பூச்சியின் விபரம்
ஏரியாஸ் வைட்டெல்லா
- புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும். உடலின் மேற்பரப்பில் வெள்ளை நிறக்கோடு காணப்படும்.
- அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். முன் இரண்டு இறக்கையில் பச்சை நிறக்கோடு காணப்படும். பின் இறக்கை வெளிர் மஞ்சள் நிறமாக இருக்கும்.
ஏரியாஸ் இன்சுலேனா
- புழு - பழுப்பு நிறத்தில் இருக்கும், உடலின் மேற்பரப்பில் கரும் புள்ளிகள் காணப்படும். பக்க வாட்டில், சிறிய முள் போன்ற நீட்சிகள் இருக்கும்.
- அந்துப்பூச்சி - அந்துப்பூச்சி பச்சை நிறமாகவும், பின்னிறக்கை வெளிர் மஞ்சளாகவும் இருக்கும்.
கட்டுப்பாடு : பொருளாதார சேத நிலை : 10 சத சேதம்
- பூச்சி தாக்கப்பட்ட மொட்டு, பூ ஆகியவற்றை சேகரித்து அகற்ற வேண்டும்.
- பூச்சி உண்ணக்கூடிய மாற்று பயிர் வகைககளான வெண்டி, துத்தி ஆகியவற்றை நீக்க வேண்டும்.
- பயிரின் ஆரம்ப நிலையில் எக்டருக்கு 1 லிட்டர் பாஸலோன் மருந்தை தண்ணீருடன் கலந்து தெளிக்கவும்.
- நன்கு வளர்ச்சியடைந்த பயிரில் சேதம் அதிகமாகும்போது குயினால்பாஸ் 2 லிட்டர் அல்லது பாசலோன் 2.5 லிட்டர் மருந்தைத் தெளிக்கவும்.
|
|
|
நுனிக் குருத்து
வாடித் தொங்குதல் |
துளைகள் மற்றும் அழுகுதல் |
மலராத மொட்டுக்கள் |
|
தாக்குதலின் அறிகுறிகள்
- புழுக்கள் இளம் பருத்தி பயிரைத் தாக்குவதால் குருத்துப்பகுதி வாடிக் காய்ந்து தொங்கும்.
- மலரும் தருணத்தில் மொட்டுகளையும், பூக்களையும் தாக்கி சேதம் விளைவிக்கும். அவற்றில் ஓட்டைகள் இருக்கும்.
- தாக்கப்பட்ட மொட்டுக்கள் மலராமலேயே விழுந்துவிடும்.
|
|
ஏரியாஸ் வைட்டெல்லா |
புழு |
அந்துப்பூச்சி |
|
|
ஏரியாஸ் இன்சுலேனா |
புழு |
அந்துப்பூச்சி |
|