தோட்டக்கலைப்பயிர்கள் :: கோகோ
சாக்லேட் வகைகள்

சாக்லேட்டின் முக்கிய வகைகள் – வெள்ளை சாக்லேட், பால் சாக்லேட், மிதமான இனிப்பு சாக்லேட், கசப்பு தன்மையுடைய சாக்லேட் மற்றும் இனிப்பில்லாத சாக்லேட் ஆகும். இவை அதிக அளவில் விளையக்கூடிய விலை குறைந்த கொக்கோ அல்லது இவை இரண்டையும் கலந்து செய்யப்படுகிறது. கொக்கோ கலவை, அவை பயிரிடப்பட்ட இடம், சிகிச்சை முறை, வறுக்கும் முறை அவற்றில் சேர்க்கப்படும் சேர்ப்பான்களைக் கொண்டு சாக்லேட்டின் சுவை மற்றும் விலை மாறுபடும்.

வெள்ளை சாக்லேட்

சாக்லேட், கொக்கோ வெண்ணெய், சர்க்கரை, பால்பொருள், வென்னிலா மற்றும் வேறு சில நறுமண /சுவையூட்டிகளைச் சேர்த்து தயாரிக்கப்படுகிறது. கொக்கோ விதைகள், கொழுப்பில்லாத பொருட்கள் ஏதும் சேர்க்கப்படாததால் இவற்றின் நிறம் பழுப்பு வெள்ளை நிறத்தில் உள்ளது. இதற்கு மிதமான நறுமணம் மற்றும் சுவை இருப்பதால் சாக்லேட் மூலம் பன்னா, கோட்டா மற்றும் பல இனிப்பு பதார்த்தங்களை செய்ய உபயோகப்படுத்தப்படுகின்றது.

பால் கலந்த சாக்லேட்

இனிப்பு சுவையுடன் உள்ள சாக்லேட்10 – 20% கொக்கோ திடப்பொருள் மற்றும் மேல் பால் திடப்பொருட்களைக் கொண்டதாகும். குக்கீஸ் தவிர, வேறு அடுமனைப் பொருட்களுக்கு இது உபயோகப்படுத்தப்படாது.

அடர் நிற சாக்லேட்

இனிப்புச்சுவை கொண்ட இந்த வகை சாக்லேட் அதிக அளவிலான கொக்கோ திடங்களைக் கொண்டுள்ளது. இது பால் சேர்க்காமல் அல்லது சிறிய அளவில் 12% பால் திடப்பொருளுக்கு குறைவாக சேர்த்து தயாரிக்கப்படும்.

இனிப்பு அடர் நிற சாக்லேட்

மிதமான இனிப்பு சாக்லேட் போன்று ஒத்து இருக்கும் இந்த சாக்லேட் 35 -45%. கொக்கோ திடப்பொருள் கொண்டிருக்கும்.

மிதமான அடர் நிற சாக்லேட்

இந்த வகை சாக்லேட் அடுமனைப்பொருட்கள் தயாரிப்பில் உபயோகப்படுத்தப் படுகின்றது. இவை பரவலாக உணவுப்பண்டங்கள் விற்பனைக்கடைகளில் கிடைக்கும். இவை கேக், குக்கீஸ், பிரவுனீஸ் போன்றவை தயாரிப்பில் உபயோகப்படுத்தப்படும். இவை இனிப்பு அடர் நிற சாக்லேட்டுக்கு பதிலாக உபயோகப் படுத்தப்படும். நல்ல நறுமணம் கொண்ட இனிப்பு சாக்லேட்டான இவற்றில் 40 -62% கொக்கோ திடப்பொருட்கள் உள்ளன.

கசப்பு- இனிப்பு சாக்லேட்

இந்த வகை சாக்லேட்டில் குறைந்தது 35% கொக்கோ திடப்பொருட்கள் இருக்க வேண்டும். நல்ல தரமான கசப்பு. இனிப்பு சாக்லேட்டில் 60 -85% கொக்கோ திடப்பொருள் அடங்கி இருக்கும். இந்த வகை சாக்லேட்டில் இனிப்பு குறைத்து கொக்கோவின் அளவு அதிகமாகும் போது அவற்றின் சுவையும், தரமும் மேம்படுகின்றது. இது அடுமனைப்பொருட்கள் தயாரிப்பிலும், சமையலுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது. ஐரோப்பிய கசப்பு, இனிப்பு சாக்லேட்டில் மற்றவற்றை விட கொக்கோ அதிகமாக இருக்கும். அதனால் கசப்பு சுவை அதிகமாகவும் இருக்கும்.

இனிப்பில்லாத சாக்லேட்

இந்த வகை சாக்லேட் அடுமனைப்பொருட்கள் செய்வதற்கு உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் 100% கொக்கோ திடப்பொருள் உள்ளது. அவற்றில் 50% கொக்கோ வெண்ணெய்யாகும்.

ஆதாரம்:
http://www.cacaoweb.net/chocolate.html
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015