தவேப வேளாண் இணைய தளம் :: ஊட்டச்சத்து :: உணர் மதிப்பிடுதல்
உணர் மதிப்பிடுதல் என்றால் என்ன?
  • உணவு வகைகளை செம்மைப்படுத்துதல் பற்றிய அலசல்
  • ஒரு வகை உணவின் தனித்தன்மையை பூர்த்தி செய்கிறதா என்று ஆராய்தல்
  • உணவு வகைகளின்ஒற்றுமையையும்/ வேற்றுமையையும் ஒப்பிட்டு ஆராய்தல்
  • உணவின் தரத்தை மேலும் மேம்படுத்துவதற்கான ஒரு முயற்சி
  • ஒரு புதிய உணவு வகை அனைவராலும் ஏற்றுக்கொள்ளும் தன்மை பற்றிய ஓர் அலசல்
  • உணவின் கொள்குறி மற்றும் அகவழி பின்னூட்டம் பற்றிய விபரம் பெறப்படுவதால் முக்கிய முடிவுகள் எடுக்க உதவும் அறிவியல் கிளை.
ஏன்/ எதற்காக உணர் மதிப்பிடுதல் உணவுப்பொருளின் தரம் நிர்ணயிக்கப்படுகிறது?
  • உணவின் இருப்பு நிலை – பார்வையுணர்வு, தொடு உணர்வு அல்லது சுவை உணர்வின் மூலம் கண்டறியலாம்.
  • புதிய உணவு வகைகளை, பழையவையுடன் ஒப்பிட்டு எவ்வகையில் சிறந்தது என்று கூற இயலும்.
  • பாரம்பரியத்தின் குறியீடாக விளங்கும்.
  • உணவின் தனித்தன்மையையும், தரத்தையும் துல்லியமாக அளவிட முடியும்.
  • உணவின் தேவையற்ற பிற வாடகைகளை எளிதில் கண்டு கொள்ள முடியும்.
  • விற்பனை சந்தையில், நுகர்வோரிடையே அதன் வரவேற்பை யூகிக்க உதவும்.

எங்கு, எவ்வாறு புலன்/ உணர் மதிப்பிடுதலை மேற்கொள்ளலாம்?

  • அதிக சப்தம் இல்லாத இடத்தில்
  • செயற்கையான வாடைகள் மற்றும் துர்நாற்றம் அற்ற அறைகளில்
  • காற்றோட்டமான அறையில்
  • நன்கு வெளிச்சம் உடைய இடத்தில்
  • எளிதில் சத்தம் செய்யக்கூடிய இடத்தில்
  • சீரான வெப்பம் உள்ள அறையில்
  • புதிய வகை உணவுகளை மதிப்பிட வட்டமேசை சிறந்தது.
  • வல்லுநர் குழு ஒருவரோடு ஒருவர் உரையாடி திசை திரும்பாமல் இருக்க சிறு தடுப்புகளைக்கொண்ட அறை சிறந்தது.

வல்லுநர் குழு எவ்வாறு தேர்வு செய்யப்படுகிறது?

  • உப்பு மற்றும் சர்க்கரை வேறுபட்ட அடர்த்தியில் ருசிக்க பயிற்சியளித்து, அடர்த்தியில் சிறு வேறுபாட்டையும் துல்லியமாக ருசித்து சொல்பவரே சூழலில் இடம் பெறுவர்.
  • தேர்ந்தெடுத்த வல்லுநர் குழுவிற்கு குறிப்பிட்ட உணவை உணர் மதிப்பீடு செய்வதற்கான பயிற்சி அளிக்கப்படும்.
  • மேலும், வல்லுநர் குழுவில் தேர்ச்சி பெற்றவர்கள் உணவின் ருசி, மணம், இலையமைப்பு மற்றும் தோற்றங்களை துல்லியமாகத் தரம் பிரிக்கும் திறமை பெற்றவர்களாய் இருத்தல் வேண்டும்.

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள்| தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015