தோட்டக்கலைப்பயிர்கள் :: மூலிகைப்பயிர்கள்

மருத்துவச் செடிகள்-மூலிகைகள் - சர்க்கரை கொள்ளிக் கீரை

  • சாக்கரைக் கொள்ளி  டீ
  • சர்க்கரைக் கொள்ளி பயன்படுத்தி திராட்சைப் பழரசம் (Squash)
  • குலோப்ஜாமூன் சர்க்கரைக் கொள்ளி பாகில்
  • சாக்கரைக் கொள்ளியில் கேசரி
  • சர்க்கரைக் கொள்ளியில் கேக்

ஸ்டீவியா

சர்க்கரைக் கொள்ளி டீ

பால் + தண்ணீர்

கொதிக்க வைத்தல்
டீத்தூள் + சர்க்கரைக் கொள்ளி பொடி சேர்த்தல்

கொதிக்க வைத்தல் (2 நிமிடம்)

வடிகட்டுதல்

பரிமாறல் 
 
திராட்சை பழரசப்பானம் (squash) சர்க்கரைக் கொள்ளி சேர்த்து
நன்கு பழுத்த திராட்சைப் பழங்களை தேர்வு செய்யவும்

கழுவுதல் மற்றும் சுத்தம் செய்தல்,வடிகட்டுதல்

சாக்கரைக்கொள்ளி பாகு

காய்ச்சுதல் (சர்க்கரைக்கொள்ளி + தண்ணீர் + சிட்ரிக் அமிலம்)

2 நிமிடம் கொதிக்க வைத்து மஸ்லின் துணியால் வடிகட்டவும்

சர்க்கரைப்பாகுடன் + பழரசத்தை சேர்க்கவும்

மணமூட்டி மற்றம் பாதுகாப்பான் சேர்க்கவும் 
 
சுத்திகரிக்கப்பட்ட பாட்டில்களில் 1/4 ” இடைவெளி விட்டு நிரப்பி மூடிவிடவும்.

சர்க்கரைக் கொள்ளியில் தயார் செய்த திராட்சை உடனடி பருகும் பானம்

தொழில்நுட்ப விபரம்

திராட்சை தேர்வு செய்தல்

சுத்தம் செய்தல் மற்றும் கழுவுதல்

பழரசம் பிழியும் கருவியில் பிழிதல்

வடிகட்டுதல்- நீரில் சர்க்கரைக்கொள்ளி + சிட்ரிக் அமிலம் சேர்த்தல் (0.3 சதவிகிதம்)

சூடு செய்தல் 80 டிகிரி செ வெப்பநிலையில் 5 நிமிடம் 

மணமூட்டி சேர்த்தல்

அரை இடைவெளி  விட்டு சுத்திகரிக்கப்பட்ட பாட்டிலில் நிரப்புதல்

மூடிபோடுதல்

கொதிநீரில் 30 நிமிடம் வைத்து சூடு செய்தல் (Pasteurization)

ஆறவைத்தல்

குலோப்ஜாமூன் சர்க்கரைக்கொள்ளி பாகில் தயார் செய்தல்

குலோப்ஜாமூன் கலவை

வனஸ்பதி, பால் சேர்த்து மாவு பிசைதல் 

சிறு உருண்டைகளாக்குதல்

180 டிகிரி செ வெப்பநிலையில் (5-7 நிமிடங்களில் பொறித்தல்)

சர்க்கரைப்பாகு தயார் செய்தல் (சர்க்கரைக் கொல்லி + தண்ணீர்)

பொறித்த உருண்டைகளை சூடான பாகில் 1 மணி நேரம் ஊறவிடவும்.

ஆறவைக்கவும்

சர்க்கரைக் கொள்ளி பயன்படுத்தி கேசரி தயார் செய்தல்

நெய் பாத்திரத்தில் ஊற்றி உருகச் செய்யவும்

ரவையை பொன்னிறமாக வறுக்கவும்.

தண்ணீருடன் சர்க்கரைக்கொள்ளி சேர்த்து கொதிக்க வைக்கவும்.

ரவை வேகும் வரை சூடு செய்யவும்

ஏலக்காய், முந்திரி, திராட்சை மற்றும் கலர் சேர்க்கவும்.

சர்க்கரைக் கொள்ளி சேர்த்து இனிப்பு பிஸ்கட்

சர்க்கரைக் கொள்ளி பொடியுடன் வெண்ணெய் அல்லது வனஸ்பதி சேர்த்து கிரீம் செய்யவும்

மைதாவுடன் பேக்கிங்பவுடர் சேர்த்து இருமுறை சலிக்கவும்.

அனைத்துப் பொருட்களையும் ஒன்றாகக் கலக்கவும்.

தண்ணீர் மற்றும் எஸன்ஸ் சேர்த்து மாவை பிசையவும்.

மாவை தட்டையாக உருட்டவும் (0.3 செ.மீ தடிமன்)

பிஸ்கட் நறுக்கும் உபகரணம் கொண்டு மாவை நறுக்கவும்.

வெண்ணெய் தடவிய தட்டுக்களில் அடுக்கி அடுமனை அடுப்பில் 160 டிகிரி செ வெப்பநிலையில் 25-30
நிமிடங்கள் வைக்கவும்.

ஆறவைத்து பாலித்தீன் பைகளில் அடைக்கவும்.

சர்க்கரைக் கொள்ளி பயன்படுத்தி ரொட்டி செய்தல்

மைதா மற்றும் பேக்கிங்பவுடர் சேர்த்து இரண்டு முறை சலிக்கவும்

சர்க்கரைக்கொள்ளி மற்றும் வெண்ணெய் சேர்த்து கீரிம் செய்தல்

முட்டையை எஸன்ஸ் சேர்த்து அடித்துக் கொள்ளவும்.

அடித்த முட்டையுடன் கீரீம் சேர்க்கவும்.

இதனுடன் மைதா சேர்க்கவும்

தேவையான அளவு பால் சேர்க்கவும்

அடுமனையில் வெண்ணெய் தடவிய தட்டுக்களில் 120 டிகிரி செ வெப்பிநலையில் 25-30 நிமிடம் வைக்கவும்

ஆறவைக்கவும்

தொழில்நுட்ப விபரம்

  • அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை.
  • மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், மதுரை.
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015