அரிசியில் அடங்கியுள்ள மூலக்கூறுகள்
அரிசியல் அடங்கியுள்ள வேதியியல் மூலக்கூறுகளானது அதனுடைய மரபு மற்றும் சுற்றுப்புறச்சூழ்நிலையை சார்ந்தே அமைகின்றது. இந்திய அரிசியில் ஈரப்பதம் 10.9 - 13.8, புரதம் 5.5-9.31, மாவுச்சத்து 73.4-80.8, நார்ச்சத்து 0.2-1.0 மற்றும் தாது உப்புக்கள் 0.8-2.0 சதவீதமாகும். அரிசியில் முளைப்பகுதி, மேல்உறைப்பகுதி அதனுள் அடுக்குப் பகுதிகளில் அரிசியில் உண்ணும் பகுதியை விட சத்துக்களான புரதம், தாது உப்புக்கள், வைட்டமின்கள் அதிகம் காணப்படுகிறது. ஆனால் அரிசியை உடைக்கும் போது உமியில் இந்த சத்துக்கள் வீணாகின்றன.
அரிசியில் மாவுச்சத்தானது 72-75 சதம் ஆகும். அரிசியில் காணப்படும் எளிதான சர்க்கரைகளாவன : குளுக்கோஸ், சுக்ரோஸ் மற்றும் டெக்ஸ்ரின் புரதச்சத்து கோதுமையைவிட குறைந்த அளவே ஆகும். அரிசியில் காணப்படும் அதிக அளவு அர்ஜினைன் புரதம் மற்ற தானியங்களை விட அரிசியில் அதிக அளவு காணப்படுகிறது. இதில் லைபின் மற்றும் திரியோனின் குறைந்த அளவே காணப்படுகிறது. தாது உப்புகளானது அதிகஅளவு அரிசியில் மேலுறை மற்றும் முளைப்பகுதிகளில் உள்ளது. அரிசி தீட்டுதலின் செய்யப்படும் போது கால்சியம் மற்றும் இரும்புச் சத்து இழப்பு ஏற்படுகிறது.
அரிசியானது உணவுகளில் முக்கியமாக பங்கு வகிக்கின்றது. அரிசியில் அடங்கியுள்ள இதரப் பொருட்களிலும் ஊட்டச்சத்துக்களும் மற்றும் மருத்துவ குணங்களும் அரிசிக்கு நிகராக காணப்படுகிறது.
அரிசியில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்கள்
உணவு |
ஆற்றல் கி.
கலோரி |
புரதம் (கி) |
கொழுப்பு (கி) |
மாவு (மி.கி) |
சுண்ணாம்பு (மி.கி) |
இரும்பு (மி.கி) |
கரோட்டின் -மைக்ரோ
கிராம் |
தயமின் (மி.கி) |
ரிபொபி - ளெஷன்
(மி.கி) |
நயசின் (மி.கி) |
அரிசி (புழுங்கல்) கைக்குத்தல் |
349 |
8.5 |
0.6 |
77.4 |
10 |
2.8 |
9 |
0.27 |
0.12 |
4.0 |
அரிசி (புழுங்கல்) (ஆலை) |
349 |
6.4 |
0.4 |
79.0 |
9 |
1.0 |
- |
0.21 |
0.05 |
3.8 |
அரிசி (பச்சை) கைக்குத்தல் |
346 |
7.5 |
1.0 |
76.7 |
10 |
3.2 |
2 |
0.21 |
0.16 |
3.9 |
அரிசி (பச்சை) ஆலை |
345 |
6.8 |
0.5 |
78.2 |
10 |
0.7 |
0 |
0.06 |
0.06 |
1.9 |
|