பயிர் பாதுகாப்பு :: கம்பு பயிரைத் தாக்கும் நோய்கள்

துரு நோய்: பக்னீசியா ஸ்பெப்ட்ரியேட்டா

அறிகுறிகள்:

  • இலைகளின் மேல் சற்றே உயர்ந்த சொரிசொரியான பழுப்பு நிறப்புள்ளிகள் தோன்றுதல்.
  • சிறிய சிவப்பு - பழுப்பு முதல் ஆரஞ்சு சிவப்பு நிறத்தில் வட்டவடிவ முதல் நீளவடிவ யுரினியா வித்துக்கள் இலைகளின் மேல் தோன்றும்.
  • நோயின் தாக்கம் அதிகரித்தால், இலையின் திசு வாடியும் மற்றும் இறந்தும் காணப்படும்.
  • நோய் மெதுவாக தாக்கினதல் யுரினியா வித்துக்கள் டீரியா வித்துக்களால் இடம்பெயர்க்கப்பட்டு விடுகின்றன.

கட்டுப்பாடு:

  • கரையும் கந்தகம் 2.5 கிலோ அல்லது மாங்கோசெப் 1 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். இதை 10 நாள் / எக்டர் கழித்து திரும்பவும் தெளிக்கவும்.
  • டிசம்பர் முதல் மே வரைக்குள் விதைப்பு மேற்கொண்டால் இந்நோயின் தாக்கம் குறையும்.
  • தரைக்கதிர் பூசணநோய் - வெவ்வேறு வகையான பூசணத்தால் ஏற்படுகின்றது.

(உதாரணம் : ஆஸ்பர்ஜில்லஸ், ஹெல்மின்தோஸ்போரியம், ஆல்டர்னேரியா, கர்வுலேரியா, ப்யூசேரியம்)

 


Cumbu Cumbu

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015