பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்

கம்பின் தேன் ஒழுகல் நோய்: கிளாவிசெப்ஸ் மைக்ரோசெஃபாலா
அறிகுறிகள்:

  • பூக்கும் தருணத்தில் இந்நோய் காணப்படுகின்றது.
  • நோய்கள் தாக்கப்பட்ட கதிர்களிலிருந்து பழுப்பு நிறத்தில் இனிப்பான தேன் போன்ற திரவம் சொட்டு சொட்டாக வடிந்து கொண்டிருப்பதைக் காணலாம்.
  • நோயுற்ற சில நாட்களில் இப்பகுதிகளில் திரவம் கெட்டியாகி அடாட பழுப்பு நிறத்தில் காய்ந்து விடுகின்றது.
  • நாளடைவில் தானியங்களுக்கப் பதிலாகக் கெட்டியான கரும்பழுப்பு நிற ‘எர்கட்’ என்னும் இழை முடிச்சுகள் தோன்றுகின்றன. இவை தானியங்களை விடப்பெரியவையாகவும நீண்டும் காணப்படும்.
  • இதில் உற்பத்தியாகும் ஸ்கிலிரோஷியா விதையை விட பெரியதாகவும் ஒழுங்கற்ற வடிவுடையதாகவும், கதிரடிக்கும் சமயத்தில் கதிருடன் கலந்தும் காணப்படுகிறது.

கட்டுப்பாடு:

  • கார்பன்டாசிம் 500 கிராம் அல்லது திரம் 1000 மில்லியை அல்லது மாங்கோசெப் 1 கிலோ என்ற அளவில் 5-10 சதவிகித் பூக்கும் சமய்த்திலும்  மற்றும் 50 சதவிகிதம் பூத்த பின்பும் தெளிக்கலாம்.

Cumbu

 


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015