பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்்
 II. இலையைத் தாக்கும் பூச்சிகள்
இலை சுருட்டு புழு: ஸைலெப்ட்டா டெரோகேட்டா

அறிகுறிகள்

  •  குழாய் போன்று இலைகள் சுருண்டு, முழுவதும் பட்டு போன்ற நூல்களால் சுற்றியிருக்கும்
  •  இலையின் விளிம்புகளை கடித்து உண்டு விடும்
  • தீவிர தாக்குதலின் போது, இலைகள் உதிர்ந்துவிடும்
   
  இலைச் சுருட்டுகள் இளம்புழு வளர்ந்தபுழு  
கூட்டு புழு அந்துப்பூச்சி

பூச்சியின் விபரம்

  • புழு அடர்பச்சை நிறத்தில், கருந் தலையுடன் காணப்படும்
  • அந்துப் பூச்சி  மஞ்சள் நிற இறக்கைகளுடன் பழுப்பு நிறகோடுகளுடன் காணப்படும்

கட்டுப்பாடு

    • சுருண்ட இலைகளை சேகரித்து, அழிக்க வேண்டும்
    • புழுக்களை கையால் சேகரித்து, அழிக்க வேண்டும்
    • பின்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியைத் தெளிக்க வேண்டும் (எக்டருக்கு)
      • குளோர் பைரிபாஸ் 20 EC 2 லி /எக்டர்
    • டைகுளோர்வாஸ் 76 WSC  1லி /எக்டர்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016