உயிரியல் முறைக்கட்டுப்பாடு :: பேரளவு உற்பத்தி செய்தல்

கண்ணாடி இறக்கை இரை விழுங்கி
நம் நாட்டில் 65 வகை கண்ணாடி இறக்கை இரை விழுங்கிகள் உள்ளன.  இதில் கிரைசோபா ஜாஸ்டிரோவி என்ற இரை விழுங்கி பொதுவாக பரவலாக காணப்படுகிறது.  இந்த பூச்சி மெல்லி மிருதுவான உடம்பை உடைய அசுவுணி, வெள்ளை ஈ, இலைப்பேன் போன்ற பூச்சிகளை இரையாக உட்கொள்கிறது.

வாழ்க்கை பருவம்
பச்சை நிறத்துடன் காணப்படும் இந்த இரை விழுங்கி சிறு காம்பின் நுனியில் முட்டை இடும் இயல்புடையது.  இது தன் முட்டைகளை தனியாகவோ அல்லது கூட்டமாகவோ இடக்கூடியது.  வெள்ளை நிற முடைய முட்டை, வளர்ச்சியடைந்தபின் பழுப்பு வெள்ளை மற்றும் கருப்பு நிறமாக மாறுகிறது.  இதன் முட்டை பருவம் 3-4 நாட்கள். இதன் புழுக்களுக்கு 3 வளர்ச்சி நிலைகள் உள்ளது.  இதன் மொத்த காலம் 8-10 நாட்கள்.  முதல் நிலை புழுக்கள் வெள்ளை நிறமாக இருக்கும்.  வளர்ச்சி அடைந்த புழுக்கள் தன் எச்சில் இழையால் கூண்டு கட்டி அதனுள் கூட்டுப்புரழு பருவத்தை நடத்துகிறது.  இதன் வளர்ச்சி பருவம் 5-7 நாட்கள் ஆகும்.  வளர்ந்த கண்ணாடி இறக்கை பூச்சி கூட்டிலிருந்து வெளிவந்தவுடன் பலமுறை இனச்சேர்க்கை செய்யும்.  பின்பு பெண்பூச்சி 5 நாட்கள் கழித்து முட்டை வைக்க ஆரம்பிக்கும்.  தன் வாழ் நாளில் 9-23 நாட்கள் வரைமுட்டை வைக்கும்.  வளர்ந்த ஆண் பூச்சிகளின் வாழ்நாள் 30-35 நாட்கள், பெண் பூச்சிகள் 60 நாட்கள்.  ஒரு பெண்பூச்சி 600-800 முட்டை வரை வைக்கும்.  ஆண் பெண் இன விகிதாசாரம் 10.85 என அறியப்பட்டுள்ளது.

வளர்ப்பு முறை
வளர்ந்த பூச்சிகளை தினமும் சேகரித்து வட்ட வடிவ துத்தநாக தகர குழித்தட்டில் (30 செமீ ஒ 12 செமீ) விடவேண்டும்.  குழித்தட்டின் அடிபாகம் இரும்பு சல்லடை வலையை வைத்து பொறுத்தப்பட்டிருக்கும்.  இதனால் நன்றாக காற்றோட்டம் இருக்கும்.  வளர்ந்த பூச்சிகளை விடுவதற்கு முன் மரநிற காகித நீளரிப்பன்களை தட்டின் உள்பக்க செவிற்றை தொட்டது போன்று வைக்கவும்.  இந்த காகிதத்தின் ஓரங்களில் இனசேர்க்கை செய்த பூச்சிகள் அதிகமாக முட்டை வைக்கும்.  சுமார் 250 வளர்ந்த கண்ணாடி இறக்கை பூச்சிகளை ஒவ்வொரு வட்ட குழிதட்டுகளில் வைக்கவும்.  பின்பு இத்தட்டினை வெள்ளை நிற மெல்லிய துணி கொண்டு ரப்பர் பட்டை மூலமாக இருக்கமாக மூட வேண்டும்.  இந்த துணியின் மேல் பகுதியில் உறிஹ்சும் நைலான் பஹ்சினை (4 சதுர செமீ அளவு) தண்ணீரில் நனைத்து, மென்மையாக பிழிந்து வைக்க வேண்டும்.  உள்ளிருக்கும் வளர்ந்த பூச்சிகள் இந்த தண்ணீரை உறிஹ்சி உட்கொள்ளும்.  இதே போன்று இந்த பூச்சிகளுக்கு உணவாக ஈஸ்ட், பழச்சக்கரை, தேன், புரோடீனக்ஸ் மற்றும் தண்ணீர் ஆகியவற்ற 1111 என்ற அளவில் கலந்து ஒரு அரை திட திரவ கலவையாக செய்து அதனை தட்டின் மேல் துணியில் 3 நீள்பட்டை கோடுகளாக தடவுவதன் மூலம் வழங்கலாம்.  இந்த வட்ட தட்டின் உள்ளே மர நிற காகிதத்தில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளை எடுத்து புதிய புழுக்களை வளர்க்க பயன்படுத்தலாம்.  புதிதாக விடப்பட்ட வளர்ச்சியடைந்த பூச்சிகளை சுமார் 15-20 நாட்கள் வரை முட்டை இடுவதற்காக பராமரிக்கலாம்.

   
 

கண்ணாடி இறக்கை பூச்சி – முட்டைகள்

 

கண்ணாடி இறக்கை பூச்சி – முட்டைகள்

தொகுப்பு புழுவளர்ப்பு
மர நிற காகிதத்தின் ஓரங்களில் வைக்கப்பட்டுள்ள முட்டைகளை 100 சென்டிகிரேடு குளிர் வெப்பத்தில் 21 நாட்கள் வரை இருப்பு வைக்கலாம்.  தேவைப்படும் பொழுது குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து ஒரு நாள் இயல்பான வெப்பத்தில் வைத்தால் அடுத்த மூன்று நாட்களில் முட்டை பொரித்து அதிலிருந்த புழுக்கள் வரும்.  ஒரு துத்தநாக வட்ட குழித்தட்டில் (25 செமீ விட்டம், உயரம் 12 செமீ) 250 புழுக்களை வளர்க்கலாம்.  இந்த தட்டுகளின் அடிபாகமும் துத்தநாக தகரத்தின் மூலமாக அடைக்கப்பட்டு இருக்கும்.  குழித்தட்டின் மேல் புறத்தில் மெல்லிய துணி கொண்டு ரப்பர் பட்டைகள் மூலமாக இருக்கமாக மூடிவிடவேண்டும்.  இதற்கு தேவையான உணவினை தட்டின் அடிபாகத்தில் வைக்கவேண்டும்.  முதல் நிலை புழுக்களுக்கு கோர்சைரா முட்டைகளை உணவாக கொடுக்கலாம்.  சுமார் 500 புழுக்களை வளர்ப்பதற்கு தேவைப்படும் கோர்சைரா முட்டையின் அளவு 25 சி சி. அதாவது ஒரு நாள் விட்டு ஒரு நாள் உணவு கொடுப்பதற்கு தலா 5 சி சி என்றளவில் 5 முறை கொடுக்க வேண்டும்.  வளர்ச்சி பெறும் இரண்டு மற்றும் மூன்றாம் நிலை புழுக்களுக்கு அசுவுணியை உணவாக கொடுக்க வேண்டும்.  இதன் மூலம் புழுக்களின் வளர்ச்சியை ஆரோக்கியமாக கொண்டு செல்ல முடியும்.  இதனால் வளர்ச்சி பெறும் கண்ணாடி இறக்கை பூச்சிகள் திரட்சியாக இருக்கும் மேலும் அதிக முட்டைகளுகம் வைக்கும்.  இதன் புழுக்கள் பத்து நாட்களில் சோள விதை போன்று உருண்டையான கூட்டுப்புழுவாக வளர்ச்சி பெறும்.  பிறகு கூட்டுப் புழுக்களை சேகரித்து காற்று புகும் பிளாஸ்டிக் பெட்டிகளில் வைக்கவும்.  சுமார் 9-10 நாட்களில் கூட்டுப்புழுவிலிருந்து வளர்ச்சி பெற்ற கண்ணாடி இறக்கை பூச்சிகள் வெளிவரும்.  இந்த பூச்சிகளை சேகரித்து வளர்ந்த பூச்சிகளை வளர்க்கும் வட்ட துத்தநாக தட்டுகளில் வைக்க வேண்டும்.  புழுக்களுக்கு பலவகை உணவுகளை கொடுக்கலாம்.  அவசியம் அசுவுணிகளை உணவாகக் கொடுக்க வேண்டும்.  இதன் மூலம் புழுக்களின் வளர்ச்சி நன்றாக இருக்கும்.  இதனால் வளர்ந்த கண்ணாடி இறக்கைப் பூச்சி வீரியமாகவும், வாளிப்பாகவும் இருக்கும். இதனால் பூச்சி வளர்ப்பு எளிமையாக இருக்கும்.  ஒரு புழுவானது ஒரு நாளைக்கு 50-60 அசுவுணி பூச்சிகளை உண்ணக்கூழயது.

கிரைசோபா புழுக்களை வயலில் விடுதல்
பருத்தி, நிலக்கடலை போன்ற பயிர்களில் முதல் பருவ கிரைசோபா புழுக்களை ஏக்கருக்கு 20,000 என்ற அளவில் 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை விடுவதால் அசுவுணி, வெள்ளை ஈ, புரோடீனியா, பச்சைப்புழு, இளஞ்சிவப்பு காய்ப்புழு, இலைப்பேன், செம்பேன் ஆகியவற்றை நல்ல முறையில் கட்டுப்படுத்தலாம்.  கிரைசோபா முட்டைகள் பழுப்பு நிறக் காகித ரிப்பன் தாள்களில் வழங்கப்படுகிறது.  இந்த பழுப்பு நிறக் காகித தாளை சிறுசிறு துண்டுகளாக்கி பயிர் பாகங்களுடன் இணைத்து வயலில் விட வேண்டும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு |  பொறுப்புத் துறப்பு  | தொடர்புக்கு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016