வேளாண்மை :: எண்ணெய் வித்துக்கள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சூரியகாந்தி (ஹிலியாந்தஸ் அன்னஸ்)
பருவம் மற்றும் இரகங்கள் அ.மானாவாரி
ஆ. இறவை
சூரியகாந்தி இரகங்கள்
மண்வகை நல்ல வடிகால் வசதியுள்ள எல்லா மண் வகையும் சூரியகாந்தி சாகுபடிக்கு ஏற்றது. கரிசல் பூமியில் நன்றாக வளர்ந்து அதிக மகசூல் கொடுக்கிறது. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மண் வகையிலும், எல்லா மாவட்டங்களிலும் சாகுபடி செய்யலாம். நிலம் தயாரித்தல் நிலத்தில் 12.5 டன் மக்கிய தொழு உம் அல்லது தென்னை நார்க் கழிவு இட்டு நன்றாக உழுது பண்படுத்தி மண்ணை நன்றாகப் புழுதியாக்க வேண்டும்
விதை நேர்த்தி மானாவாரியில் விதைக்கும் முன் விதையை சிங்க் சல்பேட் 2 % கரைசலில் 12 மணிநேரம் ஊறவைத்து. நிழலில் உலர்த்திய பின்னர் விதைப்பு செய்யலாம், கார்பென்டாசிம் 2 கிராம்/ கிலோ விதையுடன் கலந்து 24 மணி நேரம், கழித்து விதைப்பு செய்ய வேண்டும். அல்லது டிரைகோடர்மா 4 கிராம்/ கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம். அசோஸ்பைரில்லம் : 3 பாக்கெட் அசோஸ்பைரில்லம் (600 கிராம்/ ஹெ) மற்றும் 3 பாக்கெட் (600 கிராம்/ ஹெ) பாஸ்போபாக்டீரியா அல்லது 6 பாக் அசோபாஸ் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதைநேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடம் உலர்த்தி, உடனடியாக விதைக்க வேண்டும்
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை
உயிர் உரம் மண்ணில் இடுதல் 10 பாக் (2000 கிராம் / ஹெ)
அசோஸ்பைரில்லம் மற்றும் 10 பாக் (2000 கிராம் / ஹெ) பாஸ்போபாக்டீரியம்
அல்லது 20 பாக் அசோபாஸ் (4000 கிராம், ஹெ) உடன் 25 கி.தொழுஉரம் மற்றும் நுண்ணூட்டம் இடுதல் 12.5 கிலோ நுண்ணூட்டக் கலவையை 40 கிலோ மணலுடன் கலந்து விதைக்கு முன் சாலில் இட்டு பின்னர் விதைப்பு செய்ய வேண்டும். மாங்கனீசு பற்றாக்குறை உள்ள நிலத்திற்கு 0.5% கரைசலை விதைத்த 30, 40 மற்றும் 50ஆம் நாட்களில் தெளிக்க வேண்டும். நீர் நிர்வாகம் கீழ்க்கண்டவாறு நீர்ப் பாய்ச்ச வேண்டும்
போரான் தெளிப்பு பூக்கொண்டைகளில் வெளிவட்ட மஞ்சள் பூக்கள் மலர ஆரம்பிக்கும் சமயத்தில் வெண்காரத்தை (போரான்) 0.2 (2கி.லிட்.தண்ணீர்) கலந்து பூக்கொண்டைகள் நனையுமாறு தெளிக்கவும், இது மணிகள் நன்றாக பிடிக்க உதவும். மணிகள் அதிகம் பிடிக்க மகரந்தச் சேர்க்கை ஏற்படும் தருணமான காலை 9 மணி முதல் 11 மணிக்குள்
மெல்லிய துணி கொண்டு பூவின் மேல்பாகத்தை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை
மெதுவாக ஒவ்வொரு பூக்கொண்டையையும் தேய்க்க வேண்டும். எட்டிலிருந்து
பத்து நாட்களுக்கு 5 முறை இப்படி ஒவ்வொரு பூவிலும் செய்யவேண்டும்.
அத்துடன் பூக்கள் மலரும் தருணத்தில் எக்டருக்கு மூன்று பெட்டி வீதம் தேனீ
வளர்த்தல் நல்ல பலன் தரும். அருகருகே உள்ள பூக்கொண்டையினை
ஒன்றோடொன்று முகம் சேர்ந்து இலேசாகத் தேய்த்துவிட்டாலும் சிறந்த பலன் அறுவடை பூவின் அடிப்பாகத்திலுள்ள இதழ்கள் மற்றும் பின்புறம் மஞ்சள் நிறமடைந்து பூக்கொண்டையிலுள்ள விதைகள் கடினத்தன்மை அடைந்திருப்பது முதிர்ச்சிடைந்தமைக்கு அறிகுறியாகும். உலர்ந்த பூக்கொண்டைகளைப் பறித்து உலர்த்திய பின் விதைகளைத் தனியே பிரித்தெடுத்து சுத்தம் செய்யவேண்டும். அறுவடைக்குப் பின்செய் நேர்த்தி அறுவடைக்குப்பின் விதைகளை 8 முதல் 9 சத ஈரப்பதம் வரும் வரை நன்கு உலர வைக்க வேண்டும். பயிர் பாதுகாப்பு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |