பயிர் பாதுகாப்பு :: பருத்திப் பயிரைத் தாக்கும் பூச்சிகள்
சாம்பல் நிற வண்டு: மில்லோசெரஸ் அன்டிசிம்பஸ்டுலேட்டஸ்

மி மாக்குலோசஸ்
மி.ஸப்பேசியாட்டஸ்
மி.விரிடானஸ்
மி.டிஸ்கலர ்

அறிகுறிகள்

  • இலை விளிம்புகளை ரம்பம் போன்று வெட்டி உண்ணும்
  • செடிகள் தொகுப்பாக மடியும்
  • புழுக்கள் வேர்களை கடித்து உண்பதால் இளஞ்செடிகள் வாடிக் காய்ந்துவிடும்.
  • செடிகளை பிடுங்கும்போது எளிதாக வரும்

பூச்சியின் விபரம்

  • புழு - சிறியதாக, வெள்ளை நிறத்தில் காணப்படும்
  • மில்லோசெரஸ் அன்டிசம்பஸ்டுலேட்டஸ் பச்சை நிற இறக்கைகளுடன் அடர்ந்த வரிகளுடன் காணப்படும்
  • மி.சப்பேசியேட்டாஸ் - பழுப்பு நிறத்தில் இருக்கும்
  • மி.விரிடியேனஸ் - சிறியதாக, இளம் பச்சை நிறத்தில் காணப்படும்
  • மி. டிஸ்கலர் - பழுப்புநிறத்தில் காணப்படும்

கட்டுப்பாடு

  • தாக்கப்பட்ட கிளைகள், செடிகளை அகற்றி, அழிக்க வேண்டும்
  • குயினால்பாஸ் (1 லிட்டர்/ எக்டர்) (அ) குளோர்பைரிபாஸ்
    (1 லிட்டர்/ எக்டர்) தெளிக்க வேண்டும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016