Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

மொச்சை

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம்/பருவம்   இரகங்கள்
நீலகிரி தவிர அனைத்து மாவட்டங்களும் (வருடம் முழுவதும்)   கோ 2

மொச்சை இரகங்களின் விவரங்கள்

விவரங்கள்   கோ 2
பெற்றோர்   கோ 8 X கோ 1 யிலிருந்து பெறப்பட்டது
வெளியிடப்பட்ட ஆண்டு   1984
50% பூக்கும் காலம் (நாட்கள்)   35 - 45
வயது (நாட்கள்)   105
தானிய மகசூல் (கிலோ/எக்டர்)
மானாவாரி   900
இறவை   1400
இயல்பு   நிமிர்ந்த, புதர் போன்றது
  ஒளி உணர்திறன் இல்லாதவை.
நீளம் (செ.மீ)   60
பூவின் நிறம்   ஊதா
காயின் நிறம்   பச்சை
காயின் வடிவம்   தட்டை வடிவம்
தானிய நிறம்   கருப்பு
100 விதையின் எடை (கி)   20.0

விதை அளவு

விவரங்கள் விதை அளவு கிலோ/எக்டர்
தனிப்பயிர் கலப்புப்பயிர்
     
கோ 1 20 10.0
கோ 2 25 12.5

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்றாக உழ வேண்டும்

பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி

விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும்

பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி

பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இரண்டு விதை நேர்த்திக்கும் இடையே குறைந்தட்சம் 24 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை விதை நேர்த்தி செய்ய மூன்று பாக்கெட் பாக்டீரியா பயிர் வளர்ப்பு போதுமானதாகும். இந்த பாக்டீரியா பயிர் வளர்ப்பினை அரிசி கஞ்சியுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும்.

உரமிடுதல்

a) உரங்களை விதைப்பிற்கு முன் அடியுரமாக இட வேண்டும்.

மானாவாரி : 12.5 கிலோ தழைச்சத்து + 25 கிலோ மணிச்சத்து + 12.5 கிலோ சாம்பல்சத்து +10 கிலோ கந்தகச்சத்து*/எக்டர்
இறவை : 25 கிலோ தழைச்சத்து + 50 கிலோ மணிச்சத்து + 25 கிலோ சாம்பல்சத்து + 20 கிலோ கந்தகச்சத்து*/எக்டர்

*குறிப்பு : மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தக சத்தை இடவும்.

  1. அடியுரமாக இறவைப் பயிருக்கு எக்டருக்கு 25 கிலோ ஜிங் சல்பேட் இடவும்

விதைத்தல்

பின்வரும் இடைவெளியில் விதைகளை ஊன்ற வேண்டும்.

இரகம் தனிப்பயிர் கலப்புப்பயிர்
கோ 1 90 செ.மீ x 30 செ.மீ 200 செ.மீ x 30 செ.மீ
கோ 2 45 செ.மீ x 15 செ.மீ 200 செ.மீ x 15 செ.மீ

களை நிர்வாகம்

விதைத்த மூன்றாவது நாளில் பென்டிமெத்தலின் களைக்கொல்லியினை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தட்டை விசிறி வடிவ நாசிலை உபயோகித்து தெளிக்கவும். பின்பு விதைத்த 40 - 45 நாட்கள் கழித்து கைக்களை எடுக்கவும் இல்லையென்றால் விதைத்த 25 நாட்களுக்குள் ஒரு களையும், பின்பு 45-வது நாளில் ஒரு களையும் எடுக்க வேண்டும்

நீர் நிர்வாகம்

விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவநிலையைப் பொறுத்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். பயிர் பூக்கும் தருணத்திலும் காய்க்கும் தருணத்திலும் நீர் கட்ட வேண்டியது மிக அவசியம். வளர்ச்சிப் பருவத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பது அவசியம். பயிர் நிலத்தில் ஈரம் குறைவாக இருந்தால் 0.5 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழி உரமாக தெளிக்கவேண்டும்.

அறுவடை

நன்கு முற்றிய காய்ந்த காய்களை பறித்து தானியமாக பயன்படுத்தலாம். பச்சை காய்களை பறித்து காய்கறியாக பயன்படுத்தலாம்.

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam