| சோளம் (சொர்கம் பைகலர்)       சோளத்தின் வளர்ச்சி நிலைகள் 
        
          | நாற்று பருவம்தழைப் பருவம் (முழுவளர்ச்சி (30-40)
 பூத்தல்/இனப் பெருக்க நிலை
 முதிர்வு பருவம்
 பழ முதிர்ச்சி பருவம்
 | ::
 :
 :
 :
 | 1-15 நாட்கள்16-40 நாட்கள்
 41-65 நாட்கள்
 66-95 நாட்கள்
 96-105 நாட்கள்
 |  விதை தேர்வு          நல்ல தரமான விதைகளை நோய் மற்றும் பூச்சி தாக்காத வயல்களிலிருந்து  தேர்வு செய்யவும்.  விதை அளவு பாசனபயிர்   நடவு - 7.5 கிலோ/எக்டர்;   நேரடி விதைப்பு  -   10 கிலோ/எக்டர்
 மானாவாரி நேரடி விதைப்பு   - 15 கிலோ/எக்டர்
 பாசன நிலையில் சோளத்தை நடவு முறை மற்றும் நேரடி விதைப்பு மூலமாகவும்  பயிர் செய்யலாம்.
         நடவு  பயிர் பின்வரும் நன்மைகளைக் கொண்டுள்ளது. 
        நடவு வயலில் கால அளவு 10 நாட்கள் குறைகிறது.நேரடியாக நடவு செய்த பயிர்களை தண்டு ஈ முதல் மூன்று வாரங்களில்       தாக்குகிறது. இவற்றை கட்டுப்படுத்துவது கடினம். இவை நாற்றங்காலிலேயே திறம்பட கட்டுப்படுத்தப்படுகின்றன.நாற்றுகளில் வெளிறிய மற்றும் அடிச்சாம்பல் நோய் அறிகுறிகள்       தென்பட்டால் அவை நீக்கப்படுகிறது. எனவே அடிச்சாம்பல் நோய் நிகழ்வு நடவு வயலில்       குறைகிறது. நடவிற்கு ஆரோக்கியமான நாற்றுகளை பயன்படுத்துவதால் எல்லா       பயிர்களும் நன்றாக வளர்கின்றன.எக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் விதை வீதம் குறைகிறது. பயிர் எண்ணிக்கை          10 சதுர மீட்டருக்கு 150 பயிர்கள் என்ற எண்ணிக்கையில்  குத்துக்கு ஒரு பயிர் விட வேண்டும்.  நாற்றாங்கால்  நாற்றாங்கால் தயாரித்தல்          ஒரு எக்டர் நடவு செய்ய 7.5 சென்ட் நாற்றாங்கால் தேவைப்படும்.  நாற்றாங்கால் நிலத்தை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல்  நிலத்தை தயார் செய்யவேண்டும். தொழுஉரம் இடுதல்         நன்கு மக்கிய தொழு உரம் 750 கிலோவை நிலத்தில்  இட்டு நன்கு உழவேண்டும். நாற்றங்காலில் விதைத்தபிறகு 500 கிலோ  மட்கிய தொழு உரம் கொண்டு விதையை மூடிவிடவேண்டும். மேட்டுப்பாத்தி  அமைத்தல்          ஒவ்வொரு பாத்தியும் 2 மீட்டர் × 1.5 மீட்டர்  அளவுள்ளதாக அமைத்து இடையில்  30 செ.மீ அகலமுள்ள  வாய்க்கால்கள் இடையிலும், பாத்தியை சுற்றியும் வருமாறு  அமைத்தல் வேண்டும். வாய்க்கால்கள் 15 செ.மீ ஆழமுள்ளதாக  இருக்கவேண்டும். விதைநேர்த்தி          விதைகளை விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு  கிலோ விதைக்கு 2 கிராம் கார்பண்டாசிம் (அ) கேப்டான் (அ) திரம் கொண்டு விதை நேர்த்தி  செய்ய வேண்டும். நாற்றாங்காலில் விதைப்பதற்கு முன் 3 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (600 கிராம்/ எக்டர்) மற்றும் 3 பொட்டலம்  பாஸ்போபேக்டீரியா (600 கிராம்/ எக்டர்)  அல்லது 6 பொட்டலம் அசோபாஸ் (1200 கிராம்/  எக்டர்) கலந்து விதைநேர்த்தி செய்யவேண்டும்.
 நாற்றங்கால்  விதைப்பு   மேட்டுப்பாத்திகளில் 7.5 கிலோ விதையை நாற்றாங்காலில் அதிக  ஆழமில்லாமல் விதைக்கவேண்டும்.  நீர்  நிர்வாகம்          விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,7,12,17ம் நாள் நீர் கட்ட வேண்டுதல்  அவசியம். களிமண் பாங்கான பூமிக்கு விதைத்தவுடன் மற்றும் விதைத்த 3,9,16 ஆம் நாள் நீர் பாய்ச்சினால் போதுமானதாகும். நிலம்  தயாரித்தல்          நிலத்தை இரும்புக் கலப்பைக் கொண்டு இருமுறையும், நாட்டுக்கலப்பைக் கொண்டு இருமுறையும் உழுது  கட்டிகள் இல்லாமல் தயார் செய்யவேண்டும்.  தொழு உரம் இடுதல்         12.5 டன்/ எக்டர்  தொழு உரம் பரப்பவேண்டும். அதை நாட்டு கலப்பையைக் கொண்டு  உழவேண்டும் மற்றும் 10 பொட்டலம் அசோஸ்பைரில்லம் (2000  கிராம்/எக்டர்) மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்/எக்டர்)  பாஸ்போபேக்டீரியா அல்லது 20 பொட்டலம் அசோபாஸ் (4000 கிராம்/ எக்டர்) கலந்து மண்ணில் இடவேண்டும். பார், பாத்தி அமைத்தல்45 செ.மீ இடைவெளியில் பார்கள் அமைக்கவேண்டும். அல்லது நீர் அளவை  பொறுத்து 10 அல்லது  20  சதுர மீட்டர் பாத்திகள் அமைக்கவேண்டும்.   
 உரங்களின் பயன்பாடுநடவு பயிர்
 
        மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும்       சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக       எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல்       சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல்       சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும். விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில் நைட்ரஜன் 50:25:25       % அளிக்கவும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து நடுவதற்கு முன்       அளிக்க வேண்டும். வரப்புப் பயிரில் 5 செமீ ஆழத்தில் வரப்பின் ஓரத்தில் பள்ளம்       தோண்டி குழித்து உரக் கலவையை இட்டு 2 செ.மீ அளவுக்கு மண் கொண்டு மூட வேண்டும்.நடவு வயலில் 10 பாக்கெட் (2 கிலோ/ எக்டர்) அசோஸ்பைரில்லம்       மற்றும் 10 பாக்கெட் (2000 கிராம்/ எக்டர்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 20 பாக்கெட்       (4000 கிராம்/ எக்டர்) அசோபோஸை 25 கிலோ தொழுவுரம் + 25 கிலோ மணலுடன் கலந்து  விதைத்தல் / நடவிற்கு முன் இட வேண்டும். நேரடி விதைப்பு பயிர் 
        மண் பரிசோதனை பரிந்துரைப்படி தழைச்சத்து, மணிச்சத்து மற்றும்       சாம்பல்சத்து இட வேண்டும். மண் பரிசோதனை பரிந்துரைகள் இல்லையென்றால் பொதுப்பரிந்துரையாக       எக்டருக்கு 90 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, மற்றும் 45 கிலோ சாம்பல்       சத்து என்ற அளவில் இட வேண்டும் மற்றும் முழு அளவு மணிச்சத்து மற்றும் சாம்பல்       சத்து நடுவதற்கு முன் அளிக்க வேண்டும். விதைத்த 0, 15 மற்றும் 30-ம் நாளில்  நைட்ரஜன்       50:25:25 % அளிக்கவும் மற்றும் அடிஉரமிடல் சாத்தியமில்லை என்றால் 24 மணி நேரத்திற்குள்       மணலின் மேல் அளிக்க வேண்டும்.படுக்கை முறை நடவில் விதைப்பதற்கு முன் வரப்பிலிருந்து       45 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ ஆழத்திற்கு குழி எடுக்க வேண்டும். உரக் கலவையை       5 செ.மீ குழியில் வைத்து 2 செ.மீ அளவிற்கு மண் கொண்டு மூட வேண்டும்.சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருந்தால்       (உளுந்து, பாசிப்பயறு மற்றும் தட்டைப் பயறு) 30 செ.மீ இடைவெளி விட்டு 5 செ.மீ       ஆழத்திற்கு குழி எடுக்கவும்.உரக் கலவையை சோளத்தின் இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ       மணல் கொண்டு மூட வேண்டும்.பயறுவகை பயிர் வளர்ந்த மூன்றாவது வரிசையை தவிர்க்கவும்       மற்றும் உரக் கலவையை அடுத்த இரண்டு வரிசைகளில் வைத்து 2 செ.மீ மணல் கொண்டு மூட       வேண்டும்.உயிர் உர பயன்பாடு : பாசன சோளத்தில் அசோஸ்பைரில்லம் அளித்திருந்தால்       பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தில் 75%  போதுமானது.மண் பரிசோதனை அடிப்படையிலான உர பரிந்துரை மேற்கு மற்றும்       வட மேற்கு மண்டலம் அதாவது அல்பிசால், இன்செப்டிசால் மற்றும் வெர்டிசால் போன்றவை       குறிப்பிட்ட உற்பத்தி இலக்குகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 
        
          |  விதைத்தல்
 |  நுண் உரக் கலவை பயன்பாடு  நடவு பயிர் 
        எக்டருக்கு 12.5 கிலோ வேளாண் துறை, தமிழ்நாடு நுண்உரக்       கலவையை போதுமான மணலுடன் கலந்து 50 கிலோ அளவு வரப்பின் ஓரத்தில் அளிக்க வேண்டும்.நுண்உரக் கலவை இல்லையென்றால், 25 கிலோ துத்தநாக சல்பேட்டுடன்       மணல் கலந்து மொத்த அளவு 50 கிலோ வரப்பில் அளிக்க வேண்டும். நேரடி விதைப்புப் பயிர் 
        வேளாண் துறை, தமிழ்நாடு நுண்உரக் கலவையை எக்டருக்கு       12.5 கிலோவுடன் போதுமான அளவு மணல் மொத்த அளவு 50 கிலோ வரும் வரை கலக்கவும். வரப்பில் கலவையை சமமாக பரப்பவும்.பற்றாக்குறை மணலில் அடியுரமாக எக்டருக்கு 25 கிலோ துத்தநாக       சல்பேட் அல்லது எக்டருக்கு 12.5 கிலோ துத்தநாக சல்பேட் + தொழுவுரத்தை துத்தநாக       பற்றாக்குறை மணலில் அளிக்கவும்.இரும்பு பற்றாக்குறை உள்ள மணலில் அடியுரமாக இரும்பு சல்பேட்       எக்டருக்கு 50 கிலோவை எக்டருக்கு 12.5 டன் தொழுவுரத்துடன் கலந்து அளிக்கவும். நடவு வயல் தயாரித்தல்          இடைவெளி : 45 x 15 செ.மீபயிர் எண்ணிக்கை :15/சதுரமீட்டர்
 நடவு பயிர் 
        15 முதல் 18 நாட்களான நாற்றுகளை பிடுங்கி எடுக்க வேண்டும்.எக்டருக்கு 5 பாக்கெட் (1000கி/எக்டர்) அசோஸ்பைரில்லம்       மற்றும் 5 பாக்கெட் (1000கி/எக்டர்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 10 பாக்கெட்       (2000கி/எக்டர்) அசோபோஸை 40 லிட்டர் தண்ணீரில் கலந்து சேறு குழம்பு தயாரிக்கவும்.       இந்தக் கரைசலில் நாற்றின் வேர்ப்பகுதியை 15-30 நிமிடம் வைத்து பின் நடவு செய்ய       வேண்டும்.பள்ளம் வழியாக தண்ணீர் விட வேண்டும்.குன்று ஒன்றுக்கு ஒரு நாற்று நடவு செய்ய வேண்டும்.3 முதல் 5 செ.மீ ஆழத்தில் நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.வரப்பிற்கு மேல் அரை அங்குலம் கீழே அரை அங்குலம் இடைவெளி       விட்டு நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.பயிர்களுக்கு இடையில் 15 செ.மீட்டரும், வரிசைகளுக்கிடையில்       45 செ.மீ இடைவெளியும்விட வேண்டும்.   நேரடி விதைப்பு பயிர் 
        சோளத்தை தனிப்பயிராக பயிரிடும்பொழுது எக்டருக்கு  10 கிலோ விதை தேவைப்படும்.சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருப்பின்       சோள விதை எக்டருக்கு 10 கிலோ மற்றும் பயறுவகை பயிருக்கு எக்டருக்கு 10 கிலோ.சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருப்பின்       பயிர்களுக்கான இடைவெளி 15 செ.மீ மற்றும் வரிசைகளுக்கிடையே இடைவெளி 45 செ.மீ.தண்டு ஈ தாக்குதல் இருப்பின், பக்கத் தண்டுகளை நீக்கிவிட்டு       ஆரோக்கியமான தண்டுகளை மட்டும் வைத்துக்கொள்ள வேண்டும்.உரங்கள் வைக்கப்பட்ட இடத்தில் விதைகளை வரிசையாக விதைக்கவும்.2 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைத்து மண் கொண்டு மூடவும். சோளத்திற்கு கலப்புப் பயிராக பயறுவகை பயிர் இருந்தால்       சோளம் இரண்டு வரிசை பின் பயறுவகை பயிர் ஒரு வரிசை விதைக்க வேண்டும். இரண்டு பயிருக்கும்       இடைவெளி 30 செ.மீ இருக்க வேண்டும். சோளத்திற்கு கலப்புப் பயிராக தீவனத் தட்டைப்பயறு       இருந்தால் இரண்டு வரிசை சோளம் மற்றும் இரண்டு வரிசை தட்டைப்பயறு நடவு செய்ய வேண்டும்.  களை மேலாண்மை 
        விதைத்த 3-5ம் நாள் களை முளைப்பதற்கு முன் எக்டருக்கு       0.25 கிலோ அட்ராஜின் அளிக்கவும். தொடர்ந்து 24-D எக்டருக்கு 1 கிலோ விதைத்த       20-25ம் நாளில் மணல் பரப்பில் நேப்சேக் / ராக்கர் தெளிப்பானில் நுண்குழாய் பொருத்தி       500 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்கவும் அல்லது களைக்கொல்லி உபயோகிக்கவில்லையென்றால்,       விதைத்த 10-15-ம் நாள் மற்றும் 30-35-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும்.விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கு முன் அஸ்ராஜின் ஏக்கருக்கு       0.25 அளிக்கவும். அதனைத் தொடர்ந்து விதைத்த 30-35ம் நாளில் கைக்களை எடுக்க வேண்டும்.வரிசையாக விதைத்த பயிரில்  விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கு முன் அஸ்ராஜின்       ஏக்கருக்கு 0.25 அளிக்கவும். அதனைத் தொடர்ந்து விதைத்த 30-35ம் நாளில் இரண்டு       சக்கர களையெடுக்கும் கருவி மூலம் களையெடுக்க வேண்டும்.நடவுப் பயிரில் விதைத்த 3-5ம் நாளில் களை முளைக்கு முன்       அஸ்ராஜின் ஏக்கருக்கு 0.25 அளிக்கவும். அதனைத் தொடர்ந்து விதைத்த 20-25ம் நாளில்       24-D  எக்டருக்கு 1 கிலோ அளிக்கவும். பயிர் கலைத்தல் மற்றும் பாடு நிரப்புதல்  நேரடி விதைப்பு பயிர்           விதைத்த  23-ம் நாள் முதல் கைக்களை எடுத்தபின் பயிர்களுக்கிடையே 15 செ.மீ இடைவெளியை பராமரிக்க  வேண்டும். அனைத்து பயறுவகை பயிர்களுக்கும் 10 செ.மீ இடைவெளி பராமரிக்கப்படுகிறது. தட்டைப்  பயறுக்கு மட்டும் 20 செ.மீ இடைவெளி விடவும். பற்றாக்குறை  அறிகுறிகள் துத்தநாகம் : 20 முதல் 30 நாட்கள் வயதுள்ள  புதிய இலைகளில் பற்றாக்குறை அறிகுறிகள் முதலில் தென்படுகிறது. முதிர்ந்த இலைகளில் மஞ்சள்  கோடுகள் அல்லது இலை நரம்புகளில் வெளிறிய கோடுகள் காணப்படும்.  இரும்பு : நரம்பிடை  சோகை காணப்படுகிறது. பற்றாக்குறை தொடர்ந்தால் நரம்புகள் உட்பட மொத்த இலையும் வெளிறி  காணப்படும். புதிதாக உருவான இலைகளும் வெளிறிய அறிகுறிகளை வெளிப்படுத்தும். முழுப்பயிரும்  வெளுத்த, உலர்ந்துவிடும். சில சமயம் பயிர் இறந்துவிடுகிறது. நீர் நிர்வாகம் 
        
          |   | நடவு    வயல் | நேரடி    விதைப்பு |  
          | மணற்பாங்கான நிலம் | முதல்    நாள் | முதல்    நாள் |  
          | 4வது நாள் | 4வது நாள் |  
          | 15வது நாள் | 17வது நாள் |  
          | 28வது நாள் | 30வது நாள் |  
          | 40வது நாள் | 42வது நாள் |  
          | 52வது நாள் | 55வது நாள் |  
          | 65வது நாள் | 68வது நாள் |  
          | 77வது நாள் | 79வது நாள் |  
          | மொத்தம் | 8 முறை | 8 முறை |  
          | களிமண் நிலம் | முதல்    நாள் | முதல்    நாள் |  
          | 4வது நாள் | 5வது நாள் |  
          | 15வது நாள் | 17வது நாள் |  
          | 28வது நாள் | 30வது நாள் |  
          | 42வது நாள் | 45வது நாள் |  
          | 54வது நாள் | 57வது நாள் |  
          | 66வது நாள் | 70வது நாள் |  
          | மொத்தம் | 7 முறை | 7 முறை |  மண்குறிப்பு : பருவகால தட்பவெப்பநிலையைப் பொறுத்து நீர் நிர்வாகம் மாறும்.  பயிர்  அறுவடை  அறுவடைக்கான  அறிகுறிகள் 
        இலைகள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்த தோற்றத்தத் தரும். தானியங்கள் கடினமாகும்.  அறுவடை 
        கதிர்களை தனியாக அறுவடை செய்யவும். தட்டை ஒரு வாரம் கழித்து வெட்டி நன்கு காயவைத்தபின்       சேமித்து வைக்கவும்.  தானியங்களை  கதிரில் இருந்து பிரித்தல் மற்றும் தரம் பிரித்தல் 
        கதிர்களை காயவைக்கவும். விசைக் கதிரடிப்பான் கொண்டு விதைகளைப் பிரிக்கலாம்       அல்லது கதிர்களைப் பரப்பி கல் உருளை அல்லது மாடுகளை செலுத்துவதன் மூலமும்       பிரிக்கலாம்.  மானாவாரி  சோளம்  பருவம்          வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவ மழையை ஒட்டி  விதைப்பு செய்யலாம். சராசரி மழையளவு 250-300  மி.மீட்டர் உள்ள இடங்கள் மிகவும் ஏற்றவை. நிலம்  தயாரித்தல்          கோடை மழையைப் பயன்படுத்தி, பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக்  கலப்பைக் கொண்டு ஆழமாக உழவு செய்யவேண்டும். பின்னர் ஒவ்வொரு மழைக்குப் பின்பும்  கலப்பைக் கொண்டு நிலத்தை உழுதுவிடவேண்டும். கோடை உழவினால் மண் அரிமானம்  தடுக்கப்பட்டு மழைநீர் சேமிக்கப்படுவதுடன், கோடை மழையில்  முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலத்தடியில் இருக்கும்  கூட்டுப்புழுக்கள் உழவின்போது மேலே கொண்டுவரப்பட்டு அழிக்கப்படுவதால்  பயிர்க்காலத்தில் பூச்சித் தாக்குதல் குறையும். மழைக்காலத்தில் மழைநீரைச்  சேமித்துமண் ஈரம் காக்க ஆழச்சால அகலப்படுத்தி, சம உயர வரப்பு,  சமதள சாகுபடி, நிலப்போர்வை அமைத்தல், களைக் கட்டுப்பாடு போன்ற  முறைகளைக்  கடைப்பிடிக்கவேண்டும். விதையும்  விதைப்பும்  விதை  அளவு : எக்டருக்கு 15 கிலோ இடைவெளி : 45  × 15 செ.மீ அல்லது 45 × 10  செ.மீ விதைநேர்த்தி விதைகளைக் கடினப்படுத்துதல்          வறட்சியைத் தாங்கி வளர, விதைகளைக் கடினப்படுத்தி பின்பு  விதைக்கவேண்டும். பொட்டாசியம் டை-ஹைட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன்  ஒரு லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம்  ஊறவைத்து நிழலில் தன் எடைக்கு உலர்த்திய பின் விதைப்பதினால் பயிர் வறட்சி தாங்கி  வளரும். நுண்ணுயிர்  உரங்கள் விதைநேர்த்தி          ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை 3 பொட்டலம் (600 கிராம்)  அசோஸ்பைரில்லம் மேலும் 3 பொட்டலம் (600 கிராம்) பாஸ்போ பாக்டீரியா அல்லது 6 பொட்டலம் (1200  கிராம்) அசோபாஸ் கொண்டு விதைநேர்த்தி செய்யவேண்டும். இவ்வாறு  செய்வதால் விண்ணிலுள்ள தழைச்சத்தைக் கிரகித்து பயிர்களுக்கு அளிக்கிறது.நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு எக்டருக்கு 10 பொட்டலம் (2000 கிராம்)  அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பொட்டலம் (2000 கிராம்) பாஸ்போ பாக்டீரியாவுடன் அல்லது 20 பொட்டலம்  (4000 கிராம்/ எக்டர்) அஸோபாஸை 25  கிலோ மணல் மற்றும் 25 கிலோ தொழு உரம் கலந்து  தூவவேண்டும்.
 விதைப்பு விதைக்கும் பொழுது விதைகளை 15 கிராம் குளோர்பைரிபாஸ்  உடன் 150 மில்லி ஒட்டும் பசை சேர்த்து நிழலில் உலரவைத்து  பின்பு 5 செ.மீ ஆழத்தில் பரவ மழைக்கு முன்பு  விதைக்கவேண்டும். முன்பருவ  விதைப்பு மழை ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பு விதைப்பது தான்  முன்பருவ விதைப்பு, விதைகளைக் கடினப்படுத்தி 5 செ.மீ ஆழத்தில் விதைக்கவேண்டும். அந்தந்த மாவட்டங்களில் மழை ஆரம்பத்தைப்  பொறுத்து விதைக்கும் தருணம் வேறுபடும். உதாரணமாக கோயமுத்தூர் மாவட்டத்தில்  வடகிழக்குப் பருவமழை பெரும்பாலும் செப்டம்பர் 2ம் வாரம்  முதல் 3ம் வாரத்தில் துவங்கும். ஆகவே இங்கு 2 அல்லது 3ம் வாரத்தில் முன்பருவ விதைப்பு செய்யலாம்.  மற்ற மாவட்டங்களுக்கான விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 
        
          | மாவட்டம் | சரியான    தருணம் |  
          | ஈரோடு, கோவை | செப்டம்பர் 3ம் வாரம் |  
          | சிவகங்கை | அக்டோபர் முதல் வாரம் |  
          | இராமநாதபுரம் | அக்டோபர் முதல் வாரம் |  
          | தூத்துக்குடி | செப்டம்பர் கடைசி வாரம் முதல் அக்டோபர் முதல் வாரம் |  
          | வேலூர், திருவண்ணாமலை | செப்டம்பர் இரண்டாம் வாரம் முதல் செப்டம்பர் மூன்றாம்    வாரம். |  சோளப் பயிருடன் இணை வரிசையில் பயறு வகைகளைப்  பயிர் செய்தால் உபரி வருமானம் கிடைப்பதோடு மண்வளத்தையும் கூட்டமுடியும்.  ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை  உர  நிர்வாகம் ஒரு எக்டருக்கு 12.5 டன்கள் மக்கிய தென்னை நார்க்கழிவு  இடவேண்டும். இரசாயன உரங்களை மண்பரிசோதனை சிபாரிசிபடி   இடவேண்டும். அல்லது பொதுப்பரிந்துரைப்படி எக்டருக்கு 40: 20 : 0 என்ற அளவில் தழை, மணி, சாம்பல்  சத்துக்களை இடவேண்டும். களைக்  கட்டுப்பாடு மற்றும் பின்செய்நேர்த்தி  களை  நிர்வாகம் சோளப்பயிர் முளைவிட்ட இரண்டாம் வாரம் முதல் 5ம் வாரம் வரை  களைகள் இல்லாமல் இருப்பது பயிருக்கு நல்லது. மண்ணில் போதுமான ஈரம் இருக்கும்போது  எக்டருக்கு 500 கிராம் அட்ரசின் என்ற களைக்கொல்லி மருந்தினை  விதைத்த 3-5 நாட்களுக்குள் 900 லிட்டர்  தண்ணீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டோ அல்லது மணலில் கலந்தோ இடலாம். பயறுவகைப்  பயிர்களுடன் ஊடுபயிராக பயிரிட்டிருந்தால் எக்டருக்கு 2 லிட்டர்  பெண்டிமிதிலின் தெளிக்கவேண்டும். மறுதாம்பு  சோளம்          மறுதாம்புப் பயிர் சாகுபடியில் கவனத்தில்  இருக்கவேண்டியவை.  
        நடவுப் பயிரை அறுவடை செய்யும் போது நில மட்டத்தில்       இருந்து 15 செ.மீ தட்டையை விட்டு அறுத்து       உடனடியாக நீர் பாய்ச்சவேண்டும்.அறுவடை செய்தவுடன் களை எடுக்கவேண்டும். பின் 15 மற்றும் 30ம்       நாள் ஒரு களை எடுக்கவேண்டும்.ஒரு எக்டருக்கு 100 கிலோ தழைச்சத்தை  இரண்டாகப் பிரித்து 50       கிலோ மணிச்சத்துடன் மறுதாம்புப் பயிராக விட்ட 15வது நாளில் இடவேண்டும். மீதம் உள்ள தழைச்சத்தை 45வது நாளில் இடவேண்டும்.மண் மற்றும் கால நிலையைப் பொறுத்து நீர்       பாய்ச்சவேண்டும். மறுதாம்புப் பயிராக விட்ட 70-80வது நாளில் நீர்ப்பாசனத்தை உடனடியாக நிறுத்திவிடவேண்டும்.பூச்சி நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக       பயிர்ப்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.  குறிப்பு  : மருதாம்புப் பயிரின் வயது நடவு பயிரை விட 15 நாட்கள் குறைவாக இருக்கும். பயிர் பாதுகாப்பு அறுவடை பின்சார் தொழில் நுட்பம் இந்தியாவில் சோளம் அரிசி மற்றும் கோதுமைக்கு அடுத்தபடியாக முக்கியமான இடத்தை பிடித்துள்ளது.  முழுமையான மற்றும் உடைத்த சோளம் வேகவைத்து அரிசி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.  முழுச்சோளம் அரைத்து மாவிலிருந்து சப்பாத்தி போன்றும் பயன்படுத்தப்படுகிறது.  சோளமானது நொதித்தல் தொழிற்சாலை மற்றும் எரிசாராயம் மற்றும் கரைப்பான் தொழிற்சாலைகளில் மாவுச்சத்து பொருளாக பயன்படுத்தப்படுகிறது.மேலும் விபரங்களுக்கு
   |