Agriculture
வேளாண்மை :: பயறு வகைகள்

கொள்ளு (மேக்ரோடைலோமா யுனிபிளோரம்)

Horsegram

பருவம் மற்றும் இரகங்கள்

மாவட்டம் / பருவம் இரகங்கள்
நவம்பர் (குளிர்காலம்) (மானாவாரி)
நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர மற்ற மாவட்டங்கள்
கோ 1, பையூர் 1,பையூர் 2

பயிர் மேலாண்மை

நிலம் தயாரித்தல் : நிலத்தை புழுதிபட நன்கு உழ வேண்டும்

விதையும் விதைப்பும் : விதை அளவு எக்டருக்கு தனிப்பபயிராக பயிரிட 20 கிலோ தேவைப்படும்

விதைநேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு இரண்டு கிராம் கார்டிபண்டாசிம் அல்லது நான்கு கிராம் திரம் கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும்

உயிர் உரத்துடன் விதை நேர்த்தி

விதைகளை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்பட்ட ரைசோபியல் பயிர் வளர்ப்பு ஒரு பாக்கெட் (200 கிராம்/எக்டர்) அல்லது பாஸ்போ பாக்டீரியாவை (200 கிராம்/எக்டர்) கொண்டு அரிசி கஞ்சியுடன் சேர்த்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை நேர்த்தி செய்யவில்லை என்றால், 10 பாக்கெட் ரைசோபியம்  மற்றும் 10 கிலோ பாஸ்போ பாக்டீரியாவை  25 கிலோ தொழுவுரம் மற்றும் 25 கிலோ மண்ணுடன் கலந்து விதைப்பிற்குமுன் வயலில் இட வேண்டும்.

விதைப்பு: கை விதைப்பு மூலம் முழுவதும் சீராகத் தூவ வேண்டும்

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை

உரமிடுதல்

விதைப்பதற்கு முன் அடியுரமாக எக்டருக்கு 12.5 மக்கிய குப்பை உரம் அல்லது தொழு உரம் இடவும். இவை தவிர தழைச் சத்து எக்டருக்கு 12.5 கிலோ மற்றும் மணிச்சத்து 25 கிலோ மற்றும் 12.5 கிலோ சாம்பல் சத்து கொடுக்கக் கூடிய இரசாயன உரங்களை இட வேண்டும்.

களை கட்டுப்பாடு மற்றும் பின்செய் நேர்த்தி

20 முதல் 25 நாட்களுக்குள் களைகொத்து மூலம் ஒரு முறை களை எடுக்க வேண்டும்

அறுவடை : அனைத்து காய்களும் முதிர்ச்சி அடைந்தவுடன் அறுவடை செய்தல் வேண்டும். காய்களை கதிரடித்து பருப்புகளை பிரிக்க வேண்டும்.

அறுவடை பின்சார் தொழில்நுட்பம் 

 

 
Fodder Cholam