பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்

அடிச்சாம்பல் நோய்: ஸ்கிலிரோஸ்போரா கிராமினிகோலா

அறிகுறிகள்:

  • நோயினால் பாதிக்கப்பட்ட  செடிகளில் கதிர்கள் வெளிப்படுவதில்லை. அவ்வாறு வெளிப்பட்டாலும் கதிர் முழுவதுமோ அல்லது கதிரின் ஒரு பாகமோ தானியங்களுக்குப் பதிலாகப் பசுமையான நீண்ட சிறிய இலை போன்ற வளர்ச்சியைக் கொண்டிருக்கும். ஆகவே கதிர்கள் தானிய மணி  பிடிப்பில்லாமல் மலடாக இருக்கும்.
  • பூவிலுள்ள பகுதிகள் அனைத்தும் சிறிய இலைப்போன்ற பகுதிகளாக மாற்றப்படுகின்றன.
  • கதிர்களில் தானியங்களுக்குப் பதிலாகப் பசுமை நிறத்தில் சிறுசிறு இலைப்போன்ற பாகங்கள் காணப்படுவதால் இந்நோய் “பசுங்கதிர் நோய்” என்று அழைக்கப்படுகிறது.
கட்டுப்பாடு:
  • நோய் எதிர்ப்புத்திறன் கொண்ட இரகங்களான கோ 7. டபிள்யூ சிசி - 75.
  • நாற்றுப் பறித்து நடவு செய்தால் நோயின் தாக்கம் குறையும்.
  • பாதிக்கப்பட்ட பயிரை நடவு செய்யும் போது பிடுங்கி எறியவும்.
  • நேரடி விதைப்பு வயலில் பாதிக்கப்பட்ட பயிரை விதைத்த 45 வரை களைந்தெறியவேண்டும்.
  • விதைகளை மெட்டாலக்சில் 6 கிராம் / கிலோ என்ற அளவிலும் அதனைத் தொடர்ந்து மெட்டாலக்சில் 500 கிராம் அல்லது (ரிடோமில் எம்இசட் 4 கிலோ / எக்டர் அல்லது மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்).

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015