை பெறும்.

3.டெலிச்சேரி வெள்ளாடு வளர்த்தல் : திரு.கே.கலியமூர்த்தி, மண்டிகுப்பம், கிராமம், வீரத்தாச்சலம், தாலூகா, கடலூர் மாவட்டம் என்ற முகவரியில் வசிக்கும் இவர் விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் குழுத்தலைவராக (1985 ஆம் ஆண்டு முதல்) செயல்பட்டு வருகிறார். தற்பொழுது இவர் டெலிச்சேரி ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.

1996 ஆம் ஆண்டு இவர் 5 ஏக்கர் மானாவாரி நிலங்களை வைத்திருந்து நிலக்கடலை சாகுபடி செய்து வந்தார். மேலும் சில தோட்டக்கலை பயிர்களின் முந்திரி, பலா மற்றும் கொய்யா போன்றவைகளை 2 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வந்தார். மேலும் இவற்றோடு உள்ளூர் இரக ஆடுகளை இந்த நிலங்களில் வளர்த்து வந்தார். இந்த உள்ளூர் இரக ஆடுகளின் மூலம் குறைந்த வருமானம் மட்டுமே கிடைக்கப்பெற்றால் இவரால் பெரிய வெற்றியை பெறமுடியவில்லை. இந்த சமயத்தில் இவர் உயர் இரக வெற்றியை பெறமுடியவில்லை. இந்த சமயத்தில் இவர் உயர் இரக வெள்ளாடுகளை வளர்க்க நினைத்து வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகி உயர்இரக வெள்ளாடு வளர்ப்பதற்குரிய பயிற்சியும் வழிகாட்டுதலும் தேவை என்பதை கேட்டுக் கொண்டார்.       
1997 ஆம் அண்டு விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற கிராமத்தொடர்பு நிறுவன நிகழ்ச்சி பயிற்சியில் டெலிச்சேரி வெள்ளாடு வளர்க்கும் தொழில்நுட்பஙகள் என்ற தலைப்பில இவர் பயிற்சியில் கலந்து கொண்டார். இந்தப் பயிற்சியில் கலந்து கொண்டார். இந்தப் பயிற்சியில் இவர் திருப்பதியடைந்து 4 பெண் மற்று 1 ஆண் டெலிச்சேரி வெள்ளாடுகளை விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் சென்னையிலுள்ள கால்நடைக் கல்லூரியில் வாங்கினார். இந்த வெள்ளாடுகளை பயிற்சியில் கற்றுக்கொண்ட தீவனம் அளிக்கும் முறையை கடைபிடித்தார். மேலும் பாதுகாப்பான இடத்தை கட்டுதல், தடுப்பூசி போடுதல் மற்றும் குடற்புழு நீக்கும் போன்றவற்றை வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தொழில்நுட்ப வல்லுநரின் (கால்நடை) ஆலோசனையின் பேரில் செயல்படுத்தினார். பிறகு 6 மாதத்தில் ஒவ்வொரு வெள்ளாட்டிலிருந்து 3 குட்டிகளை பெற்றார். அடுத்த 11/2 வருடங்களில் 15 முதல் 20 ஆடுகளைப் பெற்றார். இந்த ஆடு குடிசை ஒரளவு நன்றாக வளர்ந்தவுடன் 2ஆம் வருடம் இறுதியில் ஒரு ஆட்டுக்குட்டியை ரூ.1,200 என்ற விலைக்கும், வயதான ஆடுகளை ஆட்டின் விலை ரூ.2,400 என்ற விலைக்கும் விற்றார். இவற்றோடு நேரடியாக ஆட்டின் இறைச்சி ஒரு கிலோ ரூ.120 என்ற அளவில் சொந்த கிராமத்தில் உள்ள மக்களுக்கும் மேலும் பண்ருட்டி கடலூரில் உள்ள மக்களுக்கும் விற்பனை செய்தார். தற்பொழுது வெள்ளாடு விற்பனை செய்வதன் மூலம் 6 மாதங்களில் ரூபாய் 20,000 என்ற அளவில் நிகர வருமானத்தைப் பெறுகிறார். இந்த வருமானம் மூலம் இந்த விவசாயின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது. இவர் ஒரு முன்னோடி விவசாயியாக செயல்படுவதோடு இந்த வெள்ளாடு இரகங்களை பராமரித்து வணிக ரீதியாக மற்ற விவசாயிகளுக்கும் கொடுத்து வருகிறார். ஆகவே இந்த டெலிச்சேரி வெள்ளாடு பல்வேறு விவசாயிகள் இவரிடம் இருந்து வாங்கியதன் விளைவாக இன்று கடலூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் காணப்படுகிறது.

4.கனகாம்பரம் நாற்றங்கால் : கடலூர் மாவட்டத்தில் 80 சதவித நிலங்கள் சிறு மற்றும் குறு விவசாயிகளிடம் உள்ளது. மேலும் இம்மாவட்டத்தில் உள்ள 88 சதவீத மக்கள் கிராமங்களில் வாழ்ந்து விவசாய தொழிலை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயிகள் வேண்பயிர்கள், தோட்டக்கலைப் பயிர்கள் மற்றும் வேளாண் வனவியல் பயிர்களை சுற்றுப்புற சூழலுக்கு தகுந்தவாறு விவசாயம் செய்த வருகின்றனர். கடலூர் மாவட்டத்தின் அருகில் சென்னை மற்றும் பாண்டிச்சேரி சந்தைகள் உள்ளதால் கடலூர் மாவட்டத்தின் பாண்டிச்சேரி சந்தைகள் உள்ளதால் கடலூர்  மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் மலர்களின் தேவை அதிகரித்துள்ளது. இந்த மலர்கள் உதிரி பூக்களாகவும், மாலைகளில் தொடுப்பதற்காகவும் வியாபாரம் செய்யப்படுகின்றது. இவற்றால் நாற்றாங்கால் உற்பத்தி தேவைகள் பண்ருட்டி வட்டாரத்தில் உள்ள வேககொல்லை கிராமத்தில் அதிகரித்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் கனகாம்பரம், மல்லிகை மற்றும் ரோஜா போன்ற பூ பயிர்களின் நாற்றங்காலை உற்பத்தி செய்து வருகிறார்கள். விருத்தாச்சலம் வேளாண்மை உற்பத்தி அறிவியல் நிலையத்தின் மூலம் மாதிரி கிராமம் என்ற திட்டத்தை இந்தக் கிராமத்தில நடைமுறைப்படுத்தி கனகாம்பரம் நாற்றங்கால் உற்பத்திக்கு வழிவகுத்தது. இந்தக் கிராமத்தில் 814 ண்ணை குடும்பங்கள் அடங்கிய 4513 எண்ணிக்ககையிலான மக்கள் வசிக்கின்றன. இவற்றில் 4114 பேர் படிப்பறிவு வசதியை பெற்றுள்ளனர். மேலும் இவற்றில் 2154 பேர் ஆண்களும் 2359 பேர் பெண்களும் அடங்கும். இந்த 814 எண்ணிக்கையிலான குடும்பங்களில் 679 குடும்பங்கள் நில வசதி பெற்றுள்ளன 27 விவசாயிகள் 4 ஹெக்டேருக்கு அதிகமாகவும். 65 விவசாயிகள் 2 முதல் 4 ஹெக்டேர் அளவிலும், 143 விவசாயிகள் 1 முதல் 2 ஹெக்டேர் அளவிலும், 203 விவசாயிகள் 0.4 முதல் 2 ஹெக்டேர் அளவிலும் மற்றும் 241 விவசாயிகள் 0.4 ஹெக்டேர் அளவிற்கும் குறைவான விவசாய நிலங்களை பெற்றிருக்கின்றனர். மீதமுள்ள 135 விவசாய குடும்பங்கள் நிலமற்ற விவசாய குடும்பங்களாக கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இங்கு மண்ணின் வகையானது ஒரு அடிக்கு கீழுள்ள மண் செம்மண்ணாகவும் மேற்புறப் பகுதி வண்டல் களிமண்ணாகவும் உள்ளது. இநதக் கிராமத்தில் 4 மாமத்தொட்டிகளும், 2 குளங்களும், 24 மின்மோட்டர்களும், 12 ஆழ்குழாய் கிணறுகளும் மற்றும் 3 உழவு இயந்திரங்களும் உள்ளன.

வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலையீடு : வேளாண்மை அறிவியல் நிலையம் இந்த கிராமத்துடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளும் முன் விவசாயிகள் டெல்லிகனாம் பரநாற்றுகளை பாண்டிச்சேரியிலிருந்து ஒரு நாற்றின் விலை மூன்று ரூபாய் ஐம்பது பைசா என்ற விலையில் வாங்கி வந்து நட்டனர். இதனால் ஒரு ஹெக்டேருக்கு போக்குவரத்து செலவு உட்பட ரூபாய் 75,000 முதல் 80,000 வரை செவாகின்றது. ஆகவே வேளாண்மை அறிவியல் நிலையம் தலையிட்டு ஒரு நீண்டகால தொழில்நுட்ப பயிற்சி நாற்றங்கால் உற்பத்தி தொழில்நுட்பங்களில் பனித்துளி அமைப்பு கட்டுதல், வளர்ச்சி ஊக்கிகளை பயன்படுத்துதல், நாற்றங்கால் கலவை தயாரித்தல் போன்ற பயிற்சிகளை கொடுத்தது. 20 விவசாயிகள் இந்த வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சி பெற்றுக் கொண்டு பெரும்பாலான விவசாயிகள் நாற்றங்காலை தொடங்கி நடத்தி வருகின்றனர். வேளாண்மை அறிவியல் நிலையத்தின் விஞ்ஞானிகள் தொடர்ந்து நாற்றங்கால் பிரிவிற்கு சென்று பார்வையிட்டு தொழில்நுட்ப ஆலோசனைகளை கொடுத்து வருகிறார்கள்.

வெற்றிக்கதை : இந்த வெற்றிக் கதையை உருவாக்கியவர் திரு, முத்துக்குமாரன் என்ற பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற இளைஞர், ஆரம்பத்தில் இவர் 2 ஏக்கர் நிலங்கள் வைத்திருந்தார். பிறகு நாற்றங்கால் நடவடிக்கையின் மூலம் நல்ல இலாபமடைந்து பொருளாதார ஏற்றத்தால் இன்று இவரிடம் 12 ஏக்கர் நில அளவாக விரிவடைந்திருக்கிறது. இவற்றில் 1 ஏக்கர் நிலத்தை நர்சரிக்காக பயன்படுத்தி வருகிறார். மொத்தமுள்ள நிலத்தில் 5 ஏக்கர் நிலத்தில் முந்திரியும், 2 ஏக்கர் நிலத்தில் பலாப்பழமும், 3 ஏக்கர் நிலத்தில் டெல்லி கனகாம்பரமும் மற்றும் மீதியுள்ள 1 ஏக்கர் நிலத்தில் மல்லிகை செடியும் நடப்பட்டு தாய்ச்செடி பகுதியாக பராமரிக்கப்பட்டு, நாற்றங்கால் உற்பத்திக்கு தண்டுக்குச்சி சேகரிக்கப்படுகிறது. தற்பொழுது இவர் 5 இலட்சம் செடிகள் உற்பத்தி செய்து தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வழங்கி வருகிறார். இதுவரையில் 10,000 விவசாயிகள் இவருடைய நாற்றங்காலில் கனகாம்பரம் செடிகள் வாங்கியுள்ளனர். ஆரம்பத்தில் ஐம்பதாயிரம் முதலீட்டில் ஆரம்பித்த இவரின் நாற்றங்கால் தற்பொழுது வருடத்திற்கு ரூபாய் இரண்டு இலட்சம் அளவில் வரும் கிடைத்து வருகிறது. (2005 -2006 முடிய). தற்பொழுது இவர் மல்லிகை நாற்றங்கால் உற்பத்தியிலும் கவனம் செலுத்தி வருகிறார். 2006-2007 ஆம் வருடங்களில் இவர் 9 இலட்சம் மல்லிகை செடிகளையும், 2.5 இலட்சம் கனகாம்பரம் செடிகளையும் உற்பத்தி செய்துள்ளார். இதன் மூலம் இவர் 50 பேருக்கு கிராம வேலைவாய்ப்பை கொடுத்திருக்கிறார். இந்த தொழில்முனைவரின் தன்னம்பிக்கை மற்றும் வாய்ப்புகளால் தன்னுடைய நாற்றங்காலில் மல்லிகை, ரோஜா, பலாப்பழம், முந்திரி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு போன்ற நாற்றுகளை உற்பத்தி செய்து வருகிறார்.

தாக்கம் : தற்பொழுது வேககொல்லை கிராமத்தைச் சுற்றிலும் 15 முதல் 20 நாற்றங்கால் பிரிவுகளின் மூலம் ஒரு நாற்றங்கால் பிரிவின் மூலம் 3 முதல் 5 இலட்சம் நாற்றங்கால் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆரம்ப மூலதனமாக ஒரு பிரிவிற்கு ஐம்பதாயிரம் செலவானது. வேக கொல்லை கிராமத்தை சுற்றிலுள்ள நாற்றங்கால் மூலம் 15 முதல் 20 நாற்றங்கால் பிரிவுகளின் மூலம் உற்பத்திக்கு செய்யப்படுகிறது. ஆரம்ப மூலதனமாக ஒரு பிரிவிற்கு ஐம்தாயிரம் செலவானது. வேக கொல்லை கிராமத்தை சுற்றியுள்ள நாற்றங்கால் மூலம் 15 முதல் 20 இலட்சம் கனகாம்பரம் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. உற்பத்தி செய்யப்பட்ட நாற்றுகள் கடலூர், காஞ்சிபுரம், வேலூார், திருவள்ளூர், செங்கல்பட்டு, சேலம், திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டம் இவற்றோடு வெளிமாநிலமான ஆந்திரப்பிரதேசத்திற்கும் நாற்றுகள் அனுப்பப்படுகின்றன. தற்பொழுது இந்த விவசாயி மல்லிகை, ரோஜா, பலாப்பழம், முந்திரி, எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு நாற்றுகளையும் உற்பத்தி செய்து வருகிறார். ஒரு நாற்றங்கால் பிரிவிற்கு சராசரி நிகர வருமானமாக 2 இலட்சம் முதல் 2.5 இலட்சம் வரை ஒரு வருடத்திற்கு கிடைக்கின்றது. இந்த நாற்றங்கால் பிரிவின் மூலம் கூடுதலாக கிராம வேலைவாய்ப்பாக வருடத்திற்கு 750 முதல் 800 வேலை நாட்களை உருவாக்கி கொடுக்கிறது. இந்த நாற்றங்காலில் உற்பத்தி செய்த கனகாம்பரம், மல்லிகை மற்றும் ரோஜா நாற்றுகள் தற்பொழுது 150 முதல் 200 ஹெக்டேர் வரையில் கடலூர் மாவட்டத்திலும் 250 ஹெக்டேர் பரப்பளவில் மற்றப் பகுதிகளிலும் நடப்பட்டுள்ளது.

நீண்டகாலப் பயிற்சியின் மூலம் விவசாயிகள் மற்றும் கிராமப்புற இளைஞர்களிடம் ஏற்பட்ட தாக்கம்

வ.எண்.

பயிற்சியின் மூலம் ஏற்பட்ட தாக்கத்தின் விபரங்கள்

உற்பத்தி மற்றும் வருமானம் விபரங்கள்

1.

நடைமுறையில் இருக்கும் நாற்றங்காலின் எண்ணிக்கை

20

2.

நாற்றுகள் உற்பத்தியாகும் பயிர்கள்

கனகாம்பர், ரோஜா மல்லிகை

3.

நாற்றங்காலில் உற்பத்தியாகும் அளவு

3 முதல் 5 இலட்சம் செடிகள் /  வருடம்

4.

நாற்றுகள் அனுப்பப்டும் இடங்கள்

தமிழ்நாடு, ஆந்திரப்பிரதேசம்

5.

நிகர வருமானம்

ரூ.2-2.5 இலட்சம்  / நாற்றங்கால்  / வருடம்

6.

கிராம வேலை வாய்ப்பு

750 – 800 வேலைநாட்கள் நாற்றங்கால் வருடம்

7.

கிராம மொத்த உற்பத்தி

15-20 இலட்சம்  / செடிகள் /  வருடம்

8.

தோரயமாக நடப்பட்ட பரப்பு

200 ஹெக்டேர் / ஹெக்டேர்

5. காய்கறிகளிலிருந்து ஊறுகாய் தயாரித்தல் : திருமதி. கே.ஜோதி என்ற 40 வயதுடைய வயோதிக பெண் விருத்தாச்சலம் அருகிலுள்ள மணவளநல்லூார் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் நடுத்தர வருமானக் குடும்பத்தை சார்ந்த வீட்டு வேலைகளை கவனித்து வரும் இல்லதரசியாவார். 2006 ஆம் ஆண்டில் விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற 15 நாள் தொழில்நுட்ப பயிற்சியான ஊறுகாய் தயாரிப்பின் மூலம் தொழில்முனைவோர் என்ற தலைப்பில் நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். இந்த பயிற்சியில் கலந்து கொண்டபின் பாகற்காய் ஊறுகாய் மற்றும் காய்கறி கலவை ஊறுகாய் ஆகியவற்றை தயாரிக்க ஆரம்பித்தார். இவர் ஊறுகாய் தயாரிப்பதற்கான காய்கறிகளை தன்னுடைய சொந்தப் பண்ணையில் இருந்து பெற்றுக்கொண்டதால் குறைந்த அளவில் ஒரு நாளைக்கு 1/2 கிலோ முதல் 1கிலோ அளவு ஊறுகாய் தயாரிக்க ஆரம்பித்தார். பின்னர் இதை விருத்தாச்சலத்தில் உள்ள இந்திய ஒவர்சீஸ் வங்கியில் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் பயிற்சியின் மூலம் பெற்ற சான்றிதழ் (மதிப்புக் கூட்டப்பட்ட உணவுப் பொருட்களில் தொழில்முனைவோர் பயிற்சி) மூலம் வங்கிக் கடன் பெற்றார். தற்பொழுது இவர் தயாரித்த பொருட்களை விருத்தாசலத்தில் மாவட்ட கிராம பொருள் அங்காடியிலும் மற்றும் சில உணவகத்திலும் விற்று வருகிறார். மேலும் ஊறுகாய்களை சிறிய பைகளில் அடைத்து விருத்தாச்சலத்தில் உள்ள சில்லறை கடைகளில் கே.டி.ஆர் ஊறுகாய் என்ற பெயரில் விற்று வருகிறார். இவருடை சுகாதாரமான ஊறுகாய் தயாரிப்பில் வாடிக்கையாளர்  மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

ஊறுகாய் விற்பனைக்கு இவர் தன்னுடை கணவரின் உதவியையும், ஊறுகாய் தயாரித்தலுக்கு தன்னுடைய குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் உதவியையும் பெற்று பாட்டில் மற்றும் பாக்கெட்டுகளில் ஊறுகாய் நிரப்பி விற்பனை செய்து வருகிறார். தற்பொழுது இவர் ஒரு மாதத்திற்க 24 கிலோ ஊறுகாய் ஒரு கிலோ ஊறுகாய் ரூபாய் 100 என்ற விகிதத்தில் (எரிபொருள், வேலையாட்கள் மற்ற செலவுகள் உள்பட) விற்று வருகிறார். தற்பொழுது நிகர வருமானமாக ஒரு மாதத்திற்கு ரூபாய் 2400 கிடைக்கிறது. இடுபொருள் 8 மாதம் வரை பதப்படுத்தி வைத்திருக்கிறார்.

6.மண்புழு உரம் : தொடர்ந்து இராசயன உரங்களைப் பயன்படுத்தி வருவதால் மண்ணின் வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறைந்து சமச்சீரற்ற நுண்ணூட்டச்சத்து மற்றும் நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படுகின்றன. மண்ணிலிருந்து கிடைக்கும் உற்பத்தி திறன் இராசயன உரங்களை மட்டும் பொறுத்ததல்ல. அங்கக உரம் இன்றியமையாத ஒரு பகுதியாக மண்ணில் செயல்பட்டு நீடித்த உற்பத்தி திறனுக்கும் மண்ணின் பெளதீக குணங்களை மேம்படுத்தவும் இவற்றும் சுற்றுப்புற சூழலை பாதிக்காதவாறும் அமைந்துள்ளன. மண்புழு செயல்பாட்டினால் வேளாண் கழிவுகளை மறு பயன்பாட்டிற்கு அதிக ஊட்டச்சத்துடன் மன்புழு உரமாக பயன்படுத்துகிறோம். மண்புழு உரம் அதிகளவு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துகளை பெற்றுள்ளதோடு நுண்ணூட்டச்சத்துகளையும் ஹார்மோன்களையும், என்சைம்களையும், பயனளிக்கக்கூடிய பாக்டீரியா மற்றும் ஆக்டினோமைசிட்ஸ் போன்றவற்றையும் பெற்றிருப்பதால் மண்ணின் வளம் மேம்படுவதோடு பயிர் விளைபொருட்களின் தரம் அதிகரித்துள்ளது. விருத்தாச்சலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தலுக்கான தொழில்நுட்ப பயிற்சி வழங்கப்பட்டது. திரு. நாராயணன் என்ற பயனாளி இந்தப் பயிற்சியில் கலநது கொண்டு பயன்பெற்று விருத்தாச்சலம் தாலுகாவில் உள்ள சதமங்கலம் என்ற இடத்தில் மண்புழு உரம் தயாரிக்கும் பிரிவை ஆரம்பித்ததார். இவர் ஆரமபத்தில் 1500 எண்ணிக்கயைிலான மண்புழுக்களை பாலூரில் அமைந்துள்ள காய்கறி ஆராய்ச்சி நிலையத்தில் ரூபாய் அறுநூறு செலுத்தி வாங்கிச் சென்று தன்னுடைய மண்புழு பிரிவு குடிசையில் இட்டார். பிறகு முதல் அறுவடையாக 250 கிலோ மண்புழு உரமும் அதன்பிறகு ஒரு மாதத்திற்கு 1500 கிலோ அளவிலும் அறுவடை செய்து வந்தார். மேலும் 2004 ஆம் வருடம் இவர் புதுகுரபேட்டை என்ற இடத்தில் மற்றுமொரு மண்புழுஉர பிரிவை ஆரம்பித்தும் இவற்றிலிருந்தும் ஒரு மாதத்திற்கு 1500 கிலோ உரங்களை அறுவடை செய்து வருகிறாா. மொத்தத்தில் ஒரு மாதத்திற்கு 3,000 கிலோ மண்புழு உரங்களை அறுவடை செய்து தன்னுடைய சொந்த வயல்களில் இட்டு வருகிறார். இதற்குமுன் இவருடைய வயலில் தொழு உரம் மற்றும் இராசயன உரங்களை நெல் மற்றும் கரும்பு போன்ற பயிர்களுக்கு இட்டு வந்தார். தற்பொழுது இவர் மண்புழு உரங்களை நெல்,கரும்பு, வாழை மற்றும் மா போன்ற பயிர்களுக்கு இட்டு வருகிறார். இந்த விவசாயின் கருத்துப்படி மண்புழு உரங்களை வயல்களில் இட்டதன் மூலம் நெல், கரும்பு போன்ற பயிர்களில் அதிக மகசூலம் வாழை மற்றும் மாவின் பழங்கள் நல்ல தரத்துடனும் (சுவை), முருங்கையில் பூபிடித்தல் விரைவாகவும் மற்றும் மண்ணின் வளம் அதிகரித்தாகவும் இந்த விவசாயி தெரிவித்தார்.

 

 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
   
   
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
   
   

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

   
   

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

     

வல்லுனரை கேளுங்கள்

   
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008