||| | | | | |
அங்கக வேளாண்மை :: உயிரியக்க ஆற்றல் பண்ணை
tamil  english

உயிராற்றல் வழிமுறைகளைக் கடைப்பிடித்து கத்தரி / தக்காளி பயிரிடும் முறை
1.நடவு வயல் முழுதும் குறைந்தது 60 நாட்களுக்கு முன்பாக பல தான்ய விதைப்பு செய்து 45 நாட்களுக்குப்பிறகு அவற்றை மடக்கி உழவு செய்ய வேண்டும் இதற்கு
1. 30 கி.கி முதல் 40 கி.கி வரை விதைகள் தேவை.
2. விதைகளை CPP +B.D.500 சேர்த்து கலந்து நிழலில் உலர்த்தி விதை நேர்த்தி செய்து கொள்ளவும்.
3. இந்த விதைகளை மேல் நோக்கு நாட்களில் இலைக்கு உண்டான இராசியில் சந்திரன் உள்ளபோது அல்லது பெளர்ணமி நாள் அல்லது சந்திரன் எதிர்சனிக்கு முதல் நாள் விதைக்கவும்.
4. விதைத்த 10 நாட்களுக்குள் முளைவிட்ட விதைகள் 2 இலைகள் வருவதற்கு முன்பாக B.D.501 ஸ்பிரே செய்யவும்.
2.பல தான்ய விதைப்பு செய்த 40 நாட்களுக்குள் நாற்று உற்பத்தி செய்யவும்
1. தேவையான விதை இரகத்தை தேர்வு செய்யவும்.
2. விதைகளை CPP +B.D.500 கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.
3. விதைகளை மேடைப் பாத்திகளில் 3x2 அங்குல இடைவெளியில் ஒவ்வொரு  விதையும் தனித்தனியாக  நடவு செய்யவும். அல்லது பாலிதீன் பைகளில் நடவு செய்யவும். அல்லது நாற்று உற்பத்தி செய்ய உதவும் தட்டுகளில் நடவு செய்யவும்.
இதற்கு மேடைப்பாத்தி பாலிதீன் பைகள் மற்றும் தட்டுகளுக்கு நிரப்பும் மண்ணை 3 பங்கு மண் + 2 பங்கு மட்கிய தொழுஉரம்  + 1 பங்கு பெரிய மணல் இவற்றை கலந்து அதில் விதைகளை நடவு செய்யவும்.
4. விதைகளை மேல்நோக்கு நாட்களில் குறிப்பிட்டு்ளள விதை பழம் நாட்கள் அல்லது பெளர்ணமி நாள் அல்லது சந்திரன் எதிர் சனிக்கு முதல் நாளில் விதைப்பது நல்லது.
3. விதைகள் முளைத்து 2 இலைகள் வருவதற்கு முன்பு அதாவது விதைத்த 7 முதல் 10 நாட்களில் B.D.501 ஸ்பிரே செய்யவும்.
4. நாற்றுகள் 18 முதல் 35 நாட்களுக்குள் நடவுக்கு தயாராகிவிடும்.
5. இந்த இடைப்பட்ட காலத்தில் நடவு வயலை தயார் செய்யவும்.
6. பல தான்ய விதைப்பு செய்திருந்தால் மடக்கி உழவு செய்யவும்.
7. பின்பு மட்கிய கோழி உரக்கழிவுகள் 2 டன்கள் வரை மட்கிய தொழு உரம் 10 டன்கள், சாம்பல் கிடைத்தால் 1 டன் வரை, ஒரு ஏக்கருக்கு இட்டு உழவு செய்யவும்.
8. நன்றாக உழவு செய்த பின்பு CPP +B.D.500 கரைசலை முறைப்படி கலந்து நடவு வயல் முழுவதும் தெளித்துவிடவும்.
9. பின்பு 2 அடி அகலம் மற்றும் 1 அடி உயரம் மற்றும் வசதிப்படும் நீளத்தில் மேடைப்பாத்திகளை அமைக்கவும். அல்லது 3 அடி இடைவெளியில் பார்களை அமைக்கவும்.
10. சொட்டு நீர்பாசனம் செய்வதாக இருந்தால் அதற்குண்டான வசதிகளை செய்யவும். அல்லது கால்வாய் பாசனமாக இருந்தால் அதற்குண்டான வசதிகளை செய்து கொள்ளவும்.
11. நாற்றுகள் நடவுக்கு 2 நாட்களுக்கு முன்பாக வயல் முழுவதும் ஈரமாகும்படி நீர்பாய்ச்சுவது நல்லது.
12. நீர் பாய்ச்சி 2 அல்லது 3 வது நாள் மாலை நேரத்தில் நாற்றுகளை (கீழ் நோக்கு) நாட்களில் விதை, பழம் என்று குறிப்பிட்டுள்ள நாட்கள் அல்லது சந்திரன் எதிர் சனி குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக உள்ள 48 மணி நேரத்தில் நடவு செய்யவும்.
13. பாலிதீன் பைகள் மற்றும் தட்டுகளில் உள்ள நாற்றுகளை தனித்தனியாக மண் உடையாமல் எடுத்து நடவு செய்யவும்.
14. மண் கட்டிகளுக்கு ஏற்ற அளவில் நடவு வயலில் மேடைப் பாத்திகளாக இருந்தால் அதன் நடுவில் 2 அடி இடைவெளியிலும், பார்களாக இருந்தால் அவற்றின் ஒரு பக்கத்தில்  மட்டும் 2 அடி  இடைவெளியில் குழிகளை அமைத்து, அதில் நாற்றை கட்டியுடன் வைத்து மண்ணை நிரப்பி, விரல்களால் நன்றாக அழுத்தி மண்ணை நன்றாக அழுத்தி விடவும்.
15. பின்பு, மண்ணில் உள்ள ஈரத்தின் அளவை பொறுத்து மறுநாள் அல்லது 2 நாட்களுக்குப் பிறகு நீர் பாய்ச்சவும்.
16. நாற்றுகள் நடவு செய்தவுடன் 10 நாட்களுக்குப் பிறகு வரும் மேல் நோக்கு நாட்களில் அல்லது பெளர்ணமி நாள் அல்லது சந்திரன் எதிர் சனி நாளும் அதற்கு முந்தைய நாளும், இதில் ஏதாவது ஒரு நாளில் B.D.501 ஸ்பிரே செய்யவும்.
17. களைகள் முளைத்திருப்பின் மிகவும் லேசாக கொத்தி களைகளை நீக்கவும்.
18. களைகளை நீக்கிய பின்பு 2 முதல் 5 நாட்கள் வரை நீர் தேவை இருக்காது.
19.பின்பு நீர் பாய்ச்சி ஊடு பயிர் செய்ய விரும்புபவர்கள் வெங்காயம், கேழ்வரகு (ராகி), மக்காச்சோளம் போன்ற பயிர் வகைகள்
20. இந்த தருணத்தில் பஞ்சகவ்யம் ஸ்பிரே செய்யலாம்.
21. பூச்சிகள் மற்றும் தண்டு புழு தாக்குதல்கள் இருப்பின் பூச்சி விரட்டி மற்றும் பூச்சி கொல்லி தயாரிப்புகளை தெளித்து கட்டுப்படுத்தவும்.
22. தேவை இருப்பின் அமுதக்கரைசல் அல்லது ஜீவாம்ருதம் தயாரித்து செடிகளைச் சுற்றிலும் 1 அடி தள்ளி தேவையான அளவு ஊற்றவும். இதில் CPP + B.D.500 கலந்தும் ஊற்றலாம்.
23. பூக்கும் தருணத்தில் மீண்டும் ஒரு முறை B.D.501 ஸ்பிரே செய்யவும்.
24. நடவு செய்த 2 மாத முடிவில் அல்லது 3ம் மாதம் CPP + B.D.500 தெளிக்கவும்.
25. பின்பு அடுத்து வரும் 10 நாட்களில் மீண்டும் B.D.501 ஸ்பிரே செய்யவும்.
26. 4ம் மாதத்தில் CPP 2 கிலோ உடன் சேர்த்து 200 லிட்டர் நீரில் கலந்து வடிகட்டி செடிகள் முழுவதும் நனையும்படி ஸ்பிரே செய்யவும்.
27. கரும்புள்ளி நோய், சாம்பல் நோய்  தாக்குதல் தென்பட்டால் சோற்றுக் கற்றாழை + மஞ்சள் தூள் + சுண்ணாம்பு கரைசல்  தயாரித்து செடிகள் முழுதும் நனையும்படி ஸ்பிரே செய்யவும்.
28. பூச்சிகள், புழுக்கள் தாக்குதலுக்கு பவேரியா ப்ராங்னியாரிடி நீரில் கலந்து செடிகளை சுற்றிலும் மாதம் ஒரு முறை ஊற்றி விடுவது அல்லது நீரில் கலந்து ஸ்பிரே செய்வது ஓரளவு எளிய வழி முறையாகும்.
29. தேவையான நீர் பராமரிப்பு மண்ணின் தன்மையைப் பொறுத்து அவசியம்.
30. மேலும் தேவை எனில் ஜீவாம்ருதத்துடன் சாம்பல் மற்றும் கோழி உரம் சேர்த்து 10 நாட்கள் வரை தினமும் கலந்து விட்ட பின்பு மண்ணில் செடிகளை சுற்றிலும் ஊற்றவும்.