பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளை ஈ : டைஅலூரோடிஸ் கார்டாமோம்

சேதத்தின் அறிகுறிகள்:

  • வெளிப்பச்சை புள்ளிகள் இலையின் மேற்பரப்பில் காணப்படும்.
  • இலைகள் மஞ்சளாக மாறும்.
  • இலைகள் அடிப்புறத்தில் சுருண்டு பிறகு காய்ந்து விழுந்துவிடும்.
  • இப்பூச்சிகளின் தாக்கத்தினால் தக்காளி இலைச்சுருள் என்னும் வைரஸ் நோய் பரவுகின்றது.

பூச்சியின் விபரம்:

  • முட்டை : இளந்தளிர் இலைகளின் அடிப்பகுதியில் காம்புடைய, பெரிப் பழம் வடிவில், வெளிர்மஞ்சள் நிற முட்டை காணப்படும்.
  • இளம்குஞ்சுகள் : முட்டை பொரித்தவுடன் வெளிவரும் இளம் குஞ்சுகள் நீள வட்ட வடிவில் மரவும் பூச்சி போன்று பச்சை கலந்த வெள்ளை நிறத்துடன் இருக்கும்.
  • முதிர்பூச்சிகள் : சிறு வெண்ணிற பூச்சிகள், இலைகளில் அடைஅடையாக மாவுப்பூச்சிகளை போன்று காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • இலைச்சுருள் தாக்கப்பட்ட செடிகளை வேருடன் பிடுங்கி அழிக்க வேண்டும்.
  • தேவையான அளவு தழைச்சத்து மற்றும் நீர்பாசனம் மேற்கொள்ள வேண்டும்.
  • மாற்று உணவுப்பயிரான துத்தி செடியை நீக்க வேண்டும்.
  • மஞ்சள் நிற தகரடப்பாக்களின் மீது ஆமணக்கு எண்ணெய் தடவி பயிரின் உயரத்திற்கு குச்சிகளை நட்டு ஹெக்டேருக்கு 15 வைத்து கவரப்படும் பூச்சிகளை அழிக்கலாம்.
  • டப்பாக்களை வாரத்திற்கு ஒரு முறை சத்தம் செய்து புதிய எண்ணெய் தடவி வைக்கவேண்டும் :
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் [FORS] 2 சதம் அல்லது வேப்பம் எண்ணெய் 0.5 சதம் உடன் டீம்பால் 1மி.லி / லிட்டர் கலந்து தெளிக்கவும்.
  • மீத்தைல் டெமட்டான் 0.25 சதம் உடன் மீன் எண்ணெய் ரோசின் சோப் [FORS] கலந்து தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016