|| | |||||
 

வெற்றிக் கதைகள் :: கண்டுபிடிப்புகள்

tamil English
       

வானிலை
மண் வளம்
நீர் வளம்
விதை
பண்ணை சார் தொழில்கள்
ஊட்டச்சத்து
அறுவடைக்குப்பின் சார்
தொழில் நுட்பம்

உயிரிய தொழில்நுட்பம்
உயிரி எரிபொருள்

 

எரிவாயு விலைத் தொ ல்லை எங்களுக்கு இல்லவே இல்லை

'வில்வேகம்’

பழங்கால விவசாய முறையில் இருந்து ஒரு செயல்முறை

கட்டுப்பாட்டின் உயிரி பூச்சிக்கொல்லி

சிறு விவசாயிகளின் வெற்றி குறைந்த செலவுத்திட்டத்திலான தொழில்நுட்பங்கள்

வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…ஆள் பற்றாக்குறைக்கு அருமையானத் தீர்வு…!

கவலையில்லாத கரும்புச் சாறு உற்பத்தி!

டீசலோடு போட்டி போடும் புன்னை

ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி

விவசாய வேலையை எளிதாக்கும் எந்திரங்கள்

‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியின் பொன்னான வாழ்வு

விற்பனை இயக்க யுக்திகள் மூலம் அங்கக வேளாண்மையின் உயர்வு

ஓர் எளிய பயிற்சி : கன்னியாகுமாரி விவசாயிகளுக்கு மண் பானையின் மூலம்

காய்கறிகளில் வருடந்தோறும் செயல்படுத்தப்படும் பிரெட் சாண்விச் முறை தொழில்நுட்பம்  

முக்கிய தேவை : வெற்றிக்கு மதிப்பூட்டுதல் வழிவகுக்கும்

மதிப்பூட்டப்படாத பயிர் உற்பத்தி பயனற்ற உற்பத்தியாகும் 

பெண்களுக்கான - குறைந்த முதலீட்டில் அதிக வருவாய்த் திட்டம்

செய்முறை தீர்வு

மீன் அமிலம் டானிக் தயாரித்த ஆச்சர்ய அனிதா

அழுகிய பழம் .. அமுதம் தரும் !

அடடே ஆட்டூட்டம்

ஆதாரம் : www.vikatan.com பசுமை விகடன் வெளியிடுகள்


பழங்கால விவசாய முறையில் இருந்து ஒரு செயல்முறை

நவீன சாகுபடி முறைகள் மற்றும் பூச்சி கட்டுப்பாடு முறைகள் தோன்றும் முன்னேற, இந்திய விவசாயிகள் வெற்றிகரமாக சாகுபடி மேற்கொண்டுள்ளனர். அதே நேரம், பயிர் தாக்குதலை கட்டுப்படுத்த பாரம்பரிய வழிமுறைகள் சிலவற்றையும் கையாண்டனர். இவ்வாறான வழிமுறைகள், வரும் தலைமுறையினருக்கு, வாய்வழி வார்த்தைகளாக கொண்டு செல்லப்பட்டது.
பாரம்பரிய செயல்முறைகள் இடத்துக்கு இடம் மாறுப்பட்டாலும், அவைகளின் பூச்சி கட்டுப்பாட்டுத்திறன் ஆதாரப்பூர்வமாக்கப்பட்டு, உபயோகப்படுத்துகின்றனர். உதாரணமாக, தமிழ்நாட்டின் கன்னியாகுமாரி மாவட்டம், கோழிக்கொட்டு போதை (kozhikottu pothai) எனும் சிறு ¸¢ராமத்தில் இன்னும் பல விவசாயிகள் பூச்சி அச்சுறுத்தலை சமாளிக்க ஒரு சில பாரம்பரிய திட்டங்களை கடைப்பிடிக்கின்றனர்.

பயனுள்ள தீர்வு முறைகள்:
கன்யாகுமாரியின், விவோகானந்தா(கேந்தரா) இயற்கை வளமேம்பாட்டுத் திட்ட நிலைய சமூக விஞ்ஞானியான திரு.எஸ்.அரவிந்த் கூறுகையில் இத்தயாரிப்புகள் பயிர் தாக்குதலை ஏற்படுத்தும் பூச்சிகளை தற்காலிகமாக தடுக்க உடனடி தீர்வு அளிக்கும். மேலும் இது விவசாயிகளை கடனாளிகள் ஆவதை தடுக்கும் என்று கூறுகிறார்.

எளிய முறையில் கிடைக்கும் தயாரிப்புகள்:
“இயற்கை பூச்சி தடுப்பு தயாரிப்புகள் விவசாயிகளிடையே பிரபலமானதற்கான முக்கிய காரணம், இதை தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய, குறைந்த முதலீட்டிலுடைய பொருட்களாகும். மேலும் இத்தயாரிப்புகள் நல்ல பயனுள்ளதாக இருக்கும் காரணத்தினால் ஆகும்” என்று திரு.எஸ். அரவிந்தன் கூறினார். பப்பாளி இலையை கொண்டு பூச்சி விரட்டி தயாரித்து, அதை விவசாயிகள் உபயோகித்தனர். இதை தயாரிக்க சுமார் 1 கிலோ பப்பாளி இலையை தண்ணீரில் நன்கு நனைத்து, ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் இவ்விலைகளை நன்கு அரைத்து, தண்ணீரில் கலந்து, பயிர்களுக்கு தெளிக்கலாம். புங்கைச் சாறு நான்கு விதமாக தயாரிக்கப்படுகிறது. முதன் முறையில், புங்கையின் இலையை தலா 1 கிலோ எடுத்து ஒரு இரவு முழுவதும் தண்ணீரில் நனைத்து வைக்க வேண்டும். பின் அதை அரைத்து 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்களாம். இரண்டாவது முறையில் புங்கையின் விதைகளை சுமார் 50 கிராம் எடுத்து அதை அரைத்து தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்கவும். பின் அதை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தெளிக்க உபயோகப்படுத்தலாம். மூன்றாவது முறையில், புங்கைப் புண்ணாக்கு சுமார் 100 கிராம் எடுத்து, அதை தண்ணீரில் நனைத்து சிறு நேரம் கழித்து, அதை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.

இதே முறையில், புங்கை புண்ணாக்குடன், வேப்புண்ணாக்Ìம் கலத்து உபயோகிக்கலாம். இதில் கூடுதலாக அரை லிட்டர் கற்றாழழை சாறும், 3 லிட்டர் மாட்டின் சிறுநீர¸ம் கலக்கப்படவேண்டும். இந்த கலவையை 15 லிட்டர் தண்ணீரில் ஊறப்§À¡ட்டு ஒரு முழு இரவு வைத்து இருக்கவும். அடுத்Ð இக்கரைசலில் இருந்து 6 லிட்டர் கலவையை ±டுத்து 60 லிட்டர் தண்ணீரில் கலந்து உபயோகிக்கலாம். சில விவசாயிகள் துளசி இலைகளையும் பயிர் பூச்சி தாக்குதலுக்Ì உபயோகிக்கின்றனர். சுமார் 100 கிராம் துளசி இலை தண்ணீரில் நனைத்து, ஒரு நாள் இரவு முழுவதும் வைக்க வேண்டும். அடுத்த நாள் இதில் 2 லிட்டர் தண்ணீர் சேர்க்கப்பட்டு தெளிக்கப்பட வேண்டும். இதே போல், 1 கிலோ மஞ்சளை, சுமார் 1 லிட்டர் மாட்டு சிறுநீÕடன் கலந்து ஒரு þரவு முழுவதும் வைக்கவும், பின் மஞ்சளை எடுத்து அவற்றை நன்கு அரைத்து, 30 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.
இப்புங்கை சாறுத் தயாரிப்புப் போல வேம்புச் சாறும் மூன்று வகையில் தயாரிக்கலாம்.
முதல் வகையில், சுமார் 6 கிலோ வேம்பு இலையை தண்ணீரில் நனைத்து ஒரு இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டும். பின் அடுத்த நாள் அதை நன்கு அரைத்து, 60 லிட்டர் தண்ணீரில் கரைத்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
இரண்டாவது வகையில், சுமார் 3 கிலோ வேம்பு விதைகளை தண்ணீரில் நனைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து அதை அரைத்து கூழாக்கி பின் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களுக்கு தெளிக்கலாம்.
மூன்றாவது வகையில், சுமார் 6 கிலா வேப்பபுண்ணாக்கினை நன்கு அரைத்து ஒரு நாள் இரவு முழுவதும் வைத்து, அதை 60 லிட்டர் தண்ணீரில் கலந்து, தெளிக்க பயன்படுத்தலாம்.
மேலும், சில விவசாயிகள் பொதுவான இலைச்சாறு ஒன்றையும் உபயோகிக்கின்றனர். அது “மூன்று இலைக்கரைசல்” எனப்படும். இக்கரைசல் தயாரிக்க சுமார் 3 கிலோ எருக்கு, வேம்பு மற்றும் நொச்சி இம்மூன்றையும் சுமார் 3 லிட்டர் மாட்டு சிறுநீரில் நனைத்து 2 லிட்டர் தண்ணீரில் ஊறவிடவேண்டும். இதை ஒரு இரவு முழுவதும் வைத்து, பின் இதை வடிகட்டி, மீண்டும் 60 லிட்டர் தண்ணீர் கலந்து, உபயோகிக்கலாம். வழக்கமாக கரைச்சலை வடிகட்ட தூய பருத்தித் துணியை பயன்படுத்தவேண்டும். மேலும் இதனுடன் ஒரு லிட்டர் கரைசலுக்கு 4 கிராம் காதி சோப் கரைசலை சேர்த்து, தெளிக்கலாம்

வளமையான அறிவு:
இக்கரைசல்கள் அனைத்தும் வெற்றிகரமானதாக இருப்பினும், இவை அறிவியல் பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை என்பதை இதை உபயோகிக்கும் ஒவ்வொருவரும் நினைவு கூறவேண்டும். மேலும் இதன் உபயோகம் என்பது, பாரம்பரிய அறிவனை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு இடத்திற்கும், பகுதிக்கும், பூச்சிக்கும் மாறுபடும்.
மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து இலை சாறுகளும் கதிர் நாவாய் பூச்சி, இலை சுருட்டுப்புழு, தண்டுத்துளைப்பான், இலைப்பேன், அஸ்வினி போன்றவற்றை கட்டுப்படுத்துவதாக திரு.அரவிந்தன் கூறுகிறார்.
தொடர்புக்கு: திரு.எஸ்.அரவிந்தன், சமூக விஞ்ஞானி, விவேகானந்தா இவற்றை வேளாண் மேம்பாட்டு திட்ட நிலையம்,  நார்தீப், விவேகானந்தபுரம், கன்யாகுமரி - 629 702
தமிழ்நாடு இந்தியா
மின்னஞ்சல் ngc_vknardep@sancharnet.in மற்றும் ஒரு முகவரி
அலைபேசி: 9443748714
தொலைபேசி: 04652 - 247126, 04652 - 246296


கட்டுப்பாட்டின் உயிரி பூச்சிக்கொல்லி

கடந்த நாற்பது ஐம்பது வருடங்களாக, மண்ணில் இரசாயன நச்சுப்பொருட்களின் சேர்க்கை, ஆதாரபூர்வமாக அதிகரித்துள்ளது.
இதன் விளைவாக, சில இடங்களில் சாகுபடிக்கு உதவாத மண்ணு, நச்சுதன்மை  வாய்ந்த நிலத்தடி நீரும் பெருகிவருகிறது. மாறாக இயற்கை ஈடுபொருட்களை பயன்படுத்தினால், பாதுகாப்பான, நச்சுத்தன்மை இல்லாத, குறைந்த செலவிலான பராமரிப்பும் பெறலாம்.
இரசாயன மற்றும் உரகங்களை ஒரு ஹெக்டேருக்கு (Hectare). ஒரு  நிலத்தில் பயிர் சாகுபடி செய்ய, இரசாயன பூச்சிக்கொல்லி மற்றும் உரகங்களை உபயோகப்படுத்தினால் சுமார் 500 முதல் 1000 ரூபாய் மட்டுமே செலவாகும் என்று திரு.ராஜரீகா, சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமம், ராசி இயற்கை பண்ணையை சார்ந்தவர் கூறுகிறார்.

ஐந்து இலைக் கரைச்சல்:
மேலும் இவ்ஐந்து இலைக் கரைசலானது, எருக்கு (calotropics) காட்டாமணக்கு (jatrophacurcas), வெம்பு(Neem), சீந்தில்கொடி (Guduchhi/Amruth) நொச்சி(chaste tree), ஆடாதொடை(Malabar nut) சிறியா நங்கை( kalmesh) பீநாரிசங்கு (derodendron) அரப்பு (usil),  ஆகியவையின் கலவையாகும்.
இவை ஐந்தும் பரலவலாக அனைத்து கிராமங்களிலும் காணப்படும். இதன் இலைகள் அனைத்தும் சுமார் 1 கிலோ அளவுக்கு எடுத்து, தூள்ளாகி, கூழாக்கப்படுகிறது. இந்த கூழை 5 லிட்டர் மாட்டு சிறுநீருடன் கலக்கப்படவேண்டும். மீண்டும், இதை, 5 லிட்டர் தண்ணீரில் கரைத்து, கைபடாமல் ஐந்து நாட்கள் வைத்திருக்கவும் பின் தேவையான போது இதில் இருந்து 500ml கரைசலை 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து, செடிகளுக்கு  தெளிக்கவும். இவ்வாறு திரு.ராஜரீகா விளக்கினார்.
இஞ்சி - பூண்டுச்சாறு
மற்றும் ஒரு முயற்சி செய்து. ஆதாரபூர்வமாக்கப்பட்ட கரைச்சல்
இஞ்சி-பூண்டுச்சாறு - இது இவரால் முயற்சி செய்யப்பட்டு ஆதாரபூர்வமாக்கப்பட்ட மற்றொரு கரைசல்.
இக்கரைசல் தயாரிக்க தேவையானவை தலா 1 கிராம் இஞ்சி-பூண்டு, இரண்டு கிராம் பச்சை மிளகாய் 5 லிட்டர் மாட்டு சிறுநீர் மற்றும் தண்ணீர் இதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகியவையை நன்கு கூழாக்கி அதை மாட்டு சிறுநீருடன் கரைத்து பின் தண்ணீரில் கரைக்கப்பட வேண்டும். இதை கைபடாமல் பத்து நாட்கள் கழித்து, வடிகட்டி பிறகு உபயோகப்படுத்தலாம். இக்கரைசலை செடிகளுக்கு தெளிக்க பரிந்துரைக்கப்படும் அளவானது 500 மில்லி கரைசலை 10 லிட்டர் தண்ணீரில் கரைத்து உபயோகப்படுத்த வேண்டும்.

தெளிக்கப்பட வேண்டிய நேரம்:
இக்கரைசலை தெளிக்க சரியான நேரமாக காலை 6 முதல் 8.30 மணி வரையிலும் மாலை 4 முதல் 6.30 வரையிலுமாகும். இக்கரைசலின் அடர்த்தி தெளிக்கும் மண், பயிர், வானிலை மாற்றம் ஆகியவற்றை சார்ந்துள்ளது. இதன் பொருட்டு, கரைசலின் அடர்தியை மாற்றி பயன்படுத்தவேண்டும். மேலும் கரைசல் அடர்த்தி தொடர்பான விபரங்களுக்கு அருகில் உள்ள இயற்கை விவசாயியோ அல்லது செல்வி ராஜரீகா அவர்களையோ வழிகாட்டுதலுக்கு அணுகலாம்.
மேற்குறிப்பிட்டுள்ள இவ்வாறு கரைசல்களும் இலை சுருட்டுப்புழு (leaf roller), இலைப்பேன் (thrips) மாவுப்பூச்சி (Mealy bugs), பழங்கள், தண்டு, மரப்படைப்புழு (bark borer), கம்பளிப்புழு (hairy caterpillar), அசுவுணி (aphids) போன்றவற்றை கட்டுப்படுத்துகிறது.
இயற்கை ஈடுபொருட்களின் மீது இன்னும் திருப்தி அடையவில்லை எனில் விவசாயிகள் இரசாயனத்தையே உபயோகிக்கலாம். ஆனால் அவர்கள் விளைநிலத்தின் ஒரு பகுதியை, இயற்கை ஈடுபொருட்கள் கொண்டு பயிர் வளர்க்கலாம். இதில் இருந்து வரவு செலவு விகிதத்தை கணக்கிட்டுப் பார்த்து. பின் இயற்கை ஈடுபொருட்களை நாடலாம்.
தொடர்புக்கு: செல்வி.ராஜரீகா
ராசி இயற்கை பண்ணை
முத்துப்பட்டி, கலால் வழி, எ.சிறுவயல் (வழி)
சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு
மின்னஞ்சல்:rajareega@rediffmail.com
அலைபேசி: 9865-582142
தொலைபேசி: 04565 284937


சிறு விவசாயிகளின் வெற்றி குறைந்த செலவுத்திட்டத்திலான தொழில்நுட்பங்கள்

சில சிறந்த தொழில்நுட்பங்களின் பயன்பாடு நல்ல சாகுபடியை தர இயலாதபோது, விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்றோ, கடனுதவி பெற்றோ தங்களது அடுத்த பயிர் சாகுபடியை தொடங்குகின்றனர்.
மேலும், அடுத்தடுத்த தோல்வியும், ஏரிக்கொண்டேபோகும் கடன் தொகையாலும், விவசாயத்தை நிறுத்தும் முடிவுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இம்மாதிரியான பிரச்சனைகளில் இருந்து விடுபட சில விவசாயிகள் தற்கொலை முயற்சியிலும் ஈடுபடுகின்றனர்.

தேவைகள்:
இச்சூழ்நிலையில் விவசாயிகளுக்கு தேவையானது, ஆற்றல் மிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரு குறைந்த செலவுத்திட்டத்திலான தொழில்நுட்பமாகும். நம்மில் 80 சதவீதத்திற்கும் மேலான விவசாயிகள் சிறு நிலவிவசாயிகளாகவே உள்ளனர். இவர்களுக்கு முக்கிய தேவையாக இத்தொழிற்நுட்பம் பயன்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், முத்துப்பட்டி கிராமம் இராசி பண்ணையின் வெற்றிகரமான பெண் இயற்கை விவசாயி, செல்வி ராஜரீகா ஆவார். காய்கறிகள் மற்றும் மரங்களை வளர்க்கிறார். இவ்வாறான அதிக  பகுதியை தான் இயற்கை முறையில் நிர்வாகிக்கும் போது, மூன்று ஏக்கர் நிலத்திற்கும் கீழ் உள்ள விவசாயிகள், எவ்வித தடையுமின்றி இயற்கை விவசாயம் மேற்கொள்ளலாம் என்று செல்வி. ராஜரீகா ஆவார்.
இவர் தனது 50 ஏக்கர் நிலத்தில் பல வகையான பழங்கள், காய்கறிகள் மற்றும் மரங்களை வளர்க்கிறார். இவ்வாறான அதிக பகுதியை தான் இயற்கை முறையில் நிர்வாகிக்கும் போது, மூன்று ஏக்கர் நிலத்திற்கும் கீழ் உள்ள விவசாயிகள், எவ்வித தடையுமின்றி இயற்கை விவசாயம் மேற்கொள்ளலாம் என்று செல்வி ராஜசி கூறுகிறார்.

குறைந்த முதலீடு:
இயற்கை எருக்கள் மற்றும் தெளிப்பான்களான பஞ்சகாவ்யா, தசகாவ்யா  அமிர்தா கரைசல் போன்றவை குறைந்த செலவுத்திட்டத்திலான தொழில்நுட்பங்களாக விவசாயிகள் மதிப்பீட்டுள்ளனர். இதில் பஞ்சகாவ்யா தசகாவ்யாவை அறிந்து இருக்கும் பலர்க்கும், அமிர்தா கரைத்தலை பற்றிய புகழ் தெரியவில்லை. மேலும் தயாரிப்பு விபரங்களுக்கு (farmers note book, July 13 and May 18, 2006)
மேலும் இவ்விரு காவ்யா வகையை காட்டிலும், அமிர்தா கரைச்சல் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி அதிக சாகுபடி தருவதாக செல்வி ராஜரீக்கா கூறுகிறார்.
இந்த கரைச்சலானது, 10 கிலோ தேசி மாட்டுச்சாணம், 5 - 10 லிட்டர் 1-2 கிலோ வெல்லம், ஒரு கையளவு மண் ( வயல் கரை மண்), மற்றும் உளுந்து,  பாசிப்பயிர், கொள்ளு ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் 2 கிலோ, 2 லிட்டர் புளித்த தயிர் ஆகியவையின் கலவையாகும்.
தானியங்கள் மீது தண்ணீர் தெளிக்கப்பட்டு, அவை 3 முதல் 4 நான்கு நாட்கள் முளை வளர விடப்படுகிறது. முளை கட்டிய பயிரியை நன்கு அரைத்து இக்கரைசலில் கலக்க வேண்டும். இம்முழு கரைசலையும் 200 லிட்டர் தண்ணீரில்  கரைத்து சிமெண்ட் அல்லது பிளாசிடிக் கலக்க வேண்டும். இக்கரைசலை 2 முதல் 3 நாட்களுக்கு ஒருமுறை 3 முதல் 5 தடவை வலது பக்கமாக கலக்க வேண்டும். இவ்வாறாக செய்த கரைசலை ஒரு வாரம் ஆன பிறகு உபயோகிக்கலாம். உபயோகிக்கும் பொழுது சுத்தமான துணியில் வடிகட்டிய பிறகு உபயோகப்படுத்தலாம். இதன் மீதியை பிளாஸ்டிக் (plastic) கேன்களில் சேமித்து வைத்து பிற்காலத்தில் உபயோகிக்கலாம்.

தெளிக்கும் நேரம்  / தெளிக்கப்படவேண்டிய நேரம்:
இக்கரைசலை தெளிக்க பொருத்தமான நேரம் மாலை 3 முதல் 7 வரை தெளிப்பான் இல்லா சமயங்களில் பாசன நீரில் கலந்து விடலாம். இதற்கு செல்வி.ராஜரீகா கூறுகையில், பாசான தொட்டியின் பக்கத்திலேயே கரைசல் தொட்டியையும் வைத்து கொண்டு, பாசன தொட்டியை திறந்து விடும் சமயம் இக்கரைசல் தொட்டியையும் திறந்து விடலாம் என்கிறார். ஒரு ஏக்கர்க்கு, சுமார் 200 லிட்டர் கரைசல் போதுமானது. ஒன்று அல்லது இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இதை தெளிக்கலாம். பாசன நீரில் கலக்கப்படும் கரைசல், மண்ணுக்கு சிறந்த சத்து பருந்தாக இருந்து, மண்ணின் ஊட்டத்தை பெருக்கிறது.
இக்கரைசலானது, நிலத்தின் அடியில், ஆழமாக இருக்கும் மண் புழுக்களை மேலே வர செய்கிறது. இதன் காரணமாக மண்ணின் தன்மை இலகி, நன்கு காற்றோட்டம் ஏற்படுகிறது. மேலும் இப்புழுக்களால் ஏற்படுத்தப்படும் குழிகள் மழை நீர் சேகரிப்பு இடங்களாகவும் உதவுகிறது.

திறன் வாய்ந்த ஊடகம்:
கரைசல் ஒன்றே செடியின் வளர்ச்சிக்கு உதவுவது என்பதை விவசாயிகள் உணரவேண்டும். இக்கரைசல் செடியின் வளர்ச்சிக்குத் தேவையான ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகளையும், பாக்டீரியாக்களையும் உருவாக்கும் ஒரு திறன் வாய்ந்த ஊடகமாக திகழ்கிறது.

உற்பத்திச்செலவு:
கரைசலுக்கான உற்பத்திச் செலவு ஒரு பொருட்டேயள்ள, ஏனெனில் பொரும்பான்மையான விவசாயிகள் கால்நடைகளை வளர்க்கின்றனர். இதன் மூலம் அவர்கள் சாணத்தை சேமித்து வைத்துவிடலாம். மேலும் தேவையான வெல்லம், தானியப்பயிர்களை விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். இதன் காரணமாக, கரைச்சல் உற்பத்திக்கு மொத்தம் 5 ரூபாய் முதல் 8 ரூபாய் மட்டுமே ஆகும்.
ஆனால் இரசாயன உரங்களை உபயோகப்படுத்தினால், ஒரு ஏக்கருக்கு 500 ரூபாய் முதல் 700 ரூபாய்  செலவிட நேரும். அளவுக்கு அதிகமான கரைசலை ஒருவர் தெளித்துவிட்டால் கூட, இரசாயன உரங்களை போல செடிகளை அழிக்காமல், தீங்கு இன்றி பாதுகாக்கும் திறனுடையது இக்கரைசல்.
தொடர்புக்கு:
செல்வி: ராஜரீகா (Rajareega)
ராசி முத்துப்பட்டி, இல்லாமல் வழி, சிறுவயல் அஞ்சல், சிவகங்கை மாவட்டம்
தமிழ்நாடு
மின்அஞ்சல்: rajarega@rediffmail.com
அலைபேசி: 9865582142
தொலைபேசி: 04565-284937


வந்தாச்சு,கடலையைப் பிரிக்கும் கருவி…ஆள் பற்றாக்குறைக்கு அருமையானத் தீர்வு…!

விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது குதிரைக் கொம்பாகி விட்ட சூழ்நிலையில், பயறு, உளுந்து போல… கடலை விவசாயத்தையும் பல்வேறு சிரமங்களுக்கிடையே விவசாயிகள் விவசாயத்தை தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றனர்.
இந்தப் பிரச்சனையை சமாளிக்க புதுச்சேரியைச் சேர்ந்த தலைமை ஆசிரியர் அந்தோணி, தீவிரமாக முயற்சி எடுத்து, செடியில் இருந்து கடலைக் காய்களைப் பிரித்தெடுக்கும் இயந்திரம் ஒன்றை உருவாக்கியுள்ளார்.
“நானும் ஒரு காலத்துல விவசாயிதான். ஆனா, ஆசிரியர் வேலைக்கு வந்த பிறகு,  அதையெல்லாம் விட்டாச்சு. என்கூட வேலை பார்க்கிற ஆசிரியர் ஒருத்தர், அவரோட தோட்டத்துல கடலை அறுவடை பண்றப்பெல்லாம் மூட்டைக் கணக்குல பள்ளிக்கூடத்துக்குக் கொண்டு வந்து எல்லா வாத்தியார்களுக்கும் பிரிச்சுக் கொடுப்பார். ஆனா… ரெண்டு, மூணு வருஷமா அவர் கடலை கொண்டு வரலை. காரணம் கேட்டப்போ… ‘வேலைக்கு ஆள் கிடைக்கலைன்னு சோகமா சொன்னார். அந்த விஷயம் என்னை ரொம்பவே பாதிச்சுடுச்சு. ‘ இதுக்கு ஏதாவது ஒரு வகையில நாம தீர்வைக் கண்டுபிடிச்சாகணும்’னு அப்பவே உள்ளுக்குள்ள ஒரு தீர்மானம் போட்டேன்.
எங்கள் வீட்டில் விவசாயம் செய்த காலத்தில் கடலைக் கொடியில் இருந்து கடலையைப் பிரித்து எடுப்பதற்காக ஒரு சின்னக் குழியை வெட்டி அதில் கடலைக் கொடிகளைப் போட்டு, நடுவில் ஒரு குச்சியை வைத்து அடிப்போம். கடலைக் காயெல்லாம் தனியாக வந்துவிடும். அதை வைத்தே கடலைப் பிரிக்கறதுக்கான கடலையை வடிவமைத்தேன்.

சொந்த ஊர், கள்ளக்குறிச்சி அருகில் உள்ள அழகாபுரம் ஆசிரியர் படிப்பு படித்துவிட்டு, குடும்பத்துக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தேன். ஆசிரியர் பணி கிடைக்கவே விவசாயத்துக்கு விடைகொடுத்தேன். இருந்தாலும் அப்போதிருந்தே விவசாயக் கருவிகளின் மீது இருந்த ஈடுபாடு காரணமாக அவை பற்றிய விவரங்களைச் சேகரித்து வந்தேன்.
முக்கால் அங்குலத்தில் ‘எல் ஆங்கில்’ பட்டையில் படத்தில் காட்டியுள்ளது போல நான்கு புறமும் சட்டம் அமைத்து, கீழ்பகுதியில் கால்கள், மோட்டார் பொருத்துவதற்கான அமைப்பு ஆகியவற்றை செய்து கொள்ள வேண்டும். அதன் நீளவாக்கில் இருபுறமும் அரை வட்டத்தில்  சட்டத்தை இணைத்து, மேல்புறம் திறந்திருப்பது போல முன், பின் பக்கங்களில் தகடை இணைக்க வேண்டும். கருவியின் கீழ் மோட்டார் பொருத்தி, மேல்புறம் இரண்டு பக்கமும் ஒவ்வொரு பேரிங் அமைத்து, அதன் நடுவே, ‘புல்லி’யுடன் கூடிய உருளையை தயார் செய்து கொள்ள வேண்டும். உருளையின நான்கு பக்கங்களிலும் செவ்வக வடிவில் தயார் செய்யப்பட்ட இரும்புப் பட்டையைப் பொருத்தி, பேரிங் மற்றும் மோட்டாருடன் பெல்ட் மூலம் இணைக்க வேண்டும். கீழ்ப்பகுதியில் சரியாக சல்லடைத் தகடைப் பொருத்தி, பின்புறம் மற்றும் இடப்பக்கம் ஆகிய பகுதிகளை பலகையால் அடைத்துக் கொள்ள  வேண்டும். மேற்புறமிருந்து கடலைக் கொடியை உள்ளே காட்டக் காட்ட, பட்டைகள் சுழன்று கொடியிலிருந்து ‘தட்தட்’ டென்று கடலைகள் தனித்தனியே பிரித்து வந்து விழுந்தன.

கையில் ஆயும் போது நாள் முழுக்க ஒருத்தர் ஆய்ஞ்சாலும், ஒரு மூட்டையை ஆய்வதே கஷ்டம். ஆனா, இந்தக் கருவி மூலமா ஒரு மணி நேரத்துல ஒரு மூட்டைக்கு ஆய்ஞ்சுடலாம். இந்தக் கருவியை வடிவமைக்க நாலாயிரம் ரூபாய்தான் செலவாகும். பட்டை, மோட்டார்னு சொல்லும் போதுதான் புரிஞ்சுக்க கஷ்டமா இருக்கும். ஒரு தடவை நேர்ல பார்த்துட்டா… சுலபமா புரிஞ்சுடும். பெரிய தொழில்நுட்பம் எதுவும் கிடையாது. தேவைப்படுறவங்க நேர்ல வந்தாலும் சொல்லித் தர்றதுக்கு தயாரா இருக்கிறேன் என்று கூறுகிறார்.

தொடர்புக்கு
தலைமை ஆசிரியர் அந்தோணி
புதுச்சேரி
அலைபேசி : 90035-30695


கவலையில்லாத கரும்புச் சாறு உற்பத்தி!

 

கரும்புகளை ஆலைக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல் சொந்தமாக கரும்புச் சாறு விழியும் தொழிலையும் தொடங்கி சாறு விற்பனை மூலமாக வெற்றிகரமான வருமானத்தை ஈட்டி வருகிறார் முகுந்தன்.
“பெரிய அளவிலெல்லாம் கரமு்பு விவசாயம் செய்யல. ரெண்டு ஏக்கர்ல இயற்கை முறையில கரும்பு விவசாயம் பண்ணிக்கிட்டிருக்கேன். ஏக்கருக்கு 40 டன் கரும்பு விளையுது. இயற்கை முறைங்கிறதால பெருசா செலவில்லாமலே நல்ல விளைச்சல் கிடைக்குது.
வருஷக்கணக்கா சர்க்கரை ஆலைக்குத்தான் கரும்பை வித்துக்கிட்டிருந்தேன். போன வருஷம் வரை, எல்லார் மாதிரியே கரும்பு விலைக்காக புலம்பிக்கிட்டுதான் இருந்தேன். இந்த சமயத்துல தான் எனக்கு திடீர்னு ஒரு யோசனை… ‘நம்மளே ஏன் சாறு பிழிஞ்சு விக்க கூடாதுன்னு’ நினைச்சேன்.
தெருக்கள்ல விக்கிற கரும்புச் சறை எல்லாரும் போய் குடிக்கறதில்ல. அதே சமயம், பாக்கெட்டுல அடைச்சு, குளுமையா சந்தைபடித்தினா… நிச்சயமா வரவேற்பு இருக்கும். அதுக்குப் பிறகு கரும்புச் சாறு மேல  எல்லாருக்குமே ஒரு ஈடுபாடு வரும். அதோட  தேவையும் அதிகரிக்கும்.
துணிஞ்சு களத்துல இறங்கினேன.. சோதனை முயற்சியா விற்பனை பண்ணி பார்த்தேன். பாட்டில் குளிர்பானங்களோட கெடுதலை உணர்ந்த மக்கள், நான் கொடுத்த கரும்புச் சாறுக்கு ஆதரவு கொடுத்தாங்க. நல்ல லாபமும் கிடைக்கவே… கரும்புச் சாறு விற்பனையை விரிவுபடுத்தப் போறேன்” என்று மகிழ்ச்சி பொங்க சொன்னார் முகுந்தன்.

சாறு விழிய அவசியம் இயந்திரம் வேண்டும். கையால் இயக்கும் இயந்திரத்தைவிட, டீசல் மோட்டாரில் இயங்கும் இயந்திரம் வாங்கிக் கொள்வது நல்லது. வெவ்வேறு தொழில்நுட்பங்களுடன் பல விலைகளில் இது கிடைக்கிறது. தேவையை பொறுத்து இயந்திரத்தை தேர்வு செய்யலாம். சாறை நேரடியாக விறபனை செய்வதைவிட, பாக்கெட்டில் அடைத்து சந்தைப்படுத்துவதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். தவிர, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட சாறை குளிர்நிலையில் ஒருவாரம் கூட கெடாமல் வைத்திருக்க முடியும். அதனால் பாக்கெட் போடும் இயந்திரம் ஒன்றையும் வாங்கிக் கொள்வது நல்லது. 
ஆறு முதல் எட்டு மாதம் வரை நன்கு வளர்நத கரும்பிலிருந்துதான் சாறு பிழிய முடியும். அடிக்கரும்பில்தான் சாறு அதிகம் கிடைக்கும். கரும்பைப் பிழிவதற்கு முன்பு அதன் தோல் பகுதியை நன்றாக சீவி எடுத்துவிட வேண்டும். அப்படி செய்தால்தான் சாறு வெள்ளை நிறத்தில் இருக்கும்.
சாறோடு சொட்டுத் தண்ணீர் கூட கலக்கக் கூடாது. முக்கியமாக, அதைக் குளுமைப்படுத்த,  ஐஸ் கட்டிகளைச் சேர்க்கக் கூடாது. அது சாறின் சுவையைக் குறைத்து விடும். பிழியும் போது, வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப எலுமிச்சம்பழம், இஞ்சி சேர்த்துக் கொள்ளலாம். சாறாகப் பிழிந்த உடனே அதை பாக்கெட்டில் அடைத்துவிட வேண்டும். பாக்கெட்டில் நிரப்பிய கரும்புச் சாறை சுமார் 4 டிகிரி சென்டிகிரேட் குளிர் நிலையிலேயே வைத்திருத்தல் அவசியம்.

சந்தைப்படுத்துவதும் ரொம்ப சுலபம்தான். பக்கத்தியுலுள்ள  கடைகளில் கொடுத்து விற்கச் சொல்லலாம். மருத்தவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாதிரியான மக்கள் அதிகமாக கூடுகிற இடங்களில் ஆட்களை வைத்த விற்பனை செய்தாலே சுலபமாக விற்கலாம். கரும்புச் சாறு விறபனையை ஆண்ட முழுவதும் செய்ய முடியாது. பிப்ரவரி முதல் ஜீலை மாதம் வரைதான் செய்ய முடியும். இந்த மாதங்களிலேயே நல்ல லாபத்தை எடுத்துவிட முடியும்.
இன்னிய நிலைமைக்கு கூட்டுறவுச் சர்க்கரை ஆலைகள்ல ஒரு டன் கரும்புக்கு 1,437 ரூபாய் கொடுக்கறாங்க. தனியார் ஆலைகள்ல ஒரு டன் கரும்புக்கு1,740 ரூபாய் வரைக்கும் கொடுக்கறாங்க. தமிழ்நாட்டுல சராசரி கரும்பு விளைச்சல் ஏக்கருக்கு 38 டன்தான். சிலர் 60 டன் வரைக்கும் கூட அறுவடை பண்றாங்க. ஆலைக்கு அனுப்புற கரும்புல கொஞ்சத்தை மட்டும் நிறுத்தி, அதுல சாறு பிழிஞ்சாலே… நல்ல லாபம் எடுக்கலாம்.
ஆரம்பத்துல 100 கிலோ கரும்பைப் பிழிஞ்சதுல, 55 லிட்டர் சாறு கிடைச்சது. இதை 300 மில்லி பாக்கெட் 7 ரூபாய், ஒரு லிட்டர் பாக்கெட் 23 ரூபாய்னு விற்பனை செஞ்சேன். கணக்குப் பார்த்தா… வெறும் நூறு கிலோ கரும்புலயே 1,150 ரூபாய் கிடைச்சுடுச்சு. அப்போ ஒரு டன்னுக்கு கணக்கு பண்ணினா… 11,500 ரூபாய். ஆரம்பத்துல  இயந்திரத்துக்கான முதலீடுதான் கொஞ்சம் அதிகமா இருக்கும். அதுக்குப் பிறகு… பாக்கெட், பாட்டில், போக்குவரத்து இதெல்லாம் கம்மியான செலவுதான். தொடர்ந்து செய்றப்ப ஈலையில் கிடைக்கிற வருமானமெல்லாம்… இதுக்கு பக்கத்துலகூட நிக்க முடியாது” என்று சவால்விட்டுச் சொன்னார்.   

விவசாயி முகுந்தன்
செங்கல்பட்டு


டீசலோடு போட்டி போடும் புன்னை

 

pungam

அறிவிக்கப்படாத மின் வெட்டு.. தலை விரித்தாடும் டீசல் தட்டுப்பாடு, என்று கடந்த சில மாதங்களாக தமிழகமே திண்டாட்டத்தில் இருக்கிறது. பம்ப்செட்டை நம்பியிருக்கும் பயிர்கள் எல்லாம் தாகத்தில் தவிக்கின்றன. ‘இதே நிலை நீடித்தால் விவசாயத்துக்கு எதிர்காலமே இல்லை’ என்றபடி விவசாயிகள் பலரும் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள்.
ஆனால், நாகப்பட்டினம் மாவட்டம், கண்டியன்காடு கிராமத்தைச் சேர்ந்த தீவர விவசாயி ராஜசேகரோ.. மின்சாரத்தையும், டீசலையும் நம்பாமல், “புன்னை, கைவிடாது என்னை... !” என்று தெம்பாகச் சொன்னபடி, தன் தோட்டத்துக்கு தேவைப்பட்ட போதெல்லாம் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்.. புண்ணை எண்ணெய் புண்ணியத்துல !
ஆம்.. பம்ப்செட் மோட்டாருக்காக முழுக்க முழுக்க இவர் பயன்படுத்துவது புன்னை எண்ணெயைத்தான் !
இதைப் பற்றிக் கேள்விப்பட்டதுமே.. “என்னது புன்னை எண்ணெயில்.. பம்ப்செட் ஓடுதா..?” என்று உற்சாகத் துள்ளல் போட்டபடி கண்டியன் காடு சென்றடைந்தோம். குளிர்ந்தக் காற்றையும், பரந்த நிழலையும் வாரி வழங்கியபடி தோட்டத்தில் நின்றிருக்கும் புன்னை மரங்கள்.. பூமாரி தூவிக்கொண்டிருந்த வேளையில் உள்ளே நுழைந்தோம். சடசடவென புன்னைக்கு ‘வாழ்த்துமாரி’ பொழிய ஆரம்பித்தார் ராஜசேகர் (அலைபேசி : 97510 02370).

சுனாமியில கூட சுழற்ற முடியல !
“டீசல் மோட்டார் பம்ப்செட்டுகளில், டீசலுக்குப் பதிலாக புன்னை எண்ணெயைப் பயன்படுத்தினால் பல மடங்கு செலவு குறையும். கூடுதல் இணைப்பாக சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் இந்த மரத்தை, இயற்கை நமக்குத் தந்த வரம்ன்னு தான் சொல்லணும். இதுக்கு இலையுதிர் காலம்ன்னு ஒண்ணு கிடையாது. வருஷம் முழுக்க நிழல் கொடுக்கும். மழ வரப்போகுதுன்னா, ஒரு வாரத்துக்கு முன்னாடியே நமக்குச் சொல்லிடும். அதாவது, மரத்துல பூ பூத்துக் குலுங்கினா, கண்டிப்பா மறுவாரம் மழை பெய்யும். புயல் அடிச்சாக்கூட சாயாம நிக்கக்கூடிய மரம். இது கடற்கரையோர பூமி, சுனாமி வந்தப்பக்கூட இந்த மரங்களுக்கு ஒண்ணும் ஆகலனா பார்த்துக்கோங்க.. இந்த அளவுக்கு வலுவான மரம். இதுக்கு எத்தனை வருஷம் ஆயுள்ன்னு தெரியல. 0,70 வருஷத்துக்கும் மேல் வயசுள்ள மரங்கள் கூட விதைகளைக் கொட்டுது என்ற புன்னையை வாழ்த்தித் தள்ளியவர்.
“செடியை நட்ட 5ம் வருஷமே காயாகி, பழம் கிடைக்கும். புன்னை மரம் இருந்தாலே வெளவால் நிறைய இருக்கும். அதுங்க பழத்தைத் தின்னுட்டு, கொட்டையைக் கீழே போட்டுடும். அதனால பழத்தைக் காய வைக்க வேண்டிய அவசியம் இல்ல. தானா கீழே விழுற பழத்தை ஆறு நாளைக்கு வெயில்ல காய வெச்சா.. கொட்டையை உடைச்சி எடுக்கலாம். கொட்டைக்குள்ள இருக்கற பருப்புதான் முக்கியம். அதைத் தனியா எடுத்து, வெயில்ல 10 நாள் காய வைக்கணும். காய்ஞ்ச பருப்பை, செக்குல கொடுத்து ஆட்டினா, 70 சதவிகிதம் முதல் 75 சதவிகிதம் வரை  எண்ணெய் கிடைக்கும். அதாவது, ஒரு கிலோ பருப்புக்கு 700 முதல் 750 மில்லி எண்ணெய் கிடைக்கும். இதுவே மெஷின்ல ஆட்டினா 80 சதவிகிதம் அதாவது ஒரு கிலோ பருப்புக்கு 800 மில்லி எண்ணெய் கிடைக்கும்.

கரும்புகை போகுது.. கமழும்  புகை வருது !
5 ஹெச்.பி டீசல் மோட்டார் வெறும் 600 மில்லி புன்னை எண்ணெய்தான் ஊத்துறேன். வேற ஆயில் எதையும் கலக்கறதில்லை. இந்த 600 மில்லி ஊத்தறதுக்கே ஒரு மணி நேரம் ஓடுது. இதுவே டீசலா இருந்தா, ஒரு மணி நேரம் ஓடறதுக்கு 900 மிலி தேவைப்படும்.
ஒரு லிட்டர்  டீசலோட விலை 35 ரூபாய் ஆனா, ஒரு லிட்டர் புன்னை எண்ணெய் தயாரிக்க கிட்டத்தட்ட 10 ரூபாய் தான் செலவாகுது. மழை இல்லாத காலத்துல தான் மோட்டார் தேவை. அப்படிப் பார்த்தா வருஷத்துக்கு 5 மாசத்துக்குத் தான் மோட்டார் ஓடணும். அதுக்கு 75 லிட்டர் எண்ணெய் தேவைப்படும் இதைத் தயாரிக்கறதுக்கு 800 ரூபாய் தான் செலவு. இதே அளவு டீசலுக்கு.. 2,666 ரூபாய் செலவாகும் என்று கணக்கு வழக்கோடு சொன்ன ராஜசேகர், தன் தோட்டத்தில் இருக்கும் டீசல் மோட்டாரில் புன்னை எண்ணெயை ஊற்றி இயக்கியும் காட்டினார்.

டீசல் மோட்டாரைப் போல குபுகுபுவென கரும்புகை கண்களை சூழவில்லை. வாடையும் மூக்கைத் தூக்கிக்கொண்டு ஓட வைக்கவில்லை. குறைவான புகையே வெளிப்பட்டதோடு, கோயில்களில் கமழ்வதைப் போன்ற சுகந்த வாடையும் வீசியது.
“புன்னை எண்ணெய்ல நிறைய மருத்துவ குணமிருக்கு. அதனால தான் முன்னயெல்லாம் கோயில்ல விளக்கேத்தறதுக்கு இதைப் பயன்படுத்தினாங்க. இந்தப் புகையில நீங்க நின்னாலும் ஒண்ணும் செய்யாது. ஆனா, டீசல் புகைன்னா, கண் எரிச்சல் ஏற்படும். அந்தப் புகையால பயிரும் மாசுபடும். ஆனா, எல்லாவிதத்துலயும் தொல்லை இல்லாதது புன்னை எண்ணெய்தான் ” என்று அதற்கு விளக்கமும் கொடுத்தார் ராஜசேகர்.
10ஹெச்பி.. 20 ஹெச்.பி..
புன்னை எண்ணெய் பயன்படுத்துவதால் இன்ஜின் துருபிடிப்பதில்லை. இன்ஜின் இயங்கும் சத்தமும் குறைவாகத் தான் கேட்கிறது. மூன்று ஆண்டுகளாக இந்த எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறார் ராஜசேகர். இதுவரை இன்ஜினில் எந்தப் பிரச்சனையும் வராமல் மோட்டார் நல்லபடியாகவே ஓடிக்கொண்டிருக்கிறது.
இதைப்பற்றி பேசும்போது, “ டீசல் பயன்படுத்தினப்ப.. ஒரு நிமிஷத்துக்கு 750 லிட்டர் தண்ணியை மோட்டார் கொட்டும். புன்னையைப் பயன்படுத்தினாலும் அதே அளவு தண்ணிக் கொட்டுது. 10 ஹெச்.பி ஜெனரேட்டர், 20ஹெச்.பி ஜெனரேட்டர் இதுல கூட புன்னை எண்ணெயை ஊத்திப் பயன்படுத்திப் பார்த்தேன். நல்லாவே ஓடுச்சி.. எந்தப் பிரச்சனையும் இல்லை.
அதனால.. டீசல்ல ஓடுற வண்டிகளுக்கும் கண்டிப்பாக இதைப் பயன்படுத்த முடியும்ன்னு நம்புறேன். அரசாங்கமும் ஆய்வாளர்களும் தான் அதுக்கான முயற்சியைச் செய்யணும். இதுல நிச்சயம் வெற்றி கிடைக்கும்கிறது என்னோட நம்பிக்கை என்று உறுதியான குரலில் சொன்ன ராஜசேகர், புன்னை வளர்ப்புப் பற்றி பாடமெடுத்தார். அது.

புன்னை வளர்ப்பு !
எல்லா வகையான மண்ணிலும் புன்னை நன்றாக வளரும். குறிப்பாகக் கடலோரங்களிலும் ஆற்றோரங்களிலும் சிறப்பாக வளரும். உப்புத் தண்ணீர் பூச்சி, நோய், கரையான் என எதையும் சமாளிக்கும் வல்லமை இதற்கு உண்டு.
நிழலும், லேசான வெயிலும் கலந்த இடத்தில், ஒரு பாலித்தீன் பேப்பரைப் போட்டு அதில் மணலைப் பரப்பவேண்டும். அதன் மீது விதைகளைப் (முழுக் கொட்டைகளாகப் பயன்படுத்தவேண்டும்) பரப்பி, அவை மூடுமளவுக்கு மணல் போடவேண்டும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் விடவேண்டும். ஒரு மாதத்தில் செடிகள் முளைத்துவிடும். பிறகு, பாலித்தீன் பாக்கெட்டுகளில் மண், மணல் தொழுவுரம் அல்லது மண்புழு உரம் போட்டு, ஒரு பாக்கெட்டுக்கு ஒரு செடி வீதம் ஊன்றி, தினமும் ஒரு வேளை தண்ணீர் ஊற்றவேண்டும். இதை நிழலில் வைத்துதான் பராமரிக்க வேண்டும். மூன்றாவது மாதம், நடவுக்குக் கன்று தயாராகிவிடும்.
அரை அடி சுற்றளவு, அதே அளவு ஆழம் கொண்ட குழிகளைத் தோண்டி, ஈரப்பதம் ஏற்படுமளவு தண்ணீர் தெளித்து, அதில் தொழுவுரம் போட்டுச் செடியை நடவேண்டும். ஒரு ஏக்கருக்கு 20 அடி இடைவெளிக்  கொடுத்து நடவு செய்வதன் மூலமாக 75 மரம் வரைக்கும் வளர்க்கலாம். இரண்டு மாதம் வரை ஒரு நாள் விட்டு ஒரு நாள் தண்ணீர் ஊற்றவேண்டும். அதன் பிறகு பெரிதாக எந்தப் பராமரிப்பும் இல்லை.
ஐந்தாம் ஆண்டில் ஆரம்பம் !
ஐந்தாம் ஆண்டில் பத்து அடி உயரத்துக்கு மரம் வளர்ந்திருக்கும். இந்தப் பருவத்தில் காய்ப்பு ஆரம்பிக்கும். பொதுவாக ஒரு மரத்தில் ஒரு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று தடவை புன்னை மகசூல் கொடுக்கும். ஐந்தாம் ஆண்டு முதல் ஒரு மரத்திலிருந்து ஓர் ஆண்டுக்கு 4 கிலோ முதல் 20 கிலோ வரையிலான பருப்பு கிடைக்கும். 10 வருடங்களுக்குப் பிறகு 10 கிலோ முதல் 60 கிலோ.. 20 வருடங்களுக்கு பிறகு 50 கிலோ முதல் 150 கிலோ என்று உயர்ந்து கொண்டே போய், 25 வருடங்களுக்குப் பிறகு காய்ப்பின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரிக்கும். 150 கிலோ முதல் 300 கிலோ வரை பருப்பு கிடைக்கும். அதிகபட்சமாக 500 கிலோ கிடைத்தாலும்  ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

ஒரு மரத்துக்கே இந்தளவு மகசூல் என்றால், ஒரு விவசாயி, 10 புன்னை மரங்கள் வைத்திருந்தால், அவரின் தேவை பூர்த்தியாவதோடு, மீதியை விற்பனை செய்வதன் மூலமாக லாபமும் பார்க்கலாம். இதற்காக மிகவும் கஷ்டப்படத் தேவையில்லை. குறைந்த நீரில் சிறப்பாக வளரக்கூடிய புன்னை, வறட்சியையும் தாங்கி வளரும். பயோடீசலுக்கான மற்றப் பயிர்களைக் காட்டிலும் எளிதாக வளரக்கூடியது.. வளர்க்கக்கூடியது.
சாகுபடி பாடத்தை முடித்து நிறைவாகப் பேசிய ராஜசேகர், “முன்னயெல்லாம் தமிழ் நாட்டோட கடலோரத்துலயும் ஆத்தோரத்துலயும் நிறைய கிராமங்கள்ல புன்னை மரம் செழிப்பா வளர்ந்து நின்னதுங்க. இப்ப அதெல்லாம் மாயமாயிடுச்சி. அதோடப் பயன்பாடு தெரியாம, வெட்டி அழிச்சிட்டாங்க. இனிமேலயாவது  இதுல அரசாங்கம் கவனம் செலுத்தி, புன்னை மர வளர்ப்புல ஈடுபட்டா.. எதிர்க்கால எண்ணெய்த் தேவையை சமாளிக்கலாம். சுற்றுச்சூழலைக் கெடுக்காம..” என்று முத்தாய்ப்பாகச் சொன்னார்.

உரமாகும் பிண்ணாக்கு
ஒரு கிலோ பருப்பை அரைப்பதன் மூலம் 300 கிராம் வரை பிண்ணாக்கு கிடைக்கும். இது வயலுக்கு நலல உரமாகப் பயன்படும். ஒரு லிட்டர் புன்னை எண்ணெயைத் தயாரிக்க 10 ரூபாய் தான் செலவு. நம் மோட்டார் தேவைக்குப் போக மீதியை லிட்டர் 42 ரூபாய்க்கு விற்கலாம்.  கோயில்களுக்காக இதை வாங்கிக் கொள்வார்கள்.
ஒரு கிலோ புன்னைப் பருப்பு 20 ரூபாய்க்கு விலைப் போகும். இதைச் சோப்பு தயாரிக்கப்பயன்படுத்துகிறார்கள். இதை வாங்கிச் செல்வதற்காக சோப்புக் கம்பெனி பிரதிநிதிகளும் இருக்கிறார்கள்.

புன்னை இன்ஜினியர்
கண்டியன்காடு கிராமத்தில் உட்கார்ந்து கொண்டு, பன்னை எண்ணெயை இந்த அளவுக்கு அலசி ஆராய்ந்திருக்கும் ராஜசேகர், வெறும் விவசாயி மட்டுமல்ல.. டிப்ளமோ இன் மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டிப்ளமோ இன் ஏரோநாட்டிக் இன்ஜினியரிங் ஆகிய படிப்புகளை முடித்துவிட்டு, இந்திய விமானப் படையில் 15 ஆண்டுகள் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி, கொல்கத்தா, சண்டிகார், ஆதம்பூர், பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் இருக்கும் இந்திய விமானப்படையின் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் பணியாற்றி இருக்கிறார். இதன் மூலட் ஏவுகணைத் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு அனுபவங்களைப் பெற்றிருக்கும் ராஜசேகர். “ நிச்சயமா புன்னை எண்ணெய் மூலமா எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்யமுடியும். இது நூத்துக்கு நூறு பலன் கொடுக்கும்கிறதுல எந்தச் சந்தேகமும் தேவையில்ல...” என்று அடித்துச் சொல்கிறார்.

கேலோபில்லம் இனோபில்லம் !
புன்னையின் தாவரவியல் பெயர் “கேலோபில்லம் இனோபில்லம் (Calophyllum inophyllum). தமிழ் இலக்கியங்களில் புன்னையின் பெருமை வெகுவாகப் பேசப்படுகிறது. கடலும் கடல் சார்ந்த பகுதிகளான நெய்தல்  நிலத்தின் அடையாளமாகவே, புன்னை மரங்கள் திகழ்ந்திருக்கின்றன. கோயில்களில் புன்னை இலையில் தான் முன்பு பிரசாதம் வழங்கப்பட்டது.  மருத்துவ குணங்கள் இருப்பதால் புன்னை மரத்தடியில் நின்றாலே நோய்கள் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் நிலவுகிறது.
தேனீக்கள் மற்றும் பறவைகளின் புகலிடமாகத் திகழ்கிறது புன்னை. இம்மரத்தின் பூக்களைத் தேடி அதிக தேனீக்கள் வரும். இது தோட்டத்தில் அயல்மகரந்தச் சேர்க்கை சிறப்பாக நடைபெற பெரிதும் உதவியாக இருக்கும். வெளவால்கள் அதிகமாக வருவதால், அவற்றின் எச்சம் உரமாகப் பயன்படும்.
புன்னை இலைகளை ஆடு, மாடு சாப்பிடாது என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிச்சமும் தண்ணீரும்
ராஜசேகரின் ஐந்தரை ஏக்கர் தோட்டத்தில் தென்னை, முந்திரி, சூபாபுல், மா, வேம்பு, பலா, ஈட்டி, செஞ்சந்தனம், மகோகனி, பென்சில், சவுக்கு, எலுமிச்சை, வாழை, ஆலம், ஆரஞ்சி, நெல்லி, கொய்யா, நாவல், புளி தேக்கு, ஓதியன், இலந்தை என 36 வகையான மரங்கள் பெரிய கூட்டுக் குடும்பமாகவே இருக்கின்றன. இதில் முந்திரி, தென்னை, மா, வாழைதான் பிரதானம். இதற்கு நடுநடுவே புன்னை.
“தோட்டம் அடர்ந்த காடு மாதிரி இருக்கிறதாலயும் நிறைய மரங்களோடயும் இருக்கறதால ரொம்பக் குறைவான மகசூல் தான் எனக்குக் கிடைக்குது. 18 வயது மரத்துல இருந்து வருஷத்துக்கு வெறும் 10 கிலோ பருப்புதான் எடுக்கிறேன். போதிய சூரிய வெளிச்சம், ஓரளவு தண்ணி வளம் இருந்தா .. 5 வயசு மரம் ஒரு வருஷத்துக்கும் கண்டிப்பா 15 கிலோவுக்கு குறையாம பருப்பு  கொடுக்கும் ” என்கிறார் ராஜசேகர்.


ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி

 

fertilizerpit

திரு.கணேசன், தஞ்சாவூர் மாவட்டம், சோழகன்கரை சிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஏக்கருக்கு 9 குவிண்டால் உளுந்து மகசூலை உயர்த்திப் பார்க்கும் உரக்குழி பற்றி கூறுகிறவதாவது. 100 அடி நீளம், 9 அடி அகலம், 3 அடி ஆழம் கொண்ட குழியெடுத்து, மாட்டுக் கொட்டகையிலிருந்து வரும் கழிவுநீர்க் குழாயை அந்தக் குழியில் அணைத்திருக்கிறார். அந்தக் குழியின் கரைகளில் கொட்டாரப் பந்தல் அமைத்து,  அதில் அவரை, புடலை போன்ற கொடிகளை நிழலுக்காகப் படரச் செய்துள்ளார். இந்தக் கொடிகள் உதிர்க்கும் இலை, தழைகள் குழியில் விழுந்து கொண்டே இருக்கின்றன. இதோடு, துளசி ஆடுதொடா இலை, வேம்பு உள்ளிட்ட இலை, தழைகளையும் இதில் கொட்டுகிறார். இவற்றோடு... சாணம், மூத்திரம் எல்லாம் ஒன்றாகக் கலந்து, உரக்குழியாக மாறியிருக்கிறது. பயிர்களுக்கான தண்ணீரை, இந்த உரக்குழி வழியாகப் பாய்ச்சுவதுதான் கணேசனின் வெற்றிப்பாட்டை
“ஒன்றரை ஏக்கர்ல உளுந்து விதைச்சுருக்கேன். மொத்தத்துக்கும் உரக்குழி தண்ணிதான் பாசனமாயிட்டிருக்கு. இந்த உளுந்துச் செடியில இலைகள் அடர்த்தியாகவும், அகலமாகவும் இருக்குறதுனால களைகளே இல்ல. ஒரு செடிக்கு சராசரியா 20 கிளைகளும், மொத்தம் 150 முதல் 200 காய்களும் பிடிச்சிருக்கு. கொஞ்சம்கூட பொக்கையே இல்லாம எல்லா காய்களுமே நல்ல திரட்சியா இருக்கு. விதைச்சு 50 நாட்களுக்கு மேல ஆகுது. இதுவரைக்கும் பூச்சி, நோய்த் தாக்குதல் கொஞ்சம்கூட இல்ல.

இதுவே ரசாயன முறையில உளுந்து சாகுபடி செஞ்சப்ப, 25ம் நாள் அசுவணித் தாக்குதல், 35-ம் நாள் மஞ்சள் நோய் தாக்குதல், இலைச் சுருட்டுப் புழுத் தாக்குதல், 40-50 நாட்கள்ல காய்ப்புழுத் தாக்குதல்னு தொடர்ச்சியா பூச்சிமருந்து அடிச்சுக்கிட்டே இருப்போம். விதைச்ச 25-ம் நாள், ஒரு ஏக்கருக்கு ஒண்ணரை மூட்டை டி.ஏ.பி. போடுவோம். 35-ம் நாள் மற்றும் 60-ம் நாள் தலா ரெண்டு லிட்டர் டி.ஏ.பி. கரைசல் தெளிப்போம். ஆனாலும், விளைச்சல் சுமாராதான் இருக்கும் . ஒரு செடிக்கு அதிகபட்சம் 100 காய்கள்தான் இருக்கும். அதிலும்கூட 15 பொக்கையா இருக்கும். அதிகபட்சம் ஏக்கருக்கு 6 குவிண்டால் கிடைச்சதுதான் பெரிய மகசூல்.

போன வருஷத்துல இருந்து ரசாயனத்தை முழுமையா தவிர்த்துட்டு, இந்த இயற்கை உரக்குழி வழியா தண்ணி பாய்ச்சி, உளுந்து சாகுபடி செய்யத் தொடங்கினேன். இதுல, ஒரு தடவை மட்டும்தான் களையெடுக்கற செலவு. அதைவிட்டா... அடுத்தது அறுவடைதான் (ரசாயன முறையில் இரண்டு தடவை களை எடுக்க வேண்டும்). உரக்குழி மூலமா போன வருஷம் சாகுபடி செஞ்சப்ப, ஒரு செடிக்கு 140-170 காய்கள் இருந்துச்சு. ஏக்கருக்கு 10 குவிண்டால் வரை மகசூல் கிடைச்சுது. இந்த வருஷம் அதைவிட அதிகமாக கிடைக்கும்னு தோணுது. ஒரு செடிக்கு 200 காய்கள் வரைக்கும் இருக்குறதுனால கண்டிப்பா 12 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன்” என நம்பிக்கையோடு பேசிய கணேசன், பக்கத்திலிருந்த மற்றொரு விவசாயியின் உளுந்து வயலுக்கு நம்மை அழைத்துச் சென்று காட்டினார். தொடர்ந்தவர். “ இது ரசாயனத்துல விளைஞ்சது பசுமையே இல்லாம காய்ஞ்சு கிடக்கு. இலைகள் அடர்த்தியா இல்லாம, அதிகமாக களை  மண்டிக் கிடக்கு. மஞ்சள் நோய் தாக்குதல், இலைச்சுருட்டுப்புழுத் தாக்குதலும் அதிகமா இருக்கு. என் வயல்ல ஆடுதுறை 5 ரக உளுந்தை ஏக்கருக்கு 12 கிலோ விதைச்சேன. அதே நாள், அதே அளவு, அதே ரச விதையைத்தான் இங்கயும் விதைச்சாங்க. என் வயல்ல இருக்கற, அதே மண்கண்டம்தான் (செம்மண், மணல் கலந்த மண்) இங்கயும் இருக்கு. அபப்டியிருந்தும் இந்த ரெண்டு வயலுக்கும் மகசூல்ல மலையளவு வேறுபாடு இருக்குனா.. அதுக்குக் காரணம் உரக்குழி மூலமா பாசனம் பண்றதைத் தவிர வேற என்னவா இருக்க முடியும்”. என்று சொல்லி முடித்தார்.
தொடர்புக்கு
கணேசன்
சோழகன்கரை கிராமம்
தஞ்சாவூர் மாவட்டம்
அலைபேசி 96266-95141


விவசாய வேலையை எளிதாக்கும் எந்திரங்கள்

 

paddymachine

விவசாய வேலைகளை எளிமைப்படுத்தவதற்காகவே உருவாக்கப்பட்ட அந்த பொறியியல் கல்லூரி, திருச்சியிலிருந்து 37கி.மீ தொலைவில் உள்ள குமுளூரில் இயங்கி வருகிறது.
பண்ணை எந்திரம் மற்றும் உயிர் சக்தி துறையின் இணைப் பேராசிரியர் ச.கணபதி அங்கே நின்றிருக்க, அவரை அணுகிய போது இயந்திரங்களின் பயன்பாடுகள் பற்றி மலைமலையாக செய்திகளைச் சொன்னார்.
விவசாயிகளின் வேலையைக் குறைக்க புதிய கருவிகளைக் கண்டுபிடித்து வருகிறோம். வெளிநாடுகளில் பெரும்பாலும் கருவிகளை நம்பித்தான் விவசாயம் நடைபெற்று வருகிறது. அதுபோன்று இங்கும் வரவேண்டும். தமிழ்நாட்டுக்குத் தக்கப்படிதான் நாங்கள் கருவிகளை வடிவமைத்து வருகிறோம் என்று சொல்லியபடியே வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த கருவிகளைக் காட்டி விரிவித்தார்.

நேரடி நெல் விதைப்புக் கருவி:

இந்தக் கருவியின் மூலம் நெல் விதைகள் நேரடியாக விதைத்து விடலாம். இரண்டு உருளைகள் கொண்ட இக்கருவியில் துளைகள் வழியாக நெல் விதைகள் சீராக வெளிவந்து நிலத்தில் விழும் இதைப் பயன்படுத்துவதன் மூலம் வேலை யாட்களின் தேவை 30% குறைகிறது. இக்கருவியைப் பயன்படுத்துவதால் மாசூலில் எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆட்களைக் கொண்டு நடவு செய்யும் முறைக்கு இணையாக மகசூல் கிடைக்கிறது. இக்கருவியின் விலை ரூ.4,000 ஒரே நாளில் ஹெக்டேர் நிலத்தில் விதைக்கலாம்.

நாற்று நடும் கருவி:

இந்தக் கருவியின் மூலம் எட்டு வரிசைகளாக நடவு செய்யலாம். வழக்கமான பாணியில் அல்லாமல், பாய் முறையில் நாற்றுகள் தயாரிக்க வேண்டும் (பாலிதீன் பேப்பரின் மீது மண்கொட்டி, அதன் மீது விதைகளை தூவவேண்டும். வளர்ந்த பிறகு கேக், கேக்காக வெட்டி இயந்திரத்தில் பொருத்தவேண்டும்). இக்கருவியை பயன்படுத்துவதால் ஆள் தேவை 75% குறைகிறது. செலவும் 50% குறைகிறது. ஒரு நாளைக்கு 1.5 ஹெக்டேரில் நடலாம். இக்கருவியின் விரை ரூ.1,50,000.

கூம்பு உருகைக் களையெடுக்கும் கருவி:

நாற்று வரிசைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் முன்னும் பின்னும் இக்கருவியை இழுத்து இயக்குவதன் மூலம் களைகள் சேற்றுக்குள் திணிக்கப்படும். களைகள் மட்கி பயிருக்கு உரமாக்கிவிடும். கோனோ வீடர் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படும் இக்கருவியின் விலை ரூ.900 ஒரு நாளைக்கு அரை ஹெக்டேரில் களையெடுக்கலாம்.

சிறுமரங்களின் வேர் அகற்றும் கருவி:

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் கருவேலம், காட்டாமணக்கு, மஞ்சனத்தி போன்ற மரங்கள், களைகளாக வளர்ந்து நிலச் சீரமைப்புப் பணிகளுக்குச் சவாலாக இருந்து வருகின்றன. இம்மரங்களின் கட்டைகளை வெட்டி அடுப்பெரிக்க கொண்டு செல்லும் விவசாயிககள் இவற்றின் வேர்களை அகற்ற அதிக ஆற்றலை வீணடிக்க வேண்டியிருக்கிறது. அதிக ஆட்களைக் கொண்டு அதிக செலவில் வேர் மூடுகளை அகற்றி வருகின்றனர். இதனால் நேரமும் அதிகமாக விரயமாகிறது. இந்தப் பிரச்சனைக்குத் தீர்வாக டிராக்டரால் இயக்கப்படும் வேர் அகற்றும் கருவி வடிவமைக்கப்பட்டது. இந்தக் கருவி ‘V’ வடிவம் கொண்ட எஃகு இரும்பிலான கூரிய ஈட்டி போன்ற தகடு கொண்டுள்ளது. இதைத்தவிர அடிமண் தளர்த்தி என்றொரு கருவியும் உண்டு. இந்த இரண்டையும் டிராக்டரில் பொருத்தி பயன்படுத்த வேண்டும். அடிமண் தளர்ததி மூலம் மண்ணுக்குள் இருந்து வேர் மூட்டினை எளிதாக பெயர்த்து எடுத்துவிட முடியும். வேர் முடிச்சுகள் இல்லாத தனி ஆணிவேர் கொண்ட மஞ்சனத்தி போன்ற மரங்களுக்கும் இதைப் பயன்படுத்தலாம்.
2 முதல் 3 நிமிடங்களில் ஒரு வேர் மூடு அகற்றப்பட்டுவிடும். 5 முதல் 25 கிலோ எடையுள்ள வேர் மூடுகளை இக்கருவியின் மூலம் அகற்றலாம். இந்தத் தகட்டின் விலை ரூ.500 மொத்தமாக அடிமண் தளர்த்தியுடன் சேர்த்து ரூ.10,500.
விவசாயிகளுக்கு பண்ணை இயந்திரங்கள் இயக்குவது குறித்த பயிற்சியும் இங்கு கொடுக்கப்படுகிறது.

தொடர்புக்கு:
முதல்வர், வேளாண் பொறியியல் கல்லூரி,
குழுளூர்,
திருச்சி.
அ.கு.எண்.621712
தொலைபேசி: 0431-2541218.


‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியின் பொன்னான வாழ்வு

 

ponneem 

காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அருகேயுள்ள கொழுமண்ணிவாக்கம் கிராமம் முழுக்கவே ‘பொன்னீம்’ பூச்சிக்கொல்லியை பயன்படுத்தி பலன் கண்டு வருகிறது. கிராமத்தைச் சேர்ந்த ‘டான்வா பண்ணை மகளிர் குழு’ என்ற அமைப்பின் தலைவி உமாமகேஸ்வரி அதைப்பற்றி மகிழ்ச்சி பொங்க நம்மிடம் பேசினார்.
நடவு நட்ட ரெண்டாவது மாதம் வெள்ளை தத்துப் பூச்சியும், குருத்துப் புழுவும் அதிகமாக இருந்தது. சரி லயோலா காலேஜ் மருந்தை அடித்துத்தான் பார்ப்போமென்று அடித்தேன். பயிருக்கு எமனா இருந்த எல்லா பூச்சி, புழுவும் மூணாம் நாளே செத்துப் போயிவிட்டது. ஏக்கருக்கு 35 மூட்டை நெல்லும் விளைந்தது.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி அருகேயுள்ள வயலாநல்லூர் கிராமத்தில் கத்திரி விவசாயத்தை பிரதானமாக செய்து வரும் ரவி “ஒரு நாள் காலையில் 8மணி இருக்கும்.

தயாரிப்பது சுலபம்:

இந்த பொன்னீம் தயாரிப்பு மிகமிக எளிதானதாகவே இருக்கிறது. வேப்ப எண்ணெய் 45%, புங்கன் எண்ணெய் 45%, சோப்புக் கரைசல் (ஒட்டும் திரவம்) 10% ஆகியவற்றை எடுத்துக்கொண்டு, நன்கு கலக்கினால் உடனடியாக பொன்னீம் தாயர்.
ஒரு லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பொன்னீம் என்கிற விகிதத்தில் கலந்து தெளிக்கவேண்டும். 10 லிட்டர் கொள்ளளவுள்ள தெளிப்பானில் முதலில் 300 மில்லி பொன்னீமை ஊற்றிவிட்டு பிறகு 10 லிட்டர் தண்ணீரை ஊற்றவேண்டும். இப்படி செய்தால் பொன்னீம் மருந்து தண்ணீரில் நன்றாக கலந்துவிடும் மிண்டும் ஒரு குச்சியைக் கொண்டு நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் வைத்து கலக்கி, அதன் பிறகு கூட தெளிப்பானில் ஊற்றிக் கொள்ளலாம்.

ஒரு ஏக்கருக்கு ஒன்றறை லிட்டர் வரை தேவைப்படும்.
பொன்னீம் கட்டுப்படுத்தும் பூச்சிகள்:

அசுவினி:

இளம் இலைகளின் அடிப்பகுதியில் மற்றும் குருத்துக்களின் நுனிப்பகுதியில் காணப்படும்.

காய்த் துளைப்பான்:

தக்காளி, கத்திரி, வெண்டை மற்றும் மிளகாய்ச் செடிகளைத் தாக்கும் தன்மை உடையது. இதன் பாதிப்பால் விளைச்சல் குறையும்.

படைப்புமு:

இவை பயிரின் இலைகளை உண்ணும். இந்தப் புழு தாக்கிய இடத்தைப் பார்த்தால் மாடுகள் மேய்ந்தது போல இருக்கும். பொன்னீமைக் கண்டதுமே படைப்புழு நடுங்கிவிடும்.
நெல் தத்துப்பூச்சி, நெல் தண்டு துளைப்பான் ஆகியவற்றையும் பொன்னீம் கட்டுப்படுத்துகிறது.


விற்பனை இயக்க யுக்திகள் மூலம் அங்கக வேளாண்மையின் உயர்வு

 

meerkeri

பயிர் சாகுபடி செய்ய அங்கக வேளாண்மை குறைந்த முதலீட்டியான தொழில்நுட்பமாயினும், சில விவசாயிகள் அங்கக பயிர்களை வியாபாரப்படுத்த முடியாமல் உள்ளனர்.
தேவையான, விற்பனை வழிகள், சரியான அரசு வழிகாட்டுதல் போன்றவற்றின் பற்றாக்குறை காரணமாக, அங்கக பொருட்களின் விலை மிகக் குறைந்தே காணப்பட்டது. ஆனால் இன்று, மூன்று ரூபாய் முதல் நான்கு ரூபாய் வரை ஒரு கிலேவிற்கு அதிகமாகவுள்ளது. இது இராசாயன பொருட்களை கொண்ட சாகுபடி செய்வதை காட்டிலும் அதிகமாகும்.

உதகமண்டலத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, (Meerkeri) மீகீரி கிராமம், இது (அங்கக கிராமம் அல்லது) இயற்கை கிராமம் என்றே அழைக்கப்படுகிறது. ஆயினும் இங்கும் அதே சந்தைப் படுத்தும் முறைகளில் இவர்களுக்கு பிரச்சனையுக்கது.

உயிர கிராமம்

இக்கராமத்தை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும், வணிக தோட்டக்கலை நிலையமும், மலைப் பகுதி மேம்பாட்டுத் திட்டமும் ஒருங்கிணைந்து பொறுப்பேற்றுள்ளது.
இங்குள்ள விவசாயிகளுக்கு அங்கக வேளாண்மையின் கீழ் பயிற்சியளிக்கப்பட்டுள்ளது. பஞ்சகாவ்யா (panchagavya), தசகாவ்யா (Dasagavya), உயிர் ஆற்றல் மக்கரம் (Biodynamic compost), மண்ப்புழு உரம் (vermicompost), பாஸ்போபாக்டீரியா (phosphobacteria), கெள பேட் பிட் அசேஸ்பைரில்லம் (cow pat pit Azospirillum), உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான டிரைகோடர்மா வீரைட் (Trichoderma viride) மற்றும் சுடோமோனஸ   புளோரோசன்ஸ்     (pseudomonas fluorescens) போன்ற  ஈடுபொருட்களை இந்நிலையங்களே பயிர்  வளர்ச்சிக்கு  வழங்குகிறது.

அதிக சாகுபடி

இதன் மூலம் இராசாயன உரங்களை காட்டிலும் இம்முறையில் 5 - 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக திரு. M . சேகர் என்ற விவசாயி கூறினார். ஆனால் உண்மையான பிரச்சனை யாதெனில், வியாபார வழிகளில் நாம் பின்னடைந்துள்ளோம். மேலும், தயாரைிக்கப்பட்ட பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதில்லை. சில அரசு சாரா நிறுவனங்கள் இந்த பொருட்களை வாங்க முற்பட்டபோதும், அதற்கு தகுந்த பணத்தை அவர்கள் தருவதாக எந்த உறுதியுமில்லை.

அங்கக கூட்டமைப்பு

இந்த சூழ்நிலையில், அக்கிராம மக்கள் முனைவர். செல்வராஜ் - ன் வழிகாட்டுதல், அங்கக விவசாயிகள் சங்கத்தினை அணுகி, அங்கக வேளாண்மை தொடர்பான விஷ்யங்களையும், இந்து செய்தித்தாள் மூலமாக வியாபார வழிகளையும் அறிந்து மீகீரி விராமத்தின் வியாபார வழிகளை மேம்படுத்தினர்.
“அச்சங்கத்தின் பிரதினிதிகள் உடனடியாக வந்து அக்கிராமத்தை பார்வையிட்டு, அங்குள்ள விவசாயிகளுடன் உரையாடினர். அவர்கள் விவசாயிகளின் பொருட்களில் திருப்தி அடைந்து, முற்பணம் கொடுத்து, அங்கக பொருட்களை பெற்று கொண்டார்” இவ்வாறு திரு. M. சேகர் கூறினார்.

நஞ்சில்லா உணவு

அங்கக விவசாயிகள் சங்கத்தில் கிட்டத்தட்ட நாடு முழுவதும் 10,000 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். மேலும் 200 கிளைகள் கொண்டு, “நஞ்சில்லா உணவு” என்னும் வர்த்தக குறிப் பெயரில் தங்களது பொருட்களை சற்தைப் படுத்துகின்றனர்.
விவசாயிகளை ஊக்குவிக்கும் விதமாக, அரசு செயல்படும் முறைகளை அங்கக விவசாயிகளுக்கு நாடு முழுவதும் ஏற்படுத்தலாம். மேலும் அங்கக விவசாய முறை குறைந்த செலவுத்திட்டத்திலானது, இடர் இல்லாத விவசாய முறை என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
இம்முறை விவசாயிகளுக்கும், சுற்றுப்பரத்திற்கும் சல்ல தாக்கத்தை அளிக்கிறது.

தொடர்புக்கு
திரு. M .சேகர்,
மீகீரி, (Meerkeri),
B. மணிகாட்டி அஞ்சல் (B.Manihatty p.o.,)
நீலகிரி  (The Nilgris)
மற்றும்
திரு. R. ரங்கநாதன்,
16, வணிகர தெரு,
திருப்போரூர் (Thirupporur),
தமிழ்நாடு - 603110.
மின்னஞ்சல் : tedetrust@rediffmail.com
தொலைபேசி : 044 - 27478669
044 - 27446793
அலைபேசி : 94433 – 46369


ஓர் எளிய பயிற்சி : கன்னியாகுமாரி விவசாயிகளுக்கு மண் பானையின் மூலம்

 

mudpotplantnutrition

தமிழ்நாட்டின் கன்னியாகமாரி மாவட்டம், கோழிக்கோடு பொதையை (Kozhikodupothai) சார்ந்த விவசாயிகளிடையே, பூச்சி விரட்டி மற்றும் பயிர் வளர்ச்சிக்குரிய உருவகங்கள் பாரம்பரியமாக இருந்துள்ளது.
அவ்வாறான பாரம்பரிய முறையான, “மண்பானை செடித் தைலம் (manpannai sedi thailam)” செடிகள் வளர்ச்சிக்கு தேவையான சத்தினை தருவதுடன் பூச்சி விரட்டியாகவும் செயல்படுகிறது.

வயல் பரிசோதனை

முதலில் பரிசோதனைக்காக ரோஜா சாகுபடியாளர் செல்வி. S. தங்கம் அவர்களின் நிலத்தில் ஒரு சிறு பகுதியில் மேற்கொண்டனர். இது இரசாயன கூடுதலாக, இவரது ரோஜா செடிகளுக்கு பஞ்சகாவ்யாவும் உபயோகிக்கப்பட்டது. மண் பானை உருவங்களில் ரோஜா செடிகளை வளர்ப்பதன் மூலம் பெரிய அளவு பூக்களாகவும்ஈ அதிக சாகுபடியுடன் நல்ல வளர்ச்சியை அளிப்பதாகவும் பூக்கள் நல்ல நிறத்துடன், அதிக வைப்பு திறன் பொண்டதாக இருக்கிறது என்று செல்வி. தங்கம் கூறுகிறார். மேலும் பூக்கள் பறித்த 2 முதல் 3 நாட்களுக்கு புதியதாகவே உள்ளதாகவும் கூறுனார்.

இயற்கை வேளாண்மை

லண்டனில் நடந்த ஏஷ்டன் விருது வழங்கும் விழாவில், விவேகானந்தா கேந்தர - இயற்கை வள மேம்பாட்டுத்திட்டத்தின் நிகழ்படம் ஒன்றில் செல்வி. தங்கம் இயற்கை வேளாண்மை மூலம் உணவு உற்பத்தியை பெறுக்குவது குறித்த கருத்து பறிமாற்றத்தில் இடம்பெற்றார்.
இவரது புதிய முயற்சி, அனைத்து விவசாயிகளையும் ஊக்குவிக்கும் விதமாக அமைத்தது.
ஆரம்ப காலத்தில், விருப்பமில்லாமல் இரசாயன உரங’களை நிறுத்திவிட்டு, குறைந்த அளவு நிலத்தில் இயற்கை உரங்களை கொண்டு பரிசோதித்தனர். ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைத்த பொருளாதார பயன்களை மனதில் கொண்டு, இயற்கை வேளாண்மையை பின்பற்ற ஆரம்பித்தனர். எடுத்துக்காட்டாக, செல்வி. தங்கம், இரண்டு வருடத்திற்கு முன்பு, ஒரு ஏக்கர் ரோஜா சாகுபடிக்கு 3500 ரூபாய் செலவிட்டுயிருக்கிறார். ஆனால் இன்று ஒரு ஏக்கருக்கு 1300 ரூபாய் மட்டுமே செலவிடுகிறார்.

குறையும் செலவுகள் :

மண் பானை முறையில் இயற்கை விவசாயம் மேற் கொள்வதன் மூலம் பெருமளவு செலவு குறைவதாக செல்வி. தங்கம் கூறுகிறார். ஓய்வு பெற்ற வேளாண் அலுவலரும், தலை சிறந்த இயற்கை வேளாண் விவசாயியும் ஆன திரு. முருகன் அவர்கள் இம்மண் பானை முறையை முன்னேற்றியவர் ஆவார். மேலும் மத்திய பிரதேசத்தின் பயிற்சியான பாரம்பரிய உருவகம் ஒன்றை இப்பகுதியின் மக்கள் உபயோகிக்கும் முறையில் மேம்படுத்தினார் என்று திரு. அரவிந்தன் சமூக விஞ்ஞானி விளக்கினார்.
செல்வி. தங்கம் அவர்களின் ரோஜா தோட்டத்தில் இம்முறை பரிசோதனை முடிந்தவுடன், மற்ற அனைத்து விவசாயிகளுக்கும் பயிற்சியளிக்கவும் திட்டமிட்டு இருந்தனர்.
இந்த தைலத்தை தயாரிக்க தேவையானதாக திரு. அரவிந்தன் கூறுவது வேம்பு, எருக்கு, நொச்சி ஆகியவை சுமார் 50 கிராம் பொடி செய்த பயிறுவகைகள் (ஏதேனும் ஒரு பயிறு), 1 லிட்டர் தயிர் அல்லது அடர்த்தியான மோர், 1.5 லிட்டர் தண்ணீர் ஆகியவையாகும்.

முதலில் இலைகளை நன்கு அரைத்து கூழாக்கி கொள்ளவும், அதை அரைத்து வைத்துள்ள பயிர் பொடியுடன் கலக்கவும். பின் தயிர் மற்றும் தண்ணீருடன் இவ்விழுதை நன்கு கலக்கவும். இதை ஒரு மண் பானையில் வைத்து, அதன் வாயையை ஒரு துணியை கொண்டு மூடிவிடவேண்டும்.
பின், ஒவ்வொரு நாளும் இதை இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கலக்க வேண்டும். இவ்வாறு 15 - 20 நாட்களுக்கு பிறகு, இந்த தைலத்தினை பயன்படுத்தலாம். ஒரு ஏக்கர் நிலத்திற்கு இந்த தைலத்தினை 20 லிட்டர் தண்ணீரில் கரைத்து, இலைகளின் மீது தெளிக்கப்பட வேண்டும்.
இதனை தெளிக்கும் நேரம் மிக முக்கியமானது. அதிகாலை நேரத்திலும், அந்தி சாயும் மாலையிலும் இதை தெளிக்க சிறந்ததாகும்.

கட்டுப்பாடு முறைகள் :

இதை தெளிப்பதன் மூலம் பல பூச்சிகள் கட்டுப்படுத்தப்பட்டு, செடிக்கு நல்ல ஊட்டச்சத்து தருவதுடன் நல்ல வளர்ச்சியையும் அளிக்கிறது. இயற்கை இடுபொருட்கள் பல்வேறு பயன்களை தரவள்ளது. இது ஈடுபொருள் செலவினை குறைப்பதுடன், சுற்றுச் சூழல் மாசடைவதை தடுக்கிறது.
“இரசாயன உரங்களை உபயோகிக்கும் நிலத்தினையும், இயற்கை ஈடுபொருட்களான பஞ்சகாவ்யா, மண்புழுஉரம் போன்றவற்றை உபயோகிக்கும் நிலத்தையும் ஒப்பீட்டல் பார்க்கையில், இயற்கை உரம் உபயோகிக்கும் நிலத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கையில், இயற்கை உரம் உபயோகித்த நிலத்தில், அதிக மண்ப்புழு, எறும்பு, மரவட்டை போன்ற உயிரிகள் காணப்படும்” என்று திரு. அரவிந்தன் விளக்குகிறார்.

பயனுள்ள உயிரிகள் :

விவேகானந்தா நிலையத்தின் மூலம் நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் பல தரப்பட்ட நிலத்தில் மண்புழு மற்றும் எரும்புகளின் இருப்பு குறித்து கணக்கிடப்பட்டது. இதன் மூலம் இராசாயன உரங்கள் உபயோகிக்கப்பட்ட நிலங்களில் தொந்தரவு செய்யப்பட்டது. சில நிலங்களில் இவ்வாறான உயிரிகள் சிறிதும் இல்லாமலும் இருப்பது கண்டறியப்பட்டது.
சில விவசாயிகள் இதன் பின், இயற்கை விவசாய முறைக்கு மாறினர், இப்போது அவர்களது நிலத்தில் உயிரிகளை பார்க்க முடிந்தது.

தொடர்புக்கு :
திரு. S. அரவிந்தன்
மின்னஞ்சல் : ngc_vknardep@sancharnet.in
vknardep@gmail.com 
அலைபேசி :  9443748714
தொலைபேசி : 04652246296
04652247126.


காய்கறிகளில் வருடந்தோறும் செயல்படுத்தப்படும் பிரெட் சாண்விச் முறை தொழில்நுட்பம்  

 


sandwichmethod

பழப் பயிர்களை காட்டிலும், காய்கறிகளின் ஆயுட்காலம் மிக குறைந்ததாகும். வேண்டுமானால் நவீனத் தொழில்நுட்பங்கள் மற்றும் ஈடுபொருட்களின் மூலமாக இதன் ஆயுட்காலத்தை நீடிக்கலாம்.
எளிமையான காய்கறி வளர்க்கும் முறைகளை வருடம் முழுவதும் பின்பற்றுனோமானால், விவசாயிகளுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும். இது நவீன தொழில்நுட்பங்களோ, விலை உயர்ந்த உபகரணங்களோ அல்லது ஈடுபொருட்களிலோ இல்லாமல் விவசாயிகள் நன்கு பயிர் சாகுபடி செய்ய உதவும்.
முனைவர் G. நம்மாழ்வார், இயற்கை விஞ்ஞானியான இவர் “பிரட் சாண்விச்” முறையை பின்பற்ற, நிலம் நன்கு பக்குவப்படுத்தி தயார் அசய்தபின், பரிந்துரைக்கப்படும் செயல் முறைகளை பின்பற்றுவேமானால், ஒருவர் மீண்டும் இரண்டாம் முறையாக நிலத்தை பக்குவப்படுத்த தேவையில்லை என்று கூறுகிறார்.

நல்ல / அதிக சாகுபடி :

சாண்விச் முறை பெயர் விளக்கம் ? நாம் உண்ணும் சாண்விச்சில் காய்கறிகளையும், முட்டைகளையும் இரண்டு ரொட்டியின் நடுவே வைத்து உண்கிறோம். அதேபோல் தோட்டக்கலையில் அதிக சாகுபடி பெற இம்முறை பயன்படுகிறது. இங்கு மேல்தட்டு மண்ணிற்கும், அடிதட்டு மண்ணிற்கும் இடையில் கலப்பு உரம் போடப்படுகிறது. அதிக செயல்பாட்டுக்கு, கலப்பு உரத்திற்கு பதிலாக கரித்துண்டுகளையும் பயன் படுத்தலாம் என்று முனைவர் நம்மாழ்வார் கூறுகிறார்.
அதன்படி, சத்தான உணவிற்கு, வளமான, ஆரேக்கியமான மண் அடிப்படையானதாகும்.
நுண் உயிர்களை உண்பதன் மூலம் மண்ணின் நீர்பிடிப்புத்தன்மையை அதிகப்படுத்தி ஒளிச் சேர்க்கையை கொண்டு அதிக சூரிய வெப்பத்தை கிரகிப்பதன் மூலம், அதிக மகசூலை அடையலாம். இம்முறையை பின்பற்றுவதே, “மண் சாண்விச்சிக் முறையாகும்”. மேற்தட்டு மண்ணாணது இடைத்தட்டு மண்ணை விட, இறுகி போகாமல் அதிக நுண்ணுயிருகள் வளர உதவுகிறது. கோதுமை மற்றும் முள்ளங்கியின் வேர்கள் 6.0 செண்டி மீட்டறுக்கு ஆழமாக வளரும்.

ஆரோக்கியமான நிலத்திற்கு :

வளமான நிலத்திற்கு முக்கியமாக நுண் உயிரிகள் சுமார் 60 செண்டிமீட்டர் (centimeter) ஆழம் வரை காணப்பட்வேண்டும். இதே சமயம், மேல்தட்டு மண் புதைக்கப்படாமல் விவசாயிகள் பார்த்துக் கொள்ளவேண்டும். இதற்கு முதல் படியாக, மேல்தட்டு மண்ணை எடுத்து தனியாக ஓர் இடத்தில் வைத்துவிட்டு இரண்டாவது படியாக அதன் அடி மண்ணை இரண்டாக பிரிக்கலாம்.
மூன்றாவது நிலையாக, நெருக்கமாக கலப்பு உரத்தினை பிரிவுபடுத்தி இடவேண்டும்.
இவை முடிந்தவுடன், தனியாக வைக்கப்பட்டுள்ள மேல்தட்டு மண்ணிணை உரத்தின் மீது போடவேண்டும். இவ்வாறு முனைவர். நம்மாழ்வார் கூறினார். இம்முறையை “மண் சாண்விட்சிங் “ என்றும் கூறுவர்.
முள்ளங்கி மற்றும் கீரை வகைகளை ஓரங்களில் பயிரிடலாம். காய்கறிகளான தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய் மற்றும் மிளகாய் ஆகியவற்றுக்கு அதிக இடைவெளி விட்டு பயிரிடவேண்டும்.

ஓர் வகை பயிரிடுதல் - தவிர்க்க :

ஓரே வகை பயிரிடுதலை தவிர்க்க வேண்டும். ஏனெனில், ஓர் குடும்பத்தைச் சார்ந்த செடிகள் வெளிச்சம், தண்ணீர், சத்துணவு போன்றவற்றிக்கு போட்டியாக நேரிடும். விவசாயிகளுக்கு தொடர் பயிரிடும் முறை பரிந்துரைக்கப்படுகிறது. இம்முறையில் பயிரிட பட்டிருக்கும் செடி வெளிரும் முன் அடுத்த வெடியை நடுதல் அல்லது விதையை விதைத்தலாகும்.
அறுவடைக்கு பின் அச்செடிகளின் தழைகளை வெட்டி நிலத்திலேயே போட்டு விடவும். இது இயற்கை ஈடுபொருளாக மாறி நல்ல தரத்தையும், அதிக அளவு சாகுபடியையும் தரும்.
தடுத்த பிணைப்பு :
ஒருவரின் அனுபவத்தின் மூலம் சிறந்த பிணைப்பினை கண்டறியலாம். கண்ணி விதியின் படி பயிறு வகைகளும் அதன் அடுத்து பயிறற்ற வகைகளையும் விதைக்க வேண்டும்.
பாத்தியின் நீளம் எவ்வளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் அதன் அகலம் சுமார் 120cm இருக்குமாறு அமைக்க வேண்டும்.
ஒரு தனி மனிதருக்கான ஒரு நாளைய காய்கறி தேவைக்கு 1.2 மீட்ர் * 7.5 மீட்டர் பாத்தி போதுமானதாகும். அதாவது 200 கிராம் காய்கறிகளாகும். செடிகளுக்கு தெளிப்பு நீர் அல்லது பூ வாளி அல்லது பிளாஸ்டிக் குழாய்கள் இவற்றில் ஏதேனும் ஒன்றை கொண்டு நீர் பாசானம் செய்ய வேண்டும். ஏனெனில், இவைகள் தாம் மழைத்தூறல் போன்ற விளைவினை ஏற்படுத்தும்.
பாத்திரங்கள் சுத்தம் செய்த கழிவு நீர், தரையை சுத்தப்படுத்திய நீர், இவற்றையும் செடிகளுக்கு பாசானம் செய்ய பயன்படுத்தலாம்.
செடிகளுக்கு நீர் பாய்ச்ச, மாலை நேரமே சிறந்ததாகும் என்று நம்மாழ்வார் கூறகிறார்.

குறைந்தபட்ச வருமானமாக :

இம்முறையை கடைபிடிப்பதன் மூலம், ஐந்து பேர் உள்ள குடும்பத்திற்கு வருடத்திற்கு 25 செண்டில் (cents) காய்கறிகள் பயிரிடலாம். இது வருடம் முழுவதும் குறைந்தளவு வருமானம் ஈட்டி தரும்.
தற்போது இந்தியா முழுவதுமாக சுமார் 2500 விவசாயிகள், இம்முறையை பின்பற்றுபின்றனர்.

தொடர்புக்கு :
முனைவர். G. நம்மாழ்வார்,
மின்னஞ்சல் : nammalvar @gmail.com
அலைபேசி : 9442531699.


முக்கிய தேவை : வெற்றிக்கு மதிப்பூட்டுதல் வழிவகுக்கும்

 

வேலையாள் பற்றாக்குறை, தொடர்ந்து அதிகரிக்கும் இரசாயன உரங்கள் மற்றும் பூச்சி கொல்லிகளின் விலை, வியாபாரம் செய்யும் வழிகள், சரியான விலை நிர்ணயத்தில் வழிகாட்டுதல் இல்லாமை, சாகுபடி செய்த பொருட்களின் சந்தைப்படுத்தும் முறை போன்று பல பிரச்சனைகள் அதிகரித்து கொண்டேயுள்ளது. இதன் காரணமாக, விவசாயிகள் குறைத்த மற்றும் நிரந்தர வருவாய் இருந்தாலும் போதும் என்று கருதுகின்றனர். இப்போது குறைந்த முதலீடு நல்ல எதிர்பலன் ஆகியவையே முக்கிய சிந்தனையாகவுள்ளது. இதன் பின்விளைவாக, பல சிறு விவசாயிகள் காளான் சாகுபடியை தொடங்கினர். இவ்வகை விவசாயத்தில் குறைந்த முதலீட்டில் அதிக பயன்கள் பெறமுடியும்.

இலாபகரமான முறை :
திரு. ஜார்ஜ் தாமஸ், 4.5 ஏக்கர் நிலமுடைய சிறு விவசாயி இவர் பல்வகையான பயிர்களை இவரது நிலத்தில் வளர்க்கிறார். ஆனால் காளான் வளர்ப்பில் மிகவும் ஆர்வமுற்றார். தற்போது குறைந்த முதலீட்டில் அதிக பயன்களை தரும் வகைகளையே விவசாயிகள் கடைப்பிடிக்கின்றனர்.
இயற்கை காளான் சாகுபடியில் இவரே எடுத்துக்காட்டாவார். இவர் விருப்பமுள்ள பிற விவசாயிகளுக்கு, இதில் பயிற்சி வகுப்புகளும் நடத்துகிறார். முதலில் ப்ளுரோடஸ் சஜர்கஜி என்னும் காளான் வளர்த்தார். இதற்கு கூட்டுறவு வங்கியில் ருபாய் 1 லட்சம் வங்கி கடன் பெற்று, கொட்டகை அமைத்து, மேம்படுத்தினார். காற்றோட்டத்திற்காக, நன்கு சன்னல்கள் சமமபன இடைவெளிவிட்டு அமைக்கப்பட்டது. கூடுதலாக, கொசு வலையும், சன்னல்களின் வழியாக பூச்சிகள் வருவதை தடுக்க போடப்பட்டது.

வெப்பத்தை குறைக்க :
மேற்கூரை ஓடுகளில் வெய்யப்பட்டு, அதன்மேல் பச்சை நிழற் வலை விரிக்கப்பட்டது. கூரையின் கீழ், மேலும் வெப்பத்தை குறைக்க தென்னங்கீற்றுகள் அமைக்கப்பட்டது.
ஒரு அங்குலமுள்ள ஜல்லி கற்கள் கொண்டு தளம் அமைக்கப்பட்டு அதற்கு தினமும் தண்ணீர் தெளிக்கப்பட்டு, ஈரப்பதம் பராமரிக்கப்பட வேண்டும். பின் இதில் 600 பைகள் அமைக்கப்பட்டது.
இரண்டாவதாக, தமிழ்நாடு வேளான் பல்கலைக் கழகத்தின் மூலம் வெளியிடப்பட்ட கோ 2 ரக வகையை, கொட்டகையின் கீழ் தொங்கும் பைகள் அமைத்து, அங்கு காளான் வளர்க்கும் ஊடமாக வைக்கோல் வைக்கப்பட்டது. இங்கு தேவையான அனைத்து வேலைகளையும் இவர்கள் செய்துகொள்கின்றனர். வைக்கோலில் கிறுமி நீக்குதல், அதை பைகளில் நிரப்புதல், காற்றின் ஈரப்பதத்தை பராமறிக்கும், கொட்டகையின் கீழ் தண்ணீர் தெளித்தல் போன்ற அனைத்தும் இவர்களாகவே செய்து கொள்ளப்படுகிறது.
தற்போது திரு. ஜார்ஜ் (George) அவர்கள் தினமும் 5 கிலோ காளான் சாகுபடி செய்கிறார்.

வியாபார முறைகள் :
திரு. ஜார்ஜ் எப்படி அவரது பொருட்களை சந்தைப்படுத்துகிறார் ? உள்நாட்டு சந்தையில், ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்து, ஒரு நாளில் 500 ரூபாய் சம்பாதிக்கிறார். இவ்வாறாக 2006 - ல் 15,000 ரூபாய் நிகர வருமானம் அடைந்தார். 2007 - ஆம் ஆண்டில் 25,000 ரூபாய் நிகர வருமானமாக பெறுகிறார்.
கூடுதலாக, புதிய àய காளான்களை கொண்டு ஊறுகாய் தயாரிப்பிலும் ஈடுபடுகிறார். இம்மதிப்âட்டப்பட்ட காளான் ஊறுகாய்கள் ஐக்கிய நாடுகளுக்கும், வலைகுடா நாடுகளுக்கும் 300 கிராம் பாட்டில்கள் ஏற்றுமதி செய்கிறார்.

வர்த்தக குறிப்பெயர் :
ஆயுர் காளான்கள் என்னும் பெயரில் 10 பேர் கொண்ட ஒரு விவசாய குழு, இதை வியாபாரப்படுத்துவதாக கேரளாவின் கோழிக்கோடு, இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி கழகத்தை சார்ந்த தலைமை விஞ்ஞானி, முனைவர் T.K. யாகோப் கூறுகிறார்.

தொடர்புக்கு :
திரு. ஜார்ஜ் தாமஸ்,
பளைக்க வயல் வீடு,
களங்கலி,
அத்தியோடி அஞ்சல்,
கூராசள்,
கோழிக்கோடு, கேரளா.
மற்றும்,
முனைவர் T.K. யாகோப்,
முதன்மை விஞ்ஞானி,
இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிலையம்,
கோழிக்கோடு,
கேரளா - 673012.

மின்னஞ்சல் : Jacob tk@spices.res.in
அலைபேசி : 09447539967


பெண்களுக்கான - குறைந்த முதலீட்டில் அதிக வருவாய்த் திட்டம்


panchakavya

மற்ற தொழில்களை காட்டிலும், விவசாயம் நிலையான நிதானமான தொழிலன்று, நிதானமற்ற சந்தை, நிலையில்லாத விலை, சாதகமற்ற வானிலை போன்ற காரணங்களினால் விவசாயிகள் பாதிப்படைகின்றனர். இதன் விளைவாக, பெண் விவசாயிகளை ஊக்குவித்தல், பொருளாதார பாதுகாப்பினை விவசாயிகளுக்கு ஏற்படுத்துகின்றது.

முதலீடு இல்லா தொழில் :
பெண்கள் தங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பயனுள்ள விவசாய பயிற்சிகளை மேற்கொள்ள, பல நிறுவனங்கள் வழிகாட்டுகின்றன. ஆனால் இதில் முதலீடற்ற நிறுவனத்தை தேர்வு செய்வதில் கவனமாக செயல் பட வேண்டும். இதற்கு தகுந்த எடுத்துக்காட்டாக திகழ்பவர் கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தை சார்ந்த திருமதி. லைசம்மா பேபியும் (Lysamma Baby) அவரது குழுவினர்களும் மண்புழு வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டனர்.
இவர்கள் அனைவரும் ஏழை விவசாய குடும்பத்தை சார்ந்தவர்கள். இவர்களது கணவர்கள் பெரும்பாலும் 90 - 100
ரூபாய் வருமானம் பெறும் விவசாய தின கூழிகளாகவே    உள்ளனர்.

வயல் வெளி ஆய்வு :
பெண்கள் அனைவரும், மண்புழு தொழில்நட்பங்களில் பயிற்சி மேற்கொள்ளுமாறு, பயிற்சி ஏற்பாட்டாளரான முனைவர் T.K. யாகோப் பறிந்துரைக்கிறார். பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களான இவர்கள் ஒரு சுய உதவிக் குழு அமைத்து கடனதவி பெற்று முன்னேறலாம் என்று அறிவுரை வழங்கினார். இதற்கு ஏற்றார் போல் “நிதி” என்னும் பெயரில் சுய உதவிக் குழு அமைத்தனர்.
இவர்களின் சார்பாக விஞ்ஞானிகளும், கிராம பஞ்சாயத்தும் துவக்க தொகையாக ரூபாய் 5000 வழங்கி, மண்புழு தயாரிப்பு பிரிவினை தொடங்கினர்.
திரு. லைசமா அவர்களின் நிலத்தில் இத்தயாரிப்பு பிரிவினை கட்டமைத்தனர் இங்கு 4 மண்புழு தொட்டிகள் அமைத்து அதை சுற்றி எறும்பு குழிகள் இருக்குமாறு கட்டமைக்கப்பட்டது. இத்தொட்டியின் மேற்புரத்தை எலிகள், பல்லிகள் மற்றும் பறவைகள் தீண்டாதவாறு இரும்பு வலை போடப்பட்டது. மேலும் தொட்டியினை மழையில் இருந்து பாதுகாக்க கொட்டகையும் அமைக்கப்பட்டது.
தொடக்கத்தில் வளர்ப்பு இன மண்புழுக்களை வேளாண்மை அறிவியல் நிலையம் வழங்கியது. குழுவின் தலைவியான திரு. லைசமா சொந்தமாக பசு ஒன்றும், கன்று ஒன்றும் வைத்துள்ளார், இதன் மூலம் தேவையான மாட்டுச் சாணத்தை விநியோகம் செய்கிறார்.
இதன் மூலம் மூன்றே மாதங்களின் தயாரிப்பு பிரிவு செயல்பட ஆரம்பித்தது.
கழிவுகளின் பயன்பாடு :
குழுவின் உறுப்பினர்கள் தங்களது சமையல் கழிவுகள் மற்றும் பண்ணை கழிவுகளை உரம் தயாரிக்க பயன்படுத்தினர்.தினமும் 2 - 3 மணி நேரம், ஓய்வு நேரங்களில் செலவிடுகின்றனர்.
முதல் தயாரிப்பு, புழுக்களை தொட்டியில் விட்ட 60 நாட்களில் தயாரானது. 200 கிலோவிற்கும் அதிகமான உரத்தை முதலீடு மற்றும் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக செலவிட்ட காரணத்தாலாகும்.
இக்குழு உறுப்பினர்கள், சிறு அளவு விவசாயமாக தென்னையின் இடையில் காய்கறிகள் மற்றும் வாழையை பயிரிட்டனர்.
பிறரை சார்ந்து இருத்தல் :
மண்ப்புழு உரத்தை கொண்டு தயாரிக்கப்பட்ட காய்கறிகள் உயர்வானதாகவும், உள்ளூர் சந்தையை சார்ந்து இருக்கும் நோக்கம் அகற்றப்பட்டதாகவும் கூறுகின்றனர். இக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இயற்கை வேளாண்மைக்கு மாறி தங்களது நிலத்திற்கு இம்மண்புழு உரத்தை மட்டுமே உபயோகிப்பதாகவும் கூறுகின்றனர். அதிகபடியாக உரம் இருப்பின் அவற்றை 8 - 10 ரூபாய் வரை ஒரு கிலோவிற்கு நிர்ணயித்து, விற்பனை செய்கின்றார். தற்போது பலர் இவர்களது தயாரிப்பினை பெற கோரிக்கையிடுகின்றனர்.
வங்கி வைப்புப்பணம் :
சொந்தமாக வருவாய் பெற்று, தற்போது வைப்புப்பணமாக 25,000 ரூபாய் வைத்துள்ளதர்க்கு மிகவும் பெருமை படுவதாக, திரு. லைசமா கூறுகிறார்.
கடந்த இரண்டு வருடங்களில் மொத்த வருமானமாக 53,514 ரூபாய் இம்மண்ப்புழு உரத்தின் மூலம் மட்டும் பெற்றுள்ளனர்.
தொடர்புக்கு :
திரு. லைசம்மா பேபி,
பரம்புகட்டில் வீடு,
செம்பநோட அஞ்சல்,
கோழிக்கோடு,
கேரளா - 673528.
மின்னஞ்சல் : jacobtk @ spices.res.in
தொலைபேசி : 0496 - 2662372.


செய்முறை தீர்வு


தரிசுநிலங்களை வளமான இடங்களாக மாற்றம் செய்முறை தீர்வுகள்.
இயற்கை வளம் மிக்க பொருளான நீரினை, நாம் தவறாகப் பயன்படுத்துகிறோம். இதன் விளைவாக நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அறிவியல் கண்டுபிடிப்புகளை போல நீரினை கண்டுபிடிக்க இயலாது, இதற்கு நாம் வான்மேகங்களை தான் சார்ந்து இருக்க வேண்டும்.
பருவமழை தோல்வி மற்றும் திடீர் கணமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பான்மையான நீர்பகுதியையும், மேற்பரப்பு மண்ணையும் அடித்து செல்கிறது. இச்சூழ்நிலை எவ்வளவு கடினமானது என்று உணருமாரு இயற்கை விஞ்ஞானி, திரு. நம்மாழ்வர் கூறுகிறார்.
நகரமயமாக்குதல், தொழிற்சாலைமயமாக்குதல் போன்ற காரணங்களால் மரங்கள் அழிக்கப்படுகின்றன. இதன் தாக்கம் மழையின் மையமாகும்.

மண் ஈர்ப்புத் திறன்:
மழையினை சார்ந்து இருக்கும் ஒவ்வொரு விவசாயியும், மழையின் ஒவ்வொரு துளியையும் சேமித்து, மண்ணின் ஈரப்பதத்தை பாதுகாக்க வேண்டும். “குறைந்த நீரீயை கொண்டு அதிக சாகுபடி செய்தல்” என்பது மட்டுமே ஒரே குறிக்கோளாகும். இக்குறிக்கோளை அடைய கலப்பு பயிரிடுதல் மரம் வளர்த்தல், விலங்கின பெருக்கம் ஆகியவை ஒருங்கிணைத்து செய்யல்பட வேண்டும்.

சரியாக திட்டமிடுதல்:

தெளிவான திட்டமிடுதல் மற்றும் குறைந்த முதலீடு மூலமாக தரிசு நிலங்களை வளம்மிக்க நிலங்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக, பயிர் முறை பாங்கினை கவனமாக கண்காணிக்க வேண்டும். விவசாயிகள், வறட்சி எதிர்பாற்றல் மிக்க பாரம்பரிய பயிர்களை குறைந்த நீர் செலவில் பயன்படுத்தலாம். ஏனெனில் பாரம்பரிய இரகங்களில் பூச்சி தாக்குதல் குறைவாகும். கூடுதலாக, சிறு குளம் அல்லது குட்டை போன்றவற்றை தங்களது நிலங்களில் உருவாக்கலாம். இவை மழை நீர் சேகரிப்பு இடங்களாகவும் மீன் வளர்ப்பு தொட்டிகளாவும் உபயோகப்படும்.

அஸ்சோலா வளர்ப்பு:
கால்நடைகள் வைத்திருப்பின், அவற்றின் நீர் நிலைகளில் அஸ்சோலா வளர்க்கலாம். இவைகளை அறுவடை செய்து கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுத்துவதன் மூலம் கால்நடைகளின் பால் உற்பத்தி அதிகரிப்பதாகவும், கோழிகளின் முட்டை உற்பத்தி அதிகரிப்பதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் சாணம் நிலங்களில் உரமாக உபயோகிக்கலாம். இதன் விளைவு 3 முதல் 5 வருடங்களில் உரமிட்ட தரிசு நிலங்கள் செம்மை நிலமாக மாறிவிடும்.
மேலும் மரங்களில் இருந்து உதிறும் இலைசருகுகளை முழு பகுதியிலும் இடுவதன் மூலம் நில போர்வையாக பயன்படுத்தலாம்.
நில போர்வையானது, ஈரப்பதம்நீராவி தடுப்பதுடன், மண்புழுக்களுக்கு இருப்பிடமாகவும், களை கட்டுப்பாட்டு பொருளாகவும் உதவுகிறது. இலை சருகுகள் மட்டுமின்றி, சமையறை கழிவுகள், குப்பைகள் போன்றவையை மக்கிய உரம் மற்றும் மண்புழு உரம் ஆகியவையாக மாற்றி நிலங்களுக்கு  பயன்படுத்தலாம்.

நீடித்த வாழ்கைதரம் (Sustainable livelyhood):
ஒருங்கிணைந்த பண்ணைத்திட்டம் வானிலை மாற்றங்களால் ஏற்படும் தாக்கத்தை குறைப்பதுடன் உற்பத்தியாளர் மற்றும் வாடிக்கையாளரின் வாழ்க்கை தரத்தை உயர்த்துகிறது. ஆனால் இச்செய்முறை ஒரு இரவில் செய்து முடிக்க இயலாது. குறைந்த காலமாக 3 முதல் 5 வருடம் வரை நிலத்தை பக்குவப்படுத்தி, சரியான வழிமுறையில் இப்பண்ணைத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும்.

தொடர்புக்கு:
திரு.கே.முரளி,
இந்திய இயற்கை வேளாண் இயக்கம்
மின் அஞ்சல் : sadhguru@gmail.com
அலைபேசி : 94425-316999


மீன் அமிலம் டானிக் தயாரித்த ஆச்சர்ய அனிதா

 

இயற்கை வேளாண்மை பற்றிய நமது பயிற்சிகள், இரண்டு ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் பக்கமாகவும் படர்ந்து கொண்டிருக்கிறது. அவ்வகையில் பயிற்சி பெற்றவர்களில் ஒருவரான அனிதா இவ்வாறு சொன்னார். கம்மம் மாவட்டத்தில் உழவர்கள் மீன் அமிலம் தயாரித்து மிளகாய்ச் செடியில் தெளித்தார்கள். அபார வெற்றி நிறைய விளைச்சல் எடுக்கிறார்கள்.

      மீன் அமிலம் தயாரிப்பது மிகவும் எளிது. மீன் விற்கும் இடத்தில் அல்லது நறுக்கும் இடத்தில் மீதப்படும் செதில், குடல், வால், தலை போன்றவைகளுடன் சம அளவு பனை வெல்லம் சேர்த்து, நன்குப் பிசைந்து, ஒரு பிளாஸ்டிக் வாளிக்குள்  மூடிவைக்கவேண்டும். இருபத்தைந்து நாள் கழித்து, எடுத்து நன்கு கலக்கினால், டானிக் தயார். இந்த வளர்ச்சி ஊக்கியே மீன் அமிலம் 10 லிட்டர் நீருக்கு 100 கிராம் (மில்லி) கலந்துப் பயிரில் தெளித்தால், பயிர் பச்சை கொடுத்து செழித்து வளர்கிறது.

     
அனிதா சொன்ன ஒரு புதுக்கண்டுபிடிப்பும் வியப்பூட்டியது. ஒரு (பனை மரத்தில்) கள் இறக்கும் தொழிலாளி பப்பாளி மரத்தில் சாறு இறக்கி அதைக் கள்ளாக்கி செடி மீது தெளித்து செடி தழைத்து வளர்வதைப் பார்த்தார். இப்போது அவர் பப்பாளியில் கள் இறக்கி வணிக அளவில் விற்பனை செய்வதில் இறங்கியுள்ளார்

அழுகிய பழம் .. அமுதம் தரும் !

 

மேட்டூர் அருகே செட்டியார் கிராமத்துப் பெண்மணி தெய்வாவின் சாதனை வியப்புக்குரியது. இவருக்குப் பத்து ஏக்கர் நிலம் முழுக்க இயற்கை வேளாண்மை. இவர் அமுதக்கரைசல் பஞ்சகாவ்யா தயாரித்துப் பயன்படுத்துகிறார். கொளத்தூர் சந்தையில் கிடைக்கும் அழுகிய பழங்களை வாரிக் கொண்டு வருகிறார். மேட்டூர் பழச்சாறு விற்கும் கடைகளிலிருந்து பழக் கழிவுகளை வாரி வருகிறார். இவைகளை அமுதக்கரைசல் பஞ்சகாவ்யா தயாரிப்பில் பயன்படுத்துகிறார், நிலம்  வளமானது, பயிர் செழிப்பானது இப்போது பக்கத்துத் தோட்டக்காரர்கள் ஆலோசனை கேட்டு அவரிடம் படையெடுக்கிறார்கள்.


அடடே ஆட்டூட்டம்

 

நசியனூர் புஷ்பராணி மோகனசுந்தரம் தம்பதியர், ஆடு தரும் பொருள் கொண்டு ஆட்டூட்டம் (பஞ்சகாவ்யா) தயாரிக்கிறார்கள். இவர்களது தயாரிப்பு மாவட்டங்கள் தாண்டிச் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இவர்களுடைய தயாரிப்புக்கு ஆட்டுச்சாணி தேவை. இதற்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா ? ஆடு (இறைச்சிக்காக) அறுக்கும் இடத்தில் வாளியைக் கொண்டு போய் வைத்து விடுகிறார்கள். அறுக்கப்படும் ஆட்டின் குடலில் இருந்து சாணம் எடுக்கப்பட்டு, ஆட்டூட்டம் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது.
சத்தியமங்கலம், கெஞ்சனூரில் சாலை ஓரமாக உள்ளது குமார் தோட்டம். வேலியை ஒட்டி ஒரு பந்தல் போட்டுப் பந்தலின் கீழ் இறைச்சிக்காக ஆடுகள் வெட்டப்படுகின்றன. வரப்பு ஓரத்தில் தென்னை மரங்கள் உள்ளன. தென்னையை ஒட்டி சிமெண்ட் பூசிய நீர் போகும். குறுகலான வாய்க்கால் உள்ளது. வாய்க்கால் ஓரமாகத்தான் ஆடு அறுக்கும் பந்தல். ஆடு அறுக்கும் போது ஆட்டுக்குடல்களை வாய்க்காலில் கழுவுகிறார்கள். குமார் தோட்டத்து வயல்களில் இயற்கை எருவும் இல்லாமல் நெல் வளர்கிறது. விளைகிறது !


 
   

திருந்திய நெல் சாகுபடி
துல்லிய பண்ணையம்
நன்னெறி வேளாண்
முறைகள்

நன்னெறி ஆய்வக
முறைகள்

நன்னெறி மேலாண்மை
முறைகள்

   
 
 
   

அரசு திட்டங்கள் & சேவைகள்
நீர்வள,நிலவள திட்டம்
வட்டார வளர்ச்சி
வங்கி சேவை & கடனுதவி
பயிர் காப்பீடு
வேளாண் அறிவியல் நிலையம்
விவசாய தொழில்நுட்ப
மேலாண்மை முகாம்

கிசான் அழைப்பு மையம்(1551)
பல்லாண்டு மேம்பாட்டு
குறிக்கோள்

தன்னார்வ தொண்டு
நிறுவனங்கள் &
சுய உதவிக் குழுக்கள்

   
 
 

குறைந்த பட்ச ஆதார விலை
இடுபொருள் நிலவரம்
ஏற்றுமதி & இறக்குமதி
காப்புரிமை

 
 

சுற்றுச்சூழல் மாசுப்பாடு
இயற்கை சீற்ற மேலாண்மை
தகவல் & தொலைத்தொடர்பு
தொழில்நுட்பம்

முக்கிய வலைதளங்கள்

   

வல்லுனரை கேளுங்கள்

 
     
 

|| | | ||||

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2008