Agriculture
வேளாண்மை :: சிறுதானியங்கள்

பனிவரகு – பேனிகம் மிலியேசியம்


பனிவரகு - கோ (PV) 5

கதிர்கள்

தானியம்

பனி வரகு ஒரு முக்கியமான சிறு தானியப் பயிர் இந்தியாவில் பயிரிடப்படுகிறது. இதன் விரைவான முதிர்ச்சி மூலம் வறட்சியைத் தவிர்க்க முடியும். இது ஒரு குறுகிய காலப்பயிர் என்பதால் வறட்சியைத் தாக்குப் பிடித்து வறண்ட பகுதிகளில் தீவிர சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. மானாவாரியில் காரீப் பருவத்திலும் மற்றும் நீர்ப்பாசனப் பகுதிகளில் கோடைகால ஊடுபயிராக தீவிர பயிர் சுழற்சி இடையே பயிரிடப்படுகிறது.

ஆரம்பம் மற்றும் வரலாறு

பனி வரகு தோராயமாக இந்தியாவில் தோன்றியிருக்கலாம். இங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியிருக்கலாம். இது பர்மா, இந்தியா மற்றும் மலேசியா காடுகளில் காணப்படும். Panicum psilopodium வகையில் இருந்து தோன்றியிருக்கலாம்.

பனி வரகு ஒரு பழமை வாய்ந்த தானியப்பயிராகும். இது இந்தியா, ஜப்பான், சீனா, எகிப்து, அரேபியா மற்றும் மேற்கு ஐரோப்பா போன்ற நாடுகளில் பயிரிடப் படுகிறது. இந்தியாவில்  மத்தியப்பிரதேசம், கிழக்கு உத்திரப்பிரதேசம், பீகார், தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம் மற்றும் கர்நாடகா போன்ற மாநிலங்களில் பயிரிடப்படுகிறது.

பருவம் மற்றும் இரகங்கள்

பயிர் விளையும் மாவட்டங்கள்
பனிவரகு வேலூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி

மாவட்டம்/பருவம் இரகங்கள்
மானாவாரி
செப்டம்பர்-அக்டோபர் 
(மதுரை, திண்டுக்கல், தேனி, திருநெல்வேலி & தூத்துக்குடி)
கோ 4, கே 2, கோ(PV)5
பாசனப்பயிர்
பிப்ரவரி-மார்ச் கே 2 , கோ 4, கோ(PV)5

பனிவரகு -  விவரங்கள்

விவரங்கள் கே 2 கோ 4 கோ(PV) 5
பெற்றோர் PV1685 ல் இருந்து தேர்வு சென்கத்தூர் லோக்கலில் இருந்து நல் விதைத் தேர்வு PV 1403 x GPUP 21
வயது (நாட்கள்) 75 75 70
நிறம் பச்சை பச்சை பச்சை
தூர்கட்டும் திறன் அதிகம் அதிகம் அதிகம்
பூங்கொத்து தளர்வான தளர்வான, அடர்ந்த மொசு மொசுப்பானது இறுக்கமான, அடர்ந்த தடித்த தானியங்களை கொண்டது
தானிய தன்மை சாம்பல் பொன் மஞ்சள் பொன் மஞ்சள்
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
மானாவாரி 3184 1500 2400
சிறப்பு அம்சங்கள் சாயாத, வறட்சி தாங்கி வளரக் கூடியது, விதை உதிராத தன்மை கொண்டது. அதிக தூர்கள், பரந்த சூழ்நிலைக்கு ஏற்று வளரும் தன்மை கொண்டது. அதிக தூர்கள், குறைந்த காலம், மானாவாரியில் இரட்டைப் பயிர் செய்யும் பகுதிக்கு ஏற்றது.

பயிர் மேலாண்மை

காலநிலைத் தேவைகள்

பனி வரகு ஒரு வெப்ப காலநிலைப் பயிராகும். இது உலகின் வெப்பமான பகுதிகளில் பரவலாக வளர்ந்து வருகிறது. இது மிகவும் வறட்சி எதிர்ப்பு தன்மை உடையது மற்றும் மழை பற்றாக்குறை பகுதிகளில் பயிரிட முடியும். இது ஓரளவிற்கு அதிகப்படியான தண்ணீர் தேக்கத்தைத் தாங்கி வளரக்கூடியது.

மண்

பனி வரகு கரிசல் மண் மற்றும் களிமண்  நிலங்களில் நன்கு வளரக் கூடியது. பெரிய மணல் போன்ற மண் சாகுபடிக்கு ஏற்றதல்ல. அதிகப்படியான அங்ககத் தன்மையுடன் மணல் கலந்த களிமண் சாகுபடிக்கு மிகவும் ஏற்றது.

நிலம் தயாரித்தல்

முந்தைய பயிர் அறுவடைக்குப்பின் வயலை நன்கு உழுது மண்ணை சூரிய ஒளியில் வெளிக்கொணர வேண்டும். இதனால் மண்ணின் ஈரப்பதம் அதிகரிக்கும். பருவ மழை தொடங்கியதும் மண்ணை பிளேட் ஹோரோவால் இரண்டு முதல் மூன்று முறை  வரை உருவகப்படுத்தி சமப்படுத்திடல் வேண்டும். கோடை காலப்பயிர் என்றால் நிலம் தயாரிப்பதற்கு முன்பாக ஒருமுறை நீர்ப் பாய்ச்ச வேண்டும். மண் தயாரான பின்பு ஹேரோ கலப்பை கொண்டு விதை படுக்கை தயாரித்து பின்னர் தளமிட வேண்டும்.

விதை மற்றும் விதைப்பு

விதைகள் செரசான் 2.5 கிராம் வீதம் கிலோ ஒன்றிற்கு கலந்து விதை நேர்த்தி செய்திடல் வேண்டும்.

விதைப்பு பருவம்

காரீப் பருவத்தில், பருவ மழை தொடங்கியதும் ஜுலை மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள்  விதைக்க வேண்டும். கோடை கால பயிர் என்றால் ஏப்ரல் மாதம் உகந்த பருவம் ஆகும்.

விதையளவு மற்றும் விதைப்பு முறை

பனிவரகு விதை தெளிப்பு அல்லது வாய்க்காலில் 3-4 செ.மீ. ஆழத்திற்குத் துளையிடுதல் முறையில் விதைக்கலாம். பயிர் நடவு இடைவெளி 25x10 செ.மீ. அளவாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வரிசை விதைப்பு முறையானது முளைப்புத் திறனை அதிகரிக்கும், விதையளவைக் குறைப்பதுடன் இடையுழவிற்கு ஏற்றது. ஒரு எக்டேருக்கு 8-12 கிலோ விதைகள் தேவைப்படும்.

இயற்கை எரு மற்றம் உர நிர்வாகம்

பனிவரகு குறைந்த வயதுடைய பயிர் என்பதால் மற்ற தானியப் பயிர்களை விட குறைந்த அளவே உரம் தேவைப்படும். நீர்ப்பாசனப் பகுதிகளில் 40 -60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.1/2 மடங்கு தழைச்சத்து, முழு அளவான  மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதமுள்ள  1/2 மடங்கு தழைச்சத்தினை முதல் முறை நீர் பாய்ச்சும் போது இட வேண்டும்.

நீர் மேலாண்மை

பனி வரகு காரீப் பருவத்தில் பயரிடும் போது பொதுவாக நீர் பாய்ச்சுதல் தேவைப்படாது. தூர் பிடிக்கும் பருவத்தில் மண் உலர்ந்து காணப்பட்டால் ஒரு முறை நீர் பாய்ச்சலாம். கோடை கால பயிராகப் பயரிடும் போது மண்ணின் தன்மை மற்றும் காலநிலைக்கேற்ப இரண்டு முதல் நான்கு முறை நீர் பாய்ச்சுதல் தேவைப்படும்.
முதல் மற்றும் இரண்டாம் நீர் பாய்ச்சுதலை முறையே 25 – 30 மற்றம் 40-45 விதைத்த நாட்களுக்குப் பிறகு பாய்ச்ச வேண்டும்.

களை கட்டுப்பாடு

விதைத்ததிலிருந்து 35 நாட்கள் வரை வயலில் களை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டு முறை 15 – 20 நாட்கள் இடைவெளியில் கை கொத்து அல்லது சக்கர மண் வெட்டி கொண்டு களை எடுக்கலாம்.

நோய் கட்டுப்பாடு

தலை கரிப்பூட்டை நோய் பொதுவாக பனிவரகில் காணப்படும். இதனை செரசான் விதை நேர்த்தி 3 கிராம் / கிலோ கிராம் விதைக்கு என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம் அல்லது சூடான தண்ணீரில் 55° செல்சியசில் 7- 12 நிமிடங்கள் நனைப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.
சில சமயங்களில் காணப்படும் பாக்டீரியா கீற்று நோயினை 5 சதவீத மெக்னீசிய ஆர்சனேட் கொண்டு கிலோ விதைக்கு ஒரு கிராம் என்ற விகிதத்தில் விதை நேர்த்தி செய்து கட்டுப்படுத்தலாம்.

பூச்சி கட்டுப்பாடு

தண்டு

திமெட் குருணை 15 கிலோவை நிலம் தயாரித்தலின் போது இடுவதன் மூலம் தண்டு ஈயைக் கட்டுப்படுத்தலாம்.

அறுவடை

பெரும்பாலான பனிவரகு ரகங்கள் விதைத்த 65-75 நாட்களில் அறுவடைக்குத் தயாராகி விடும். விதைகள் மூன்றில் இரண்டு பங்கு பழுத்தவுடன் அறுவடை செய்யலாம். கை அல்லது மாடுகளைக் கொண்டு கதிர் அடிக்கலாம்.

மகசூல்

பனி வரகு உயர்ந்த தொழில் நுட்ப முறையில் சாகுபடி செய்வதன் மூலம் 20-23 குவிண்டால் தானியமும் 50-60 குவிண்டால் வைக்கோலும் பெறலாம்.
தகவல் : Chidda Singh, Book entitled “Modern Techniques of Raising field crops” Oxford & IBH publishing Co.pvt.Ltd., New Delhi.

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 


தகவல் : Chidda Singh, Book entitled “Modern Techniques of Raising field crops” Oxford & IBH publishing Co.pvt.Ltd., New Delhi.

Updated on : June 2014

 
Fodder Cholam