தோட்டக்கலைப்பயிர்கள் :: மூலிகைப்பயிர்கள்

வில்வம்

மூலிகை பயிர்கள் : வில்வம்
1. சிகிச்சைக்கான வில்வ பழ பானம்
2.வில்வத்தினாலான இனிப்பு வகை
3.வில்வ துண்டு

1. சிகிச்சைக்கான வில்வ பழ பானம்
இந்தியாவில் வில்வம் ஒரு முக்கியமான உள்நாட்டு பழமாக உள்ளது. இது மிகவும் சத்தான மற்றும் சிகிச்சைக்கு பயன்படக்கூடிய பழங்களில் ஒன்றாகும். இது வரலாற்றுக்கு முந்தைய காலங்களிலிருந்தே இந்தியாவில் பயன்பாட்டிலிருந்துவருகிறது.

தேவையான பொருட்கள்
வில்வ பழத்தின் திசுக்கூழ்                  1.0 கிராம்
வெல்லம்                                             880 கிராம்
தண்ணீர்                                              4100 மி.லி
சிட்ரிக் அமிலம்                                   18 கிராம்
பொட்டாசியம் மெட்டாசல்பைடு       2.8 கிராம்

தயாரிக்கும் முறை
முழுமையாக முதிர்ச்சியடைந்த பழுத்த பழுங்களை கழுவி, உடைத்து, விதைகள் மற்றும் சதைபற்றுள்ள பகுதிகளை எடுக்க வேண்டும். இதனுடன் சம அளவு நீர் எடுத்துக் கொள்ள வேண்டும். பிரித்தெடுக்கப்பட்ட கூழை, கையினால் இயங்கும் கூழ் கருவியில் 80  ̊ செல்சியஸில் ஒரு நிமிடம் வைக்க வேண்டும். தேவையான நீர் மற்றும் சிட்ரிக் அமிலத்தை நீரில் கரைத்து மிதமான வெப்பப்படுத்தி வில்வ பழ கூழ், மெல்லிய துணி கொண்டு நன்றாக கலக்க வேண்டும். இந்த பானத்தை 20 நிமிடம் 80  ̊ செல்சியஸில் கொதிக்கும் நீரில் கிருமி நீக்கப்பட்ட பாட்டில்களில் நிரப்ப வேண்டும். இந்த பானம் அறை வெப்பநிலையில் விரைவில் குளிரச் செய்து, உலர்ந்த மற்றும் குளிர்ந்த சூழலில் சேமிக்க வேண்டும்.

2. வில்வத்தினால் செய்த இனிப்பு வகை **

வில்வ பழ கூழ் ( 500 கிராம்) + தண்ணீர் ( 100 மி.லி)

வேகவைக்கவும் ( 20 நிமிடம்)

சர்க்கரை சேர்க்கவும் ( 700 கிராம்)

அடி கனமான பாத்திரத்தில் நெய் (50 கிராம்) ஊற்றவும்

வில்வ பழ கூழ் சேர்க்கவும்

சோளமாவு 25 கிராம், 200 கிராம் பால் பவுடர், 2.5 கிராம் சிட்ரிக் ஆசிட் இவற்றை தண்ணீரில்
கரைத்து பழகூழுடன் சேர்க்கவும்

வேக வைக்கவும் ( 20 நிமிடம்)

சோதனை செய்யவும் ( மெல்லிய உருண்டை நிலை)

நெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றவும்

வடிவமைக்கவும் ( சிறு உருண்டைகளாக) வில்வ இனிப்பு

 

3. தானிய துண்டுகள் தயாரித்தல் **


வில்வ பழ கூழ் ( 500 கிராம்) + தண்ணீர் ( 100 மி.லி)



வேகவைக்கவும் ( 20 நிமிடம்)

சர்க்கரை சேர்க்கவும் ( 700 கிராம்)

அடி கனமான பாத்திரத்தில் நெய் (50 கிராம்) ஊற்றவும்

வில்வ பழ கூழ் சேர்க்கவும்

சோளமாவு 25 கிராம், 200 கிராம் பால் பவுடர், 2.5 கிராம் சிட்ரிக் ஆசிட் இவற்றை தண்ணீரில்

கரைத்து பழகூழுடன் சேர்க்கவும்

வேக வைக்கவும் ( 20 நிமிடம்)

சோதனை செய்யவும் ( மெல்லிய உருண்டை நிலை)

நெய் தடவப்பட்ட தட்டில் ஊற்றவும்

வடிவமைக்கவும் ( சிறு உருண்டைகளாக)
வில்வ இனிப்பு
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015