கம்பு (பென்னிசெட்டம் க்ளாகம்)
மாவட்டம்/பருவம் |
ரகங்கள் /கலப்பினம் |
1.பாசனம் |
i.சித்திரைபட்டம் (மார்ச் –ஏப்ரல்) |
நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு வளரும் |
கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9 |
ii. மாசிப்பட்டம் (ஜனவரி-பிப்ரவரி) |
|
நீலகிரியை தவிர அனைத்து மாவட்டங்களிலும் கம்பு வளரும் |
கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9 |
2.மானாவாரி |
i.ஆடிப்பட்டம் (ஜீன்-ஜீலை) |
கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9 |
ii. புரட்டாசிப்பட்டம் (செப்டம்பர் – அக்டோபர்) |
கோ 7, கோ (Cu)9, X 7, ICMV 221, த.வே.ப.கழகம் கம்பு கலப்பினம், கோ 9 |
|
|
கம்பின் கலப்பினம் மற்றும் ரகங்களின் விபரங்கள்
விபரங்கள் |
கோ 7 |
X 7 |
CO (Cu) 9 |
பெற்றோர் மரபு |
(CO 6 x PK 560) PT 1921 |
L111 A x PT 1890 |
ICMV 93752 இவற்றிலிருந்து தோந்தெடுக்கப்பட்டது |
பருவகால- பாசனம்/ மானாவாரி |
இரண்டும் |
இரண்டும் |
இரண்டும் |
காலஇடைவெளி (நாட்கள்) |
90 - 100 |
90 |
80-85 |
தானிய விளைச்சல் (கிலோ/எக்டர்) |
மானாவாரி |
2500-2800 |
2513 |
2354 |
பாசனம் |
3000-3500 |
3295 |
2865 |
தாவர உயரம் (செ.மீ) |
130-145 |
155-180 |
186-222 |
பக்கதூர்களின் எண்ணிக்கை |
6-10 |
4-7 |
3-6 |
நிறமி |
பச்சை |
பச்சை நிறமற்றது |
- |
பிசிர் |
அழுத்தமானது |
அழுத்தமானது |
அழுத்தமானது |
50% பூக்கின்ற நாட்கள் |
65-70 |
50-55 |
50-55 |
தானியகதிர் வடிவம் |
உருளை / கூம்பு / சுழல் |
உருளை |
உருளை |
முட்கள் |
- |
- |
- |
தானியகதிரின் நீளம் (செ.மீ) |
22-26 |
25-35 |
33-39 |
தானியகதிரின் அகலம் (செ.மீ) |
3-4 |
- |
8-10 |
தானியத்தின் நிறம் |
கரும்பலகை நிறம் |
கரும்பலகை |
மஞ்சள் நிறம் கலந்த சாம்பல் விதை |
1000 தானியத்தின் எடை (கிராம்) |
6.8-7.2 |
8.0-9.0 |
9-11 |
சிறப்பு பண்புகள் |
பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது |
பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது |
பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது |
விபரங்கள் |
ICMV 221 |
த.வே.ப.கழக கலப்பின கம்பு கோ 9 |
பெற்றோர் மரபு |
ICRISAT கூட்டு |
ICMA 93111A x PT 6029-30 |
பருவகால- பாசனம்/ மானாவாரி |
இரண்டும் |
இரண்டும் |
காலஇடைவெளி (நாட்கள்) |
75-80 |
75-80 |
தானிய விளைச்சல் (கிலோ/எக்டர்) |
|
|
மானாவாரி |
13% >ICTP 8203 |
2707 |
பாசனம் |
-- |
3728 |
தாவர உயரம் (செ.மீ) |
140-200 |
160-180 |
பக்கத்தூர்களின் எண்ணிக்கை |
3-5 |
4-6 |
நிறமி |
- |
- |
பிசிர் |
இல்லை |
அழுத்தமானது |
50% பூக்கின்ற நாட்கள் |
50-55 |
45-50 |
தானியகதிரின் வடிவம் |
இறுகிய - பாதிஇறுகிய ஈட்டி வடிவம்- தலைகீழ் ஈட்டிவடிவம் |
உருளை |
முட்கள் |
பொதுவாக முட்களற்றது |
இல்லை |
தானியகதிரின் நீளம் (செ.மீ) |
- |
25-35 |
தானியகதிரின் அகலம் (செ.மீ) |
பரந்த சுற்றளவு |
3.1-3.6 |
தானியத்தின் நிறம் |
அடர் சாம்பல்நிறம் |
மஞ்சள் கலந்த சாம்பல் |
1000 தானியத்தின் எடை (கிராம்) |
10-15 |
13-14 |
சிறப்பு பண்புகள் |
பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது |
குறுகிய காலத்திற்கு பட்டு போன்ற மென் மயிர் போர்த்திய பூஞ்ச காளானிலிருந்து நோய் எதிர்ப்பு திறனுடையது |
பயிர் மேலாண்மை
நாற்றங்கால்
நிலம் தயார்படுத்துதல்
- ஒரு ஹெக்டேர் நிலத்திற்கு தேவையான நாற்றுகள் 7.5 சென்ட் நிலம் நீர் ஆதாரம் உள்ள இடத்தில் தேர்வு செய்ய வேண்டும். தேங்கிய நீர் பயன்படுத்தக் கூடாது.
- நிலத்தை நன்றாக உழ வேண்டும்.
தொழு உர பயன்பாடு
- 750 கிலோ தொழுஉரம் இட்டு உழுதல் வேண்டும். 500 கிலோ தொழுவுரம் கொண்டு விதைகளை மறைக்க வேண்டும்.
நாற்றங்கால் படுக்கை தயாரித்தல்
- ஒவ்வொரு சென்டிலும் 3 × 1.5 மீ அளவுள்ள 6 பாத்திகள் அமைக்க வேண்டும். 30 செ.மீ அளவுள்ள வாய்க்கால்கள் ஒவ்வொரு பாத்திகளுக்கு இடையேயும் சுற்றியும் அமைக்க வேண்டும்.
- வாய்க்காலின் ஆழம் 15 செ.மீ இருக்க வேண்டும்
- படுக்கை அளவை பொருத்து வாய்க்காலை பூமியில் அகழ்ந்த குட்டையாக பரப்ப வேண்டும்.
குறிப்பு: 6 அடுக்கு பிரிவு கொண்ட ஒரு சென்டிற்கு ஒரு அலகு பாசனம் அமைக்க வேண்டும்.
முதன்மை தொற்றை தடுக்க தேன் ஒழுகல் நோய் பாதிக்கப்பட்ட விதைகளில் பூஞ்சை இலை முடிச்சுகளை நீக்குதல்
- ஒரு கிலோ உப்பை 10 லிட்டர் தண்ணீரில் கரைக்க வேண்டும்.
- உப்பு தண்ணீரில் விதைகளை போட வேண்டும்.
- தேன் ஒழுகல் நோய் மற்றும் பூஞ்சை இழை முடிச்சுகளால் பாதிக்கப்பட்ட விதைகளை நீக்கவும்.
- விதைகளில் உப்பை நீக்க 2 அல்லது 3 முறை தண்ணீரில் விதைகளை நன்றாக கழுவ வேண்டும்.
- நிழலில் விதைகளை உலர்த்த வேண்டும்
- அசோஸ்பைரில்லம் 3 பாக்கெட்டுகள் (600கிராம்),பாஸ்போபாக்டீரியா 3 பாக்கெட்டுகள் (600கிராம்) அல்லது அசோபாஸ் 6 பாக்கெட்டுகள் (1200கிராம்) கொண்டு விதைகளை விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
நாற்றங்கால் படுக்கையை பூச்சிவிரட்டி சுத்தப்படுத்துதல்
சோளக்குருத்து ஈ தொற்றிலிருந்து நாற்றுகளை பாதுகாக்க மண்மேல் 2 செ.மீ ஈரமான மண் 2 கிலோ கலந்து போரேட் 10 G 180 கிராம் அல்லது கார்போபியூரான் 3 G 600 கிராம் கொண்டு தெளிக்க வேண்டும்.
விதைப்பு மற்றும் விதைகளை மூடுதல்
- படுக்கையில் விரல்கள் மூலம் 1 செ.மீ குறைவான ஆழத்தில் சிற்றோடை திறக்க வேண்டும்.
- 7.5 சென்ட்டில் 3.75 கிலோ விதைகள் தேவை (0.5 கிலோ /சென்ட்) மற்றும் சோளகுருத்து ஈ தொற்று உள்ள பகுதிக்கு 12.5 கிலோ/ஹெக்டேருக்கு தரமான நாற்றுகளை உருவாக்க தேவைப்படும்.
- 500 கிலோ தொழுஉரம் அல்லது மக்கிய உரம் தூவி விதைகளை கைகளால் மிருதுவாக மூடவேண்டும்.
குறிப்பு :விதைகளை ஆழமாக விதைத்தால் முளைப்பது பாதிக்கப்படும்.
விதை படுக்கைக்கு பாசனம்
- 6 அடுக்கிற்கும் ஒவ்வொரு வாய்கால்களிலிருந்து நீர் செல்வதற்கு ஒரு நுழைவாயில் அமைக்க வேண்டும்
- வாய்க்காலிலிருந்து நீர் உயரும் வரை நீரை அனுமதிக்கலாம். படுக்கை ஈரமாக இருக்கும் போது தண்ணீர் அணைக்க வேண்டும்.
- பின்வரும் அட்டவணை படி நீர் பாசனம் செய்ய வேண்டும்
இளக்க மண் |
கடின மண் |
முதல் பாசனம் |
விதைத்த உடன் |
விதைத்த உடன் |
இரண்டாம் பாசனம் |
விதைத்த பிறகு மூன்றாம் நாள் |
விதைத்த பிறகு மூன்றாம் நாள் |
மூன்றாம் பாசனம் |
விதைத்த பிறகு ஏழாம் நாள் |
விதைத்த பிறகு ஒன்பதாம் நாள் |
நான்காம் பாசனம் |
விதைத்த பிறகு பன்னிரண்டாம் நாள் |
விதைத்த பிறகு பதினாறாம் நாள் |
ஐந்தாம் பாசனம் |
விதைத்த பிறகு பதினேழாம் நாள் |
|
நாற்றுகளை நாற்று பண்ணையில் பூச்சிதாக்குதலிலிருந்து பாதுகாத்தல்
நாற்றுபடுக்கைகள் விதைப்பதற்கு முன் சரியாக பராமரிக்கப்படவில்லையென்றால் நாற்றங்கால்களை பாதுகாக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள பூச்சிகொல்லியில் ஏதேனும் ஒன்றை 6 லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். எண்டோசல்பான் 35 EC 12 மி.லி, மெத்தில் டெமடான் 25 EC 12 மி.லி, டைமெத்தோயேட் 30 EC 12 மி.லி.
குறிப்பு:
- நாற்றுகளை நாற்றாங்காலில் 18 நாட்களுக்கு மேல் வைக்கக் கூடாது. இல்லையெனில் வளர்ச்சி மற்றும் விளைச்சல் பாதிக்கப்படும்.
- வெடிப்பு ஏற்பட்ட நாற்றுகளை வளர்க்க கூடாது. சரியான அளவில் பாசனம் செய்வதன் மூலம் இதை தவிர்க்க முடியும்.
நிலத்தை தயார் செய்தல்
- இரும்பு கலப்பை கொண்டு இரண்டு முறையும், நாட்டு கலப்பை கொண்டு இரண்டு முறையும் நன்றாக உழ வேண்டும். மண்ணை கட்டிகளின்றி உடைக்க வேண்டும்.
- கடினத்தட்டு மற்றும் உளி கொண்டு மண்ணை உழுதல் : 0.5 மீ இடைவெளியில் உளி கலப்பை கொண்டு மேலோட்டமான ஆழத்தில் கடினதட்டு கொண்டு மண்ணை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை உழுதல் வேண்டும்.
உரம் அல்லது தொழுவுரம் இடுதல்
ஹெக்டருக்கு 12.5 டன் தொழுவுரம் அல்லது மட்கிய உரம் மட்கிய நார் உரம் உழுவதற்கு முன் இடவேண்டும். நாட்டுக்கலப்பை கொண்டு உரங்களை மண்ணுடன் ஒருங்கிணைத்தல் வேண்டும். ஹெக்டருக்கு அசோஸ்பைரில்லம் 10 பாக்கெட்டுகள் மற்றும் பாஸ்போபாக்டீரியா 10 பாக்கெட்டுகள் (அல்லது)அசோபாஸ் 20 பாக்கெட்டுகளை 25 கிலோ மண் மற்றும் 25 கிலோ தொழுவுரத்துடன் கலந்து இட வேண்டும்.
சால் வரப்பு/படுக்கை அமைத்தல்
- சால் மற்றும் வரப்புகளை (3 வரப்புகளுக்கு) 6 மீ நீளம் மற்றும் 45 செ.மீ. அகலம் கொண்டு அமைக்க வேண்டும். தானியங்களை ஊடுபயிர்களில் விதைக்கும் போது வரப்பு 6 மீ நீளமும் தவிர 30 செ.மீ இருக்க வேண்டும்.
- வரப்பு நடுதலை தவிர்த்து, படுக்கை நடுதலின் அளவு 10 சதுர மீட்டர் (அல்லது) 30 சதுர மீட்டர் தண்ணீர் கிடைப்பதை பொறுத்து அமைக்க வேண்டும்.
- பாசன வாய்க்காலை அமைத்தல் வேண்டும்.
- மானாவாரி பாசனத்தில் மண்ணின் ஈரத்தன்மையை பாதுகாக்க, விதைகளை விதைத்த பிறகு வரப்பு அமைத்து ஊடுபயிர் விதையை விதைத்த மூன்றாவது வாரத்தில் தூவ வேண்டும்
உரங்கள் பயன்பாடு
மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி NPK உரங்களை அளிக்கலாம். மண்பரிசோதனை செய்யவில்லையென்றால் அனைத்து வகையான தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பால் சத்து/ஹெக்டர் 70:35:35 என்ற அளவில் இட வேண்டும். கலப்பினம் என்றால் தழைச்சத்து 80 கிலோ, மணிச்சத்து 40 கிலோ மற்றும் சாம்பல் சத்து 40 கிலோ ஒரு ஹெக்கடருக்கு கொடுக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தினை மூன்றாக பிரித்து ஒரு சென்டிற்கு 25:50:25 என்ற அளவில் விதைக்கும் முன், விதைத்த 15 நாள் மற்றும் விதைத்த 30 நாளில் இட வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தினை அடியுரமாக அளிக்க வேண்டும். மானாவாரி பயிர்களுக்கு அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியம் அல்லது அசோபாஸை பரிந்துரைக்கப்பட்ட அளவில் 75 சதவீத தழைச்சத்து மற்றும் மணிச்சத்தினை சேர்த்து இட வேண்டும்.
பயன்படுத்தும் முறை :
நாற்று நடுவதற்கு வரப்பின் அடியிலிருந்து 5 செ.மீ ஆழத்தில் (அடியிலிருந்து 1/3 இடைவெளியில்), உரத்தை இட்டு மூட வேண்டும். நேரடி விதைப்பு பயிரில், படுக்கையிலிருந்து 45 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்தில் குழி அமைக்க வேண்டும். 5 செ.மீ ஆழத்தில் உர வைத்து பின் விதைப்பதற்கு முன் 2 செ.மீ வரை மேல் மண் அணைக்க வேண்டும். தானியங்களை ஊடுபயிர் செய்ய படுக்கையிலிருந்து 30 செ.மீ இடைவெளிவிட்டு 5 செ.மீ ஆழத்தில் குழி அமைக்க வேண்டும். கம்பு வைத்த பிறகு உரம் வைத்து 2 செ.மீ வரை மண் அணைக்க வேண்டும். உருகல் மிகைப்பி அசோஸ்பைரில்லம் விதைகள் விதைக்கும் போது தழைச்சத்து 50 கிலோ/ ஹெக்டர், கலப்பின ரகத்திற்கு 60 கிலோ/ ஹெக்டர், மண் பரிசோதனையின் பரிந்துரைப்படி தழைச்சத்தை 25 சதவீதம் குறைவாக அளிக்கலாம்.
நுண்ணூட்டச்சத்து கலவையின் பயன்பாடு
வேளாண்மை துறை வழிகாட்டுதல்படி 12.5 கிலோ /ஹெக்டர் நுண்ணூட்டக் கலவையை அளிக்கலாம். நுண்ணூட்டக் கலவையை போதுமான மண் கொண்டு 50 கிலோவாக செய்து கொள்ள வேண்டும். பிறகு விதைப்பதற்கு முன் / பின்பு விதைகளை மூடும்விதமாக நுண்ணூட்டக்கலவை அளிக்க வேண்டும். நுண்ணூட்டக் கலவை கிடைக்கவில்லையென்றால் 25 கிலோ துத்தநாக சல்பேட்டு ஒரு ஹெக்டேருக்கு அளிக்க வேண்டும். மேலே கூறியவற்றை போதுமான மண் கொண்டு 50 கிலோவாக கலந்து அளிக்க வேண்டும்.
நிலத்தை மேலாண்மை செய்தல்
நாற்று நடுதல் அல்லது விதை விதைத்து நாற்று நடுதல்
- 15 முதல் 18 நாட்கள் வயதிருக்கும் நாற்றுகளை எடுத்தல்
- எல்லா ரகத்திற்குமான இடைவெளி 45x 15 செ.மீ.
- நடவு ஆழம் 3 முதல் 5 செ.மீ இருக்க வேண்டும்.
- வேரை உயிர் உரங்களில் நனைத்தல் : அசோஸ்பைரில்லம் 5 பாக்கெட்டுகள் (1000 கிராம்)/ஹெக்டர் மற்றும் பாஸ்போபாக்டீரியா 5 பாக்கெட்டுகள் மற்றும் அசோபாஸ் 10 பாக்கெட்டுகள் இவற்றை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேற்று குழம்பு தயார் செய்தல் வேண்டும். இச்சேற்றுக் குழம்பில் நாற்றுகளை நடுவதற்கு முன் 15 -30 நிமிடம் நனைக்க வேண்டும்.
நேரடி விதை விதைத்தல்
கம்பு விதைகளை 2 % பொட்டாசியம் குளோரைடு அல்லது 3 % சோடியம் குளோரைடில் 16 மணிநேரம் ஊறவைத்து பின் 5 மணி நேரம் நிழலில் உலர்த்துவதால் விதையின் முளைப்புத்திறன் அதிகரிக்கும்.
அனைத்து ரகத்திற்கும் இடைவெளி 45 x 15 செ.மீ. ஊடுபயிர் நடுவதாக இருந்தால் கம்பிற்கு 30 x 15 செ.மீ மற்றும் ஊடுபயிருக்கு 30 x 10 செ.மீ இடைவெளியும் வேண்டும். ஒரு ஜோடி வரிசையில் கம்பும் ஒரு வரிசையில் ஊடுபயிரும் விதைக்க வேண்டும்.
பார் மற்றும் வாய்க்கால் முறையில் நடவு செய்வதற்கு 5 கிலோ விதை தேவைப்படும். விதைகளின் இடைவெளி 4-5 செ.மீ இருக்க வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 1.45,000 பயிர் எண்ணிக்கை இருக்க வேண்டும். குருத்து ஈ தாக்குதல் நிறைந்த பகுதிகளில் 12.5 கிலோ விதைகளை ஒரு ஹெக்டருக்கு விதைக்கவும்.
தானிய விதைகளை 5 செ.மீ இடைவெளியில் விதைக்க வேண்டும்.
களை மேலாண்மை
நடவு பயிர்
- களை முளைப்பதற்கு முன் அட்ராசைன் 0.25 கிலோ /ஹெக்டர் நாற்று நட்ட பிறகு தெளிக்க வேண்டும். கையால் களையெடுக்க நாற்று நட்ட பிறகு 30-35 நாம் நாட்களில் எடுக்க வேண்டும். களைகொல்லி பயன்படுத்தி கையினால் களையெடுத்தால் நாற்று நட்ட பிறகு 15 நாளுக்குள் இரு முறையும் மற்றும் 30 – 35 நாளில் களையெடுக்க வேண்டும்.
நேரடி விதை விதைப்பு
- விதைத்த 3 நாட்களுக்கு பிறகு களை முளைப்பதற்கு முன் அட்ராசைன் 0.25 கிலோ/ஹெக்டர் 500 லிட்டர் தண்ணீரில் கலந்து மண்ணின் மேற்பரப்பில் பேக் -பேக்/நேப்சேக்/ராக்கர் தெளிப்பான் உதவியால் தெளிக்கவும்.
- மண்ணில் தேவையான அளவு ஈரப்பதம் இருக்கும்பட்சத்தில் களைகொல்லியை பயன்படுத்தவும்.
- விதைத்த 30-35 நாட்களுக்கு பிறகு கையால் களையெடுக்வும். களைமுளைப்பதற்கு முன் களைகொல்லிகளை பயன்படுத்தவும்
- களை முளைப்பதற்கு முன் களைகொல்லி தெளிக்கவில்லை என்றால் விதைத்த பிறகு 15 மற்றும் 30 நாட்களில் இரண்டு முறை கையினால் களை எடுக்கவும்.
பயிர்கலைத்தல் மற்றும் இடைவெளி நிரப்புதல்
நேரடி விதை பயிரில் முதல் களையெடுப்பது பாசனத்தின்போதும், இடைவெளியை நிரப்ப 15 செ.மீ இடைவெளியில் உள்ள பயிருக்கு 20 செ.மீ இடைவெளியில் தட்டைபயிரும் மற்ற பயிர்களாக இருந்தால் 10 செ.மீ இடைவெளி வேண்டும்.
மேலுரமிடுதல்
- நாற்று நட்டு அல்லது நேரடி விதைத்த 15 மற்றும் 30 நாட்களில் நைட்ரஜனை மேலுரமாக இட வேண்டும்
- நாற்று நடுதலாக இருந்தால் ஒரு குச்சியினால் 5 செ.மீ ஆழத்திற்கு ஒரு குழியை தோண்டி அதன் அடியில் உரத்தை வைத்து மூடவேண்டும்.
- நேரடி விதைத்தலில் உரத்தை பட்டையில் இட வேண்டும். ஊடுபயிராக தானியம் விதைத்திருந்தால் உரத்தை கம்பிற்கு மட்டும் இட வேண்டும்.
- உரம் வைத்த பிறகு பாசனம் செய்ய வேண்டும்.
நீர் மேலாண்மை
நிலைகள் |
விதைத்த/நாற்று நட்ட பிறகு |
நாற்று நடுதல் |
நேரடி விதைத்தல் |
இளகிய மண் |
1.முளைக்கும் பருவம் |
நாற்று நட்ட பிறகு 1 நாள் |
விதை விதைத்த 1 நாள் |
4 –ஆம் நாள் |
4 –ஆம் நாள் |
2.தழைப் பருவம் |
15 ஆம் நாள் |
17 ஆம் நாள் |
28 ஆம் நாள் |
30 ஆம் நாள் |
3.பூ பூக்கும் பருவம் |
40 ஆம் நாள் |
42 ஆம் நாள் |
52 ஆம் நாள் |
55 ஆம் நாள் |
65 ஆம் நாள் |
68 ஆம் நாள் |
4.முதிர்ந்த பருவம் |
77 ஆம் நாள் |
79 ஆம் நாள் |
மொத்தம் |
8 பாசனம் |
8 பாசனம் |
கடின மண் |
முளைக்கும் பருவம் |
நாற்று நட்ட பிறகு 1 நாள் |
விதை விதைத்த 1 நாள் |
4 –ஆம் நாள் |
5 ஆம் நாள் |
15 ஆம் நாள் |
15 ஆம் நாள் |
28 ஆம் நாள் |
30 ஆம் நாள் |
42 ஆம் நாள் |
45 ஆம் நாள் |
54 ஆம் நாள் |
57 ஆம் நாள் |
66 ஆம் நாள் |
70 ஆம் நாள் |
7 பாசனம் |
7 பாசனம் |
குறிப்பு : இந்த பாசனம் அட்டவணை ஒரு வழிகாட்டலே இது வானிலை தக்கவாறு மாற்றிக் கொள்ள வேண்டும்.
பயிர்அறுவடை
முதிர்ந்நததற்கானஅறிகுறி
- இலைகள்மஞ்சள்நிறத்திற்குமாறிஉலர்ந்ததோற்றத்தில்இருக்கும்.
- தானியங்கள்கடினமாகஇருக்கும்
அறுவடை
- தானியகதிரைதனியாகஅறுக்கவேண்டும்.
- வைக்கோலைஒருவாரம்காயவிட்டுபோக்குவரத்துஎளிதாகஇருக்கும்போதுஅறுவடைசெய்யவேண்டும்.
கதிரடுத்தல், தூய்மைசெய்தல், உலர்த்துதல்மற்றும்சேமித்தல்
- தானிய கதிரை உலர்த்துதல்
- இயந்திரத்தின் மூலம் கதிரடித்தல் அல்லது
- கதிரை பரப்பி உருளைகல் கொண்டு உருட்டுதல்
- கால்நடை கொண்டு கதிரடித்தல்
- 10% குறைவான ஈரப்பதம் உள்ளவாறு தானியத்தை உலரவிட்டு 100 கிலோதானியத்திற்கு 1 கிலோவீதம் வெண்களிமண்கலப்பதால் அரிசி அந்துப்பூச்சி தாக்குதலை குறைக்கலாம்
- சேமிப்புகிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள பைகளின் மீது மாலத்தியான் 50 EC யை 10 மி.லி/லிட்டருக்கு கொண்டு 100 சதுரமீட்டருக்கு 3 லிட்டர் வீதம் தெளிக்கவேண்டும்.
- 10% குறைவானஈரப்பதம்உள்ளவாறுதானியங்களைஉலரவிட்டுபிறகுசாக்குபைகளில்சேமிக்கவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
கம்பு இந்தியாவில் அதிகம் விளையக்கூடிய சிறு தானியம் ஆகும். இது கோதுமையில் உள்ள அளவே புரதத்தைக் கொண்டது. இந்த புரதத்தில் அதிக அளவு புரோலமைன் அடுத்தபடியாக குளோபுலின் மற்றும் அல்புமின் கொண்டுள்ளது. பாலிஷ் செய்த கம்பு சுவையாகவும் தோற்றத்தில் நன்றாகவும் இருக்கிறது. பாப்கார்ன் மற்றும் மால்ட் செய்ய ஏற்றது. அரிசியை போன்று வேக வைத்தும் உண்ணலாம். ராகி மாவு சப்பாத்தி செய்யவும், கூழ் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு
|