அறுவடை பின்சார் தொழில் நுட்பம் :: வேளாண் பயிர்கள் :: தானியங்கள் :: நெல்
அரிசி பதப்படுத்துதல்
புழுங்க வைத்தல் 
புழுங்க வைத்தல் என்பது நீரில் வெப்பநிலை சமன்செய்து காயவைத்து பின்பு ஆலையில் அரைத்து எடுப்பதாகும்.  இது பழங்காலம் தொட்டு பின்பற்றும் முறையாகும்.  இம்முறையில் இந்தியாவில் 50 சதம் நெல் பயன்படுத்தப்படுகிறது. 
மூன்று முக்கியப் படிகள்  புழுங்க வைத்தலில் : ஊறவைத்தல், ஆவியில் வேகவைத்தல் மற்றும் உலரவைத்தல்.  இம்மூன்று படிகளும் புழுங்கல் அரிசியின் தரத்தை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
பழங்கால முறை


முன்னேற்ற புழுங்க வைத்தல் முறை (ஊகுவுசுஐ மத்திய உணவு ஆராய்ச்சி நிறுவனம் மைசூர், இந்திய முறை)

புழுங்க வைத்தலினால் ஏற்படும் நன்மைகள்

  • புழுங்க வைப்பதினால் அரிசி தன்மை உறுதியாவதுடன் அரிசி ஆலையில் அரைக்கப்படும்போது உடைவது குறையும்.
  • பூச்சிகள் மற்றும் வண்டுகள் அரிசி கடினதன்மை கொண்டுள்ளதால் கடிக்க கடினமாக உள்ளது புழுங்கல் அரிசி
  • பச்சரிசியை விட புழுங்கல் அரிசியில் கஞ்சியில் வெளியேறும் திடப்பொருட்களின் அளவு குறைவாக இருக்கும்.
  • ஆலையில் அரைக்கப்படும் புழுங்கல் அரிசியில் பச்சரிசியைவிட ‘பி’ வைட்டமின் அதிகம் உள்ளது.
  • புழுங்கல் அரிசியைக் கழுவும்போதும், சமைக்கும் போதும் ‘பி’ வைட்டமின் இழப்பானது பச்சரிசியைவிட குறைவாக இருக்கும்.
  • சமைத்த புழுங்கல் அரிசியானது ஒட்டுதல் தன்மை குறைவாகவும் கஞ்சிபசை இல்லாமலும் இருக்கும்.
  • புழுங்கல் நெல்லில் அரைக்கும்போது வெளியேற்றப்படும் தவிடில் (25-30 சதவீதம்) எண்ணெய் சத்து பச்சரிசியில் (10-12 சதவீதம்) உள்ளதைவிட அதிகம் இருக்கும்.
  • புழுங்கல் அரிசி தவிடானது பச்சரிசி தவிடை விட நீண்ட நாள் நிலைப்பு தன்மையுடன் இருக்கும்.

பாதகங்கள் - புழுங்கல் அரிசியில்

  • பச்சரிசியை விட புழுங்கல் அரிசி நிறம் அடர்த்தியாக காணப்படும்.
  • பழங்கால முறையில் தயாரிக்கப்படும் புழுங்கல் அரிசியில் தேவையில்லாத மணம் இருக்கும்.
  • அரிசி சமைக்கும்போது ஒரே வெப்பநிலை மற்றும் நய அமைப்பு அடைய பச்சரிசியை விட புழுங்கல் அரிசிக்கு நீண்ட நேரம் தேவைப்படுகிறது.
  • பழங்கால முறையில் நீண்ட நேரம் ஊற வைப்பதனால் மைக்கோடாக்ஸின் உண்டாகி உடலுக்கு தீங்கு விளைவிக்கும்
  • நெல் சூடுபடுத்தப்படுவதால் இயற்கையில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் அழிகின்றன.  புழுங்கல் அரிசியில் நெடுநாட்கள்  பாதுகாக்கும்போது எண்ணெய் சிக்கு மணம் ஏற்படுகிறது.
  • புழுங்கல் அரிசியில் (பாலீஷ்) பட்டைத் தீட்டும் போது அதிக சக்தி தேவைப்படுகிறது.
  • புழுங்கல் அரிசியில் பட்டைத் தீட்டும்போது இயந்திரத்தில் அடைப்பு ஏற்படுகிறது. 
  • புழுங்கல் தயாரிப்பின்போது தனியாக முதலீடு தேவைப்படுகிறது.

நெல் அரைவை

     

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015