பயிர் பாதுகாப்பு :: மிளகாய் பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ப்யூசேரியம் வாடல் நோய்: ப்யூசேரியம் ஆக்ஸிஸ் போரம் வகை கேப்ஸிசி

அறிகுறிகள்:

  • செடிகள் வாட ஆரம்பிக்கும். இலைகள் மேல் நோக்கி உட்புறமாக வளைந்துக் காணப்படும். இலைகள் மஞ்சள் நிறமாக மாறி, பின் மடியும்
  • அதிகளவிலான செடிகள் வாட ஆரம்பித்து மடிகிறதோஅங்கெல்லாம் எரிந்தது போல் தோன்றும்
  • ஆரம்பத்தில் சிறிதளவு மஞ்சள் நிறமாக மாறும். மேலே உள்ள இலைகள் வாட ஆரம்பித்து.  சில நாட்களில் நிரந்தமான வாடல்நோய் ஆரம்பித்து, இலைகள் இணைந்து இருக்கும்
  • தரைக்கு மேலே உள்ள பகுதிகளில் அறிகுறிகள் தெளிவாகத் தெரியும் வாங்குபவர் திசுக்கள் நிறமாற்றமாகும். குறிப்பாக கீழேயுள்ள தண்டுகள் மற்றும் வேர்களில், தோன்றும்.

கட்டுப்பாடு:

  • வாடல் நோய் எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களை பயன்படுத்தவேண்டும்
  • போர்டாக்ஸ் கலவை (அ) நலத் தாமிரம் (அ) பைட்டோலான்  0.25% மண்ணில் நனைக்க வேண்டும்
  • டிரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் (அ) கார்பண்டசிம் 2 கிராம்/கிலோ விதை என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும்
  • 2 கிராம் டிரைக்கோடெர்மா விரிடியை 50 கிலோ பண்ணை கருவுடன் கலந்து, நீர் தெளித்து, பாலித்தீன் கலர் போட்டு மூடவேண்டும். 15 நாட்கள் கழித்து, பூஞ்சாண் வளர்ச்சி தோன்றியவுடன், ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் மிளகாயின் வரிசையில் இந்தக் கலவையை இடவேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016