Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

தட்டைப்பயிறு (விக்னா அன்குய்குலேட்டா)

 

Cowpea

விதை அளவு

வகைகள் விதையளவு (கிலோ / எக்டர்) 
தனிப்பயிர் கலப்புப்பயிர்
பையூர்1, வம்பன்1. வம்பன்2 கோ6 மற்றும் கோ(சிபி)7 25 கிலோ 12.5 கிலோ

உகந்த பயிர் எண்ணிக்கை 3,50,000/எக்டர். 


ஆதாரம் : www.21food.com/userImages/jyglobe/jyglobe$38164046.jpg

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்

வயலை நன்கு உழுதபின் பாத்திகள் அமைக்கவும்.மண்ணின் கடினத்தன்மையை நீக்க எக்டருக்கு சுண்ணாம்புக்கல் 2 டன் மற்றும் தொழுஉரம் 12.5 டன் அல்லது மக்கிய தென்னை நார் கழிவு 12.5 டன் இடுவதன்மூலம் மண்வளத்தை பாதுகாத்து கூடுதல் மகசூல் பெறலாம்

விதைநேர்த்தி

ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பென்டாசிம் அல்லது திரம் 4 கிராம் அல்லது டிரைகோடர்மா விரிடி 4 கிராம் அல்லது 1 கிராம் சூடோமோனஸ் உடன் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைநேர்த்தி செய்யவேண்டும். பூச்சிக்கொல்லியுடன் நேர்த்தி செய்யப்பட்ட விதைகள் மீண்டும் பாக்டீரியாவுடன் நேர்த்தி செய்யப்படுவதற்கு 24 மணி நேர இடைவேளை வேண்டும்.

COC 10 எனும் மேம்படுத்தப்பட்ட ரைசோபிய ராசி விளைச்சலை அதிகரிக்க உகந்ததாகும்

தமிழ் நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட, 3 பாக்கெட் (600 கிராம், எக்) ரைசோபியம் COC 10 மற்றும் 3 பாக்கெட் (600 கிராம், எக்) பாஸ்போபாக்டீரியாவை அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நேர்த்தி செய்யவேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லையென்றால், 10 பாக்கெட் ரைசோபியவுடன் 25 கி.கி. தொழு உரம் மற்றும் 25 கி.கி. மணலுடன் கலந்து விதைப்பதற்கு முன் விதை நேர்த்தி செய்யவேண்டும். அரிசிக் கஞ்சியானது ஒட்டும் திரவமாகப்பயன்படுகிறது. நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் உலர்த்தி பிறகு விதைக்க வேண்டும்.

கடின விதை நேர்த்தி: தட்டைப்பயிர் விதைகளை மூன்றுக்கு ஒன்று என்ற அளவில் 100 பிபிஎம் (10 கிராம் / 100 லிட்டர் தண்ணீர்) நீர்த்த துத்தநாக சல்பேட் கரைசலில் நான்கு மணி நேரம் ஊறவைத்து பின் நிழலில் உலர்த்த வேண்டும்.

விதைத்தல்: விதைகளை கீழ்க்காணும் இடைவெளியில் ஊன்றுதல் வேண்டும்

இரகங்கள் தனிப்பயிர் கலப்புப்பயிர்
கோ 6, வம்பன் 1, பையூர் 1 30 செ.மீ. × 15 செ.மீ. 200 செ.மீ. × 15 செ.மீ.
கோ(சிபி) 7, கோ 6, கோ 2, வம்பன்2 45 செ.மீ. × 15 செ.மீ. -

Cowpea0002
கோ 6 தட்டைப்பயிறு – 30 செ.மீ X 15 செ.மீ இடைவெளி

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல்

அடியுரமாக மானாவாரிப் பயிருக்கு எக்டருக்கு 12.5 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து 12.5 கிலோ சாம்பல் சத்து மற்றும் 10 கிலோ கந்தகச்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்கவேண்டும். இறவைப் பயிராக இருந்தால் 25 கிலோ தழைச்சத்து 50 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து அளிக்க வேண்டும்.அடியுரமாக 25 கிலோ ஜிங்க்சல்பேட் இட வேண்டும்.

பயிர்    ஒரு எக்டருக்கு இடவேண்டிய சத்துக்கள் (கிலோ)
தழை மணி சாம்பல் கந்தகம்
தட்டைப்பயிர் மானாவாரி 12.5 25 12.5 10
இறவை 25 50 25 20

குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தகத்தை இடவும்

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் ஒரு தண்ணீரும், பின் மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவ நிலைகளைப் பொறுத்து 10 அல்லது 15 நாட்கள் இடைவெளியில் நீர் கட்ட வேண்டும். நன்செய் வரப்புகளுக்கு விதைத்த ஒரு வாரம் கழித்து தினமும் நீர் ஊற்ற வேண்டும். பூக்கும் மற்றும் காய்க்கும் பருவம் நீர்கட்ட வேண்டிய முக்கிய நிலைகளாகும்.

டை அமோனியம் பாஸ்பேட் (அ) யூரியா என்.ஏ.ஏ மற்றும் சாலிசிலிச் அமிலம் தெளித்தல்:

  • டி.ஏ.பி. 20 கிராம்/லிட்டர் (அ) யூரியா 20 கிராம்/லிட்டரை பூக்கும் பருவத்திலும் அதனை தொடர்ந்து 15 நாட்களுக்கு பிறகும் இருமுறை இலைவழித் தெளிக்க வேண்டும்.
  • என்.ஏ.ஏ.40 மி.கி/லிட்டரை பூக்கும் போதும் அதன்பிறகு 15 நாட்கள் கழித்தும் இலைவழித்தெளிக்க வேண்டும்.
  • 100 மி.கி/லிட்டர் சாலிசிலிக் அமிலத்தை பூக்கும் போதும் அதன் பிறகு 15 நாட்கள் கழித்தும் இலைவழித் தெளிக்க வேண்டும்.

களை மேலாண்மை

  • பென்டிமெத்தாலின் 2.5 லிட்டரை களை முளைக்கும் முன் களைக்கொல்லியாக விதைத் மூன்றாம் நாளில் தட்டை விசிறி நுனிக்குழாய் கொண்ட பேக்பாக்/நேப்சாக் /ராக்கர் தெளிப்பான் மூலம் எக்டருக்கு 500 லிட்டர் தண்ணீர் கொண்டு தெளிக்க வேண்டும். அதனை தொடர்ந்து விதைத்த 30வது நாளில்  கைக்களை எடுக்க வேண்டும்.
  • களைக்கொல்லி தெளிக்கவில்லை என்றால், விதைத்த 15 வது நாளிலும் மற்றும் 30வது நாளிலும் இருமுறை கைக்களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam