வேர்கள் மற்றும் கிழங்குகள்
பீட்ரூட்
பீட்ரூட்டில் உடனடி பானம் தயாரிக்கும் முறை
பீட்ரூட்டில் உடனடி பானம்


பீட்ரூட்டைத் தேர்ந்தெடுக்கவும்

கழுவி, வெட்ட வேண்டும்

கூழை 5 நிமிடங்கள் மின் அம்மியில் அரைக்கவும்

மஸ்லின் துணியில் வடிகட்டவும்
|
|
கனிந்த திராட்சையைத்
தேர்ந்தெடுக்கவும்

கழுவுதல்

கையில் கூழாக கரைத்துக் கொள்ளவும்

மஸ்லின் துணியில் வடிகட்டவும் |


கலக்குதல் (பீட்ரூட் சாறு : திராட்சை சாறு – 100, 90: 10 மற்றும் 80 : 20)

சர்க்கரையை சேர்க்கவும் (140 பிரிக்ஸ்) மற்றும் சிட்ரிக் அமிலம் (0.25 %)

கலவையை 80 0 செல்சியஸிற்கு சூடுபடுத்தவும்

கிருமி நீக்கிய புட்டியில் அடைக்கவும் (தலை இடைவெளி ½ ” விடவும்)

தக்கை முத்திரையிடுதல்

நுண்ணூட்ட வளர்ச்சித் தடையை நீக்க தண்ணீரில் கொதிக்க வைக்கவும் (30 நிமிடங்கள்)

குளிர வைக்கவும்

குறியிடுதல்

சேமித்து வைத்தல் (அறை மற்றும் குளிர்பதன வெப்ப நிலையில் வைத்து பாதுகாக்கவும்)
பீட்ருட் இனிப்பு ஊறுகாய் தயாரிக்கும் முறை
பீட்ரூட்டைத் தேர்வு செய்யவும்

கழுவுதல் மற்றும் தோல் உறித்தல்

துறுவுதல்

நறுமணப் பொருட்களை எண்ணெய்யில் வறுத்துப் பொடியாக்கவும்

பக்குவப்படுத்துதல்

பொடியாக்கிய நறுமணப் பொருட்களை சேர்க்கவும்

துருவிய பீட்ரூட்டையும் சர்க்கரையையும் சேர்க்கவும்

15 நிமிடங்கள் சமைக்கவும்

விநிகர் மற்றும் கே.எம்.எஸ் – சை சேர்க்கவும்

5 நிமிடங்கள் சமைக்கவும்

குளிர வைக்கவும்

மூட்டைகட்டுதல்

சேமித்தல் (அறை வெப்பநிலையில்)
பீட்ரூட் ஹாட் ஊறுகாய் தயாரிக்கும் முறை
பீட்ரூட்டைத் தேர்வு செய்யவும்

கழுவுதல் மற்றும் தோல் உறித்தல்

துறுவுதல்

நறுமணப் பொருட்களை எண்ணெய்யில் வறுத்துப் பொடியாக்கவும்

பக்குவப்படுத்துதல்

பொடியாக்கிய நறுமணப் பொருட்களை சேர்க்கவும்

துருவிய பீட்ரூட்டையும் சர்க்கரையையும் சேர்க்கவும்

15 நிமிடங்கள் சமைக்கவும்

விநிகர் மற்றும் கே.எம்.எஸ் – சை சேர்க்கவும்

5 நிமிடங்கள் சமைக்கவும்

குளிர வைக்கவும்

மூட்டைகட்டுதல்

சேமித்தல் (அறை வெப்பநிலையில்)
4. மரவள்ளிக் கிழங்கு:
கொதிக்க வைக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கில் ரவை பதப்படுத்துதல் அட்டவனை:
மரவள்ளிக் கிழங்கு

சுத்தப்படுத்துதல்

வெட்டுதல் (10 செ.மீ துண்டுகள்)

நிறத்தை வெளுக்கச் செய்வது (3 நிமிடம், 60 0 செ)

குளிரவைத்தல்

செங்குத்தாக வைத்தல் (24 மணி நேரம்)

உட்செலுத்தியை சேர்த்தல்

தெளிய வைத்து வடித்தல்

உலர வைத்தல் (80 0 செ , 8 மணி நேரம்)

அரைக்க வேண்டும்

சல்லடையில் சலிக்கவும்

மூட்டை கட்டுதல்

முத்திரையிடுதல்

சேமித்து வைத்தல்
5. நூடுல்ஸ் பதப்படுத்துதல்
நொதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கு மாவு, கொழுப்பு நீக்கிய சோயா மாவு மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு

கலக்கவும்

தண்ணீரையும் உப்பையும் சேர்க்கவும்

நிறம் வெளுக்கச் செய்தல்

வெளித்தள்ளல்

ஆவியில் வேக வைத்தல்

உலர வைத்தல் (20 மணி நேரம்)

மூட்டை கட்டுதல்

முத்திரையிடுதல்

நூடில்ஸ்
5. நொதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கின் புளித்த மாவு பதப்படுத்துதல்
அட்டவனை:
நொதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கின் புளித்த மாவு பதப்படுத்துதல் சுத்தம் செய்தல்

தோல் உறித்தல்

வெட்டிய சிறு துண்டுகள்

உட்செலுத்தியை சேர்த்தல்

நொதிக்கச் செய்தல் (78 மணி நேரம்)

உலர வைத்தல்

நீர் நீக்கம் செய்தல் (80 0 செ , 8 மணி நேரம்)

உலர்ந்த சிப்ஸ்

அளவு குறைந்துவிடும்

அரைக்க வேண்டும்

அரித்தெடுத்தல்

நொதிக்கப்பட்ட மரவள்ளிக் கிழங்கின் புளித்த மாவு

அதிக தண்ணீரில் தேங்கி இருக்க விட வேண்டும் (24 மணி நேரம்)

தெளிய வைத்து வடித்தல்

உலர வைக்கவும்

நொதித்த இனிப்பு மாவு
சேப்பங்கிழங்கு
சேப்பங்கிழங்கு மாவில் இணைக்கப்பட்ட பப்பட்டை பதப்படுத்துதல்
தேவையான பொருட்கள்
மாவு |
50 கிராம் |
தண்ணீர் |
50 மில்லி |
என்.ஏ. ஹெச். சி. ஓ . 3 |
1 கிராம் |
சீரகம் |
1 கிராம் |
பப்பட்டை பதப்படுத்துதல் அட்டவனை:
சேப்பங்கிழங்கு மாவு + உளுந்தம்பருப்பு மாவு

பப்பட்கார் கரைசலை சேர்க்கவும்

கலக்குதல்

சிறுஉருண்டைகளாக மாற்றவும்

பப்பட்டை அழுத்தவும்

இருப்பு வைத்தல்

எடை போடுதல்

சூரிய ஒளியில் 30 நிமிடங்கள் உலர்த்தவும்

மூட்டை கட்டுதல்

முத்திரையிடுதல்

சேமித்து வைக்கவும்
6. சேப்பங்கிழங்கு மாவை இணைக்கப்பட்ட நூடில்ஸ் - சை பதப்படுத்துதல்:
தேவையான பொருட்கள்
மாவு |
50 கிராம் |
தண்ணீர் |
50 மிலி |
உப்பு |
2 கிராம் |
நூடில்ஸ் - சை பதப்படுத்துதல் அட்டவணை:
சேப்பங்கிழங்கு மாவு + சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு சல்லடையில் சலிக்கவும் (ஒரு தடவைக்கு இரண்டு முறை)

நிறத்தை வெளுக்கச் செய்ய வேண்டும் (15 நிமிடங்களுக்கு)

பொட்டுகளை நீக்க சலிக்கவும்

15 நிமிடங்கள் கலப்பியில் வைத்து கலக்கவும்

வெளித்தள்ளுதல் (சாயத்தை பயன்படுத்த)

4 மணி நேரம் அறை வெப்ப நிலையில் வைக்கவும்

உலர வைக்கவும் (60 0 செ, 2 மணி நேரம்)

நூடில்ஸ்

மூட்டை கட்டுதல்

சேமித்து வைத்தல்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கு மாவைப் பதப்படுத்துதல்:
கிழங்கைத் தேர்ந்தெடுக்கவும்

கழுவுதல்

தோல் உறித்தல்

துண்டுகளாக்குதல் (0.5 செ.மீ கெட்டியாக)

முக்கி வைக்கவும் (1% கே.எம்.எஸ் 10 நிமிடங்கள்)

உலர வைக்கவும் (40 செ.மீ, 6 மணி நேரம்)

உலர்ந்த சிப்ஸ்

அரைக்க வேண்டும்

சல்லடையில் சலிக்கவும் மூட்டை கட்டுதல்
சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் பருப்பு மாவு கலந்து
தயாரிக்கும் பொருட்கள்
சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவு + சர்க்கரை வள்ளிக் கிழங்கு மாவு +
பருப்பு வகை மாவு (சோயா மாவு / பச்சைப் பயிறு மாவு)

கலக்குதல்

இடம் மாற்றம் செய்தல்

ஆவியில் வேக வைத்தல்

குளிர வைக்கவும்

உலர வைத்தல்

பொடியாக்குதல்

உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்க்கவும்

பிசைதல் (30 நிமிடங்கள்)

வெளித் தள்ளுதல் (நூடில்ஸ், மேக்கரோணி, சேமியா)

ஆவியில் வைக்கவும் (5 நிமிடம்)

உலர வைத்தல் (60 செ.மீ, 2 மணி நேரம்)

மூட்டைகட்டி, முத்திரையிடவும்

சேமித்து வைக்கவும்
வெங்காயம்
வெங்காய ஊறுகாய்:
தேவையான பொருட்கள்:
வெங்காயம் |
1 கிலோ |
விநீகர் |
1 லிட்டர் |
உப்பு |
250 கிராம் |
சிவப்பு மிளகாய் பொடி |
10 கிராம் |
ஏலக்காய் (பெரியது), கருப்பு மிளகு, சீரகம் (பொடி) இவை அனைத்திலும் |
10 கிராம் |
கிராம்பு (தலை இல்லாதது) |
5 எண்கள் |
வெங்காய ஊறுகாயை பதப்படுத்துதல் அட்டவனை:
வெங்காயம் (சின்னது)

தோலை உறித்தல்

5 நிமிடங்கள் நிறத்தை வெளுக்க செய்ய வேண்டும்

நிறம் நீக்கப்பட்ட வெங்காயத்தை ஜாடியில் அடைக்கவும் உப்பை சேர்க்கவும்

24 – 48 மணி நேரத்திற்கு வைக்கவும்

நீரை வடிக்கவும்

விநீகரையும், நறுமணப் பொருட்களையும் சேர்க்கவும்

சேமித்து வைக்கவும்
வெங்காய வடகம்:
தேவையான பொருட்கள்
வெங்காயம் |
1 கிலோ |
கருப்பு உளுந்தம் பருப்பு |
200 கிராம் |
பூண்டு |
100 கிராம் |
சீரகம் |
20 கிராம் |
கடுகு |
20 கிராம் |
சிவப்பு மிளகாய்கள் |
100 கிராம் |
உப்பு |
தேவையான அளவு |
செய்முறை
- 2 மணி நேரம் கருப்பு உளுந்தம் பருப்பை தண்ணீரில் ஊற வைக்கவும். பின் பசையாக அரைத்து வைக்கவும்.
- வெங்காயத்தை தோல் உறித்து நன்றாக கழுவவும். பின் வெங்காயத்தை பிளவாக்கவும்.
- சிவப்பு மிளகாயை பொடியாக்கி கொள்ளவும்.
- வெங்காயம், கடுகு, உப்பு, மிளகாய், சீரகம் இவை அனைத்தையும் கலக்கவும். அழுத்தம் இல்லாமல் சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.
- ஒரு தட்டில் பாலித்தீன் காகிதத்தை போட்டு அதன் மேல் வடகத்தை வைத்து 2 – 3 நாட்களுக்கு வெயிலில் வைக்கவும்.
தொழில் நுட்பங்கள்
* - அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், தமிழ்நாடு வேளாண்மைப்
பல்கலைக் கழகம், கோவை.
** - ஹோம் சயின்ஸ் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், மதுரை. |