வேளாண்மை :: பயறு வகைகள்
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
அவரை
பருவம் மற்றும் இரகங்கள்
விதை அளவு
பயிர் மேலாண்மை நிலம் தயாரித்தல் நிலத்தை நன்றாக உழ வேண்டும் விதை நேர்த்தி விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு விதைகளை கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம் / ஒரு கிலோ விதைக்கு என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவேண்டும் பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி பூசணக் கொல்லியுடன் விதை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை பாக்டீரியா பயிர் வளர்ப்புடன் விதை நேர்த்தி செய்ய வேண்டும். இரண்டு விதை நேர்த்திக்கும் இடையே குறைந்தட்சம் 24 மணி நேர இடைவெளி இருக்க வேண்டும். ஒரு எக்டருக்கு தேவையான விதைகளை விதை நேர்த்தி செய்ய மூன்று பாக்கெட் பாக்டீரியா பயிர் வளர்ப்பு போதுமானதாகும். இந்த பாக்டீரியா பயிர் வளர்ப்பினை அரிசி கஞ்சியுடன் சேர்த்து தயாரிக்க வேண்டும். நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 15 நிமிடங்கள் நிழலில் உலர்த்த வேண்டும். விதைகள் கீழ்க்கண்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும்
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை உரமிடுதல் அடியுரமாக எக்டருக்கு கீழ்க்கண்ட அளவில் உரம் இடவேண்டும்
குறிப்பு: மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட் உரம் மூலம் இடவில்லை எனில் ஜிப்சம் மூலமாக கந்தக சத்தை இடவும். அடியுரமாக இறவைப் பயிருக்கு எக்டருக்கு 25 கிலோ ஜிங் சல்பேட் இடவும் களை நிர்வாகம் விதைத்த மூன்றாவது நாளில் பென்டிமெத்தலின் களைக்கொல்லியினை எக்டருக்கு 2 லிட்டர் என்ற அளவில் 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து கைத் தெளிப்பான் கொண்டு தட்டை விசிறி வடிவ நாசிலை உபயோகித்து தெளிக்கவும். பின்பு விதைத்த 40 45 நாட்கள் கழித்து கைக்களை எடுக்கவும் இல்லையென்றால் நீர் நிர்வாகம் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்று நாட்கள் கழித்து உயிர்த் தண்ணீர் கட்ட வேண்டும். மண் மற்றும் பருவநிலையைப் பொறுத்து 7-10 நாட்களுக்கு ஒரு முறை நீர் கட்ட வேண்டும். பயிர் பூக்கும் தருணத்திலும் காய்க்கும் தருணத்திலும் நீர் கட்ட வேண்டியது மிக அவசியம். வளர்ச்சிப் பருவத்தில் தண்ணீர் தேங்காமல் இருப்பது அவசியம். பயிர் நிலத்தில் ஈரம் குறைவாக இருந்தால் 0.5 சதம் பொட்டாசியம் குளோரைடு கரைசலை இலைவழி உரமாக தெளிக்கவேண்டும். கவாத்து செய்யும் தொழில்நுட்பம் / கிளைகளை வெட்டுதல் வரிசைக்கு வரிசை 10 அடியும் செடிக்கு செடி 4 அடி இடைவெளியும் இருக்க வேண்டும். குழிகளை தோண்டிய பிறகு ஒரு குழிக்கு 2-3 விதைகளை குழியின் மத்தியில் தூவ வேண்டும். பின் குழிக்கு ஒரு குச்சி கொண்டு முட்டுக் கொடுக்க வேண்டும். கொடி பந்தலை அடைந்த பின், முலையைக் கிள்ளி விட வேண்டும். ஒவ்வொரு கிளையையும் 3 அடி நீளத்துக்கு விட்டு கவாத்து செய்ய வேண்டும். பூக்கும் காலம் தொடர்ந்த பின், கிளைகளின் நுனியினை மூன்று கணுக்களை விட்டு கவாத்து செய்ய வேண்டும். பயிரின் இனப்பெருக்க பருவம் முழுவதும் இதனை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். அறுவடை நன்கு முற்றிய காய்ந்த காய்களை பறித்து தானியமாக பயன்படுத்தலாம். பச்சை காய்களை பறித்து காய்கறியாக பயன்படுத்தலாம். பயிர் பாதுகாப்பு
|
|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு © தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2024 |