பயிர் பாதுகாப்பு :: கத்திரி பயிரைத் தாக்கும் நோய்கள்
பாக்டீரியா வாடல் நோய்: சூடோமோனாஸ் சொலானாசியேரம்

அறிகுறிகள்

  • இலையில் மிதமான அறிகுறிகள் தோன்றும் அவை, வாடல், குட்டை  வளர்ச்சி, இலைப்பரப்பு மஞ்சளாதல், முடிவில் முழுச்செடியும் மடிந்துவிடும்
  • முதலில் கீழ்ப்புறம் உள்ள இலைகள் தொங்கி, வாடல் ஆரம்பிக்கும்
  • வாஸ்குலர் திசுக்கள் பழுப்பு நிறமாக மாறுகின்றன
  • நோய் தாக்கப்பட்ட பகுதியிலிருந்து பாக்டிரியல் திரவம் கசிந்துக் கொண்டிருக்கும்
  • செடிகள் மதிய வேளையில் வாடல்  நோய் அறிகுறிகளை காண்பிக்கும். இரவில் சரியாகிவிடும். ஆனால், விரைவில் மடிந்து விடும்
ஆரோக்கியமான தாவரம் பாதிக்கப்பட்ட தாவரம்

கட்டுப்பாடு

  • பந்த் சாம்ராட்வகை நோய் தாங்கக் கூடிய ரகம்
  • குளிர் மண்டல காய்கறி  வகைகளான காலிபிளவருடன் பயிர் சுழற்சியை மேற்கொள்ள வேண்டும்
  • வயலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்
  • வேர்முடிச்சு நூற்புழுக்கள் இருந்தால், இந்த நோய் பரவலாகக் காணப்படும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016