அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள் :: நெல்
அரிசி மற்றும் அரிசியினால் உருவாக்கப்படும் பொருட்கள் 
நவீனப்படுத்தப்பட்ட அரிசி ஆலைகளினால் தரம் வாய்ந்த நிறைய பொருட்கள் அவையாவன : உடைந்த அரிசி, உமி, மற்றும் தவிடு.



உடைந்த அரிசி 

உடைந்த அரிசியனது அதிக அளவு உணவுப் பொருட்கள் தொழற்சாலையில் மாவாகவும், குழந்தை உணவுகள் தயாரிக்கவும் அதிலிருந்து எடுக்கப்படும் கஞ்சி பெருமளவில் மருந்து தயாரிப்பிலும்,
ஜவுளித் துறை தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.


அரிசி உமி 

அரிசி உமியானது 38 சதவீதம் செல்லுலோஸ் மற்றும் 32 சதவீதம் லிக்னின் உள்ளடக்கியது.  உமியானது மறுசுழற்சிமுறையில் பயன்படுத்தக்கூடிய எரிபொருளாகவும் உள்ளது.  ஒரு வருடத்தில் உற்பத்தியாக கூடிய 80 மில்லியன் டன் உமியில் 170 மில்லியன் பீப்பாய் எண்ணெய் தயாரிக்கப் பயன்படுகிறது.  அரிசி உமியில் 22 சதவீதம் சாம்பலும், 95 சதவீதம் சிலிக்கா உள்ளது.  அதிக அளவு சிலிக்கா உராய்வு பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  அதிக அளவு உமி இந்தியாவில் எரிபொருளாக கொதிகலன்களிலும், வீட்டுத் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றன. 

அரிசி தவிடு 
அரிசி தவிடானது மிகுந்த மதிப்பு வாய்ந்த துணை பொருளாகும்.  இதில் அதிக அளவு கொழுப்புச் சத்து (15 லிருந்து 20 சதவீதம்) மற்றும் புரதச் சத்து நிறைந்தது.  இதில் வைட்டமின்கள், தாதுப்பொருட்கள் மற்றும் உதவிகரமானவேதிப்பொருட்களை கொண்டது.  இதில் அதிக ஆற்றல் வாய்ந்த  பயன்பாட்டு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது.  இதில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் காரணமாக கோழி மற்றும் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.  அதிக நிலைப்புத் தன்மை வாய்ந்த கொழுப்பு நீக்கப்படாத தவிடானது அதிக புரதச்சத்தை, வைட்டமின் மற்றும் தாதுஉப்புக்களை கொண்டது.  தவிடானது அதிக ஊட்டச்சத்து மிக்க பொருளாக அரிசி ஆலையில் கிடைக்கக் கூடிய பொருளாகும்.  இது பொதுவாக உமியோடு  கலந்து அளிக்கப்படுவதால் ஊட்டச்சத்து குறைக்கப்படுகிறது.  அரிசி தவிடில் 12 சதவீதம் புரதம் மற்றும் 15 சதவீதம் கொழுப்பு நிறைந்தது


அரிசி தவிடு எண்ணெய் 

தவிட்டு எண்ணெய் ஆனது தவிட்டிலிருந்து சில கரைசல் பிரித்தெடுக்கப்படும் எண்ணெய் ஆகும்.  இந்த எண்ணெயில்அதிக சதவீதத்தில் அன்ஸாச்சுரேட்டர், இதில் இயற்கையான ஆன்டி ஆக்ஸிடென்ட் காணப்படுகிறது. 

நிறமற்ற, சுத்திகரிக்கப்பட்ட, மணமற்ற எண்ணெய் உணவு தயாரிப்பிற்கும் ஸாலட் (பழகாய் கலவை) பயன்படுத்தப்படுகிறது.  தவிடில் கரைசலின் மூலம்  எண்ணெய் பிரித்த பிறகு அதிக புரதம் நிறைந்தது.  கொழுப்பு நீக்கப்படதால் நீண்ட நாள் இருக்கும். 

முக்கியத்துவம் 

அரிசி தவிடு எண்ணெய் முனைப்பகுதியிலிருந்தும் உமியின் உட்பகுதியிலிருந்தும் பிரித்தெடுக்கப்படுகிறது.  இதில் அதிக அளவு வைட்டமின் ஈ ஒரைசனால் (ஆன்டி ஆக்சிடென்ட் இதய நோய் வராமல் தடுக்க) பைட்டோஸ்டீரால் (கொழுப்பு உறிஞ்சுதல் குறைவு) உயிர் பாதுகாப்பானாக உள்ளது.  ஆசிய கண்டத்தில் ஏற்ற அதிக வெப்பநிலையில் சமைக்க எண்ணெய் பொரித்தல், வறுத்தல் ஆகியவற்றிற்கு பொருத்தமானதாக உள்ளது.  தவிட்டு எண்ணெயில் பெரும்பாலும் ஒரு மேசை கரண்டிக்கு 7 கிராம் மோனோ யு.எப்.ஏ 3 கிராம் எஸ்.எப் மற்றும் 5 பி.யு.எப்  அரிசி தவிடு எண்ணெயில் வைட்டமின் ‘ஈ’ நிறைந்தது  உடலுக்கு ஏற்றது.  இதில் தனிப்பட்ட மூலப்பொருட்களான ஒரைசனால் (அ) டோக்கோட்ரையனால் மக்களின் கவனத்தை ஈர்த்ததாகும்.  ஆராய்ச்சிகளின் தீங்கு விளைவிக்கக்கூடிய  கொழுப்புச் சத்தை குறைத்து தீங்கு செய்யாத கொழுப்பு குறைக்காமல் இந்த ஆராய்ச்சியில் ஒரைசனால் என்பது முக்கிய பங்கு வகிக்கின்றது.  டோக்கோ டிரையனால், வைட்டமின் ஈ, ஆகியவை கேன்சர் வருவதை தடுக்கும் செயலுக்கு பயன்படுகிறது.  வைட்டமின் ஈ மட்டுமில்லாமல் டோக்கோபிரால் மற்றும் டோக்கோ டிரையனால் ஆகவும் திரவ நிலையில் கலந்துள்ளன. 

பயன்கள் 

அரிசி தவிடு எண்ணெயானது தாவர எண்ணெயாகவும் மற்றும் சமையல் எண்ணெயாகவும் பயன்படுத்தப்படுகிறது.  எண்ணெயின் மணம் மிக்கதாவும், மென்மையான இறகு திறன் கொண்டதாகவும், பரவும் தன்மையுடையதாகும்.  பதப்படுத்தப்படும் உணவு வகைகளில் இயற்கையில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உடையதால் கிராக்கர்ஸ், கொட்டைகள் போன்ற சிற்றுண்டிகளில் மேல் ஏடு போன்று பரவுவதால் பயன்படும் கால அளவு அதிகப்படுகிறது.       

அரிசி பட்டை தீட்டுதல் 

அரிசி பட்டை தீட்டலில் ஊட்டச் சத்து அதிகம் காணப்படுகிறது.  பட்டை தீட்டலில் தவிர மீதமுள்ள பொருட்கள் கால்நடை தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.

கொழுப்பு நீக்கப்பட்ட தவிடு மற்றும் தவிடின் பயன்கள் 

கொழுப்பு நீக்கப்பட்ட தவிடானது வெற்றிகரமாக அடுமனை பொட்கள் தயாரிப்பில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.  ரொட்டி, கேக். பிஸ்கட் தயாரிக்க தவிடு மிக மென்மையாக அரைக்கப்பட்டு மைதா மாவுடன் 20 சதவீதம் கலந்து அடுமனை பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015