Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: சிறுதானியங்கள் :: மக்காச்சோளம்
மானாவாரி மக்காச்சோளம்

நிலம் தயாரித்தல் : நிலத்தை உழிக்கலப்பை கொண்டு 50 செ.மீ இடைவெளியில் 3 வருடத்திற்கு ஒரு முறை நன்கு ஆழமாக உழவு செய்யவும்.

தொழு உரம் இடுதல் : ஒரு எக்டருக்கு 12.5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தொழு உரம் அல்லது மக்கிய தேங்காய் நாரைச் சமமாகக் கடைசி உழவிற்கு முன் சீராக இட்டு, அதனுடன் 10 பாக்கெட் அசோஸ்பைரில்லம் கலந்து பரப்பி நன்கு உழவு செய்யவும்.

உரமிடுதல் : மண் பரிசோதனைக்கு ஏற்ப தழை, மணி, சாம்பல் சத்துக்களை இடுதல் வேண்டும். இல்லையெனில் மணற்பாங்கான நிலத்திற்கு 60:30:30 கிலோ எக்டர் அளவிலும், களிமண் நிலத்திற்கு 40:20:00 கிலோ / எக்டர் என்ற அளவில் தழை,மணி, சாம்பல் சத்துக்களை அளிக்கவேண்டும்.

ஏக்கருக்கு 7.5 கி தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக நுண்ணூட்டக் கலவையை ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கவும். (ஊட்டமேற்றிய தொழுவுரம் தயாரிக்க 1:10 என்ற விகிதத்தில் நுண்ணூட்டக் கலவை மற்றும் தொழுவுரம் சேர்க்க வேண்டும். தகுந்த வெப்பநிலையில் ஒரு மாதத்திற்கு நிழலில் வைக்க வேண்டும்.

விதையளவு : நல்ல தரமுடைய விதைகளை தேர்ந்தெடுக்கவும். வீரிய ஒட்டு இரகங்களுக்கு 20 கிலோ, எக்டர் என்ற அளவிலும் இரகங்களுக்கு 25 கிலோ, எக்டர் என்ற அளவிலும் பின்பற்றவும்.

இடைவெளி : ஒரு செடிக்கும் மற்றோர் செடிக்கும் இடையே 20 செ.மீ இடைவெளியும், பாருக்கு பார் 45 செ.மீ இடைவெளியும் இருக்கவேண்டும். செடிகளின் எண்ணிக்கை இரகம் மற்றும் வீரிய ஒட்டு இரகங்கள் 10-11 செடிகள், சதுரமீட்டர்.

நுண்ணுயிர்  உரத்துடன் விதை நேர்த்தி : பூஞ்சாண விதை நேர்த்தி செய்த விதைகளை விதைப்பதற்கு முன் மூன்று பாக்கெட் அசோஸ்பைரில்லம் 1600 கிராம் எக்டர் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும்.

விதைத்தல் : விதையை 4 செ.மீ ஆழத்தில் ஊன்றவேண்டும். விதைக்கும் கருவிகள் கொண்டு விதையை ஊன்றலாம்.

ஊடுபயிர் சாகுபடி முறை :

  • ஊடுபயிராக தட்டைப்பயிர் அல்லது உளுந்து போன்றவை மாவட்டங்களின் செம்மண்ணிற்கு உகந்தது.
  • தென் மாவட்டங்களின் கரிசல் மண் துவரையை ஊடுபயிராக பயிரிடலாம்.

பயிர் வினையியல் : கதிர் அரும்பும் தருணத்தில் 3 கிலோ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் மக்காச்சோள மேக்சிம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைத் தெளிப்பாக தெளிப்பதன் மூலம் கதிர் அதிகம் பிடிக்கும். மகசூல் அதிகரிக்கிறது மற்றும் வறட்சியை தாங்கும் தன்மை ஏற்படுகிறது.

பயிர் பாதுகாப்பு :

 
 
Fodder Cholam