Agriculture
வேளாண்மை :: சிறுதானியங்கள்
வரகு – பாஸ்பாலம் ஸ்கார்பிகுலேட்டம்
இயந்திரம் மூலம் வரகு அறுவடை – வீடியோ

 

கதிர்கள்
கதிர்கள்
தானியம்
தானியம்

வரகு சாகுபடி முறைகள்
பருவம் மற்றும் இரகங்கள்

வரகு வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் இராமநாதபுரம்

மாவட்டம்/பருவம் இரகங்கள்
மானாவாரி
a) ஜூன்-ஜூலை
b) ஜூலை-ஆகஸ்ட்
கோ 3

வரகு

விவரங்கள் கோ 3
பெற்றோர் ஜியோர்ஜியா இரகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டது.
வயது (நாட்கள்) 120
நிறம் ஊதா நிற தண்டு
தூர்கட்டும் திறன் அதிகம்
பூங்கொத்து நன்கு வெளிப்படும் கொத்துகள் மற்றும் பூங்கிளைகள்
தானிய தன்மை பழுப்பு நிறம் மற்றும் தடித்த, கடின விதையுறை கொண்டது.
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
மானாவாரி 1500 - 1800
சிறப்பு அம்சங்கள் கரிப்பூட்டை நோயை தாங்கி வளரும், குறுகிய கால இரகம்

விதை மற்றும் விதைப்பு

:

வரிசை நடவுக்கு 10 கிலோ/எக்டர்; கொர்ரு அல்லது விதைப்பி மூலம் விதைப்பதற்கு 12.5 கிலோ/எக்டர்

விதை நேர்த்தி

:

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பெண்டசிம் கொண்டு விதை நேர்த்தி செய்யவும்.

நிலம் தயாரித்தல்

:

நிலத்தினை சிறிய இரும்பு கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு நன்றாக உழ வேண்டும்.

உரமிடுதல்

அடியுரம் : தொழு உரம்: 12.5 டன்/எக்டர்; தழைச்சத்து   : 44 கிலோ/எக்டர் ; மணிச்சத்து  : 22  கிலோ/எக்டர் 

இடைவெளி

:

வரிசை நடவு - 45 x 10 செ.மீ;  நேரடி விதைப்பு- செடிகளுக்கு இடையே 10 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும்

களையெடுத்தல்

:

விதைத்த 15 வது நாளிலும் 40 வது நாளிலும் இரண்டு முறை களையெடுக்க வேண்டும்.

பயிர்க்கலைத்தல்

:

களையெடுத்த பிறகு அல்லது விதைத்த 20 வது நாளில் பயிர்க் கலைத்தல் வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

:

பூச்சி மற்றும் நோய் பாதிப்பு பெரிதாக காணப்படுவதில்லை

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam