பயிர் பாதுகாப்பு :: ஏலக்காய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி: பென்டலோனியா நைக்ரோநெர்வோசா
சேதத்தின் அறிகுறிகள்:

  • போலித் தண்டுகளின் இலையுறையின் அடியில் அசுவினிகள் இருந்து சாற்றை உறிஞ்சும்.
  • கட்டே என்ற வைரஸ் நோய் பரவ இப்பூச்சிகள் காரணிகளாக உள்ளன.
  • இலைகள் வெளிறிப் போய் தேமல் போன்று காணப்படும்.

பூச்சியின் விபரம்:

  • இறக்கைகளற்ற அசுவினி கரும்பழுப்பு நிறத்தில இருக்கும்.
  • இறக்கைகள் உள்ள அசுவினிகள் தடித்த கருமை நரம்புகள் இறக்கையில் தெரியும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

  • ஏலக்காய் வயலில் இருக்கும் கருணைக் கிழங்கு மற்றும் வேறு உணவுப் பயிர்களை அகற்றவேண்டும்.
  • பாதிக் காய்ந்த மற்ற அழுகிய  போலித்தண்டுகளை அசுவினிகளுடன் சேர்த்து சேகரித்து அழிக்கவும்.
  • டைமீத்தோயேட் 2மிலி / லிட்டர் இரண்டு வார இடைவெளியில் தழைகளின் மீது தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016