பயிர் பாதுகாப்பு :: இஞ்சி பயிரைத் தாக்கும் நோய்கள்

நுண்ணுயிரி வாடல் : ரால்ஸ்டோனிய சொலனாசிரம்

அறிகுறிகள்:

  • போலித்தண்டின் கழுத்துப் பட்டை பகுதிகளில் தண்ணீர் போன்று புள்ளிகள் தோன்றும். பின் மேலும், கீழும் பரவி காணப்படும்
  • முதலில் தெளிவாகத் தெரியும் அறிகுறிகள்அடி இலைகள் மிதமாக வாடும், இலை விளிம்புகள் சுருக்கமுற்று காணப்படும் பின் அது மேல் நோக்கி பரவும்
  • முதலில் மஞ்சள் நிறம் அடி இலைகளில் தோன்றி படிப்படியாக மேல் இலைகள் வரை பரவும். ஆரம்ப நிலையில் செடிகளில் திடமான மஞ்சள் நிறம் மற்றும் வாடியும் காணப்படும்
  • போலித் தண்டுகளில் உள்ள காற்றுக்குழாய் சார்ந்த திசுக்களில் ஆழ்ந்த கோடுகள் காணப்படும். தாக்கப்பட்ட போலித்தண்டு மற்றும் வேர்க்கிழங்குகளை அழுத்தினால் காற்றுக்குழாய் சார்ந்த பகுதிகளில் இருந்து மெதுவாக பால் போன்ற கசிவு வெளிவரும்



மஞ்சளாதல் தாக்கப்பட்ட பயிர்கள்

கட்டுப்பாடு:

  • மென்னையழுகலை கட்டுப்படுத்த பயன்படுத்திய அதே முறை தான் பேக்டீரியல் வாடல்க்கும் பயன்படுத்தலாம்
  • விதைக்கும் வேர்க்கிழங்குகளை 200 பிபிஎம் ஸ்டெ்பரோசைக்லினுடன் 30 நிமிடங்கள் வைத்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். இதனை விதைப்பதற்கு முன் நிழலில் வைத்து உலர்த்தவும்
  • ஒரு முறை இந்நோயை வயலில் கண்டறிந்தால் அனைத்து படுக்கைகளையும் 1% போர்டியாக்ஸ் கலவை அல்லது 0.2% காப்பர் ஆக்ஸில்க்ளோரைட்டை சொட்டு சொட்டாக நனையைவிடவும்

Image Source

https://www.plantvillage.com/
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு | பொறுப்புத் துறப்பு 
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016