டீ
மலைத்தோட்டப்பயிர்: டீ
டீ என்பது பானமாக தயாரிக்க கொதிநீரில் காய வைத்த டீ இலைகளை போட்டு தயார் செய்யப்படுகிறது. இதில் அதன் தரம் மாறுபட நிறைய காரணிகளில் மண்ணின் அமைப்பு, தட்பவெப்ப நிலை, பதப்படுத்தும் முறைகள் முதவியன.
டீ இலையில் நிறைந்துள்ள பொருட்கள்:
பாலிபீனால் |
- |
22.2% |
புரதம் |
- |
17.2% |
காபின் |
- |
4.3% |
பண்படாத நார்ச்சத்து |
- |
27% |
ஸ்டார்ச் |
- |
0.5% |
சாம்பல் |
- |
5.6% |
குறையும் சர்க்கரை |
- |
3.5% |
பெக்டின் |
- |
6.5% |
ஈதர் பிரித்தெடுத்தல் |
- |
2.0% |
டீ வகைகள்:
கருப்பு டீ:
நிறைய பதப்படுத்தும் படிகள் இந்த வகை டீ தயாரித்தலில் காணப்படுகிறது. சுருங்க செய்தல், உருளைகளில் உருட்டுதல், நொதிக்க வைத்தல், உலரவைப்பதன் மூலம் பச்சை டீ தயாரிக்கப்படுகிறது. ஆவியில் வேகவைப்பதனால் நிறம் மாறுவது குறைகிறது. எனவே இந்த டீ பார்ப்பதற்கு பச்சை நிறமாகவே காணப்படுகிறது.
ஓலாங் டீ:
ஓலாங் டீ பாதி கொதிக்க வைக்கப்பட்டது. இந்த கொதிக்க வைக்கப்படும் நேரத்தில் இதன் இலைகளில் சிறிது நிறம் மாறுகிறது. இவை பாதி மட்டும் கருமை நிறம் கொண்டது. இந்த பானமானது பச்சை மற்றும் கருப்பு டீக்கு இடைப்பட்ட நிலைகளை கொண்டது.
டீ பானத்தின் குணநலன்கள்:
நல்ல தரம் வாய்ந்த டீ பானம் தூய்மையாகவும் பளிச்சென இருக்கும். மணம் நிறைந்த ஒரு கப் டீ சுறுசுறுப்பையும் துல்லியமான நறுமணம் கொண்டது. டீயின் திடத்தன்மை பொறுத்து அது மிதமானது (அ) திடமானது. பச்சை டீ பழுப்பு வைக்கோல் நிறமாகும். கருப்பு டீ ஆழ்ந்த அம்பர் (பிசின்) நிறம் கொண்டது. சிறிது துவர்ப்பு தன்மை கொண்டது. டீ பச்சை டீ பானம் கருப்பு டீ பானத்தை விட துவர்ப்பு தன்மை அதிகம் கொண்டது ஆகும்.
பதப்படுத்துதல்:
பச்சை இலைகளை ஒயர் வலைகளில் விரித்து பெரிய காற்றாடிகள் மூலமாக இலையின் ஈரத்தன்மை குறைக்கப் படுகிறது. இலைகள் ஒரே மாதிரியாக பரப்புவதன் மூலம் ஒரே மாதிரி இலைகள் அனைத்தும் உலர்வு அடைகிறது. இலைகள் கைகளினால் பரப்ப செய்து ஒரே இடத்தில் கும்மலாக இல்லாமல் காற்று எல்லா பக்கங்களிலும் பரவ செய்து ஆடு ஒரே இடத்தில் ஏற விடாமல் அதன் ஈரப்பதத்தை 70% குறைக்கப்படுகிறது.
சரியான உலர்த்துதல் காற்று மற்றும் வெப்பநிலையும் சமபடுத்தி செலத்த வேண்டும். இலை ஈரமாக இருக்கும்போது சிறிது நேரம் சூடான காற்றும் சேர்த்து உலர்த்தும் போது விரைவில் ஈரப்பதம் குறைக்கப்படுகிறது.
இலை உலர்த்தி சுருங்கச் செய்த பிறகு பெரிய உருளைகளில் உருட்டப்பட்டு இலைகளின் செல்சுவர்கள் உடைக்கப்பட்டு ஆக்ஸ்ஜனுடன் விளைபுரிந்து ஆக்ஸிஜனேற்றம் அடைகிறது. சலிப்பான்கள் மூலம் அதன் அளவிற்கு ஏற்ப பிரித்தெடுக்கப்படுகிறது. சிறிய இலைகள் உருளைகளில் அனுப்பப்படும் போது முதல் தடவையில் கீழ்நோக்கி சென்று அடுத்த நிலை அடைகிறது. பெரிய துகல்கள் திரும்பவும் உருட்ட செய்யபட்டு அனுப்பப்படுகிறது.
பச்சை டீ தயாரித்தலில் நேரடியாக உலர்த்த அணுப்பபடுகிறது. கருப்பு மற்றும் ஒலாங் டீ ஒரே மாதிரியாக பரப்பி குறிப்பிட்ட வெப்பநிலையில் நொதிக்க வைக்கப்படுகிறது. பழங்கால முறையில் ‘புளிக்க வைத்தல்’ ஆகும். இதில் ஆக்ஸிஜனேற்றம் அடைந்து நொதிகள் ஆக்ஸிஜனுடன் வினைபுரிகிறது. குளிர்ச்சிதரக் கூடிய அறை மேற்புறம் அமைப்பதன் மூலம் குறிப்பிட்ட வெப்பநிலை பராமரிக்கப்படுகிறது.
இதில் ஏற்படும் வேதிவினைகள் இலையின் தரத்தை பாதிக்கின்றன. தரமானது நிர்ணயிப்பது அதன் நறுமணம் மற்றும் சுறுசுறுப்புத்தன்மை.
கொதிக்க வைத்தலே, சரியான முறையில் பாரமரிப்பதன் மூலமே நல்ல டீ பெற முடியும். டீ இலைகள் கடத்துவான் வார்கன் மூலமாக உலரித்துவான் அனுப்பப்படுகிறது. குறிப்பிட்ட வெப்பநிலையில் 24 நிமிடம் (அ) இன்னும் சிறிது நேரம் வைத்து எடுக்கப்படுகிறது. உலரவைத்த பிறகு டீ ஆறவைத்து தரம் பிரிக்கப்படுகிறது. டீ இலைகளின் அளவை பொறுத்து பிரிக்கப்படுகிறது.
பொருட்கள்:
தென்னிந்தியாவில் கருப்பு டீ தயாரிக்க இரண்டு அல்லது மூன்று இலைகள் மற்றும் மொட்டு கொண்ட இலைகள் பிரித்தெடுக்கப்படுகிறது. இவை இலைகள் கொண்டு தயாரிக்கப்படும் டீ தூள்கள் தரம் நன்றாக இருக்கும்.
தென்னிந்தியா டீ தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும் அளவுகள்
2-3 இலைகள் கொண்டவை - 85%
முளைகள் - 5%
பெரிய இலைகள் - 10%
10% மேல் பெரிய மொரமொரப்பான இலைகள் டீ தரம் பாதிக்கப்படுகிறது.
- வேதிப்பொருட்கள் அளவு பாதிப்படைகிறது.
- உலர வைத்தல் நேரம் அதிகமாகிறது. ஒரே மாதிரி உலர்வதும் குறைகிறது
- முழுமையாக மென்மையாக பண்படாத இலைகள் செல் உடைதலும் மாறுபட்டு நொதிப்பதும் குறைகிறது
உலரவைத்தல் (இயற்பியல் / வேதியியல்):
இயற்பியல் முறை உலரவைத்தலில் பச்சை இலைகளானது தடிமானதை உருளைகளில் உருள செய்து எலாஸ்டிக் செய்யப்படுகிறது. இயற்பியல் மாற்றங்களுடன் உயிர் வேதியியல் மாற்றங்களும் நடைபெற்று சிறந்த தரம் பெறசெய்.
- பாலிபீனால் ஆக்ஸிடேஸ் செயல்பாடு அதிகரித்து நொதி செயல்பாடு அதிகரிக்கின்றது
- புரதங்கள் ஹைட்ரஜன் நீக்கம் செய்யப்பட்டு அமினோ அமிலங்களாக மாறி நறுமணத்தை டீக்கு தருகிறது.
- கருப்பு நிற டீயின் தரத்தை காபின் அளவு கட்டுப்படுத்துகிறது
- ஆர்கானிக் அமிலத்தின் அளவும் டீயின் நறுமணத்தை பங்களிக்கிறது
தரநிர்ணய படிகள் உலரவைத்தலில்:
- 3டிகிரி செ வெப்பநிலையில் வெளியேறும் காற்றானது அனுப்பப்பட்டு உலர்த்தப்படுகிறது
- இதற்கு கீழாக (3டிகிரி செ வெப்பநிலைக்கு) சென்றால் சூடான காற்று அனுப்பப்பட்டு வெப்ப நிலை சமன் படுத்தப் படுகிறது. வெப்பநிலை 35டிகிரி செ கீழாக வெப்ப காற்று அனுப்ப வேண்டும்
- ஒரே மாதிரியாக உலர வைக்க பச்சை இலையானது 2-3 கிலோ / சதுர அடிக்கு போட்டு உலர வைக்கப்படுகிறது
- காற்றோட்டமான அலமாரிகளாக இருந்தால் நிறைய காற்று சென்று வர வசதியாக இருக்கும்
- இந்த மாதிரியான தனிப்பட்ட தரம் கொண்ட காற்றுகள் மூலமாக உலரவைக்கும் போது தரம் நன்றாக இருக்கிறது
- மறுசுழற்ச்சி முறையில் உலரவைக்கும்போது உலரவைத்தலிலி் கையால் இலைகளை தொட்டு பயன்படுத்துவது குறைகிறது
- உலரவைத்தல் பிலனம் சேம்பர் ஒரே மாதிரியான அழுத்தம் கொடுக்க உதவுகிறது
உருளைகளில் உருட்டுதல்:
உருட்டுதலில் முதல்படி இலைகளை கசக்கி சிறு துகள்களாக மாற்றப்படுகிறது இதில் டீ இலைகளிலிருந்து வெளிவரும் ரசம் மெல்லிய இழைப்புமங்களாக இலைகளின் மேல் பரவுதல் வேதியியல் மாற்றம் தூண்டப்படுகிறது.
உருட்டுதலில் தரநிர்ணயம் படிகள்:
பச்சை இலை களப்பான்கள் மூலம் சலிப்பதால் இயந்திரங்கள் நின்று போகாமல் தடுக்கப்படுகிறது.இலை துருவல் வான்கள் பயன்படுத்துவதன் மூலம் அதிக வெப்பநிலை இலைசுருங்கி செல்லாமல் சுழற்றுவான்கள் சுழற்றப்படுகிறது.பந்து உடைப்பான்கள் மூலம் குளிர்ச்சியடைய வைக்கப்பட்டு CTC செலுத்தப்படுகிறது. வெப்பநிலை 35டிகிரி செ வெப்பநிலைக்கு மேல் செல்லக்கூடாது. இது நொதி செயல்பாடு குறையவைக்கிறது.
CTC இயந்திரம் cut tear curl machine:
தரம் சிறிது கூட குறையாமல் இருக்க கீழ்கண்ட காரணிகள் தினசரி பார்வையிட வேண்டும்.
- இரண்டு மணிநேரத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு முறை நறுக்கும் போது வெப்பநிலை கண்காணிக்க வேண்டம்
- இலைபான் அளவு மற்றும் நிலைமாதிரிகளை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை பார்க்க வேண்டும்
- ஈரப்பதத்தின் அளவு துருவியதிற்கு பிறகு 70-72% 5 வது நறுக்குதலுக்கு பிறகு 60%
- காந்தங்கள் கடத்துவான்களின் பொருத்தப்பட்டுள்ளதா என சரிபார்க்க வேண்டும்
- CTC இயந்திரத்தை தினசரி சுத்தப்படுத்தி பயன் படுத்த வேண்டும்
IV. நொதிக்க வைத்தல்:
நொதிக்க வைத்தல் பல வித இரசாயன மாற்றங்களை தருகிறது. இது ஒரு ஆக்சிஜனேற்ற வினைபுரிதலில் இலைகள் உருளைகளில் உருட்டப்படும் போது அதன் பச்சை நிறத்தை இழந்து தாமிர நிறத்தை அடைகிறது. இதன் விளைவாக டீயானது நல்ல நறுமணத்தை பெறச் செய்கிறது.நொதிக்க வைத்தலில் தவறான வினைகள் நடக்காமல் தடுக்க:
முதல் நிலை நொதித்தல் நடைபெறும் போது காற்று ஊடுருவல் பெறச் செய்வது முக்கியமானது.
காற்றானது புத்துணர்வாகும், குளிர்ச்சியாகவும் தகுந்த அளவு ஈரப்பதம் கொண்டதாகவும் இருக்க வேண்டும்
நொதித்தல் முடிந்த பிறகு பந்து உடைப்பான்கள் முக்கியம்
பாக்டீரியா தொற்றுகளை தவிர்க்க நொதிக்க உபயோகிக்கும் கலனை சுடுநீரில் அல்லது ஆவியில் சுத்தம் செய்ய வேண்டும்.
V. உலரவைத்தல்:
உலரவைத்தலில் நொதித்தல் தடைசெய்யப்பட்டு ஈரப்பதமானது 55-60% லிருந்து 2 லிருந்து 3% குறைக்கப்படுகிறது.
உலரவைத்தலில் தரம் மதிப்பு கூட்ட சில துளிகள்:
- உள் மற்றும் வெளியேறும் வெப்பநிலைகள் சரியான அளவில் இருந்தால் தான் ஒரேமாதிரியாக உலரும்
- சரியான அளவு உலர்த்துவான்களில் நிரப்புவதன் மூலம் ஒரே மாதிரியாக உலர்த்த முடியம். அதிக அளவு நிரப்பும் போது அழுத்தத்தின் காரணமாக ஒரேமாதிரி உலராது
- உலர வைப்பதில் உலரும் நேரம் மற்றும் வெப்பநிலை மிக முக்கியமானது
- அதிகநேரம் உலரும் போது - மணத்தின் தரம் குறைகிறது
- உலரும் நேரம் குறையும் போது - திடத்தன்மை குறைகிறது
- அதிக வெப்பநிலை - கசப்பு சுவை அடைகிறது
- ECP உலர்த்துவானில் போதிய உள் செலுத்தும் வெப்பநிலை CTC பதப்படுத்துதலில் 100 +/- 5டிகிரி செ வெளியேறும் வெப்பநிலை 55 டிகிரி
- FBD உலர்த்துவான் உட்புரம் வெப்ப நிலை 120-125 டிகிரி செ வெப்பநிலை வெளியேறும் வெப்பநிலை 60-65 டிகிரி செ வெப்பநிலை ஆகும்
- உலர்த்துவானின் வாய் பகுதியில் காந்தம் பொருத்துவதன் மூலம் இரும்பு பொருட்கள் இருந்தால் நீக்கப்படுகிறது
VI. பிரித்தல் மற்றும் தரம் நிர்ணயித்தல்:
- பிரித்தலில் நார்பகுதி நீக்கப்பட்டு டீ துகள்களின் வடிவம் மற்றும் அளவுகளை பொறுத்து தரம் வாரியாக பிரிக்கப்படுகிறது
- விரித்தலில் அதன் தோற்றம் மற்றும் டீ தரம் முடிவுசெய்யப்படுகிறது
- தகடுகள் போன்ற சொரசொரப்பான இலைகள் முதல்தரமாக தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது
- சில்வர் வலைகள் பிரித்தலுக்கு உதவுகிறது
- வலைகள் இறுக்கமாக இருக்க வேண்டும். தளர்வான வலைகளில் தரம் சரியாக பிரிவதில்லை
VII. சேமித்தல் மற்றும் பைகளில் அடைத்தல்:
கருப்பு டீ மித நுண்ணிய பொருட்களை கொண்டது. இது வெளிப்புறத்திலுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தன்மை கொண்டது. நன்றாக பைகளில் அடைக்காத நிலையில்
- பைகளில் அடைக்கும் போது 3% மட்டுமே ஈரப்பதம் இருக்க வேண்டும். 6%மேல் போகும் போது அதன் தரம் ழுமுவதுமாக கெடுகிறது
- டீ திறந்த நிலையில் வைக்க கூடாது
- பெரிய சேமிப்பு கொள்கலள்களை பதப்படுத்துதல் முடிந்த நிலை உபயோகிக்கவேண்டும்
- டீ ஆறவைத்த பிறகே கொள்கலள்களில் இட்டு சேமிக்க வேண்டும்
- டீ காந்த கம்பிகள் வழியாக செலுத்தி இரும்பு துகள்கள் நீக்கப்படுகிறது பைகளில் அடைக்கும்முன்
மூலிகை டீ தயாரிப்பு:
மூலிகைகள் தேர்ந்தெடுத்தல்
புதிய அல்லது உலரவைத்த வெவ்வேறு வடிவங்களில் மூலிகைகள் (இரழிகள், தண்டுகள், இலைகள், முதலியானது)
மூலிகைகள் தேர்ந்தெடுப்பது 1,2,3,5 மற்றும் 7%
500 மி.லி தண்ணீர் சேர்த்து 20 நிமிடங்கள் குறைந்த தீயில் வேகவைத்தல்
டீ தூள் (3லி) 300மி.லி தண்ணீரில் 10 நிமிடங்கள் கொதிக்க
டீ தண்ணீர் + மூலிகை தண்ணீர் 4:1 விகிதத்தில் கலக்கவும
மூலிகை டீ
தொழில் நுட்பங்கள் கிடைக்குமிடம்:
UPASA (The limited planters Association KVK, coonoor of southern India) HSS & RI, Madurai. |