Agriculture
முதல் பக்கம் | பருவம் & இரகங்கள் | நில பண்படுத்தல் | உர நிர்வாகம் | நீர் மேலாண்மை | களை மேலாண்மை | பயிர் பாதுகாப்பு | பயிர் சாகுபடி செலவு | புகைப்படத் தொகுப்பு
வேளாண்மை :: சர்க்கரைப் பயிர்கள்
கரும்பு (சக்கேரம் அப்சினேரம்)
கரும்பில் குழிமுறை நடவு - வீடியோ
விவசாயிகளுடன் நேர்காணல் – இரட்டை வரிசை நடவு – வீடியோ

 

arrow

கரும்பு நிறுவனம் கரும்பு தகவல்

arrow

இந்திய சர்க்கரை தொழில்நுட்பாளர்கள் சங்கம்
  arrow தமிழ்நாடு கூட்டுறவு சர்க்கரை கூட்டமைப்பு லிமிடெட்

arrow

இந்திய கரும்பு ஆராய்ச்சி நிறுவனம், லக்னோ
  arrow தமிழ்நாடு கரும்பு பதிவு மற்றும் விநியோகம்

arrow

கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூர்
  arrow செம்மை கரும்பு சாகுபடி

arrow

கரும்பு மேம்பாட்டு இயக்குனரகம்

சாகுபடி உத்திகள்
கரும்பு
பருவம் மற்றும் இரகங்கள்

தமிழ்நாட்டில் கரும்பு பொதுவாக டிசம்பர் மாதம் முதல் மே மாதம் வரை மூன்று பட்டங்களில் அதிகமாக நடவு செய்யப்படுகின்றது. இது தவிர திருச்சி, பெரம்பலூர், கரூர், சேலம், நாமக்கல் மற்றும் கோவை மாவட்டங்களில் ஜீன் முதல் செப்டம்பர் மாதம் வரை தனிப்பட்டமாக கரும்பு நடவு செய்யப்படுகிறது. பருவத்திற்கு ஏற்ப பட்டங்கள் பின்வருமாறு பிரிக்கப்படுகிறது.

  1. முன்பட்டம் - டிசம்பர் - ஜனவரி
  2. நடுப்பட்டம் -    பிப்ரவரி - மார்ச்
  3. பின்பட்டம் - ஏப்ரல் - மே
  4. தனிப்பட்டம் - ஜீன் - ஜீலை

முன்பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் தனிப்பட்டத்திற்கும் உகந்தவையாகும்

இரகங்களின் இயல்புகள்

இரகம் வயது (மாதம்) கரும்பு மகசூல் டன்கள்/ எக்டர் சர்க்கரை சத்து (%) சர்க்கரை டன்கள்/ எக்டர்
கோ க 671 10 123.5 14.20 17.50
கோ க771 10 140.0 13.10 18.30
கோ க772 10 143.3 14.00 20.00
கோ க773 10 97.5 13.20 12.60
கோ க8001 (சி 66191) 10-10 102.9 13.20 13.50
கோ க774 11 159.8 11.90 17.90
கோ க775 11 122.5 13.40 16.40
கோ க776 11 112.3 14.00 15.50
கோ க777 12 171.3 11.80 20.00
கோ க778 12 165.5 11.00 18.10
கோ க779 12 204.6 11.80 24.00
கோ 419 12 112.5 10.50 11.80
கோ 6304 12 115.0 13.50 15.50
கோ க 85061 10-11 128.5 12.90 16.60
கோ க86062 10-11 133.5 12.60 16.80
கோ சி86071 10-11 131.7 12.20 16.000
கோ சி90063 10-11 124.0 12.30 15.40
கோ 8021 10-11 137.7 11.00 14.60
கோ க91061 10-11 131.0 11.30 15.60
கோ க92061 8-11 132.7 12.76 16.05
கோ 8362 11-12 124.3 12.40 15.40
கோ கு93076 11-12 132.0 13.20 17.40
கோ 8208 11-13 141.5 11.07 15.28
கோ கு94077 11 133.2 13.5 17.6
கோ கு95076 10-11 108.2 11.5 12.4
கோ 85019 12 134.5 12.5 16.8
கோ சி95071 10 152.0 12.9 21
கோ சி96071 10 145.0 11.9 17.3
கோ 86010 10-12 146.1 10.78 15.64
கோ க98061 10-11 120.0 11.60 13.80
கோ சி98071 12 144.7 12.3 17.7
கோ 86249 10-12 128.7 11.3 14.3
கோ க99061 10-12 130.3 11.9 15.6
கோ 86032 10-12 110.0 13.0 14.3
கோ க (கரும்பு)22 10-12 135.9 12.1 16.5
கோ சி (கரும்பு)6 10-11 142.0 13.1 18.6
கோ கு (கரும்பு)5 11-12 115.0 12.7 14.6
கோ க 23 10-11 133.0 12.95 17.23
கோ க 24 10-11 133.0 12.82 17.05
த.வே.ப.க க சி 7 10-11 156 13.4 20.9
த.வே.ப.க க சி 8 11-12 146 12.9 18.0

புற பண்புகள்

இயல்புகள் கோக671 கோக771 கோக772 கோக773
பெற்றோர் கியு 63 × கோ.775 கோ 419 × கோ 658 கோ 740 × கோ 658 கோ 658 × கோ 1305
இலை நீள உயர அளவு அகலம் அகலம் அகலம் அகலம்
இலை வண்ணம் பச்சை பச்சை பச்சை பச்சை
இலை உறை வண்ணம் பச்சை உறையில் ஊதா நிற இளம் வண்ணம் பச்சை உறையில் ஊதா நிற இளம் வண்ணம் பச்சை உறையில் ஊதா நிற இளம் வண்ணம் பச்சை உறையில் ஊதா நிற இளம் வண்ணம்
இலை உறை பிடிமானம் தளர்ந்தது தளர்ந்தது தளர்ந்தது தளர்ந்தது
முட்கள் உண்டு உண்டு உண்டு உண்டு
லிக்யுல் நடைமுறை உண்டு இல்லை இல்லை உண்டு
தண்டின் வண்ணம் பச்சையில் ஊதா இள வண்ணம் மஞ்சளில் ஊதா நிற இள வண்ணம் மஞ்சளில் ஊதா நிற இளவண்ணம் மஞ்சளில் ஊதா நிற இள வண்ணம்
தண்டின் குறுக்களவு மொத்தம் மிதமானது மிதமானது மிதமானது
இடைக்கணு வளைவானது வளைவற்றது வளைவானது வளைவற்றது
துளிர்/ மொக்கு உடன் இருக்கும் நீண்ட குறுகிய பள்ளம் இல்லை உண்டு இல்லை இல்லை
மொக்கு பருமன் மிதமானது மிதமானது மிதமானது மிதமானது

இயல்புகள் கோ.க774 கோ.775 கோ.க.776 கோ.க777
பெற்றோர் கோ.785 × கோ 658 கோ 658 × கோ 1305 கோ,419 × கோ 775 கோ 419 ×
கோ 853
இலை நீள உயர அளவு அகலம் அகலம் அகலம் அகலம்
இலை வண்ணம் பச்சை பச்சை பச்சை பச்சை
இலை உறை வண்ணம் பச்சை உறையில் ஊதா நிற இளம் வண்ணம் பச்சை நிறத்தில் ஊதா நிற இளம் வண்ணம் பச்சை நிறத்தில் ஊதா நிற இளம் வண்ணம் ஊதா நிறம்
இலை உறை பிடிமானம் இறுக்கமானது இறுக்கமானது இறுக்கமானது தளர்ந்தது
முட்கள் உண்டு உண்டு உண்டு உண்டு
லிக்யுல் நடைமுறை உண்டு உண்டு உண்டு உண்டு
தண்டின் நிறம் ஊதா நிறம் பச்சை நிறத்தில் ஊதா இளம் வண்ணம் மஞ்சள் நிறத்தில் ஊதா இளம் வண்ணம் ஊதா நிறத்தில பச்சை இளம் வண்ணம்
தண்டின் குறுக்களவு மிதமானது மிதமானது மிதமானது மிதமானது
இடைக்கணு வளைவற்றது வளைவற்றது வளைவற்றது வளைவானது
துளிர் மொக்கு உடன் உள்ள நீண்ட குறுகிய பள்ளம் இல்லை உண்டு இல்லை இல்லை
மொக்கு பருமன் மிதமானது மிதமானது மிதமானது மிதமானது

இயல்புகள் கோ க 778 கோ க 779 கோ 419 கோ 85061
பெற்றோர் கோ 419 × கோ 853 கோ 419 × கோ 853 பிஞஜே 2878 × கோ 290 கோ 6304 பொது கலப்பு
இலை நீள உயர அளவு அகலம் அகலம் அகலம் மிதமான அகலம்
இலை வண்ணம் பச்சை பச்சை பச்சை வெளிர் பச்சை
இலை  உறை வண்ணம் ஊதா நிறம் ஊதா நறிம் பச்சை நிறத்தில் பச்சை இளம் வண்ணம் பச்சை நிறத்தில் பின்க் இளம் வண்ணம்
இலை உறை பிடிமானம் தளர்ந்தது தளர்ந்தது தளர்ந்தது இறுக்கமானது
முட்கள் உண்டு உண்டு உண்டு இல்லை
லிக்யுல் நடைமுறை உண்டு உண்டு கூர்மையானது ஒரு பக்கம் மட்டும் உண்டு
தண்டின் நிறம் ஊதா நிறம் ஊதா நிறத்தில் பச்சை இளம் வண்ணம் ஊதா நிறம் பச்சை நிறத்துடன் கூடிய மஞ்சள் சூரிய வெளிச்சம் பட்ட உடன் பின்க் நிறத்திற்கு மாறி விடும்
தண்டின் குறுக்களவு மிதமானது மிதமானது மொத்தம் மிதமானது
இடைக்கணு வளைவானது வளைவற்றது வளைவானது  வளைவானது
துளிர் மொக்கு உடன் உள்ள நீண்ட குறுகிய பள்ளம் இல்லை இல்லை உண்டு இல்லை
மொக்கு பருமன் மிதமானது மிதமானது மிதமானது மிதமானது

இயல்புகள் கோக 86062 கோசி86071 கோ6304 சி66191 (கோ க 8001)
பெற்றோர் எம்.எஸ்68 × 4 பொதுகலப்பு கோ775 × கோ842 கோ419 × கோ605 பிஒ2874× கோ 658
இலை நீள உயர அளவு மிதமானது அகலம் அகலம் அகலம்
இலை வண்ணம் பச்சை கரும்பச்சை பச்சை பச்சை
இலை  உறை வண்ணம் ஆழ்ந்த பின்க் மஞ்சளுடன் கூடிய பச்சையில் பின்க் இளம் வண்ணம் பச்சை நிறத்தில் ஊதா இளம் வண்ணம் பச்சை
இலை உறை பிடிமானம் தளர்ந்தது இறுக்கமானது தளர்ந்தது தளர்ந்தது
முட்கள் இல்லை உண்டு உண்டு இல்லை
லிக்யுல் நடைமுறை இல்லை உண்டு உண்டு  இல்லை
தண்டின் நிறம் மஞ்சளுடன் கூடிய பச்சை சூரிய ஒளி பட்டவுடன் ஊதா நிறமாக மாறிவிடும் ஊதா நிறத்துடன் கூடிய பச்சை சூரிய ஒளி பட்டவுடன் ஊதா நிறமாக மாறிவிடும் பச்சை நிறத்தில் ஊதா இளம் வண்ணம் பச்சை நிறத்தில் வெளிர் மஞ்சள் இளம் வண்ணம்
தண்டின் குறுக்களவு மிதமானது மொத்தம் மொத்தம் மிதமானது
இடைக்கணு வளைவானது வளைவானது வளைவானது வளைவற்றது
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்ட குறுகிய பள்ளம் இல்லை உண்டு உண்டு சுட்டிக்காட்டப்பட்டது
மொக்கு பருமன் சிறியது பெரியது மிதமானது மிதமானது

இயல்புகள் கோ சி 8201 கோ சி 90063 கோ 8021 கோக 91061
பெற்றோர் கோ 740 × கோ 62174 கோ 8304 × கோ சி 671 கோ 740 × கோ 6805  கோ சி பொதுகலப்பு
இலை நீள உயர அளவு மிதமானது மிதமானது மிதமானது மிதமானது
இலை நிறம் பச்சை பச்சை பச்சை பச்சை
இலை  உறை வண்ணம் பச்சையில் ஊதாநிற இளம் வண்ணம் பச்சை ஊதா நிறம் வெள்ளையுடன் கூடிய மஞ்சள்
இலை உறை பிடிமானம் தளர்ந்தது தளர்ந்தது தளர்ந்தது இறுக்கமானது
முட்கள் இல்லை உண்டு இல்லை இல்லை
லிக்யுல் நடைமுறை கூர்மையானது ஒரு பக்கம் மட்டும் உண்டு ஒரு பக்கம் மட்டும் உண்டு கூர்மையானது இல்லை
தண்டின் நிறம் பச்சையுடன் கூடிய மஞ்சள் மஞ்சளுடன் கூடிய பச்சை ஊதா நிறம் அதிக மெழுகு உள்ளது மஞ்சளுடன் கூடிய பச்சை
தண்டின் குறுக்களவு மிதமானது மிதமானது மிதமானது மிதமானது
இடைக்கணு சிறிது வளைவானது வளைவற்றது சிறிது வளைவானது வளைவற்றது
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்ட குறுகிய பள்ளம் இல்லை  இல்லை  இல்லை இல்லை
மொக்கு பருமன் மிதமானது மிதமானது மிதமானது சிறியது

இயல்புகள் கோ க 92061 கோ 8362 கோகு 93076 கோ 8208
பெற்றோர் கோ 7314 பொது கலப்பு கோ 6304 × கோ சி 671 கோ சி 772 × கோ 419 கோ 62198 × கோ சி 671
இலை நீள உயர அளவு அகலம் மிதமான அகலம் மிதமான அகலம் மிதமான அகலம்
இலை வண்ணம் பச்சை பச்சை கரும்பச்சை கரும்பச்சை
இலை  உறை வண்ணம் ஊதா நிறத்தில் வெள்ளை மெழுகு கோடுகள் பச்சை பச்சையுடன் கூடிய ஊதா நிறம் பச்சையுடன் கூடிய ஊதா நிறம்
இலை உறை பிடிமானம் தளர்ந்தது - - -
முட்கள் உதிரக்கூடியது உதிரக்கூடியது உதிரக்கூடியது உதிரக்கூடியது
லிக்யுல் நடைமுறை ஒரு பக்கம் கூட்டிக்காட்டிய மாதிரி மறுபக்கம் மிகச் சிறியது உண்டு ஒரு பக்கம் மட்டும் உண்டு உண்டு ஒன்றுக்கொன்று வித்தியாசமாக அமைந்து இருத்தல்
தண்டு வண்ணம் பச்சையுடன் கூடிய மஞ்சள் நிறத்தில் பின்க் இளம் வண்ணம் ஊதாப்பச்சை பச்சையுடன் கூடிய வெளிர் மஞ்சள் பச்சை நிறத்தில் ஊதா இளம் வண்ணம்
தண்டின் குறுக்களவு - - - -
இடைக்கணு சிறிது வளைவானது வளைவற்றது சிறது வளைவானது வளைவற்றது
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்ட குறுகிய பள்ளம் இல்லை இல்லை இல்லை இல்லை
மொக்கு பருமன் மிதமானது மிதமானது மிதமானது சிறியது

இயல்புகள் கோ கு 94077 கோ கு 95076 கோ 85019 கோ சி 95071
பெற்றோர் கோ 740 × கோ 775 கோ சி 771 × கோ 775 கோ 7201 × கோ 775 கோ சி 671 ×
எம்
இலை நீள உயர அளவு மிதமானது மிதமானது மிதமானது மிதமானது
இலை வண்ணம் கரும்பச்சை பச்சை வெளிர் பச்சை பச்சை
இலை  உறை வண்ணம் பச்சையில் ஊதாள இளம் வண்ணம் பச்சை பச்சையுடன் கூஎய இளம் வண்ணம் வெளிர் பச்சையுடன் கூடிய மஞ்சள்
இலை உறை பிடிமானம் தளர்ந்தது தளர்ந்தது எளிதில் உரிக்கக்கூடியது தளர்ந்தது
முட்கள் இல்லை உண்டு ஆனால் உதிரக்கூடியது கொஞ்சம் இல்லை
லிக்யுல் நடைமுறை ஒரு பக்கம் மட்டும் உண்டு ஒரு பக்கம் கூர்மையானது ஒரு பக்கம் குறுகியது இல்லை உண்டு ஆனால் ஒன்றுக்கொன்று வித்தியாசமானது
தண்டின் வண்ணம் பச்சையுடன்  கூடிய மஞ்சள் நிறம் பச்சையுடன் கூடிய மஞ்சள் நிறத்தில் ஊதா இளம் வண்ணம் சூரிய ஒளிபட்ட இடத்தில் ஊதா நிறம் மற்றவை மஞ்சளுடன் கூடிய பச்சை பச்சையுடன் கூடிய மஞ்சள் நிறம்
தண்டு குறுக்களவு மிதமானது மிதமானது மிதமானது மிதமானது
இடைக்கணு சிறிது வளைவானது சற்றே வளைவானது குறுக்கும் நெடுக்கும் வளைவானது
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்டு குறுகிய பள்ளம் சிறியது மேலோட்டமானது சுட்டிக் காட்டியது போல இல்லை உண்டு
மொக்கு பருமன் மிதமானது மிதமானது சிறியது மிதமானது

இயல்புகள் கோ க 99061 கோ 86032 கோ க (எஸ் சி) 22
பெற்றோர் கோ 6806 × கோ 740 கோ 62198 × கோ சி 671 கோ 8208 பொதுகாப்பு
இலை நீள உயர அளவு மிதமானது மிதமானது மிதமானது
இலை வண்ணம் பச்சை கரும்பச்சை பச்சை
இலை  உறை வண்ணம் பச்சையில் பின்க் இளம் வண்ணம் பச்சையில் ஊதா இளம் வண்ணம் பச்சையுடன் சற்றே காய்ந்த வரைபாடு
இலை உறை பிடிமானம் இறுக்கமானது தளர்ந்தது தளர்ந்தது
முட்கள் உதிரக்கூடியது சில, உறுதியான உதிரக்கூடியது இல்லை
லிக்யுல் நடைமுறை உண்டு, கூர்மையானது ஒன்றுக்கொன்று வித்தியாசமாக ஞடீஞ உண்டு ஒன்றுக்கொன்று வித்தியாசமாக
தண்டின் வண்ணம் மஞ்சளுடன் கூடிய பச்சை சூரிய ஒளி பட்டவுடன் கரும்பச்சை மஞ்சளுடன் கூடிய பச்சை ஒளி பட்டவுடன் சிவப்புடன் கூடிய பின்க்ஹ பச்சையுடன் கூடிய மஞ்சள் சூரிய ஒளி பட்டவுடன் சிவப்பு ஊதா கலந்த பின்க்
தண்டு குறுக்களவு மிதமானது மிதமானது மிதமானது
இடைக்கணு உருளையானது உருளையானது உருளையானது
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்டு குறுகிய பள்ளம் இல்லை இல்லை இல்லை
மொக்கு பருமன் மிதமானது மிதமானது மிதமானது

இயல்புகள் கோ க 96071 கோ 86010 கோ க 98061 கோ சி 98071 கோ 86249
பெற்றோர் கோ 82061 பொதுகலப்பு கோ 740 × கோ 7409 சி80172 பொதுகலப்பு பி.ஒ.91 × கோ 92198 கோ.ஜே64 × கோ ஏ7601
இலை நீள உயர அளவு மிதமானது அகலம் மிதமானது அகலம் மிதமானது
இலை வண்ணம் பச்சை வெளிர்பச்சை பச்சை கரும்பச்சை பச்சை
இலை உறை வண்ணம் வெளிர் பச்சை நிறத்தில் பிங்க் புள்ளிகள் வெளிர் பச்சை நிறத்தில் பிங்க் புள்ளிகள் பச்சையில் பிங்க் இளம் வண்ணம் மஞ்சளுடன் கூடிய ப்சை வெளிர் பச்சை
முட்கள் உண்டு ஆனால் உதிரக்கூடியது இல்லை இல்லை உதிரக்கூடியது இல்லை
தண்டின் வண்ணம் ஊதா நிறம் மஞ்சளுடன் கூடிய பச்சை இளம் வண்ணம் பச்சையுடன் கூடிய மஞ்சள் உடன் ஊதா இளம் வண்ணம் மஞ்சளான பச்சை பச்சையுடன் கூடிய மஞ்சள்
தண்டு குறுக்களவு மிதமானது மொத்தம் மிதமானது மொத்தம் மொத்தம்
இடைக்கணு குவியாடி,குழியாடி நன்றாக தெரியக்கூடியது உருளையானது உருளையானது உருளையானது
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்ட குறுகிய பள்ளம் இல்லை பெரியது இல்லை அதிகமாக காணப்படும் இல்லை
மொக்கு பருமன் சிறியது   மிதமானது பெரியது பெரியது

இயல்புகள் கோ க 23 கோ க 24
பெற்றோர் 69A591 GC கோ 8371 x எம்.எஸ் 6847
இலை நீள உயர அளவு மிதமானது மிதமானது
இலை வண்ணம் இளம்பச்சை கரும்பச்சை
இலை உறை வண்ணம் பச்சை வெளிர் பச்சை நிறத்தில் பிங்க் புள்ளிகள்
முட்கள் இல்லை இல்லை
தண்டின் வண்ணம் பச்சை நிறத்தில் பிங்க் புள்ளிகள், பச்சையுடன் கூடிய மஞ்சள் பச்சை, பச்சையுடன் கூடிய மஞ்சள்
தண்டு குறுக்களவு மிதமானது மொத்தம்
இடைக்கணு நேரானது எதிரெதிரான
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்ட குறுகிய பள்ளம் இல்லை உண்டு
மொக்கு பருமன் மிதமானது மிதமானது

இயல்புகள் த.வே.ப.க க சி 7 த.வே.ப.க க சி 8
பெற்றோர் கோ 99034 x கோ கு 93076 கோ க 90063 x கோ 8213
இலை நீள உயர அளவு மிதமானது மிதமானது
இலை வண்ணம் கரும்பச்சையுடன் கூடிய மஞ்சள் பச்சை
இலை உறை வண்ணம் வெளிர் பச்சை நிறத்தில் பிங்க் புள்ளிகள் வெளிர் பச்சை நிறத்தில் பிங்க் கோடுகள்
முட்கள் உண்டு ஆனால் உதிரக்கூடியது உண்டு , உதிரக்கூடியது
தண்டின் வண்ணம் மஞ்சள் கலந்த பச்சை
இளஞ்சிவப்பு கலந்த மஞ்சள்
மஞ்சள் கலந்த பச்சை
தண்டு குறுக்களவு மிதமானது மிதமானது
இடைக்கணு நேரானது நேரானது
துளிர் மொக்கு உடன் கூடிய நீண்ட குறுகிய பள்ளம் இல்லை உண்டு, குறுகிய
மொக்கு பருமன் மிதமானது பெரியது

மாவட்டம்/பருவம் - உகந்த இரகங்கள்
எல்லா மாவட்டங்களும் (கன்னியாகுமரி மற்றும் நீலகிரி இல்லாமல்)

முன்பட்டம் நடுப்பட்டம் பின்பட்டம் தனிப்பட்டம்
ஆலை வெல்லம் ஆலை வெல்லம் ஆலை வெல்லம் ஆலை வெல்லம்
கோ 658   கோ658 கோ419 கோ க6304 கோ62175   முன்பட்டத்தில் உள்ள எல்லா இரகங்களும் தனிப்பட்டத்திற்கும் உகந்தது
கோ 62174 கோக671 கோ62198 கோ449 கோ க8201 கோ 419  
கோ 62198 கோக771 கோ6304 கோ6304 கோ க771 கோ 6304  
கோ க 671 கோக772 கோக774 கோக776 கோ க778 கோ க 8201  
கோ க 771 கோக773 கோக775 கோக8001 கோ க779 கோ740  
கோ க 772 கோக773 கோக8001   கோ419    
கோ க 8001 கோக8001     கோ740    
கோ க 85061 கோக85061     கோ658    
கோ க86062            
கோ சி86071 கோக86062     கோ சி93076    
கோ க90063       கோ 85019    
கோக91061 கோசி86071     கோக99061    
கோகு94077 கோக90063     கோ86032    
கோசி 95071 கோக91061 கோசி93076   கோக22    
கோக 98061 கோகு94077 கோ85019        
கோ 86010   கோக99061        
கோ 86249   கோ86032        
கோசி 23,
கோசி 24
  கோசி22   த.வே.ப.க எஸ்சி எஸ் ஐ8      

தமிழ்நாட்டிற்கு ஏற்ற இரகங்கள்

இடம் / மாவட்டம் பொருத்தமான வகைகள் சிறப்பம்சங்கள்
புதுக்கோட்டை கோவி 92102, கோசி 90063, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோ ஜி(எஸ்சி)5, கோசி (எஸ்சி)22, த.வே.ப.க எஸ்சி எஸ் ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ் ஐ8 வறட்சியை தாங்கும் தன்மை
ஈரோடு கோ 86032, கோ எஸ்சி 95071, கோ 86249, கோ ஜி 93076, கோ வி 94102, கோ 85019, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோ ஜி(எஸ்சி)5, கோசி (எஸ்சி)22, கோசி (எஸ்சி)24 வறட்சியை தாங்கும் தன்மை, நல்ல மகசூல் கொடுக்கக்ககூடியது.
வேலூர் கோ வி 92102, கோ சி 90063, கோ எஸ்ஐ (எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோ சி(எஸ்சி)22, கோ சி 24, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ 7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ 8 வறட்சியிலும் நல்ல மகசூல் கொடுக்கக்ககூடியது. பின் பருவத்தில் பயிரிடுவதற்கு ஏற்றது.
சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் கோ 86032, கோ 85019, கோ எஸ்ஐ (எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோ சி(எஸ்சி) 22, கோ வி 94102, கோ சி24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 வறட்சியிலும் நன்றாக செயல்படுகிறது.
திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் கோசி 960063, கோ வி 92102, கோ 86032, கோ ஜி 94077, கோ எஸ்ஐ (எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோ சி (எஸ்சி) 22, கோசி 24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 வறட்சியை தாங்கும் தன்மை மற்றும் சிறந்த மகசூல்
விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி கோ 36032, கோ 85019, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோ சி (எஸ்சி)22, கோசி 24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8
வறட்சியிலும் நன்றாக செயல்படுகிறது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி கோ 86032, கோ எஸ்ஐ (எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோ சி(எஸ்சி)22, கோ 97009, கோ வி 94101, கோசி 90063, கோஎஸ்ஐ 95071, கோசி 24, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8
வறட்சியை தாங்கும் தன்மை, மற்றும் சிறந்த மகசூல்
கரூர் கோ வி 92102, கோ எஸ்ஐ 95071, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோ ஜி(எஸ்சி)5, கோசி (எஸ்சி)22, கோசி24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 Co V 92102, CoSi 95071, Co Si(Sc)6, Co G (Sc)5, Co C (Sc)22., CoC 24 TNAU SC Si7, TNAU SC Si 8 வறட்சியை தாங்கும் தன்மை
திருச்சி மற்றும் பெரம்பலூர் கோ எஸ்ஐ 95071, கோ சி671, கோவி 92102, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோஜி (எஸ்சி)5, கோ சி(எஸ்சி)22, கோ சி24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 வறட்சி தாங்குதல்,  அதிக விளைச்சல்.
கடலூர் கோவி 92102, கோசி 90063, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோஜி (எஸ்சி)5, கோ சி(எஸ்சி)22, கோ சி24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 வறட்சியைத் தாங்கும் தன்மை
விழுப்புரம் கோ 86032, கோவி92102, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோஜி(எஸ்சி)5, கோசி(எஸ்சி)22, கோசி23, கோ சி24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் அதிக விளைச்சல்
தஞ்சாவூர், நாகப்பட்டிணம் மற்றும் திருவாரூர் கோ வி 92102, கோஜி 93076, கோஜி 94077, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோஜி(எஸ்சி)5, கோசி(எஸ்சி)22, கோ சி24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் நல்ல மகசூல்
கோயமுத்தூர் கோ 86032, கோ வி 92102, கோ 86027, கோசி 90063, கோ 97009, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோசி(எஸ்சி)22, கோசி 24
த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8
வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் நல்ல மகசூல்
திருவள்ளூர் கோ 85019, கோசி 22, கோ எஸ்ஐ (எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோசி (எஸ்சி)22, கோசி 24
த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8
வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் நல்ல மகசூல்
தேனி, மதுரை மற்றும் திண்டுக்கல் கோ 92012, கோ 92008, கோ 93001, கோ 86032, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோ ஜி(எஸ்சி)5, கோ சி (எஸ்சி)22, கோசி 24
த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8
வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் நல்ல மகசூல்
நாமக்கல் மற்றும் சேலம் கோ வி 92102, கோ எஸ்ஐ(எஸ்சி)6, கோ ஜி(எஸ்சி)5, கோசி(எஸ்சி)22, கோசி 24
த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8
வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் நல்ல மகசூல்
செங்கல்பட்டு கோ எஸ்ஐ 95071, கோ 85019, கோசி 22, கோ எஸ்ஐ (எஸ்சி)6, கோ ஜி (எஸ்சி)5, கோசி(எஸ்சி)22, கோசி24 த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ7, த.வே.ப.க எஸ்சி எஸ்ஐ8 வறட்சியைத் தாங்கும் தன்மை மற்றும் நல்ல மகசூல்

கரும்பு நடவு வயல் தயாரிப்பு

1. நடவு வயல் தயாரிப்பு

அ.களிமண்நிலம்

பொதுவாக களி மண் வயல்களில் நல்ல பொலபொலப்புத் தன்மை பெறும் வகையில் உழவு மேற்கொள்ள முடிவதில்லை

  1. நெல் அறுவடைக்குப் பிறகு வயலின் குறுக்காகவும் வயலைச் சுற்றியும் நீர்ப்பாசனம் மற்றும் வடிகால் பாத்திகள் 6 மீட்டர் இடைவெளியில் 40 செ.மீ.ஆழம் மற்றும் 30 செ.மீ. அகலத்தில் அமைத்திட வேண்டும்
  2. நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் மண்வெட்டி கொண்டு அமைத்திட வேண்டும்
  3. நடவு சாலினை 4 முதல் 5 நாட்கள் வரையிலும் களைகொத்தி கொண்டு கிளறி விடுதல் வேண்டும்

அதிக தண்ணீர் தேங்கி பிரச்சினையாகும் நிலங்கள்

அதிகமாக தண்ணீர் தேங்கி நின்று மற்றும் அதனை வடித்து வெளியேற்ற முடியாத வயல்களில் 30 செ.மீ.இடைவெளியில் 5 மீட்டர் நீளம், 80 செ.மீ. அகலம் மற்றும் 15 செ.மீ. உயரம் கொண்ட மேட்டுப் பாத்திகள் அமைத்திட வேண்டும்.

உ.இருமண் மற்றும் மணல்சாரி தோட்டக்கலை நிலங்கள்

ஆரம்பத்தில் இரண்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும். தொடர்ந்து எட்டு தட்டு கலப்பை கொண்டு உழ வேண்டும் மற்றும் உழும் கருவி பயன்படுத்தி ஆழ உழ வேண்டும். தொடர்ந்து ஒரு முறை சுழல் கலப்பை கொண்டு மண்ணை பொலபொலப்பாக்கி பண்படுத்துவதன் மூலம் களை மற்றும் பயிர்தூர் இல்லாமல் பார்த்துக் கொள்ளலாம்.

  1. சீரான முறையில் நீர்ப்பாசனம் செய்திட நிலத்தினை நன்கு சமன்படுத்த வேண்டும்
  2. நடவு சால் மற்றும் சால் மேடுகள் 80 செ.மீ. இடைவெளியில் விக்டரி அல்லது பார் அமைக்கும் கலப்பை கொண்டு அமைக்க வேண்டும். நடவு சால்கள் 20 செ.மீ.  ஆழம் உடையதாக இருத்தல் வேண்டும்
  3. நீர்ப்பாசன வாய்க்கால்கள் 10 மீட்டர் இடைவெளியில் இருத்தல் வேண்டும்

2. அடியுரமாக அங்கக உரங்கள் இடுதல்

தோட்டக்கால் நிலங்களில் கடைசி உழவிற்கு முன்னதாக தொழுஉரம் 12.5 டன்/ எக்(ஆழ் குப்பை உரம் 25 டன்/ எக்(அ) ஆலை அழுக்கு 37.5 டன்/ எக் என்ற அளவில் இட வேண்டும். களி மண் நிலங்களில் மேற்கண்ட அங்கக உரங்களை நடவு சால்களில் இட்டு நன்கு கலந்து விடவேண்டும்.

கரும்புத் தோகை மற்றும் ஆலை அழுக்கு கொண்டு ஊட்டமேற்றிய குப்பை எரு தயாரித்தல்

காய்ந்த கரும்புத் தோகையை 15 செ.மீ. உயரத்திற்கு சுமார் 7 மீட்டர் நீளம் மற்றும் 3 மீட்டர் அகலப் பாத்திகளாக பரப்பவும். அதற்கு மேல் 5 செ.மீ. உயரத்திற்கு கரும்பு ஆலை அழுக்கினை பரப்பி விடுதல் வேண்டும். மசூரி ராக் பாஸ்பேட், ஜிப்சம் மற்றும் யூரியா உரங்களை முறையே 2:2:1 என்ற விகிதாச்சாரத்தில் கலந்து தோகை மற்றும் ஆலை அழுக்கு அடுக்கின் மீது 100 கிலோ தோகைக்கு 5 கிலோ உரக்கலவை என்ற விகிதத்தில் பரவலாகத் தூவி விட வேண்டும். பின்னர் அடுக்கு முழுவதும் நன்கு நனையும் வண்ணம் தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலே குறிப்பிட்டுள்ள இடுபொருள்கள். ஒவ்வொன்றையும் அதே அளவில் மற்றும் அதே முறையில் திரும்பவும் கொடுத்து கடைசியாக அடுக்கின் மொத்த உயரம் 1.5 மீட்டர் அளவு வருமாறு செய்ய வேண்டும். தண்ணீர் தெளிப்பதற்கு பதிலாக கிடைக்கும் இடங்களில் தொழு உரக் கரைசல் பயன்படுத்தலாம். பின்னர் அடுக்கு முழுவதையும் மண் மற்றும் ஆலை அழுக்கு முறையே 11 என்ற விகித அளவில் கலந்த கலவை கொண்டு 15 செ.மீ. உயர அளவிற்கு மூடி விட வேண்டும். இவ்வடுக்கினை மூன்று மாதத்திற்கு மக்குவதற்காக அப்படியே விட்டுவிடவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை அடுக்கு முழுவதும் நனையும் வண்ணம் நீர் தெளிக்க வேண்டும். மூன்று மாதமானதும் அடுக்கினை புரட்டி பின்னர் நன்கு கலந்து விட்டு ஒரு மாதத்திற்கு அப்படியே விட வேண்டும். நான்காவது மாத முடிவில் மறுபடியும் புரட்டி விட்டு பின் கலந்து 5வது மாத முடிவு வரை 15 நாள் இடைவெளியில் தண்ணீர் தெளிக்க வெண்டும். இம்முறையில் தயாரிக்கப்படும் கரும்புத்தோகை கம்போஸ்டில் தழை, மணி மற்றும் கால்சியம் சத்துக்களின் அளவு அதிகமாக இருப்பதோடு கரிமம் மற்றும் தழைச்சத்தின் விகிதாச்சாரம் கரும்புத் தோகையின் அளவை விட 10 மடங்கு குறைவாக இருக்கும்.

கரும்பு தோகை, ஆலை அழுக்கு மற்றும் கரும்புத் தோகை கம்போஸ்டில் உள்ள சத்துக்களின் அளவுகள்

சத்துக்கள் கரும்பு தோகை ஆலை அழுக்கு கரும்புத் தோகை கம்போஸ்ட்
தழைச்சத்து 0.40 1.90 1.60
மணிச்சத்து 0.13 1.50 1.10
சாம்பல்சத்து 0.40 0.50 0.40
கால்சியம் 0.56 3.00 1.00
மெக்னீசியம் 0.30 2.00 0.60
கந்தகம் 0.12 0.50 0.48
நுண்ணூட்டச் சத்துக்கள் (மில்லியனில் ஒரு பங்கு)      
இரும்பு 360 2240 2710
மெக்னீசியம் 110 400 450
துத்தநாகம் 90 360 370
தாமிரம் 30 130 80
கரிமம் தழைச்சத்து விகிதம் 1131 161 221

3. அடியுரமாக இரசாயன உரங்கள் இடுதல்

மண் பரிசோதனை செய்யப்படவில்லையெனில் பொதுப்பரிந்துரையாக தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து முறையே எக்டருக்கு 300:100:200 கிகி அளிக்க வேண்டும். சூப்பர் பாஸ்பேட்                    (625 கிகி/எக்டர்) மண்வெட்டி கொண்டு அளிக்க வேண்டும்.
துத்தநாக சத்து மற்றும் இரும்புச்சத்துக் குறைபாடு உள்ள வயல்களில் முறையே 37.5 கிலோ/எக் துத்தநாக சல்பேட் மற்றும் 100 கிலோ/எக் பெரஸ் சல்பேட் இடுதல் வேண்டும்.
கந்தக பற்றாக்குறையுள்ள மணலில் ஜிப்சம் வடிவில் கந்தகத்தை எக்டருக்கு 500 கிகி அளிப்பதன் மூலம் கரும்பு விளைச்சல் மற்றும் சாறின் தரத்தை உயர்த்தலாம்.

ஐ.ஏ.நடவு வயல் பராமரிப்பு

1.கரும்பு நடவிற்கு விதைக்கரணை தயாரித்தல்

  1. விதைக்கரணைகளை, நோய் மற்றும் பூச்சிகள் தாக்காத 6 முதல் 7 மாதமுடைய விதை நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்ய வேண்டும்
  2. விதைக்கரணைகளில் ஒட்டியிருக்கும் காய்ந்த தோகைகளை ஆட்கள் கொண்டு கைகளால் நீக்க வேண்டும்
  3. பிளவு இல்லாத விதை கரணைகளை பெற கூர்மையான கத்தி அல்லது தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட கரணை வெட்டும் இயந்திரம் பயன்படுத்த வேண்டும்.
  4. விதைக்கரணைகள் பக்கவாட்டில் விளந்து விடாமல் இருக்க கூரிய கத்தி கொண்டு தயார் செய்திடல் வேண்டும்
  5. அடிப்பட்ட பருக்கள், பருக்கள் முளைத்த மற்றும் பிளவுபட்ட விதைக்கரணைகளை நீக்கி விட வேண்டும்
  6. அசோஸ்பைரில்லம் விதை நேர்த்தி:  நடவுக்கு முன்னர் 10 பொட்டலங்கள் (2 கிலோ/எக்) அஸோஸ்பைரில்லம் நுண்ணுயிருடன் தேவையான அளவு நீர் கலந்து அக்கலவையில் கரும்பு விதைக்கரணைகளை 15 நிமிடம் வரையில் நனைத்து பின் நடவு செய்ய வேண்டும்

2. கரணை நேர்த்தி

  1. ஆரோக்கியமான கரணைகளைத் தேர்வு செய்திடவேண்டும்
  2. கரணைகளை 100 லிட்டர் தண்ணீரில் 50கி கார்பன்டிசம், 200மிலி மாலதியான் மற்றும் 1கிகி யூரியா கலந்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
  3. கரணைகளை புல்தண்டு நோயிலிருந்து பாதுகாத்திட 1 மணி நேரத்திற்கு 50 டிகிரி சென்டிகிரேட் என்ற அளவில் வெப்ப நீராவி நேர்த்தி செய்திட வேண்டும்

3.கரணை அளவு : 75,000 இரு பரு கரணைகள் எக்டருக்கு

 

வாய்க்காலின் இடையில் கரணையை ஊன்றவும்

கரும்பு நடவு முறையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள்
இயந்திர முறை நடவு

  • தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயந்திர நடவு கருவி எக்டருக்கு ரூ.3750/- சேமிக்க உதவுகிறது மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5 எக்டர் பரப்பளவு நடவு செய்கிறது.
  • மனித ஆற்றலைக் குறைக்கிறது மற்றும் விதை அளவு எக்டருக்கு 5 டன்னாக குறைக்கிறது.
  • இணைவரிசை நடவுமுறையில் இரண்டு புறமும் கரணைகளை 150 + 30 செ.மீ இடைவெளியில் அஸ்ட்ராப் 8000 வகை (அறுவடை இயந்திரம்) கொண்டு அறுவடை செய்யுமாறு நட வேண்டும் மற்றும் 150 + 30 செ.மீ இடைவெளியில் நியூ ஹாலண்ட் 4000 வகை அறுவடை இயந்திரம் கொண்டு அறுவடை செய்யுமாறு ஒரு வரிசையில் நடவு செய்ய வேண்டும்.
  • நிலத்தடி சொட்டு நீர் பாசன முறையில் கரும்பை பயிர் செய்யும்போது சொட்டு நீர் குழாய்களை 20 செ.மீ ஆழத்தில் வாய்க்காலில் பதிக்க வேண்டும் மற்றும் விதை கரணைகளை  சொட்டு நீர் குழாய்க்கு 5 செ.மீ மேல் இருக்குமாறு பதிக்க வேண்டும்.
  • செம்மை கரும்பு சாகுபடியில் 25-35 நாட்கள் வளர்ந்த நாற்றுகளை 5x2 அடி இடைவெளியில் விளைநிலத்தில் நட்டு சொட்டு நீர் பாசனம் அமைக்க வேண்டும்.
  • பரந்த இடைவெளி கரும்பு சாகுபடியில் ஊடுபயிராக தக்கைப் பூண்டு மற்றும் சணப்பை பயிரிடுவதன் மூலம் மண் வளம் மேம்படும் மற்றும் களைகளை கட்டுபடுத்தலாம். இது இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் கரும்பு விளைச்சல் அதிகரிக்கிறது.
  • கடின மண்ணில் வரப்பில் கரணைகளை 80 செ.மீ இடைவெளியில் நடுவதன் மூலம் கரணை அழுகல்நோயை தவிர்க்கலாம் வளர்ச்சியும் நன்றாக இருக்கும்.
  • நடவு செய்த மூன்று நாட்களுக்குள் வரப்பின் எதிர் திசையில்10 செ.மீ இடைவெளியில் ரைசோபிம் கொண்டு விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை எக்டருக்கு 10 கிலோ அளவு விதைக்க வேண்டும்.
  • அதிக இடைவெளியுள்ள பயிர்களில் நடவு செய்த 50-60 நாட்களில் பசுந்தாளை உழுதுவிட வேண்டும் மற்றும் நடவு செய்த 90-100 வது நாளில் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்துடன் மண் அணைக்க வேண்டும்.
  • சுழல் கலப்பை பொருத்திய எந்திரக் களையெடுக்கும் கருவியை கொண்டு களை எடுக்க வேண்டும் மற்றும் சால் அமைக்கும் கருவி கொண்டு மண் அணைப்பதன் மூலம் ஆட்கள் செலவை சேமிக்கிறது மற்றும் தொழிலாளர் வேலைபளுவைக் குறைக்கிறது.   
  • நான்கு அடி வரிசை. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு வரி நடவு. மண்ணின் வளத்தை அதிகரிக்க ஊடுபயிராக தக்கைப் பூண்டு/ சணப்பை நடவு செய்ய வேண்டும்.  இது மேலும் இளங்குருத்துப் புழு நோய் நிகழ்வைக் குறைக்கிறது மற்றும் விளைச்சலை அதிகரிக்கிறது.    
  • கரணைகளை வரப்பின் ஒரு பக்கத்தில் நடவு செய்ய வேண்டும். வரப்பின் எதிர் புறத்தில் 10 செ.மீ உயரம் கொண்ட வரப்பில் ரைசோபியம் விதை நேர்த்தி செய்யப்பட்ட பசுந்தாள் விதைகளை 10 கிலோ/ எக்டர் விதைக்க வேண்டும்.
  • நடவு செய்த 50-60 நாட்களுக்குப் பிறகு பசுந்தாள் உரத்தை அளிக்க வேண்டும் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்து கொண்டு பகுதி மண் அணைத்தல் வேண்டும்.
  • களையெடுக்கும் கருவி கொண்டு களையெடுக்க வேண்டும் மற்றும் மண் அணைத்தல் மூலம் பணியாளர்கள் கூலி செலவைக் குறைக்கிறது மற்றும் மனித வேலைபளுவைக் குறைக்கிறது.

4.போக்கிடங்களை நிரப்புதல்

  1. வயலில் போக்கிடங்கள் இருந்தால் நடவு செய்த 30 நாட்களுக்குள் முளைத்த கரணைகளைக் கொண்டு நடவு செய்திட வேண்டும்
  2. இரண்டு பதியம் கரணைகளைக் கொண்டு சந்து நிரப்புதல் வேண்டும்/ 15-20 நாட்களான பாலித்தீன் பை நாற்றுகளை நடவு செய்வதன் மூலம் பயிர் நன்றாக வளரும்.
  3. போக்கிடங்களில் நடவு செய்த பிறகு மூன்று வாரங்கள் வரையிலும் வயலில் தேவையான ஈரப்பதம் இருக்குமாறு பார்த்துக் கொள்வது கரணைகள் நன்கு முளைத்து வளர ஏதுவாகும்

5.தோகை பரப்புதல்

சால்மேடுகளில் காய்ந்த கரும்புத் தோகையை சீராக 10 செ.மீ உயரத்திற்கு நடவு செய்த ஒரு வாரத்திற்குள் பரப்புதல் வேண்டும். இதனால் வறட்சி காலங்களில் கரும்பு தாக்குப்பிடித்து வளர்வதற்கும் கரும்பின் நீர் தேவை குறைவதற்கும், களைச் செடிகளின் ஆதிக்கம் குறைவதற்கும் மற்றும் இளங்குருத்துப் புழுவின் தாக்குதல் குறைவதற்கும் வாய்ப்பு உள்ளது. களிமண் வகைகளில் தோகைபரப்புதலைநடவு செய்த 21 நாட்களுக்குப பிறகு செய்திட வேண்டும். கரையான் தொல்லை அதிகம் உள்ள இடங்களில் தோகை பரப்புதலை செய்யாமல் இருத்தல் நன்று

7.ஊடுபயிர் சாகுபடி

தண்ணீர் தட்டுப்பாட்டு அற்ற பகுதிகளில் சோயா மொச்சை அல்லது உளுந்து அல்லது பச்சைப்பயறு போன்ற பயிர்களை கரும்பு நடவுசால் மேடுகளின் நடுவில் ஒரு வரிசையில் விதைக்கலாம். கொளுஞ்சி அல்லது சணப்பை ஊடுபயிராக நடவுசால் மேடுகளில் விதைத்த 45ம் நாள் பிடுங்கி கரும்பு வரிசைக்கு அருகே வைத்து மண் அணைப்பதின் மூலமாக மண்ணின் சத்துக்கள் அதிகரிப்பதோடு கரும்பில் அதிக மகசூல் அடையலாம். மேலும் கோ1 என்ற சோயா மொச்சை ஊடுபயிர் செய்வதின் மூலம் கரும்பின் மகசூல் குறையாமல் சோயா மொச்சையிலிருந்து ஒரு எக்டரக்கு 800 கிலோ வரையில் மகசூல் எடுக்கலாம்

8.களை நிர்வாகம்

  • களை அதிகமாக உள்ள இடத்தில் பயிர் வரிசையில் ஒரு வரி களையெடுக்க வேண்டும் மற்றும் விதைத்த 30,60 மற்றும் 90ம் நாட்களில் மண்வெட்டி கொண்டு வரப்புகளில் களையெடுக்க வேண்டும்.  
  • அட்ராஜின் 2கிலோ தெளிக்கவும் அல்லது எக்டருக்கு 750மிலி ஆக்ஸிப்ளுர்ஃபென் 600 லிட்டர் தண்ணீரில் கலந்து முளைக்குமுன் களைக்கொல்லியாக நடவு செய்த 3ம் நாளில் விசிறி வடிவ குழாய் கொண்ட நேப்சாக் தெளிப்பான் கொண்டு தெளிக்கவும்.
  • விதைத்த 3-ம் நாள் களை முளைப்பதற்கு முன் அட்ராஜின் எக்டருக்கு 1.0 கிலோ அளிக்கவும். தொடர்ந்து விதைத்த 45-ம் நாள் களை முளைத்தபின் கிளைபோசேட் எக்டருக்கு 1.0 லிட்டர் அளிக்கவும். விதைத்த 90-ம் நாள் கைக்களை எடுக்க வேண்டும். களை முளைப்பதற்கு முன் களைக்கொல்லி தெளிக்கப்படவில்லையெனில், களை முளைத்த பின் விதைத்த 21-ம் நாளில் கிராமசோன் லிட்டர் + 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு 2.5 கிலோ 600 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
  • ஒட்டுண்ணிக் களைகள் பிரச்சனை இருப்பின் களை முளைத்த பின் 2,4-D சோடியம் உப்பு எக்டருக்கு ஒரு கிலோ 500 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். அருகில் பருத்தி அல்லது வெண்டை செடி இருந்தால் 2,4-D தெளிப்பதை தவிர்க்கவும். 20% யூரியாவை நேரடியாக அளிப்பதன் மூலம் சுடு மல்லியை கட்டுப்படுத்தலாம்.
  • நடவுக்கு முன்னர் தெளிப்பாக விதைப்பதற்கு 21 நாட்கள் முன்னர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து அளிக்க வேண்டும்.தொடர்ந்து களை முளைத்த பின்ளர் கிளைபோசேட் 2.0 கிலோவை அமோனியம் சல்பேட் 2% கலந்து விதைத்த 30-ம் நாள் அளிக்க வேண்டும். இதன் மூலம் கோரைபுற்களை கட்டுப்படுத்தலாம். களை இல்லாத சூழலை உருவாக்கலாம்.
  • களைக் கொல்லிகள் வேலை செய்யாவிட்டால் சிறிய மண்வெட்டி கொண்டு வரப்புகளில் நடவு செய்த 25, 55 மற்றும் 85-ம் நாளில் களையெடுக்க வேண்டும். வாய்க்காலில் கைக்கொத்து கொண்டு களைகளை நீக்க வேண்டும்.
  • களை முளைத்த பின் நேரடி தெளிப்பாக ஃபெர்னோசோன் (2, 4 –D சோடியம் உப்பு) 2கிராம் + 10 கிராம் யூரியா ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து படர் கொடி களைகளை அழிக்க தெளிக்கலாம்.

விதைத்த 3 ஆம் நாளில் களைக்கொல்லி தெளிக்க வேண்டும்
(அட்ரசின் 2 கிலோ + 500 லிட்டர் தண்ணீர்)

           

(ஆக்ஸிபிளோர்பென் 750 மிலி/எக்டர் + 500 லிட்டர் தண்ணீர்)

கரும்பில் சுடுமல்லி கட்டுப்பாடு

ஊடு பயிரிட்ட கரும்பு வயலில் களை நிர்வாகம்

சோயாமொச்சை, உளுந்து மற்றும் மணிலா போன்ற ஊடு பயிர் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு வயல்களில் களைகள் முளைக்கும் முன் தெளிக்கக்கூடிய களைக்கொல்லியான தயோபென்கார்ப் 1.25 கிலோ/ எக் என்ற அளவில் தெளிக்கலாம். கரும்பில் ஊடுபயிர் செய்வதால் பொதுவாக கரும்பின் மகசூல் மற்றும் சர்க்கரைக் கட்டுமானம் குறைவதில்லை

9.மண் அணைத்தல்

மூன்றாவது தவணையாக இரசாயன உரம் இட்ட 90வது நாட்களுக்குப் பிறகு விக்டரி கலப்பை கொண்டு சால்மேடுகளை இருபுறமும் உடைத்து விடுவதன் மூலம் சீரிய முறையிலும் சிக்கனமாகவும் மண் அணைக்கலாம். கரும்பு நடவு செய்த 150வது நாள் மண்வெட்டி அல்லது விக்டரி கலப்பை கொண்டு மண் அணைக்கலாம்.

10.தோகை உரித்தல்

துளைப்பான் தாக்குதலை தவிர்க்க 150 மற்றும் 210வது நாளில் உலர் கரும்பு இலைகளை நீக்க வேண்டும்.

 

11.விட்டம் கட்டுதல்

கரும்பில் நடவு செய்த 210ம் நாள் கரும்பின் இரண்டு வரிசையில் உள்ள கரும்புகளை குறுக்காக ஒன்று சேர்த்து விட்டம் கட்டவேண்டும்

12. மேலுரமிடுதல்

மண்ணில் இடுதல்

தண்ணீர் பற்றாக்குறை இல்லாத இடங்களில் 275 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்
கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவில் மூன்று சம பாகங்களாகப் பிரித்து கரும்பு நடவு செய்த 30, 60 மற்றும் 90ம் நாள் இடுதல் வேண்டும்
கிணற்றுப் பாசனமுடைய பகுதிகளில் 225 கிலோ தழைச்சத்து மற்றும் 112.5 கிலோ சாம்பல் சத்து/ எக் என்ற அளவினை மூன்று சம பாகங்களாகப் பிரித்து நடவு செய்த 30, 60 மற்றும் 90வது நாட்களில் இடுதல் வேண்டும். 

தழைச்சத்து சேமிப்பு

வேப்பம்புண்ணாக்கு கலந்த யூரியா

67.5 கிலோ தழைச்சத்து/ எக் ரூ.27.5 கிலோ வேப்பம்புண்ணாக்கினை நடவு செய்த 30, 60 மற்றும் 90 நாட்களில் இட வேண்டும்
குறிப்பு: வேப்பம்புண்ணாக்கு கலத்தல் தேவையான அளவு வேப்பம்புண்ணாக்கினைப் பொடி செய்து அதனை யூரியா உரத்துடன் நன்கு கலந்து 24 மணி நேரத்திற்கு வைத்து பின்னர் உபயோகிக்கலாம். இதன் மூலம் 75 கி தழைச்சத்து/எக் மிச்சமாகிறது.

அசோஸ்பைரில்லம்

12 பொட்டலம் (2400 கிராம்/ எக்) அசோஸ்பைரில்லம் அல்லது தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நுண்ணுயிர் கலவை எண் 1 உடன் 25 கிலோ தொழு உரம் மற்றும் 25 கிலோ மண் கலந்து நடவு செய்த 30வது நாள் கரும்புப் பயிர் குத்துக்களுக்கு அருகே இட வேண்டும். இதே போல் கரும்பு நட்ட 60வது மற்றும் 90வது நாட்களில் இதே அளவில் இடுதல் வேண்டும். (கிணற்று நீர்ப்பாசனமுடைய இடங்களுக்கு)

தொடராக இடுதல்

கரும்புப் பயிர் வரிசைக்கு பக்கவாட்டில் களைக் கொத்தி கொண்டு சுமார் 5 செ.மீ. ஆழசால் அமைத்து அதில் உரங்களை தொடராக இட்டு பின்னர் மண் கொண்டு மூட வேண்டும்.

ஆழ்துளை முறையில் இடுதல்

255 கிலோ தழைச்சத்தினை யூரியா மற்றும் பொட்டாஷ் சேர்த்து15 செ.மீ. ஆழத்தில் கரும்புப் பயிரின் ஒவ்வொரு குத்துக்கு அருகே இடுவதன் மூலம் 20 கிலோ தழைச்சத்தினை கரும்பின் மகசூல் பாதிக்காத வகையில் சேமிக்கலாம்

நுண்ணூட்டச்சத்து உரங்கள்:

  1. (a) துத்தநாக பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 37.5 கிலோ துத்தநாக சல்பேட்       அளிக்கவும்.
  2. (b) கரும்பில் துத்தநாக பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 0.5% துத்தநாக சல்பேட்டை 1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும். 
  3. (a) இரும்பு பற்றாக்குறையுள்ள மண்: அடியுரமாக எக்டருக்கு 100 கிலோ ஃபொரோஸ் சலடபேட் அளிக்கவும்.
    (b) கரும்பில் இரும்பு பற்றாக்குறை அறிகுறிகள்: இலைத் தெளிப்பாக 1% ஃபொரோஸ் சலடபேட்டை  1% யூரியாவுடன் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் பற்றாக்குறை மறையும் வரை தெளிக்க வேண்டும்.
  4. தாமிர பற்றாக்குறையுள்ள மண்ணில் தாமிர சல்பேட்டை எக்டருக்கு 5 கிலோ மண் வழியாக அளிக்க வேண்டும். மாற்றாக இலைத் தெளிப்பாக 0.2% தாமிர சல்பேட்டை இரண்டு முறை பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் அளிக்க வேண்டும்.

பொதுவான நுண்ணூட்டச்சத்து கலவை: கரும்பிற்கு எக்டருக்கு 50 கிலோ நுண்ணூட்டச்சத்துக் கலவையை அளிக்க வேண்டும். நுண்ணூட்டச்சத்துக் கலவை 20 கிலோ ஃபெரோஸ் சல்பேட், 10 கிலோ மாங்கனீசு சல்பேட், 10 கிலோ துத்தநாக சல்பேட், 100 கிலோ மக்கிய தொழுவுரத்துடன் கலந்த 5 கிலோ போரக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இவை நடவிற்கு முன்னர் மண்ணில் அளிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

(அல்லது) கரும்பின் மகசூலை அதிகரிக்க தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நுண்ணூட்டக் கலவையை எக்டருக்கு 50 கிலோ ஊட்டமேற்றிய தொழுவுரமாக அளிக்கலாம்.

நுண்ணூட்டச்சத்து மற்றும் பேரூட்டச்சத்தின் பரிந்துரைக்கப்பட்ட அளவு

பேரூட்டச்சத்து

  • கரும்பு – நடவு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300:100:200 கிலோ தழைச்சத்து , மணிச்சத்து and சாம்பல் சத்து இட வேண்டும்.
  • கரும்பு – மறுதாம்பு பயிர் (சர்க்கரை ஆலைக்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு) எக்டருக்கு 300 + 25% அதிக தழைச்சத்து : 100 : 200 kg  மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இட வேண்டும்.
  • வெல்லத்திற்காக உற்பத்தி செய்யப்படும் கரும்பு (நடவு மற்றும் மறுதாம்பு பயிர்) எக்டருக்கு 225 : 62.5 : 112.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து

கரும்பிற்கான உயிர் உரம்

அசோஸ்பைரில்லம் என்பது கரும்பு வேர்களுக்கு ஊட்டமளிக்கும் பொதுவான தழைச்சத்தாகும் மற்றும் வருடத்திற்கு ஒரு ஏக்கருக்கு 50 முதல் 75 கிலோ வளிமண்டல தழைச்சத்தை நிவர்த்தி செய்கிறது. தற்சமயம் பயிரில் வாழும் பாக்டீரியம் (குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்) கரும்பில் அசோஸ்பைரில்லமை விட அதிகமாக தழைச்சத்தை நிலை நிறுத்துகிறது. இவை கரும்பு பயிர் முழுவதிற்கும் தழைச்சத்தை எடுத்துச் செல்கிறது மற்றும் தழைச்சத்தின் அளவை அதிகரிக்கிறது.  மண்ணில் பாஸ்பேட், இரும்பு மற்றும் துத்தநாக சத்தை வேர் வரை கொண்டு செல்கிறது. இது பயிர் வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் கரும்பின் மகசூலையும் சாறில் இனிப்புத் தன்மையையும் அதிகரிக்கிறது. இது அசோஸ்பைரில்லத்தைவிட அதிக செயல்திறன் வாய்ந்தது.    த.வே.ப.கழக பயோபெர்ட் -1 பாஸ்போபாக்டீரியாவை பாஸ்பரஸ் கரைப்பானாக கரும்பு பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது.

குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்  கொண்டு கரணை நேர்த்தி செய்தல்

கரணைகளை நடுவதற்கு முன் எக்டருக்கு 10 பாக்கெட் (2 கிலோ)குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸை 250 லிட்டர் தண்ணீரில் கலந்து நேர்த்தி செய்ய வேண்டும்.  

குலுகன்அசிடோபேக்டர் டைஅசோட்ராபிகஸ்  கொண்டு அடியுரமிடுதல் 

எக்டருக்கு 12 பாக்கெட் (2.4 கிலோ) விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.

அதே முறையில் பாஸ்போ பாக்டீரியா அளித்தல்

  • அடியுரம் இடாவிட்டால் அதே முறையில் விதைத்த 30, 50 மற்றும் 90-ம் நாள் நீர்ப்பாய்ச்சிய நிலையில் அடியுரமாக அளிக்க வேண்டும்.
  • நுண்ணுயிர் நேர்த்தி நடவிற்கு சற்று முன்பு அளிக்க வேண்டும். நுண்ணுயிர் உரம் அளித்தவுடன் நடவு செய்து நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
  • நுண்ணுயிர் உரத்தை இரசாயன உரத்துடன் கலக்க வேண்டாம்.
  • பரிந்துரைக்கப்பட்ட தழைச்சத்தை 25% குறைப்பதன் மூலம் நுண்ணுயிர் உரம் அளித்ததன் பலனை அடையலாம்.

13.நீர் நிர்வாகம்

கரும்புப் பயிருக்கு அதன் வளர்ச்சிப் பருவங்களுக்கு ஏற்ப நீர் பாய்ச்சுதல் வேண்டும்

முளைப்புப் பருவம் (0-35 நாட்கள்)

கரும்புப் பயிருக்கு அதன் முளைப்புப் பருவத்தில் குறைந்தபட்சமாக 2 முதல் 3 செ.மீ. ஆழத்திற்கு குறுகிய இடைவெளியில் நீர் பாய்ச்சுதல் மணல்சாரி இடங்களில் கரும்பின் முளைப்புத் திறனை மேம்படுத்தும். தெளிப்பு நீர்ப்பாசனம் பயிரின் முளைப்பு கால வளர்ச்சிப் பருவத்திற்கு ஏற்றதாகும். பின்னர் கிளைப்பு, வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிப் பருவத்தில் முறையே 0.75, 0.75 மற்றும் 0.50 பாசன நீர் மொத்த ஆவியாகுதல் (IW/CPE) விகிதத்தில் நீர் பாய்ச்சிட வேண்டும்

பருவம் நீர்ப்பாசன இடைவெளி
மணல் நிலம் களிமண்
கிளைப்புப் பருவம் (36 முதல் 100 நாட்கள்) 8 10
வளர்ச்சிப் பருவம் (101 முதல் 270 நாட்கள் 8 10
முதிர்ச்சி பருவம் (271 நாட்கள் முதல் அறுவடை வரை)    10 14

சொட்டு நீர்ப்பாசனம்

  1. 6 முதல் 7 மாத கரும்பு நாற்றங்காலிலிருந்து தேர்வு செய்யப்பட்ட விதைக்கரணைகளை 30 × 30 × 30 / 150 செ.மீ என்ற இடைவெளியில் இரு வரிசை பாரில் நடவு செய்யவும்
  2. ஒரு வரிசையில் மீட்டர் ஒன்றிற்கு எட்டு கரணைகளை வரப்பின் இரண்டு பக்கத்திலும் நடுவதன் மூலம் வாய்க்கால் நடவு முறையை அமைக்கலாம்.
  3. 12 மிமீ அகல சொட்டு நீர்ப்பாசன பக்கவாட்டு குழாய்களை நடவு சால்மேட்டின் மத்தியில் இருபக்கவாட்டு குழாய்களுக்கான இடைவெளி 240 செ.மீ. இருக்கும் விதத்தில் அமைக்க வேண்டும். இந்த பக்கவாட்டு  குழாய்களிலிருந்து 75 செ.மீ. இடைவெளியில் ஒரு மணி நேரத்திற்கு 8 லிட்டர் பாசன சொட்டு நீர் வெளியாகும் விதமாக வடிவமைக்க வேண்டும். பக்கவாட்டு குழாய்களின் நீளம் 30 லிருந்து 40 மீட்டர்க்கு மேல் போகாமல் இருக்க வேண்டும்
  4. 62.5 கி/ எக் என்ற அளவில் மணிச்சத்தினை அடியுரமாக நடவிற்கு முன்னர்இடவேண்டும்
  5. தழை மற்றும் சாம்பல் சத்தினை முறையே 275 1125 கி/ எக். என்ற அளவில் சொட்டு நீர்க் குழாய்களின் வழியே ’வென்ட்சூரி’ உபகரணம் கொண்டு 10 முதல் 12 பகுதியாக நடவு செய்த 15 முதல் 180 நாட்கள் வரை கொடுக்க வேண்டும்
  6. குறைந்த மற்றும் மிதமான ஊட்டச்சத்து வயல்களில் 50 சத தழை மற்றும் சாம்பல் சத்துக்களை அதிக அளவில் இட வேண்டும்
  7. தண்ணீரானது மண் மற்றும் பயிரிலிருந்து ஆவியாக வெளியேறுதலைப் பொருத்து கரும்பிற்கு மூன்று நாட்களுக்கு ஒரு முறை சொட்டு நீர்ப்பாசனம் செய்ய வேண்டும் 
  8. நிலத்தடியில் 120+40 செ.மீ பக்கவாட்டு இடைவெளியில் கரும்பை இரண்டு புறமும் நடவு செய்ய வேண்டும்.
  9.  
  10. சொட்டு நீர் பாசன உரமிடுதல் மகசூலை அதிகரிக்கும்
  11. பரிந்துரைக்கப்பட்ட 125 % தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்தை (275:63:112..5 கிலோ/எக்டர்) குழி வழி முறை உரப்பாசனம் அளிப்பதன் மூலம் மகசூலை அதிகரிக்கலாம்.

எதிர்பாராசூழ்நிலைக்கேற்ற நிவாரணத் திட்டம்
இடர்பாடான சூழ்நிலைகளில் படிப்படியாக சால்களை அகலப்படுத்துதல்

நடவு சமயத்தில் 30 செ.மீ. அகலத்தில் நீர்ப்பாசனம் வாய்க்கால் அமைத்து பின்னர் அதனை 45 செ.மீ. அளவிற்கு நடவு செய்த 45ம் நாள் முதல் மண் அணைக்கும்போது அகலப்படுத்தி மேலும் 90ம் நாள் மேற்கொள்ளும் ஆழப்படுத்துவதின் மூலம் 35 சதவிகிதத் தண்ணீரினைச் சேமிக்கலாம்

வறட்சி நிர்வாகம்

  • கரும்பு விதைக்கரணைகளை 80 கிலோ நீர்த்த சுண்ணாம்புடன் 400 லிட்டர் தண்ணீர் கலந்த கலவையில் 1மணி நேரம் ஊறவைத்தல்
  • 30 செ.மீ. ஆழமான நடவு சால்களில் கரணைகளை நடவு செய்தல்
  • பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சத சரைசலை வறட்சி காலங்களில் 15 நாட்கள் இடைவெளியில் தெளித்தல்
  • 6 சத கயோலின் (60 கிராம் கயோலின் 1 லிட்டர் தண்ணீருக்கு) தெளித்து நீர்த்தேவையினைக் குறைத்தல்
  • தண்ணீர் தட்டுப்பாடான பகுதியில் மாறுசால் அல்லது விடுசால் பாசனம் நன்மைக்குறியதாகும்
  • நடவு செய்த 120ம் நாள் கூடுதலாக 125 கி பொட்டாஷ்/ எக் என்ற அளவில் இட வேண்டும்
  • கடைசி உழவின் பொழுது தென்னை நார்க்கழிவு 25 டன்/ எக் என்ற அளவில் இடுதல்
  • காய்ந்த சோகைகளை 5வது மாதம் உரித்து கரும்பு வரிசைக்கு இடையே பரப்புதல்

வறட்சி மேலாண்மை

நீர் பற்றாக்குறையை சரிகட்ட எத்தரல் 200 பி.பி.எம். அல்லது சுண்ணாம்புக் கரைசல் (80 கிலோ சுண்ணாம்பை 400 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) போன்றவற்றில் விதைக்க கரணைகளை ஒரு மணி நேரம் நனைத்து வைத்திருந்த 30 செ.மீ. ஆழத்தில் நடவு செய்ய வேண்டும். பின்பு நீர் பற்றாக்குறை காலங்களில்  பொட்டாஷ் மற்றும் யூரியா 2.5 சதவிகித கரைசல் ஒவ்வொன்றையும் 15 லிட்டர் நீரில் கரைத்து கிடைக்கும் கரைசல்) கரைசலை தெளிப்புச் செய்ய வேண்டும். நீர்ப்பற்றாக்குறையான சூழ்நிலைகளில் மாற்று சால் மற்றும் சால் விட்டு சால் பாசன முறைகளைக் கையாளுவது நன்மை பயப்பனவாக அமைகிறது.

14. அறுவடை முன் நேர்த்திகள்

அ.கரும்பு முதிர்ச்சி ஊக்கி தெளித்தல்

சோடியம் மெட்டா சிலிகேட் 4 கிலோ / எக் என்ற அளவில் 750 லிட்டர் தண்ணீர் கலந்து கரும்பு நடவு செய்த 6ம் மாதம் தெளிக்க வேண்டும். பின்னர் அதே இரசாயனத்தை 8 மற்றும் 10வது மாதத்தில் இருமுறை தெளிப்பதன் மூலம் கரும்பு மகசூல் மற்றும் சர்க்கரை கட்டுமானத்தை அதிகரிக்கலாம்.

ஆ.கரும்பின் முதிர்ச்சி அறிதல்

கரும்பின் முதிர்ச்சியை பிரிக்ஸ் மீட்டர் என்ற கருவியின் மூலம் அறியலாம். 18 முதல் 20 சத பிரிக்ஸ் அளவு கரும்பின் முதிர்ச்சியை குறிக்கும். கரும்பின் நுனி மற்றும் கீழ் பகுதி பிரிக்ஸ் அளவு 11 விகித அளவில் இருத்தல் வேண்டும்.

15. அறுவடை

முன்பட்ட கரும்பு இரகங்களை 10 முதல் 11 மாதத்திற்குள்ளும் பின்பட்ட இரகங்களை 11 முதல் 12 மாதத்திற்குள்ளும் அறுவடை செய்ய வேண்டும்
கரும்பினை அதன் உச்ச கட்ட முதிர்ச்சி காலத்தில் அறுவடை செய்ய வேண்டும். அறுவடை செய்யும்போது நடவுப் பயிராக இருந்தாலும் அல்லது மறுதாம்புப் பயிராக இருந்தாலும் தரையோடு தரையாக பூமி மட்டத்திற்கு அறுவடை செய்ய வேண்டும்

மறுதாம்பு பயிர்

1.நடவு கரும்பின் அறுவடைக்கு பின் செய்ய வேண்டியவை

கரும்பு அறுவடைக்குப் பின் கீழ்க்கண்ட செய் நேர்த்திகளை 10 நாட்களுக்குள் முடிப்பதன் மூலமாக கட்டை கரும்பின் துளிர்ப்பு மற்றும் வளர்ச்சி சீராக அமையும் கரும்பு தோகைகளை வயலில் இருந்து வெளியே எடுத்துவிட வேண்டும்.

தோகைகளை எரித்தல் கூடாது.மண் நிறைக்க நீர்ப்பாசனம் செய்யவும் நல்ல ஈரப்பதத்தில் கூரிய மண்வெட்டி கொண்டு மண் மட்டத்திற்கு கீழ் 4-6 செ.மீ. அளவிற்கு கரும்பு கட்டையை சீவ வேண்டும். கூப்பர் கலப்பை கொண்டு கரும்பு பயிரின் இரு கரைகளையும் உடைத்துவிட வேண்டும். கட்டைக் கரும்பின் போக்கிடங்களை கட்டை சீவிய 30 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும். இதற்கு அதே நிலத்தில் இருந்து எடுக்கப்பட்ட கரும்பு குத்துக்களை பிரித்து நடவு செய்யலாம். அல்லது பாலித்தீன் பை நாற்றுகளைக் கொண்டும் போக்கிடங்களை நிரப்பலாம். நடவு பயிருக்கு பரிந்துரை செய்யப்படும் அதே அளவில் அங்கக உரம் மற்றும் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை இடுதல் வேண்டும்

மறுதாம்புப் பயிர் நிர்வாகம்
ஐஐ.பயிர் நிர்வாகம்

  • 25 சத அதிகப்படியான தழைச்சத்தினை கட்டைவிட்ட 5-7 நாட்களில் அளித்தல்
  • பயிர் இரும்புசத்து பற்றாக்குறையால் மஞ்சளாக மாறும் போது அன்னபேதி உப்பினை 2.5 கி/எக் என்ற அளவில் கட்டைவிட்ட 15ம் நாள் தெளித்தல் பயிர் மீண்டும் மஞ்சளாக இருந்தால்15 நாள் இடைவெளியில் திரும்பவும் தெளிக்க வேண்டும். கடைசி தெளிப்பபுடன் எக்டருக்கு 2.5 கிலோ யூரியாவையும் சேர்த்துக்கொள்ளலாம்
  • கட்டைவிட்ட 20வது 40வது மற்றும் 60வது நாளில் களையெடுத்தல்
  • முதல் மேலுரத்தினை 25ம்நாளும், 2வது மேலுரத்தினை 45 முதல் 50 நாட்களுக்குள் இடுதல்
  • இறுதி மேலுரத்தினை 70-75 நாட்களுக்குள் இட வேண்டும்
  • கட்டைவிட்ட 50 வது நாளில் பகுதி மண் அணைத்தல்
  • 90வது நாள் கடைசி மண் அணைத்தல்
  • 120வது மற்றும் 180வது நாள் தோகை உரித்தல்
  • 180 வது நாள் விட்டம் கட்டுதல்
  • 11 மாதத்திற்கு பிறகு அறுவடை செய்தல்

ஊ. கரும்பு விதை (நாற்றங்கால் பயிர்)

கரும்பு நடவு பயிர் பயிரிடுவதற்கு 6 முதல் 7 மாதத்திற்கு முன்னர் கரும்பு விதை நாற்றங்கால் நடவு செய்ய வேண்டும்.

நாற்றங்கால் நடவு மாதம்  

நடவு கரும்பு மாதம்

ஜீன்

டிசம்பர் - ஜனவரி (முன்பட்டம்)

ஜீலை

பிப்ரவரி - மார்ச் (நடுபட்டம்)

ஆகஸ்ட்

ஏப்ரல் - மே (பின்பட்டம்)

டிசம்பர் ஏப்ரல்

ஜீன்-ஜீலை (சிறப்பு பட்டம்)

விதை நாற்றங்கால் சாகுபடியில் கவனிக்க வேண்டியவை

  1. தோகை உரித்தல் கூடாது
  2. விட்டம் கட்டுதல் கூடாது
  3. 6 முதல் 7 மாதத்தில் அறுவடை
  4. கரணை தயார் செய்யும் பொழுது காய்ந்த சோகைகளை கைகளால் நீக்க வேண்டும்
  5. பரு அடிபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
  6. விதைக்கரும்பினை மற்ற இடங்களுக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றால் முழு கரும்பாகவும் தோகை நீக்காமலும் இருக்க வேண்டும்
  7. 50 கிலோ யூரியாவை மேலுரமாக விதை கரும்பு அறுவடைக்கு ஒரு மாதம் முன்னர் இடுதல் அவசியம்
  8. நோய், பூச்சிதாக்குதல் இன்றி பராமரிக்க வேண்டும்

பயிர் வினையியல்

எக்டருக்கு 1.0, 1.5 மற்றும் 2 கிலோ த,வே.ப.கழக கரும்பு பூஸ்டரை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து விதைத்த 45, 60 மற்றும் 75-ம் நாள் அளிப்பதன் மூலம் கரும்பின் வளர்ச்சி மற்றும் எடையை அதிகரிக்கலாம். கணுவின் நீளம், கரும்பு மகசூல் மற்றும் இனிப்புத் தன்மையை அதிகரிக்கிறது மற்றும் வறட்சியை தாங்கும் தன்மையை அளிக்கிறது.

 

 
Fodder Cholam Wheat maize sorghum Ragi cumbu varagu panivaragu samai tenai blackgram cowpea cowpea redgram soybean horsegram garden lab lab groundnut sesame coconut sunflower castor niger safflower sugarcane sugarcane sugarbeet Cumbu Napier kollukattai Pul Fodder Cholam Fodder Cowpea Fodder Cumbu Fodder Maize Guinea Grass Velimasal Soundal Kudiraimasal Muyal Masal sword bean Field lab lab Sweet Sorghum Greengram